Sunday 24 March 2019

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்...!

அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும்.




அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப்  பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது.
 
தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
 
அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும். உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு  ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.
 
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒரு  வாரம்வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம். 
 
தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால், உடல் கொழுக், மொழுக் என்று வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து  இருக்கின்றது. இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற  பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக உள்ளது. இதைத் தவிர  வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக  அளவில் உண்டு.
 
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால், வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து,வெண் புள்ளிகள் மீது  பூசலாம்

Thursday 21 March 2019

பயன் தரக்கூடிய சில இயற்கை மருத்துவ முறைகளும் பயன்களும்....!

குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
 
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
 
கிராம்பை நீர்விட்டு மைப்போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
 
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பி இருந்தால், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
 
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
 
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
 
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப் பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
 
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டு பங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள்  ஆறும்.
 
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின்  நெறிக்கட்டிகளும் குறையும்.

Saturday 16 March 2019

கோடைகாலத்தில் ஏற்படும் களைப்பை விரட்டும் பானம் - பானகம்!!!!

பழரசத்தை விடவெயிலுகந்தது பானகம் தான் ... கால்சியம்+இரும்புச்சத்து +விட்டமின்கள் + எனர்ஜி = பானகம்



வெயிலுக்கு பானகம் அருந்தும் போது instant energy கிடைக்கிறது நடைப்பயணம் போகும் போது கழைப்பாக வீடு வந்தடையும்,போது நாம் அருந்தும்

பானகமானது உடலுக்கு தேவையான கால்சியத்தை சுக்கிலிருந்தும்,

இரும்புச்சத்தை அமினோஅமிலங்களை பனைவெல்லத்திலிருந்தும்,

ஏலக்காயிலிருந்து உணவு குழாயில் ஏற்படும் தொற்றுகளையும் செரிமானத்தை சரி செய்வதும்,

எலுமிச்சம்பழத்திலுள்ள சிட்ரிக் அமிலம் உடலின் நிலைதன்மையை உருவாக்குவதும் அதை பற்றி தரவுகள் அனைவருக்கும் தெரிந்ததே,

புளியிலிருக்கும் விட்டமின் C யானது பனைவெல்லத்துடன் வினை புரிந்து உடனடி எனர்ஜியாக உடலுக்கு அளிக்கிறது அதுமட்டுமல்ல சுக்கு மிக சிறந்த வினையூக்கி உடலுக்கு என்பதை நாமெல்லாம் அறிந்த செய்தி......

வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு நமது மரபை போற்றும் பானகத்தை கொடுக்க முயல்வோம் அதன் மூலம் வெப்பத்தால் உருவாகும் நோய் தொற்றுக்களை தவிர்ப்போம்...

இதன் மூலம் உடலுக்கு நோய்களை உற்பத்தி செய்யும் பன்னாட்டு கம்பெனிகளின் குளிர்பானங்களை தவிர்க்கவே முயல்வோம் .

பானகத்திற்கான தேவையான பொருட்கள் :

புளி - சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
பனைவெல்லம் அல்லது வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்
சுக்குப்பொடி - 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்

செய்முறை :

1. வெல்லத்தை தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும்.
2. கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும்.
3. இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும்.
4. மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். கோடையில் வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்!!!!!

Monday 4 March 2019

உடலை பாதுகாக்கும் பருப்பு வகைகள்!

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிக புரதம் உள்ளது. சைவ உணவை பொறுத்தவரை பருப்பு வகைகளை தான் நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

துவரம் பருப்பு: இதில் புரத சத்துடன், ஃபோலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கலாம்.

பாசிப்பருப்பு: விட்டமின் ஏ,பி,சி,ஈ, கனிமச்சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவும். இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்க உதவும்.

பச்சை பயறு: புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம். பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. உணவினை எளிதில் செரிமானமடைய செய்யும். உடல் எடை மற்றும் கொழுப்பு சத்து  குறைய உதவியாக இருக்கும்.கொண்டைக்கடலை:  கொண்டைக்கடலையில் ஃபோலிக் அமிலம், மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிர சத்து அதிக அளவில் உள்ளன. எனவே கொழுப்பு குறைவதுடன், இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

மைசூர் பருப்பு: இந்த பருப்பின் முக்கிய சிறப்பு இதில் உள்ள நார்ச்சத்து. உடலில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்ல உதவும்.



சுண்டல்: கொண்டைக்கடலையில் ஒரு வகை தான். கருப்பு நிறத்தில் இருக்கும் இதனை பெரும்பாலும் சுண்டல் செய்வது வழக்கம். உணவில் இதனை சேர்த்துக் கொள்வதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், விட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், கருப்பைக் குழாயில் பிரச்சனை ஏற்படுவது, ரத்த சோகை பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும்.

கடலைப் பருப்பு: ஃபோலிக் அமிலம், மாங்கனீசு, இரும்புச்சத்து, தாமிர சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் மற்ற பருப்பு வகைகளை விட இரண்டு மடங்கு புரதம் அதிகம் நிறைந்து இருப்பதால், உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும்  இதய நோய் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

சிவப்பு காராமணி: பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கியுள்ளது. புற்றுநோய், கொலஸ்ட்ரால் ஏற்படுவதை தடுக்கும். இதிலுள்ள விட்டமின்கள் மூளையின் செயல்பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை வலுவோடு வைக்க பெரிதும் உதவுகிறது.

தட்டை பயறு: தட்டை பயறு குழம்பின் சுவைக்கு ஈடு இணை இல்லை. இதிலுள்ள நார்ச்சத்து, இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால், தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

உளுத்தம் பருப்பு: இட்லிக்கும், தாளிப்பதற்கு பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ளது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த பருப்பு பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்தும் தன்மையுடையது.