Sunday, 12 March 2017

தொப்பையை குறைக்க ஒரு அற்புதமான இயற்கை மருந்து ஓமம்!!

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.

 
ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
 
தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும்.
 
மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
 
பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.
 
குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும். வயிற்றுக் கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து. தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது.
 
ஓமத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
 
* அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும்.
 
* வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.
 
* நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும்.
 
* மார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெயை மார்பின் மீது தடவ சரியாகும். பல்வலி இருந்தால், இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.
 
* வயிறு "கடமுடா" வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம்.
 
* ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும். சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு நிங்கும்.
 
* தொப்பையை குறைக்க தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும். காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.

உடல் சூட்டை தணிப்பதோடு, உடலுக்கு புத்துணர்ச்சி தரும் இளநீர்!

உடல் சூடு அதிகமாவதால் உடலில் உள்ள நீர் சுண்டிப்போய், சிறுநீர் கழிக்க சிலர் சிரமப்படுவர். இப்பருவத்தில்தான் சிறுநீர்  தொற்றுநோய்களும் அதிகம் பரவுகிறது. இவர்கள் இளநீரைப் பருக சிறுநீர் தாராளமாகப் பிரியும். வளரும் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் இளநீர் சிறந்த டானிக்.
 
 
 
காலரா, வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவோர்க்கு, அவசர காலங்களில் ஊசி மூலம் இரத்தத்தில் கலக்க ‘டிரிப்ஸ்’ போல்  ஏற்றப்படுகிறது. இதில் உள்ள தாதுப் பொருட்கள் உடலில் விரைந்து சென்று கலந்து, மயக்கமுற்ற நிலையில் இருப்போர்க்கு  உயிர் தரும் மருந்தாகிறது. 
 
நிறைய மருந்து, மாத்திரைகள் சாப்பிட நேரும்போது, கூட இளநீர் சாப்பிட்டால் உடலில் மருந்தின் தாக்கத்தை குறைக்க  பெரிதும் உதவுகிறது. இளநீரில் உள்ள சத்துக்கள் இளநீரிலேயே, இளசாக உள்ள காய்களின் நீர் அதிக இனிப்பு சுவையுடனும்,  முற்றின காய்கள் இனிப்பு குறைவாக இருப்பதையும் காணலாம். 
 
இளநீரில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து என தாதுப்பொருட்கள் கணக்கிலடங்காது  அடங்கியுள்ளது.
 
தவிர இளநீரில் வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன. தாதுப் பொருட்கள், குறிப்பாகப் பொட்டாசியம் அதிக  அளவில் இருப்பதால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் இளநீரைப் பருகக் கூடாது. 
 
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் அல்லது தினமும் இளநீர் பருகக்கூடாது. முற்றின தேய்காயில்  உள்ள இளநீரே இவர்கள் பருக உகந்தது. 
 
வெப்பம் அதிகமாகும்போது சருமத்தில் ஏற்படும் வியர்குரு போன்றவற்றின் மீது தடவவும் நல்ல மருந்தாகும். முகத்தின் சரும  பாதுகாப்பிற்கும் இளநீர் தடவிக் கொள்வது நல்லது.

Saturday, 11 March 2017

நினைவாற்றலை அதிகரிக்கும் வெண்டைக்காய்

வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.


வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. 
அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி காப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘பார்ட்டிகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது.
இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.
வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.
காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும்.
பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்திய வாழ்க்கை தரமாக இருக்குமாம்...! ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது.
நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம்.



நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காயின் மருத்துவ குணங்கள்

 

பிஞ்சு வெண்டைக்காயிலுள்ள வேதிச்சத்துக்கள் ரத்தம் உறைதல் மற்றும் ரத்தக்கட்டிகளை தடுக்கும் தன்மை உடையதால் அடிக்கடி உணவுடன் சேர்த்து உட்கொண்டுவர மூளை செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கலாம்.


 
நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த, ருசியான காய்களில் முதலிடத்தை வகிப்பது வெண்டைக்காய். வெண்டைக்காயில் அடங்கியுள்ள நீர்ச்சத்து, திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது.
 
வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும்,நார்ப்பொருளும் உள்ளன. இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில்  உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது.
 
இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு,  குடல்புண்ணையும் ஆற்றும்.
 
பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். இதனுடன் சர்க்கரை சேர்த்து  சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு  உண்டு.
 
படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால்  நினைவாற்றல் பெருகும்.
 
பெண்களுக்கு அதிகம் உடல் உஷ்ணத்தினால் மாதவிலக்கின்போது ஏற்படும் வயிற்றுவலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய்  விதைகளை, 2 முதல் 5 கிராமளவு சாப்பிட்டுவர வேண்டும்.

 

இந்த ஒரு பழம் பலவீனமான எலும்புகளை வலிமையாக்கும் என்பது தெரியுமா?

தற்போது நிறைய மக்கள் எலும்பு பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு தற்போதைய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுப் பழக்கமும், உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையும் தான் காரணம். 
 
 
 
 
எலும்புகளின் வலிமையை அதிகரிக்க பால் பொருட்கள் மட்டும் தான் உதவும் என்று நினைக்க வேண்டாம். பழங்களும் உதவி புரியும்.
 
 அதில் எலும்புகளை வலிமையாக்க உதவும் ஓர் பழம் தான் அன்னாசி. இதற்கு அதில் உள்ள வளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் தான் முக்கிய காரணம். அன்னாசியை பலவாறு உட்கொள்ளலாம். எப்படி உட்கொண்டாலும், அதன் முழுமையான பலனைப் பெற முடியும். இங்கு பலவீனமான எலும்புகளை வலிமையாக்கும் அளவில் அன்னாசியில் என்ன சத்துக்கள் உள்ளது என்று கொடுக்கப்பட்டுள்ளது. 
 
 வைட்டமின் சி 
அன்னாசியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது மூட்டுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதோடு, எலும்புகள் மற்றும் மூட்டுக்களின் வலிமைக்கு தேவையான கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
 
மாங்கனீசு 
அன்னாசியில் உள்ள மற்றொரு முக்கிய சத்து தான் மாங்கனீசு. இது எலும்புகளில் உள்ள இணைப்புத்திசுக்களின் கூட்டுச்சேர்க்கைக்கு உதவி, எலும்புகளை வலிமையாக்குகிறது.
 
பி வைட்டமின்கள் 
அன்னாசியில் வைட்டமின்களான வைட்டமின் பி6, பி1 மற்றும் பி12 போன்ற எலும்புகளின் வலிமைக்கு உதவும் சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. 
 
காப்பர் 
அன்னாசியில் உள்ள மற்றொரு முக்கிய கனிமச்சத்து தான் காப்பர். இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், மூட்டு மற்றும் எலும்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவி புரியும்.
 
புரோமிலைன் 
அன்னாசியில் புரோமிலைன் என்னும் நொதி உள்ளது. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். ஒருவேளை எலும்புகளில் முறிவு ஏற்பட்டிருந்தால், அதனால் ஏற்படும் வலியைக் குறைக்கவும், விரைவில் குணமாக்கவும் இது பெரிதும் உதவியாக இருக்கும்.