ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்றொரு பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்த இலுப்பை மரம் பட்டர் ட்ரீ, இந்தியன் பட்டர் ட்ரீ, இலுப்பை, இப்பே, மாவோட்ரீ, மாவ்வோ என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதில் அதிக அளவு புரதச்சத்தும் கால்சியம் மற்றும் பாஸ்பரசும் கொண்டது. சரும நோய்கள், தலைவலி, விஷக்கடி, மலச்சிக்கல், மூலநோய், நீரிழிவு நோய், டான்சில், இதய நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் கொண்டது தான் இந்த இலுப்பை.அத்தகைய இலுப்பையின் மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பகுதியில் விளக்கமாகப் பார்க்கலாம்.
கொடிய விஷம்
கரப்பான், பெரிய கடி விஷம், கடுவன் விஷம் ஆகிய கொடிய விஷக் கடிக்கு கடித்த இடத்தில் இலுப்பை நெய்யைத் தடவினால் போதும் விஷம் உடனே முறிந்துவிடும்.
வலி நிவாரணி
இந்த இலுப்பை காயிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயானது மூட்டு வலி, முதுகு வலி போன்ற தீராத வலிகளையும் போக்கும் சிறந்த நிவாரணியாகச் செயல்படும். இடுப்பு வலியைப் போக்கி நரம்புகளுக்கு வலிமையைக் கொடுக்கும். குறிப்பாக, இலுப்பைப் பூவை பாலில் போட்டு காய்ச்சி இரவில் குடித்து வந்தால் நரம்பு மண்டலம் வலிமை பெறும்.
வீக்கம் நீங்க
இலுப்பையின் புண்ணாக்கை வைத்து ரணம், வோதம், பித்தம், கபம் என்னும் மூன்று தோஷங்கள், சிரங்கு போன்ற நோய்களைக் குணப்படுத்திவிட முடியும்.
பித்தம் தீர்க்க
பித்தத்தால் உண்டாகும் காய்ச்சலும் அடிக்கடி தாகம் எடுப்பது, ரத்த சர்க்கரை நோய் ஆகிய பிரச்சினைகளுக்குத் தீர்வாக இந்த இலுப்பைப் பூ பயன்படும்.
அந்தரங்க வாய்வு
பார்ப்பதற்கும் இந்த இலுப்பை மலர்கள் மிக அழகாக இருக்கும். இவற்றை நாம் எடுத்துக் கொள்வதின் மூலம் அந்தரங்கப் பகுதியில் தேங்கும் வாய்வுப் பிரச்சினை நீங்கும்.
விறைப்புத்தன்மை
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சினைகள் தீரவும் விந்து உற்பத்தியைப் பெருக்கவும் இதன் வேர் பயன்படுகிறது. விந்து முந்துதல் என்னும் இழப்பு மற்றும் விந்தின் வீரியத்தை அதிகரிக்கச் செய்யவும் இலுப்பையின் வேரை பொடியாக்கி பாலில் போட்டு குடித்து வாருங்கள்.
பக்க விளைவுகள்
இதில் உள்ள ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் சருமப் பிரச்சினைகளைத் தீர்த்தாலும் தலைமுடிக்கு ஆகாது.
உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்தும். அதனால் அளவோடு எடுத்துக் கொண்டு பயன்பெறுவது நல்லது.