Wednesday, 9 May 2012

கூந்தலை கருமையாக்கும் செம்பருத்தி எண்ணெய்!



அழகுக்காக கூந்தலுக்கு எத்தனையோ வர்ணம் பூசினாலும் கார் கூந்தல்தான் பெண்களுக்கு அழகு என்கின்றனர் நிபுணர்கள். கூந்தலை கருமையாக்க இயற்கையே செம்பருத்தியை அளித்துள்ளது. செப்பருத்தி இலையும், பூக்களும், கூந்தல் பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது.

செம்பருத்தி தைலம்

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

கூந்தல் உதிர்வை தடுக்கும்

கூந்தல் உதிர்வால் பாதிக்கப்பட்டவர்கள் செம்பருத்தி தைலத்தை பூசலாம். இது சிறந்த மூலிகை தைலமாக செயல்படுகிறது. இளநரையை தடுக்கிறது. கூந்தலை கருமையாக்குவதோடு, கூந்தலை அடர்த்தியாக்குகிறது.

பொடுகு தொல்லை நீங்கும்

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை. இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.