Saturday 31 March 2012

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!



எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் எதையும் டேக் ஈசியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம். எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கத்தித் தீர்ப்பவர்கள் ஒரு ரகம். டேக் இட் ஈசி ரக ஆட்கள் என்றைக்கும் ஒரே மாதிரி இருப்பார்கள். அவர்களின் அழகு என்றைக்குமே மாறாது. உடல்நலத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படாது. காரணம் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதுதான். ஆனால் டென்சன் பார்ட்டிகள் அழுது வடிந்து கொண்டு, வயதான தோற்றத்திற்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். நோயும் எளிதில் தாக்கத் தொடங்கிவிடும். அதற்குக் காரணம் அவர்களின் டென்சன்தான் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.

பியூட்டி ப்ரெஸ் யாருக்கு?

இயற்கையான அழகு யாருக்கு கிடைக்கும்? என்கிற கோணத்தில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். 500க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம், தினமும் அவர்கள் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆய்வின் முடிவில் அடிக்கடி டென்ஷனாகஇருப்பவர்களைக் காட்டிலும் டென்ஷன் ஆகாமல் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்பவர்கள் `ப்ரெஷ்” ஆகவும், அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அழகிற்கும் மனதிற்கும் தொடர்பு

அழகுக்கும் மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. அந்த மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும்; உடலும் ஆரோக்கியமாக இருக்கும்” என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் நம் முன்னோர்கள் மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் முதுமை நம்மை அண்டாது என்று தெரிவித்துள்ளனர்.
என்ன டென்சன் பார்ட்டிகளே நடப்பது நடந்துதான் தீரும். எனவே உங்கள் டென்சனை தூக்கிப்போடுங்கள் அழகாக மாறுங்கள்.

30 வயது பெண்களும், 40 வயது ஆண்களும் அழகு– ஆய்வு முடிவு



பதின் பருவத்தில் தான் பெண்கள் அழகாக இருப்பார்கள் என்பது கவிஞர்களின் சொல்லாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் முப்பது வயதைக் கடந்த நடுத்தர வயதில்தான் பெண்கள் அழகாக இருப்பதாக கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.


மனிதர்கள் எந்த வயதில் அழகாக இருப்பார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர் என அநேகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘ஆண்டிகள்தான்’ அழகு!

மனிதர்களின் அழகு பற்றி 1000 ம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆண்களிடம் கேட்ட கேள்விகளுக்கு 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களே அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக ஏராளமான இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் ( ஏன் எல்லோரும் இப்படி ‘ஆன்டி ஹீரோ’வாக மாறினாங்களோ தெரியலை)

ஆண்கள் 40 வயதில் அழகு

இதேபோல் பெண்களிடம் கேட்கப்பட்டதில் 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள்தான் மிக அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிவதாக கூறியுள்ளனர் (அப்படியா! ) ஏனெனில் 40 வயதில் தான் ஆண்கள் அழகான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது.

அழகிற்கு காரணம் என்ன?

இளம் வயதில் குடும்ப சூழ்நிலையால் தன்னைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் பல பெண்கள் திருமணம் முடிந்து குழந்தை பெற்றுக்கொண்டு ஒரளவு லைஃபில் செட்டில் ஆன திருப்தியில் தங்களை அழகு படுத்திக்கொள்கின்றனர். அந்த வயதில் தான் மற்றவர்களை கவரும் உடைகளையும், வாசனை திரவியங்களையும் பயன்படுத்த தொடங்குகின்றனர். அதனாலேயே பிறரது கண்களுக்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் தெரிகின்றனர்.

ஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகுதான் ஆடம்பரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர். மேலும் விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கின்றனர் இதனாலேயே அவர்களின் உடல் அமைப்பு கவர்ச்சிகரமானதாக மாறிவிடுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

எப்படி இருந்தா என்ன, ஆண்களும் அழகுதான், பெண்களும் அழகுதான் – எந்த வயதாக இருந்தாலும் என்பதை உணர்ந்தால் எப்போதும் எல்லோரும் அழகுதான்..

Friday 30 March 2012

சுவையும் ஆரோக்கியமும் தரும் கனி வகைகள்



ஆப்பிள் :-

இரும்புச்சத்து, ஆர்சனிக் சத்து மற்றும் பாஸ்பரஸ் சத்து அதிகம் கொண்டது ஆப்பிள். ரத்த சோகையை போக்குவதற்கான அருமருந்து ஆப்பிள்.

விளாம்பழம் :-

மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு, பெப்டிக் அல்சர் மற்றும் நுரையீரல் கோளாறுகளை நீக்குகிறது விளாம்பழம்.

வாழைப்பழம் :-

ஒரு வாழைப்பழத்தில் 100 கலோரி அளவு சத்து உள்ளது. உணவு செரிமானத்திற்கு கிரியா ஊக்கியாக செயல்படுகிறது வாழைப்பழம். வாழைப்பழத்தில் அதிகமாக உள்ள பொட்டாசியம் நரம்புகளும், தசைகளும் இலகுவாக செயல்படுவதற்கு உதவுகிறது


திராட்சை :-

உணவு செரிமானத்திற்கு உதவும் திராட்சை, காய்ச்சலின் போது ஏற்படும் பலவீனத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.

மாம்பழம் :-

கல்லீரலில் ஏற்படும் உபாதைகளுக்கு ஏற்றது. உடல் எடையைக் கூட்டும். உடலுக்குத் தேவையான சத்துப் பொருட்களான இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்து ஆகியவை உருவாவதற்கு மாம்பழம் பயன் படுகிறது.

ஆரஞ்சு : -

வைட்டமின் ‘சி’ அதிகமாக உள்ளது ஆரஞ்சு. மனித உடலில் பொதுவாக ஏற்படும் ஜலதோஷம், ஃபுளு காய்ச்சல், இரத்தப் போக்கு முதலியவற்றை கட்டுப்படுத்த உதவும்.

பப்பாளிப் பழம் :-

பப்பாளியில் வைட்டமின் ‘ஏ’ அதிகமாக உள்ளது. கல்லீரலுக்கு ஏற்ற உணவு பப்பாளி. மேலும் மலச்சிக்கலைப் போக்குவதற்கு பெரிதும் உதவுகிறது.

அன்னாசி :-
மூக்கு ஒழுகுதல், சுவாசக் குழாயில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும், சாதாரண காய்ச்சல் இவைகள் உடலைப் பாதிக்காமல் தடுக்கிறது அன்னாசி.

செர்ரீபழம் :-
செர்ரீ பழத்தில் உள்ள தாதுப் பொருள் யூரிக் அமிலம் உருவாவதை தடுக்கிறது மேலும் மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்



பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

Thursday 29 March 2012

இளமையை மீட்டுத்தரும் ஆவகேடோ!



ஆவகேடோ பழம் சரும ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் சிறந்தது. இயற்கையிலே சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றுகிறது. ஆவகேடோவின் பழத்தின் அழகியல் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்களேன்.

ஆரோக்கியமான சருமம்

ஆவகேடோவில் உயர்தர வைட்டமின் ஏ உள்ளது. சருமத்தின் இறந்த செல்களை போக்குகிறது. இதில் உள்ள அமினோ அமிலங்கள், குளுடோமின் சருமத்தினை ஆரோக்கியமாக மாற்றுகிறது. ஆவகேடோவில் வைட்டமின் இ அதிகம் அடங்கியுள்ளது. இது சரும பாதுகாப்பிற்கு ஏற்றது. வறண்ட சருமத்தை மென்மையாக்குவதில் ஆவகேடோ எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது. ஆவகேடோ பேக் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ஸ் ஆக செயல்படுகிறது. இது பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பித்து இளமையை மீட்டெடுக்கிறது.

முகச்சுருக்கம் போகும்

முகச்சுருக்கத்தினால் வயதான தோற்றம் ஏற்படும். ஆவகேடோ இதனை போக்குகிறது. அதிகமான மேக் அப், ரசாயனங்கள் அடங்கிய அழகு சாதனங்களை உபயோகிப்பதனால் முகச்சுருக்கம் ஏற்படும். இதனை இயற்கையான வழியில் ஆவகேடோ போக்குகிறது. ஆவகேடோ பழத்தை மசித்து அதில் பேஷியல் மாஸ்க் போல போடவும். 20 நிமிடம் கழித்து ஊறவைத்து குளிர்ந்த நீரில் கழுவவும், இதனால் சருமத்தில் தங்கியுள்ள எண்ணற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது.

முகம் பளபளப்பாகும்

ஆவகேடோ பழத்துடன் ஒரு வாழைப்பழம் மற்றும் பப்பாளிப்பழம் சேர்த்து நன்றாக கூழ் போல பிசைந்து முகம், கழுத்து மற்றும் வறண்ட சருமத்தில் தடவி நன்றாக காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் சருமத்தில் தழும்புகள், வடு குறைந்து வறண்ட சருமம் பளபளப்பாகும்.

ஆவகேடோ எண்ணெய் சில துளிகளை எடுத்து சருமத்தில் மென்மையாக பூசி மசாஜ் செய்யவும். சிறிது நேரம் ஊறவைத்து கழுவ சருமம் பளபளப்பாகும் .

பளபளக்கும் கூந்தல்

ஆவகேடோ சதையை எடுத்து அதனுடன் ஒரு முட்டையின் வெண்கருவை உடைத்து ஊற்றி கலக்கி சிறந்த கண்டிசனராக பயன்படுத்தலாம். இந்த கலவையை தலையில் ஊறவைத்து குளிக்கலாம். இதனால் கூந்தலுக்கு எண்ணெய் பசை தன்மை கிடைப்பதோடு வறண்ட சருமம் மிருதுவாகும். இதில் உள்ள வைட்டமின் இ கூந்தலுக்கு இயற்கையான பளபளப்பை தருகிறது.

வெப்பக்கொப்புளங்கள்

கோடை காலத்தில் ஆவகேடோ எண்ணெய் இயற்கை சன்ஸ்கிரீன் லோசனாக செயல்படுகிறது. இது அல்ட்ரா வயலட் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கிறது. வெப்பக் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ள இடத்தில் ஆவகேடோ எண்ணெய் பூச வலி குறையும். கொப்புளங்கள் குணமாகும்.

Wednesday 28 March 2012

இந்திய சமையல் பொருட்கள், மூலிகைகள் மையலுக்கு ஏற்றவை-ஆய்வில் தகவல்



இந்தியாவில் கிடைக்கும் மூலிகைகளும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்கள் உணர்வுகளை தூண்டி உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த உணவுகள் உடலின் பாலுணர்ச்சியை தூண்டும் ஹார்மோன்களை ஊக்குவிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சமையலுக்கு ருசிக்காகவும், வாசனைக்காகவும், ஏலம், கிராம்பு, பூண்டு, வெங்காயம், போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை உணவுக்கு உடலுக்கு ஊட்டம் தருவதோடு உற்சாகத்தையும் தரும் என்றும் பாலுணர்வை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றும் ஆஸ்திரேலியாவைத் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாலுணர்வு அதிகம்

25 லிருந்து 52 வயது வரை உடைய 60 ஆரோக்கியமான ஆண்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆறுவாரங்களுக்கு வாரம் இரண்டு முறை மூலிகை உணவுகள் தரப்பட்டன. மூலிகைகளை உண்டவர்களின் பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் அளவு அதிகபட்சமாக 28 சதவிகிதம் அதாவது 16.1 லிருந்து 20.6 சதவிகிதமாக உயர்ந்திருந்தது.

இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் நறுமணப் பொருட்கள், மூலிகைகள் போன்றவை மனிதர்களின் பாலுணர்வை தூண்டுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வு முடிவை ‘டெய்லி மெயில்’ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

Tuesday 27 March 2012

பழங்களை விட அதிக சத்துக்கள் நிறைந்த பாப்கார்ன்



காய்கறி, பழங்களை காட்டிலும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதை சத்து நிறைந்த சீர்படுத்தப்படாத தங்கம் என வர்ணிக்கின்றனர்.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தானியங்களில் காணப்படும் சத்துக்கள் குறித்து ஆராய்ச்சி நடத்தினர்.

இந்த ஆராய்ச்சியில் மக்காச் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன் மிகவும் சத்தானது என்று தெரியவந்துள்ளது.

மேலும் உப்பு, எண்ணைய், வெண்ணெய் போன்றவை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் பாப்கார்ன் காய்கறி, பழங்களை காட்டிலும் மிகவும் சத்தானது என்றும் தெரியவந்துள்ளது.

மற்ற தானியங்களில் உள்ளதை விட மக்காச்சோளத்தில் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் நார்ச்சத்து அடங்கி இருப்பதால், பாப்கார்ன் சத்தானது மட்டுமின்றி உடல் நலத்துக்கும் நல்லது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Sunday 25 March 2012

துளசி (Ocimum Sanctum) சாப்பிடுங்க... நீரிழிவு குணமாகும்!!




நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி சில துளசி இலைகளை மென்று சாப்பிடுவதால் நீரிழிவு கட்டுப்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. துளசி இலையில் உள்ள முக்கியமான சத்து ஒன்று சர்க்கரை நோயைக் குணப்படுத்துவதாக ஆந்திர மாநில குண்டூர் மாவட்டத்தில் உள்ள விக்னன் பல்கலை மாணவர்கள் குழு ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

துளசியின் தெய்வீகத்தன்மை

இந்தியாவில் துளசி இலை தெய்வீகத் தன்மை வாய்ந்ததாக போற்றப்படுகிறது. இந்த துளசி இலை சேர்த்த தண்ணீர் கோவில்களில் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. துளசி இலை மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாகும். துளசி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியப் புராணங்களில் பத்ம புராணம் துளசியின் பலன்கள் பற்றி எழுதப்பட்டுள்ளது. மூச்சுக் குழல் தொடர்பான நோய்களுக்கு துளசி இலையின் பலன்கள் ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் உள்ள 'அர்சாலிக்' அமிலம் ஒவ்வாமை நோயைத் தீர்க்க பயன்படுகிறது.

ஆயுர்வேத சிகிச்சையில் துளசி பல்வேறு நோய்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. துளசியில் உள்ள யூஜினால் என்ற எண்ணெய் சத்து அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது. அலர்ஜி, மற்றும் ஆஸ்த்மா, உடல் நோய் தடுப்புச் சக்திகளில் துளசி இலைகள் முக்கியப் பங்காற்றுவதும் ஏற்கனவே அறியப்பட்டவைதான்.

தற்போது துளசியில் உள்ள Ocimum sanctum என்ற பொருள் குணப்படுத்தவல்லது என்பதை ஆய்வு பூர்வமாக நிரூபித்துள்ளனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பல்கலைக் கழக மாணவர்கள். விக்னன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி. முரளிகிருஷ்ணன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் துளசி இலையின் சில அபூர்வ சக்திகளைக் கண்டறிந்துள்ளனர்.

நீரிழிவு குணமாகும்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம், சிறுநீரகம், கண்கள், போன்றவை பாதிக்கப்படுகின்றன. துளசி இலை ரத்தத்தில் கலந்திருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவல்லது என்று இந்த ஆய்வாளர்கள் ஆய்வு பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளனர்.

இந்த ஆய்விற்கு எலிகளைப் பயன்படுத்திய இந்த ஆய்வுக்குழுவினர் முதலில் 'ஸ்ட்ரெப்டோசோசின்' என்ற ரசாயனத்தைப் பயன்படுத்தி எலிகளுக்கு சர்க்கரையின் அளவை அதிகரித்தனர். பிறகு துளசி இலையில் இருந்து இவர்கள் கண்டுபிடித்த மருந்தை நாளொன்றுக்கு ஒரு முறை 30 நாட்களுக்கு கொடுத்து வந்தனர்.

இந்த ஆய்வின் முடிவில் சர்க்கரையின் அளவு குறைக்கப்பட்டிருந்த்தோடு, முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், ஈரல் ஆகியவை இந்த துளசி மருந்தால் பாதுகாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

தினசரி இரவில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை தண்ணீரில் ஊறவைத்து அதை காலையில் எழுந்து குடித்து வர நீரிழிவு கட்டுப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் தினசரி துளசி இலைகளை மென்று தின்றாலும் நீரிழிவு கட்டுப்படும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Saturday 24 March 2012

ரத்தத்தை சுத்தமாக்கும் சத்தான உணவுகள்!



மனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம்தான் நாம் உண்ணும் உணவில் இருந்து சத்துக்களை கிரகித்து ஆக்சிஜனாக மாற்றி மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்பவதோடு மனித நடமாட்டத்திற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது. ரத்தம் சுத்தமானதாக இருந்தால்தான் நம்மால் ஆரோக்கியமாக நடமாடமுடியும். அசுத்தக் கலப்பில்லாமல் ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி அன்றாடம் உண்ணும் உணவுப்பொருட்களிலேயே உள்ளது. உணவியல் நிபுணர்கள் கூறும் அவற்றை சாப்பிட்டு பாருங்களேன்.

எலுமிச்சை

ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரித்து அவற்றை கழிவுகளாக வெளியேற்றும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு. தினசரி காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ரத்தத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஒருவாரம் இதை முயற்சித்துப் பாருங்களேன். உங்களின் உடலில் கிடைக்கும் அபரிமிதமான சக்தியை நீங்களே உணர்வீர்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி மிளகு

உணவுப் பொருட்களில் சுவைக்காக நாம் சேர்த்துக்கொள்ளும் மிளகு சிறந்த ரத்த சுத்திக்கரிப்பானாக உள்ளது. மிளகானது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளது. எனவே உணவுகளில் மிளகு சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

பசுமை காய்கறிகள்

பச்சை நிறமுடைய காய்கறிகள், கீரைகள் உடல் சக்தியை அதிகரிப்பவை என்பது அனைவரும் அறிந்ததே. இதில் உள்ள குளோரோபில் மனிதர்களுக்குத் தேவையான சக்தியை ரத்தத்திற்கு அளிக்கிறது. டாக்ஸினை ரத்தம் கிரகித்துக் கொள்ள உதவிபுரிகிறது. நமக்குத் தேவையான சக்தி கிடைக்க அன்றாட உணவுகளில் பச்சைக் காய்கறி சாலட்களை அதிகம் உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

கண்ணிற்கு ஒளிதரும் காரட்

காரட்டில் உள்ள கரோட்டின் சத்து கண்ணிற்கும், சருமத்திற்கும் நன்மை தரக்கூடியது. நமது உணவில் காரட் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. சமைத்து உட்கொள்வதை விட காரட் ஜூஸ் பருகுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது.

வெள்ளைப்பூண்டு

உடல் ஆரோக்கியத்தைக் காப்பதில் வெள்ளைப்பூண்டு சிறந்த உணவாகும். இதில் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றுகிறது. ரத்தத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. இது இறந்து போன செல்களை நீக்குவதோடு புதிய செல்களை ரத்தத்தில் விரைந்து உற்பத்தி செய்கிறது. எனவே வெள்ளைப்பூண்டினை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதோடு உடலுக்குத் தேவையான சக்தி எளிதில் கடத்தப்படும். இதனால் உடலும் உற்சாகமடையும் என்பது அவர்களின் அறிவுரையாகும்.

Thursday 22 March 2012

தக்காளியும் உடல் ஆரோக்கியமும்




இதைக் காயாகவும் சமைக்கலாம், பழமாகவும் சமைக்கலாம். பச்சையாகவே சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் சாப்பிடுவதற்கு முன் பழத்தைச் சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.

காய் கறிகளில் மிகவும் எளிதிலும் விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன.

மற்றக் காய்களில் சிலவற்றில் ஒன்று அதிகமாகவும் மற்ற இரண்டும் குறைவாகவும் இருக்கும். மற்றும் சிலவற்றில் இரண்டு அதிகமாகவும் ஒன்று குறைவாகவும் இருக்கும். ஆனால் தக்காளிப் பழத்தில் மூன்றும் சரியான அளவில் இருக்கின்றன.

முதலாவது, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம். இது பழத்துக்குப் புளிப்புத் தன்மை தருகிறது.

இரண்டாவது எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, நாரத்தை முதலியவற்றில் இருக்கும் ‘சிட்ரிக்’ அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக் கூடியது.

மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலம். இது நரம்பு நாடி, நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது.

சாதாரணமாக காய்கறிகளைச் செடியிலிருந்து பறித்தவுடன் அதன் பசுமை குறைந்து விடும். ஆனால் தக்காளியோ வாடாமல் பசுமையாக இருக்கும். ஆகையினால் இதன் ருசியும் வெகு நேரம் வரை குறையாமல் இருக்கும்.

சாப்பாட்டில் அரிசி அதிகமாக இருப்பதால் உடம்புக்கு நோய் தான் ஏற்படும். தக்காளி இதற்குச் சிறந்த தடுப்பு, இது உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று, அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது.

தவிர பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.

தக்காளியை, பருப்பு சேர்த்து கறி, கூட்டு, சாம்பார், குழம்பு, ரசம் இத்தனையும் தயாரிக்கலாம். புளிப்புப் பச்சடியாகவோ, இனிப்புப் பச்சடியாகவோ சமைத்து உண்டு மகிழலாம்.

கனிந்த தக்காளிப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்தும் சாப்பிடலாம். தக்காளிச் சாதம், தக்காளி தோசை, தக்காளி இட்லி இப்படியும் தயாரித்து உண்ணலாம். அனைத்தும் வெகு சுவையாயிருக்கும்.

தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது. அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது.

மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.

இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவையும் இருக்கின்றன.

இது சுமார் ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். அதனால் ஜீரண சக்தி குறைவாயுள்ளவர்களுக்குத் தக்காளி ரசம் மிகவும் ஏற்றது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல புஷ்டியான ஒரு சிறந்த உணவு.

தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறது.

கால்சியத்தினால் எலும்பு வளர்ச்சி ஏற்பட்டாலும் மக்னிசியம் சிமெண்டைப் போல் எலும்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது. எலும்புகளும் உறுதிப்பட்டு ஒழுங்காக அமைகின்றன.

குழந்தைகளும் பெரியவர்களும் மக்னீசியம் உள்ள தக்காளியோடு கூட, கால்சியம் உள்ள பால் தயிர் முதலியன உட்கொள்வது மிகவும் அவசியம்.

அதனால் தக்காளி தயிர்ப்பச்சடி செய்து அவ்வப்போது உண்டு வரலாம்.

வைட்டமின் ‘சி’ குறைவு காரணமாக உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்படும். சக்தியும் குறையும், பல்லும் ஈறும் பலவீனப்படும். உடம்பு வளராமல் குள்ளமாகவே மனிதன் நின்றுவிடுவான். இதையெல்லாம் போக்கக் கூடிய வைட்டமின் ‘சி’ தக்காளியில் அதிக அளவில் கிடைக்கிறது.

மற்றும் வைட்டமின் ‘பி’யும் ‘சி’யுங்கூட இதில் இருக்கின்றன. சூரியனிலிருந்து கிடைக்கும் வைட்டமின் ‘டி’கூட இருக்கிறது.

தக்காளியில் இத்தனை நல்ல குணங்கள் இருப்பதால் கூடுமானவரைப் பெரியோர்களும் வளரும் குழந்தைகளும் நிறைய தக்காளி சாப்பிடுவது நல்லது.

Wednesday 21 March 2012

லஞ்சுக்கு அப்புறம், ஆபீஸில் கொட்டாவியுடன் தூக்கம் வருதா...?




மதிய சாப்பாட்டிற்கு பின்பு அலுவலகத்தில் பத்துநிடம் உறங்கினால்தான் ஒருசிலருக்கு திருப்தியா இருக்கும். மதிய நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்கள் வரையிலான தூக்கம் மிகவும் நல்லது. அவ்வாறு உறங்கி எழுவதால் இருமடங்கு சுறுசுறுப்புடன் வேலைகளை செய்ய முடியும் என்று மருத்துவர்கள் கூட அதனை வலியுறுத்துகிறார்கள்.

பென்சில்வேனியாவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் மதிய நேரத்தில் 45 நிமிடம் வரை உறங்கி ஓய்வு எடுப்பவர்களுக்கு இதயநோய் ஏற்படுவது குறைகிறதாம். உயர் ரத்த அழுத்தம் குணமடைவதாகவும் தெரியவந்துள்ளது. எனவே சிறிது நேர தூக்கத்திற்கு பிரச்சனை இல்லை. ஆனால் ஒருசிலர் மதிய உணவு உண்டதுமே உலகத்தையே மறந்து மேஜை மீதே தலை சாய்த்துவிடுவார்கள்.

இரவு உறக்கம் பாதிப்பு

இத்தகைய உடல் சோர்வு மற்றும் சக்தி குறைவு மதிய நேரம் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மனிதர்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமானது. சிலர் தூங்குவதற்கே இரவு 12 ஆகி விடுகிறது. கணக்கில்லாமல் மொபைல் பேசிவிட்டு அதிகாலையில் எழுவதாலும் மதிய நேரத்தில் தூக்கம் வருகிறது.

முன்னிரவு தூக்கம்தான் சோர்ந்துபோயிருக்கும் நமது நரம்புகளை புத்துணர்வு பெறவும், உடல் மீண்டும் சக்தி பெறவும் உதவுகிறது. ஆனால் தொடர்ந்து இரவில் தாமதமாக தூங்கி, அதிகாலை எழுந்து வேலைக்கு ஓடுவதால், உங்களது உடலில் உள்ள சக்தியெல்லாம் மதியத்திற்குள் உறிஞ்சப்பட்டுவிடுகிறது . அதன் விளைவே மதிய நேரங்களில் உடல் சோர்வு ஏற்படுகிறது.

உடற்பயிற்சி செய்யுங்கள்

காலை வேளைகளில் அலுவலகம் செல்லும் பரபரப்பில், விளையாட்டு அல்லது உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம் ஒதுக்கி செலவிடமுடியாது என்பது உண்மைதான் என்றாலும், மாலை நேரத்திலாவது ஒரு முப்பது நிமிடங்களாவது நடைபயிற்சி அல்லது ஜாக்கிங் போன்றவற்றை செய்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். இதனால் மதியநேரத்து சோர்வு ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Tuesday 20 March 2012

தூங்கும் போது கொர்… கொர்… ஆ ! உடனே கவனிங்க !!



உடல் பருமன் காரணமாக தற்போது குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கை அதகரித்து வருவது அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குறட்டையால் தூக்கத்தை தொலைப்பதோடு பல்வேறு நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.



இரவு நேரங்களில் படுக்கையறையில் கேட்கும் கொர் கொர் ஓசை பெரும்பாலான மக்களை அச்சுறுத்தி வருகிறது. குறட்டை ஒலி இரவு நேரத்தில் படுக்கையறையின் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவதால், விடிந்ததும் அதைப்பற்றி பலரும் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால், அலட்சியப்படுத்தப்படும் இந்த குறட்டைக்கு சரியான சிகிச்சை பெறா விட்டால் அது ஆபத்தை உருவாக்கிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தற்போதைய ஆய்வு விவரங்கள்படி குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். குண்டான பெண்களில் ஏராள மானவர்கள் குறட்டையால் தூக்கத்தை தொலைத்து, நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இளம் தலைமுறையினர்

இன்றைக்கு சிறுவர் சிறுமியர்கள் பலரும் மைதானங்களுக்கு சென்று விளையாடுவ தில்லை. பள்ளி சென்று வந்த உடன் வீட்டிலே அடைந்து கிடப்பது. ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. பார்ப்பது, கம்ப்யூட்டரில் விளையாடுவது- வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது போன்றவைகளால் இளைய தலைமுறையினரும் உடல் பருமனாகி வருகின்றனர். எதிர்காலத்தில் அவர்களும் குறட்டையால் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது.

உயிருக்கு ஆபத்து

ஆரோக்கியமான மனிதர் ஒருவர் 8 மணி நேரம் தூங்குகிறார் என்றால், அவருக்கு பத்து வினாடிகள் வரை மூச்சு விடுவதில் லேசான தடை ஏற்படும். அப்போது அவரது மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும். அவர் ஆரோக்கியமான மனிதராக இருந்தால், உடனே உடலில் இருக்கும் இயற்கையான விழிப்புணர்வு மெக்கானிசம், அதை சரிக்கட்டும் விதத்தில் அவருக்கு விழிப்பை கொடுத்து, சுவாசத்தை சரிசெய்துவிடும். இது இயற்கையான நிகழ்வு. ஆனால் குறட்டை விடுபவர்களுக்கு இந்த இயற்கை விழிப்புணர்வு மெக்கானிசம் சரியாக செயல்படாது. அப்படியிருக்க, அவர்கள் குடித்துவிட்டு தூங்கினாலோ, அதிக அளவில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தூங்கினாலோ இயற்கை மெக்கானிசத்தின் விழிப்பு நிலை மிகவும் குறைந்துவிடும். அப்போது அவர்களுக்கு குறட்டையால் தூக்கத்தில் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால், விழிப்பு ஏற்படாமல் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம்.

தூக்கம் பாதிப்பு

தூங்கும்போது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம்தான் குறட்டை சத்தமாக வெளிவருகிறது. மூக்கின் பின்புறம் `அடினாய்ட்’ தசையும், தொண்டைக்குள் `டான்சிலும்` இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இவை பெரிதாகும் போது, நாம் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியால் அழுத்தம் கொடுத்து மூச்சு இழுக்கும்போது காற்று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வே குறட்டை சத்தமாக வெளிவருகிறது.

குறட்டைவிடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30 முதல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள். அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப்போது தடைபட்டு அவர்கள் தூங்கும் நேரம் குறையும். மறுநாள் சோர்வுடன் இருப்பார்கள்.
இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்குவது, தலைவலியோடு விழிப்பது ஆகியவை களால் `ஸ்லீப் அப்னீயா சின்ட்ரோம்` என்ற பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு வந்துவிட்டால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும். அதனால் மூளை மட்டுமின்றி, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் பாடுகளும் பாதிக்கும். ஞாபக மறதி, ரத்த அழுத்த நோய்கள், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளும் தோன்றக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

உடல் பருமன்

சிலர் குறட்டையின் பாதிப்பிற்கு சிகிச்சை பெற முடியாத அளவிற்கு உடல் பருமன், வயது முதிர்வு, குள்ளமான கழுத்து, மூக்கு- வாய் பகுதியில் தசை வளர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மூச்சு திணறல் இல்லாமல் இரவில் தூங்குவதற்காக `சி.பி.ஏ.பி’ என்ற கருவி உள்ளது. இதனை பொருத்திக்கொண்டு தூங்கினால் மூச்சு திணறலோ, குறட்டை தொந்தரவோ ஏற்படாது. குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது. அவர்கள் உடல் பருமனை கட்டுக்குள்கொண்டு வர வேண்டும். அதற்காக உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உறங்கும் முறை

குறட்டை பாதிப்பு உள்ளவர்கள் தலையணையை சற்று உயரமாக வைத்து அவர்கள் தூங்க வேண்டும். மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து அவர்கள் தூங்கவேண்டும். நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசித்து உயிர்வாழ்கிறோம். எனவே மூக்கில் ஏற்படும் நோய்களையும், குறட்டையையும் அலட்சியம் செய்யாமல் அவ்வப்போது அதற்குரிய சிகிச்சைகளை பெற்றால் மட்டுமே நோய் வரும் முன்பு உடலை பாதுகாக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இருமல் குணமாக மாதுளம் பழம்



தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.

அதிக தாகத்தைப் போக்கும்.மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

மாதுளம்பூவின் பயன்கள்

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.

மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

பாகற்காயின் மருத்துவ குணங்கள்




நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.
 
உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.

1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். 

2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. 

3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும். 

4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும். 

5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். 

6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும். 

7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும். 

8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். 

9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும். 

10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது. 

11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது. 

13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது. 

14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.

கொத்து மல்லி மருத்துவம்



வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் பச்சைக் கொத்து மல்லி இலையை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நாற்றம் நீங்கும்.

கொத்து மல்லி கீரையை பிழிந்து கிடைக்கும் சாற்றை அம்மை மற்றும் பித்த தழும்புகளுக்கு மேல் தடவி வந்தால் அவைகளின் நிறம் தோலோடு பொருந்துவது போல மாறி வரும்.

முகத்தில் ஏற்படும் பருக்கட்டிகளுக்கு கொத்துமல்லி சாற்றை எடுத்து அதில் கொம்பு மஞ்சளை அரைத்து, அரைத்ததை பருக்கள் மீது பூசி வந்தால் பருக்கள் மறையும், முகம் பளபளப்பாகும்.

கொத்துமல்லி சாறுடன் சிறிது கற்பூரம் கலந்து பூசினால் தலைவலி குணமாகும்.

கொத்துமல்லி இலைகளை எண்ணெய் விட்டு வதக்கி வீக்கம், கட்டிகளுக்கு வைத்து கட்டி வர அவை சீக்கிரம் கரைந்து போகும் அல்லது பருத்து உடையும்.

கொத்துமல்லி சாற்றை தேனோடு கலந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் ஏற்பட்ட பித்த நோய் முற்றிலும் குணமாகும்.

கொத்து மல்லி கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் சிறிதளவு சர்க்கரை போட்டு அருந்தி வந்தால், உடல் உஷ்ணம் நீங்கும். அஜீரணம் உண்டாகாது.

Monday 19 March 2012

முதுகு வலி உயிர்போகுதா? உடற்பயிற்சி செய்யுங்க !



முதுகு வலி என்பது இன்றைக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தலையாய பிரச்சினையாக உள்ளது. இதற்கு காரணம் பள்ளி குழந்தைகள் பொதி சுமப்பதும், இளைய தலைமுறையினர் ஒரே இடத்தில் அமர்ந்து கம்யூட்டர் முன்பு வேலை பார்ப்பதும்தான் என்கின்றனர் மருத்துவர்கள். முதுகுவலிக்கான காரணங்கள் குறித்தும் அதற்கான தீர்வுகளையும் தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.

தண்டுவட நரம்புகள் பாதிப்பு

முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பான நிலையில் உள்ள தண்டுவட நரம்புகள்தான் உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்திச் செல்லும் முக்கியப் பணியைச் செய்கின்றன. முதுகெலும்புகளுக்கு மத்தியில் உள்ள டிஸ்க் நகர்ந்து இந்த நரம்புகள் நசுக்கப்படும்போது தாங்க முடியாத வலி ஏற்படும்.

வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்தே இருக்கக்கூடிய சூழல், தினமும் இரு சக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணித்தல், உடல் எடை கூடுதல், கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்திருத்தல் போன்ற செய்கைகளால், உடல் தசைகள் பலவீனம் அடைவதோடு, முதுகெலும்புகளில் உள்ள 'டிஸ்க்’ அமைப்புகளிலும் அதீத அழுத்தமும் தேய்மானமும் ஏற்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த முதுகெலும்பு அமைப்பும் சீர்குலைவதோடு, தண்டுவட நரம்புகளும் அழுத்தப்பட்டு வலி ஏற்படுகிறது. தவிர, எலும்புகளில் ஏற்படும் சத்துக் குறைவுப் பாதிப்புகளாலும் முதுகு வலி ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வைட்டமின் டி சத்து

நகரச் சூழலில் இருப்பவர்கள் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்துகிடப்பதால், உடலில் வெயில் படுவதே அபூர்வமாகிவிட்டது. வெயிலில் கிடைக்கும் 'வைட்டமின் டி’ எலும்புகளுக்குக் கிடைக்காமல் போவதாலும் எலும்புகள் மிருதுத்தன்மை அடைந்து எளிதில் தேய்மானமாகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தினமும் அரை மணி நேரமாவது உடலில் வெயில் படும்படியாகச் சூழ்நிலைகளை மாற்றிக்கொள்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

உடற்பயிற்சி அவசியம்

நாம் சாப்பிடும் உணவு வகைகளிலேயே நமது எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து இருக்கிறது. கால்சியத்தை எலும்பு கிரகிக்கவும், முதுகு வலிக்கு முடிவு கட்டவும் ஒரே வழி உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யும்போதுதான், எலும்புகள் தங்களுக்குத் தேவையான கால்சியத்தை உறிஞ்சும். எனவே நீச்சல், ஓட்டம், சைக்கிளிங் போன்ற எலும்பு மூட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய ஏரோபிக்ஸ் (Aerobics Exercise) வகை உடற்பயிற்சிகள் நல்லது. இவை தவிர, உடலின் வளைவுத்தன்மைக்கு உதவும் யோகாவும் எலும்பின் ஆரோக்கியத்தைக் காக்க வல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

வெள்ளைப்பூண்டு தைலம்

வெள்ளைப்பூண்டு தைலத்தை எடுத்து முதுகுவலி உள்ள இடத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். முதுகுவலி குணமாகும். வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து பருக முதுகுவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வைட்டமின் சி பற்றாக்குறை

வைட்டமின் சி பற்றாக்குறையினாலும் முதுகுவலி ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே அன்றாட உணவில் வைட்டமின் சி சத்துள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ளுமாறு உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஒரே மாதிரி உட்காராதீங்க

வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு துண்டை நனைத்து அதனை முதுகு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

அனைத்தையும் விட ஒரே பொசிசனில் அதிக நேரம் அமர்ந்திருக்க வேண்டாம். அவ்வப்போது எழுந்து நடந்தாலே முதுகுவலிக்கு காரணமான தசை அழுத்தம் ஏற்படாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Sunday 18 March 2012

உணவில் உப்பு குறைக்கிறீர்களா? கவனம்!



உணவில் உப்பின் அளவைக் குறைக்க ஆரம்பித்துள்ளீர்களா? கவனம் தேவை! குறிப்பிட்ட அளவுக்குக் கீழே உணவில் உப்பின் அளவைக் குறைப்போருக்கு இதயம் தொடர்பான நோய்கள் வரும் என சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

சாதாரணமாக உணவில் உப்பின் அளவு அதிகமாக பயன்படுத்துவோருக்கு இரத்த அழுத்தம் தொடர்பான நோய்கள் உருவாவதோடு அதுவே மாரடைப்பு ஏற்படுவதற்கும் ஒரு காரணமாக அமைகிறது என்ற கருத்து மருத்துவர்களிடையே உள்ளது. இதனால் இரத்த அழுத்தம் தொடர்பான நோய்களுடன் வரும் நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை கூறுவர்.

ஆனால், மாரடைப்பு வராமல் தடுப்பதற்காக அவ்வாறு உப்பைக் குறைத்துக்கொள்வதே மாரடைப்பு முதலான இதய நோய்களை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வுத்தகவல் தெரிவித்துள்ளது.

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையில் 40,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 67 ஆய்வுகளின் முடிவில், உப்பைக் குறைத்துக் கொள்வோரின் உடலில் 2.5 சதவீதம் கொழுப்பு அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து உப்பைக் குறைத்து வந்தோரின் சிறுநீரகத்தில் ரெனின் என்ற புரதமும், அல்டோஸ்டிரோன் என்ற ஹார்மோனும் அதிகளவில் சுரந்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆய்வு தொடர்பாக மருத்துவ ஆய்வாளர் நீல்ஸ் கிரெடல் கூறுகையில், "உப்பைக் குறைத்தால் அது இருதய நோயை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக உடல் எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

"நாளொன்றுக்கு உணவில் சராசரியாக 6 கிராம் அளவு உப்பைச் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்" என்று இருதய நிபுணர்கள் சங்கத்தின் அறிவியல் ஆலோசகர் கெய்த் பெர்டிணாண்ட் தெரிவித்துள்ளார். இது மேற்படி ஆய்வு முடிவிற்குச் சாதகமானதாகவே உள்ளது.

உங்களுக்கு 40 வயது ஆகிவிட்டதா?




40 முதல் 60 வயது வரையிலான பருவம் மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த காலக் கட்டத்தில்தான் பலவிதமான நோய்கள் மனிதர்களைத் தேடி வரும். அதற்கு இடம் கொடுத்து, உடலில் உட்காரவைத்துவிட்டால், ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து ஆளையே வீழ்த்திவிடும். நாம் கவனமாக இருந்தால் நோயை அண்டவிடாமல் தடுத்து, முழு ஆரோக்கியத்துடன் வாழலாம்.

என்னென்ன நோய்கள் வரும்?

உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், சர்க்கரை நோய், அதிக அளவில் கொழுப்பு சேருதல், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், எலும்பு மூட்டு நோய்கள், புற்று நோய் போன்றவைகள்.

வாழ்வியல் முரண்பாடுகளால் ஏற்படும் நோய்கள் :

மெட்டோபாலிக் சின்ட்ரோம் இந்தியர்களுக்கு அதிகமாக உள்ளது. இது அளவிற்கு அதிகமாக இடுப்பு பெருத்துப் போவதையும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) ஆகிய 4 பாதிப்புகளையும் குறிப்பிடுகிறது. இத்தகைய பாதிப்புகள் இருப்பவர்களிடம் மது மற்றும் புகை பழக்கம் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் ஆரோக்கியம் அபாயத்தை நோக்கிச் செல்லும்.

தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள் உணவுப் பழக்கத்தால் ஆண்களின் இடுப்பு அளவு 100 செ.மீட்டருக்கு மேலும், பெண்களின் இடுப்பு அளவு 85 செ.மீட்டருக்கு மேலும் பெருத்து காணப்படுகிறது. மனித உடலில் சேரும் கொழுப்புகளில் இடுப்பில் சேரும் கொழுப்பாலே ஆபத்து அதிகரிக்கிறது.

உடல் எடை அதிகரிப்பது ஏன்? 


நாற்பது வயதுக்கு மேல் இளமை விடைபெற்று விடுவதால், இயல்பாகவே உடல் உழைப்பு குறைந்துவிடுகிறது. அதே நேரத்தில் அவர்கள் பார்க்கும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கிறது. சமூக அந்தஸ்து அதிகரிக்கிறது. நண்பர்கள் வட்டம் விரிவடைகிறது. அதனால் விருந்து, விழா என்று அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு அதிகரித்து விடுகிறது. மது பழக்கமும் தோன்றுகிறது.

உடல் உழைப்பு குறையும் அதே நேரத்தில், உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவைகளையும் இந்த பருவத்தில் குறைத்து விடுகிறார்கள். பதவி உயர்வால் அதிகமான நேரம் உட்கார்ந்த நிலையிலே வேலை பார்ப்பார்கள். இதுபோன்ற பலகாரணங்களால் உடல் குண்டாகிறது.

இந்த பருவத்தில் மனஅழுத்தம் அதிகரிப்பது ஏன்? 


ஐம்பது வயதைத் தொடும்போது திருமண மாகி 20 வருடங்கள் கடந்து போயிருக்கும். திருமண வாழ்க்கை போரடிக்க தொடங்கியிருக் கும். இந்த காலக்கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து படிப்பில் முக்கிய கட்டத்தை அடைந்திருப்பார்கள். படிப்பில் அவர்கள் அடுத்தடுத்த கட்டத்தை அடைய நிறைய பணம் தேவைப்படும். பெண் பிள்ளைகள் திருமண வயதை அடைந்திருப்பார்கள்.

அதனால் பணத்தின் தேவையும், மாப் பிள்ளை பார்க்கும் அலைச்சலும் தோன்றும். சில வீடுகளில் பிள்ளைகள் திருமணமாகி தனியாக போய்விடுவார்கள். இதனால் கணவனும், மனைவியும் தனிமையை அனுபவிக்கும் நிலை தோன்றும். 40-60 வயதில் கழுத்து எலும்பு தேய்மானம், டென்ஷன் தலைவலி, வயிற்று எரிச்சல், ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். தூக்கமின்மை தோன்றும் முடிவு எடுக்கும் திறன் பாதிக்கும்.

சர்க்கரை நோய் தோன்றுவது ஏன்? 


பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால் மரபு வழியாக பிள்ளைகளுக்கு சர்க்கரை நோய் ஏற்படுகிறது. தந்தைக்கு 50 வயதில் இந்த நோய் வந்திருந்தால், மகனுக்கு 40 வயதிலேயே வந்துவிடுகிறது. அதிக உடல் எடை இருந்தால் அதுவும் சர்க்கரை நோய் வர காரணமாகிறது. அதிக உடல் எடை கொண்டவர்களிடம் மது அருந்தும் பழக்கம் இருந்தால், சர்க்கரை நோயின்தாக்கம் அதிகரிக்கும். உடற்பயிற்சியின்மையும் பாதிக்கும்.
உடலில் வயிற்றுப் பகுதியில் பான்கிரியாஸ் சுரப்பி உள்ளது. அங்குதான் உடலுக்கு தேவை யான இன்சுலின் சுரக்கிறது. மது அருந்தும்போது பான்கிரியாஸ் பாதிக்கப்படுகிறது. அதனால் இன்சுலின் உற்பத்தி குறைந்து, சர்க்கரை நோய் வருவதற்கான பாதிப்பு அதிகம் ஏற்படுகின்றது. தந்தைக்கு சர்க்கரை நோய் ஏற்படும்போது அவர், ஜென்மம் ஜென்மமாக தன் வாரிசுகளுக்கு அந்த நோயை கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

அதிகமான அளவு கொழுப்பு தோன்ற என்ன காரணம்? 


சர்க்கரை நோய் போல் இதுவும் மரபு வழியாகத் தோன்றுகிறது. உடற்பயிற்சி செய்யா மல் இருப்பது. அசைவ உணவுகள் அதிகம் சாப்பிடுவது. சைவ உணவுகளில் உடலுக்கு தேவையான கொழுப்பு இருக்கிறது. அசைவ உணவுகளில் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கொழுப்பு உள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் உடலில் கொழுப்பு அதிகம் சேருகிறது.

உயர் ரத்த அழுத்தம் உருவாகும் காரணம்? 


மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை. அதிகரிக்கும் உடல் எடை, பெரும்பாலான நேரம் ஏசி. அறையிலேயே உட்கார்ந்து வேலை பார்ப்பது. ஏ.சி. அறையில் வேலை பார்த்தால் வியர்வை வராது. உடலில் வியர்வை தோன்றினால்தான் அதன் மூலம் உடலில் இருக்கும் உப்பு வெளி யேறும். வியர்வை தோன்றாமலே இருந்தால் உப்பு உடலிலே தங்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

இதய நோய் தோன்றுவதற்கு என்ன காரணம்? 


இந்த வயதில் இதய நோய் உருவாக ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. மரபு வழியான இதய நோய் உருவாகும் சூழ்நிலை இந்தியர்களுக்கு மிக அதிகமாக இருக்கிறது. இந்தியர்களின் ரத்தத்தில் இருக்கும் மரபு வழியான குறிப்பிட்ட குறைபாடு இதய நோய் தாக்குதல் தன்மையை அதிகரிப்பதாக சமீபத்தில் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பெண்கள் 45 வயதைக் கடக்கும்போது மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தை அடைகிறார்கள். அப்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி நின்றுவிடும். அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. மன அழுத்தம், உடல் எடை, சர்க்கரை நோய் போன்றவை இருந்தாலும் இதயம் பாதிக்கும். புகையிலை பயன்பாடு, புகைப்பிடித்தல் போன்றவை இருந்தால் பாதிப்பு மிக அதிகமாகிறது.

முதுமை தொடங்கும்போது மூட்டுவலி ஏற்படுவது ஏன்? 


40 வயதில் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க மூட்டுவலி நோய்களால் அவதிப்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. 30 வயதுக்குள் அப்பாவாகி விடுகிறவர்கள், 60 வயதுக்குள் தாத்தாவாகி விடும்போது இயல்பாக அவர்கள் உடல் தளர்ந்து, எலும்புகள் தேய்மானமாகி மூட்டு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

வயதாகும்போது உண்பது, உறங்குவது என்று வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். அதனால் உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாமல் போய்விடுகிறது. உடல் இயக்கம் குறையும் போது மூட்டு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகின்றன.

வந்த நோய்களை குணப்படுத்தவும், இனி நோய்களே வராமல் தடுக்கவும் சக்தி படைத்தது யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி என்பது உலகம் அறிந்த உண்மை.


Dr.A.S.அசோக்குமார்

தண்ணீரே நல்ல மருந்து!



எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர். அது உண்மைதான். ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட தென்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம்.

இந்த அறிகுறிகளை அறிவிப்புகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது. எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதென்று.

இதற்கு என்ன காரணம்-? போதுமான அளவில் உடம்புக்கு நீர் கிடைக்காவிட்டால் அங்கே என்ன நிகழும் என்ற விவரம் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் வியாதிகள் தொடக்கத்திலே அடக்கப்படுகின்றன. தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண யுக்திகளில், தண்ணீர்தான் பெரும்பங்கை ஏற்றுள்ளது.

உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே எழுபது சதவிகிதமாகும். உடலின் அனைத்துப் பாகங்களிலும் அது வியாபித்திருந்தாலும், மூளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர், நிணநீர் போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.


தண்ணீர் பெரும்பாலான இடங்களில் மிகக் கணிசமாகவே கிடைக்கப் பெறுகின்றன. இரு வழிகளில் தண்ணீர் வரப்பெறுகின்றன. பூமிக்கடியிலும், பூமியின் மேற்பரப்பிலும் (அதாவது மழைநீர்).

மேற்பரப்பு நீர், சாதாரணமாகவே மென்மையாகவும், நிலத்தடி நீர், கடின நீராகவும் இருக்கும். இதன் அர்த்தம் என்னவென்றால், நிலத்தடி நீரில் தாதுப் பொருட்கள் நிரம்பவே அடங்கியுள்ளன. கடின நீரை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மென்னீர் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டதாகும். அதேநேரத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை இங்கே நினைவில் கொள்ளவேண்டும், அதாவது, மென்னீர் தூய்மையற்றுப் போய்விடுமானால் அதுவே உடற் கோளாறுகளை உருவாக்கிவிடும்.

எனவே தான் குடிப்பதற்கும், மருத்துவத்திற்கும் தண்ணீரைப் பயன்படுத்தும் போது, அதனைச் சுத்தப்படுத்தப்பட வேண்டியது மிக அவசியமாகும்.

பல நூற்றாண்டு காலமாகவே பண்டைய எகிப்தியர்கள், ஹீப்ரூக்கள், கிரேக்கர்கள், பெர்சியர்கள் மற்றும் இந்துக்கள் ஆகிய நாட்டவர்களுக்குத் தண்ணீர் பல்வேறு வியாதிகளுக்குப் பிரிக்க முடியாத பிரதான அங்கமாகவே இருந்துள்ளது. ஏசு பெருமானுக்கு முன்னரே, பல நூற்றாண்டு காலமாகவே, தண்ணீரை மருந்தாகவே பயன்படுதியுள்ளனர்.

நடைப்பயிற்சி அவசியம் ஏன்?



நமது இயல்பு வாழ்வுக்கு உழைப்பும், உணவும் அத்தியாவசிய, அவசியத் தேவைகளாகின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும் இனிய வாழ்வுக்கு உத்திரவாதம் தருகின்றன.
 
கடின உழைப்பும், விளையாட்டும் இலகுவில் நமது உணவு தனம மாதலையும் உடல் உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி உடல் தலை இறுக்கம், அழுத்தம், சீர்படுவதுடன் மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையைத் தருகின்றன மகிழ்ச்சி தரும், சுகம் தரும் ஹார்மோனை சுரக்கும் ஆற்றல்களைப் பெறுகிறோம். மெட்டாபாலிசம் மேம்படுகிறது. நன்றாக பசி எடுக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது.
எனவே, நமது அன்றாட இயக்கங்களில், தினசரி நடை முறையில் வாழ்நாள் முழுமைக்கும் கடின, உழைப்பு, அல்லது விளையாட்டு, அல்லது கராத்தே நடனம் அல்லது யோகா, அல்லது பயிற்சிகள், அல்லது ஓட்டம் அல்லது தோட்ட பணிகள் அவசியம் தேவை. 

ஆனாலும் இவைகளை போட்டிகளில் பங்கேற்கும் அளவில் பயிற்சி மேற்கொள்ளத் தேவை இல்லை. அவசர, அதிவேக உலகில் தினமும் உழைப்பு, விளையாட்டு, பயிற்சிகளைச் செய்திட மயங்குகிறோம். சோம்பேறி ஆகிவிடுகிறோம். மறந்து விடுகிறோம். நாளை செய்வோம் என நினைக்கிறோம். இவைகளை ஒரு நாள் தவற விட்டாலும் பின் தொடர்வதில்லை சோம்பல் வயப்படுகிறோம். 

இதனால் நமது சுறுசுறுப்புக் குறைகின்றது மெட்டாபாலிசம் சீர்குலைகிறது. உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது மனதில் அழுத்தம் உருவாகிறது சோம்பல், அசதி, கூடி வாழ்வின் உத்வேகம் குறைகிறது. பிணிகள் எளிதில் நம்மை அடிமைப்படுத்துகின்றன. 

எனவே உழைப்பு, பயிற்சிகள், விளையாட்டு கிட்டாத தேகத்திற்கு மாற்றாக நடைபயணம், நடை பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். நமது உயிர் உயரி உணர்வுகளைப் பெற நடை அவசியம் தேவை. 

நடைபயிற்சியால் நமது உடல் இரத்த ஓட்டம் எல்லா திசுக்களிலும் மேம்படுவதுடன் உடலில் திசு இறுக்கம், பிடிப்பை உருவாக்கும் லேக்டிக் அமிலம் வெளியேறுகிறது. சுறுசுறுப்பு அதிகரிப்பதுடன் நமது மெட்டாபாலிசம், உணவு தன்மையாதல், ஜீரணம் சிறப்படைகிறது நெடுநாள் பிணியாளர்கள் நலம் பெற நடைப்பயிற்சி உதவி புரிகிறது. 

நடப்பது நமது கால்களுக்கு, நமது உடலுக்கு, மனதிற்கு ஒரு புதுசக்தியையும், தெம்பையும் தருகின்றது உடல் நலிவைக் குறைத்து உடல் வலிவைத் தருகின்றது. பிணிகள் குறைய, மறைய வாய்ப்பை உருவாகித் தருகின்றது எவ்வயதிலும் நடக்கலாம் எவரும் நடக்கலாம் எப்போதும் நடக்கலாம் நடை ஒரு உடம்பின் ஒரு இயல்பான இயக்கம். அதன் அருமையை பெருமையை உடனடியாக உணர்வோம் அறிவோம் நடக்கத் தொடங்குவோம். 

பிற விளையாட்டுகள், பயிற்சிகள் நடைப்பயிற்சி, பயணம் ஓர் ஒப்பீடு
 
"ஆபத்தில்லா ஆரோக்கிய பயிற்சியை நாம் நாட வேண்டும். பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து, கிரிக்கெட், ஹாக்கி, குதிரையேற்றம் போன்ற விளையாட்டுகளை சிறுவயதில் விளையாடினாலும் வயதானபின் வேலைக்கு சென்ற பின் பலரும் மறந்தே விடுகின்றன. பலரின் கூட்டணி இருந்தால் மட்டுமே இவைகளை விளையாட இயலும். பாதியில் நிறுத்த இயலாது வெப்ப கலோரி, சக்தி அதிகம் செலவழியும். உடலுக்கு ஊறுதரும் ஆபத்து மிகுந்துள்ளது. அதற்கான கருவிகள் மைதானம் தேவை. அதற்கான கோச் தேவை. நினைத்த இடத்தில் விளையாட இயலாது மேலும் இவைகள் போட்டியாகவே விளையாடப்படுகின்றன அதற்கான வேகமும், முனைப்பும் அதிகரிக்கும் சமயம் ஆபத்து அதிகரிக்கிறது. ஆரோக்கியம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. 

நீச்சல், ஜிம், வேக ஓட்டம், மெது ஓட்டம் பளு தூக்குதல், தோட்ட வேலை, ஏரோபிக்ஸ் பயிற்சிகள், நாட்டியம், குதிரையேற்றம், சைக்கிள் விடுதல், கடின உழைப்பு போன்றவைகள் மிகச் சிறந்த பயிற்சிகள். இவைகளிலும் மிதமான வெப்ப கலோரி, உடல் சக்தி செலவழிகின்றன சில பயிற்சிகளில் கருவிகளும் தேவைப்படுகின்றன சில நேரங்களில் வழிநடத்தும் மாஸ்டர்கள் தேவை. அதற்கேற்ற இடம், சூழல், கருவிகள், பொருளாதாரம் தேவைப்படுகின்றன தினமும் தொடர்வதில் பலருக்கு சிரமம் ஏற்படுகிறது வயது அதிகரித்தவர்கள் இப்பயிற்சிகள் சிலவற்றை தொட இயலவில்லை. 

மேற்சொன்னவைகள் விளையாட்டு பயிற்சிகள் என்ற முறையில் வருகின்றன வாழ்நாள் முழுவதும் ஓட இயலுமா? நமது உடல் அமைப்பு அப்படி அமைந்துள்ளதா? வாழ்நாள் முழுவதும் தினமும் விளையாடுவோர் குறைவு. குழந்தை சிறுவர்களாக இருக்கும் சமயம் நமக்கு நாமே கூட விளையாடுகிறோம். துள்ளி ஓடுகிறோம். பெரியவர்களானதும் தினசரி விளையாட இயலவில்லை. வேலைப் பணிகள் நிமித்தம் சிரமப்படுகிறோம். 

ஆனால் வாழ்நாள் முழுவதும் நடக்கலாம். அதற்கான அமைப்பில் நமது உடல் உறுப்புகள், இயக்கங்கள் அமைந்துள்ளன என்கின்றனர் நடைவல்லுனர்கள். நடப்பதற்கு தடையே இல்லை. இயன்றவரை நடக்கலாம். 

75 மில்லியன் அன்பர்கள் நடைப் பயிற்சியை ஆரோக்கியம் பெறும் பொருட்டு தினமும் கடைப்பிடிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

நடைப்பயிற்சி ஆபத்து இல்லாப் பயிற்சி எனலாம்.
நடைப்பயிற்சிக்கு வழிநடத்தும் வல்லுநர்கள் தேவை இல்லை.
நடைப்பயிற்சிக்கு தனியான மைதானம், இடம் தேவை இல்லை.
நடை நமது வாழ்வின் ஓர் அங்கம். வாழ்நாள் முழுவதும் அதன் முழுப் பயனை நுகர வேண்டும். அனுபவிக்க வேண்டும். 

சென்னையில் காலையில் காரில் பவனி வந்து கடற்கரையில் அதிகாலையில் நடப்பவர்கள் ஏராளம். காலை நடைகாட்சி திருவிழாபோல் இருக்கும். சென்னை, கோவை, மதுரை போன்ற பல ஊர்களிலும் காலையில் ஏராளமானோர் நடக்கப் பழகிவிட்டனர். கூட்டணியாகவும், தனியாகவும் கிளப் மூலமாகவும் நடக்கின்றனர். 

பல மருத்துவ வல்லுனர்கள் மாத்திரை, மருந்துகளை நம்புவதைவிட நடைப்பயிற்சிகளை இயன்றவரை கடைப்பிடிக்க வற்புறுத்துகின்றனர். வலியுறுத்துகின்றனர். பலருடைய வாழ்வில் காலையில் நடையும் அருகம்புல் பானமும் பிரிக்க இயலாத அளவிற்கு ஒன்றிவிட்டன. ஆரோக்கியத்தின் அருமையை அவர்கள் ரசிக்கின்றனர். ருசிக்கின்றனர். நாமும் அதற்குத் தயாராவோம்.


கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்



கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.

சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன்டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன. எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரீன் டீயின் நன்மைகள்

1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
5. இதய நோய் வராமல் தடுக்கிறது.
6. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
9. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது. 15. பருக்கள் வராமல் தடுக்கிறது.
15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.
17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா?



ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா? எதிலும் அதிக கவனத்துடன் ஈடு பட முடியவில்லையா? மூளை சரியாக செயல் படவும் நன்றாக வளரவும் தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம்.

கரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான விட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.

ஒரு வாரம் கரட் சாப்பிட்டவர்களையும், கரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, கரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பது தான் இதற்குக் காரணம்.

மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இதற்கு மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. நல்ல முடிவை திடீரென்று எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம். சைவ உணவுக்கரர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.

 மனித உடலிலே மூளை தான் அதிக ஆக்ஸிஜனை உபயோகிப்பது . எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.

அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

 ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன. எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் 54 முதல் 84 வயது வரை உள்ள ஆண்களை ஆராய்ந்து வந்தார்கள். இவர்கள் உடலில் பி விட்டமின்கள் போதுமான அளவு இருந்தவர்கள் நல்ல ஞாபக சக்தியுடனும் சிறப்பான மூளைச் செய்ல் பாடும் உடையவர்களாக இருந்தனர். ஆனால் அவர்களில் பி6 பி12 ஃபோலேட் ஆகிய விட்டமின்கள் குறைவாக இருந்தவர்கள் மிகவும் மறதியும் மனக்குழப்பமும் உடையவர்களாக இருந்தனர்.

‘பி’ வைட்டமினைச் சேர்ந்த இந்த மூன்று விட்டமின்களும் நரம்புகளின் மூலம் மூளைக்கு தெளிவாகச் செய்திகளை அனுப்பி மூளை அமைதியுடன் குழப்பமில்லாமல் வேலை செய்ய உதவுகிறது என்பதை மட்டும் உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த விட்டமின்கள் குறையும் போது தீய அமிலங்கள் மூளைக்கு மிகமெதுவாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இதனால் மூளையின் செயல்பாடுகளின் குழப்பம் ஏற்படுகிறது. மதிய உணவில் தயிர் சாதமும் கீரையும் இருந்தால் இந்த விட்டமின்கள் நன்கு நம் உடலில் சேர்ந்துவிடும். மூளையும் அற்புதமாக இயங்கும்.

மன அழுத்தம் போக்க உடற்பயிற்சி




இன்றைய கணினி உலகில் உடற்பயிற்சி செய்ய எங்கு நேரம் இருக்கிறது ஆனால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அவசியம். இதோ உடல்வலி மற்றும் மனஅழுத்தம் போக்கும் ஒரு சிறிய உடற்பயிற்சி.

இரண்டு கால்களுக்கு இடையில் சிறிது இடைவெளி விட்டு, பார்வையை நேராக வைத்துக்கொண்டு நிமிர்ந்து நிற்கவும். தரையில் உள்ள ஒரு இரும்புப் பட்டையைத் தூக்குவதுபோல கற்பனை செய்துகொள்ளவும். இப்போது அதைச் செய்வதற்கு முன்பாக, மூச்சை நன்றாக இழுத்துக்கொண்டு, மெதுவாக முன்புறமாக வளைந்து இரு உள்ளங்கைகளும் தரையில் படுமாறு செய்யவும்.
இப்போது, மெதுவாக மூச்சை வெளியிட்டவாறு, வாயைத் திறந்து “ஆஹா”! என்று சத்தமாகச் சொல்லவும். உங்களால் முடிந்தவரை சத்தமாகச் சொல்லவும். இந்தப் பயிற்சியானது உங்களின் முக இறுக்கத்தைக் குறைத்து, முகத்தசைகளுக்கு ஓய்வு அளிக்கின்றது.

பழைய நிலைக்கு மீண்டும் திரும்பிய பிறகு, நேராகவும் நிமிர்ந்தும் நின்றுகொண்டு, முதுகை லேசாக பின்புறம் வளைத்து, கைகளை தலைக்கு மேலே தூக்கி, கண்களை மேல்நோக்கிப் பார்த்து, மார்பை நன்றாக விரித்து, விரல்களைத் திறக்கவும்.

இதுவே ஒரு முழுப்பயிற்சி. சிறந்த பய‌னை‌ப் பெறுவதற்கு ஒரு நாளைக்கு 10 முறை இவ்வாறு செய்யவும்.

நன்மைகள்:
உடலில் உள்ள அனைத்து வலிகளும் பறந்துபோகும். இது மேலும் கால்கள், முதுகு, தோ‌‌ள்பட்டை மற்றும் கைகளில் உள்ள விறைப்புத் தன்மை மற்றும் வலியைப் போக்குகிறது. உடலின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தி, முதுகெலும்பு மிருதுவாகவும் வலிமையாகவும் இருக்கச் செய்கிறது.

ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலின் ரகசியம்




ஏன் சில பெண்களின் கூந்தல் பளபளப்பாகவும், அழகாகவும் இருக்கின்றது? ஆனால் மற்றவர்களுக்கோ என்ன தான் மணிக்கணக்காக நேரத்தையும் அத்தோடு பணத்தையும் செலவழித்தும் கூட அவர்கள் கூந்தல் உயிரிழந்த தோற்றத்தை அளிக்கிறது. ஆரோக்கியமான கூந்தலின் ரகசியம் என்ன என்பதை கண்டுபிடித்து உங்களோடு கீழே பகிர்ந்துள்ளோம் :

1. குளிப்பதற்கு முன்பு கூந்தலில் உள்ள சிக்குகளை அகற்றவும்

2. அதிக அளவில் ஷாம்பூ உபயோகிப்பதை தவிர்க்கவும். அதிக நுரை வந்தால் தான் முடி சுத்தமாகும் என்று எண்ண வேண்டாம்.

3.ஷாம்பூ தடவிய முடியை நன்றாக அலசவும்.

4. ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப்பது மிகவும் அவசியமாகும்.
கண்டிஷரை முடியின் வேர்களைவிட நுணிப் பாகத்தில் தடவுவது நல்லது.

5.கண்டிஷனர் தடவிய பிறகும் முடியை நன்றாக அலசவும்.

6.ஈரமான கூந்தலை வேகமாக துவட்டுவதை தவிருங்கள். அதற்கு பதிலாக 5
நிமிடங்களுக்கு உங்கள் கூந்தலை டவலில் சுற்றி வையுங்கள்.

7.முடி முழுவதாக உலர்வதற்கு முன்பே உங்கள் விரல்களால் சிக்குகளை நீக்கவும்.

8.ஹேர் ட்ரையரை அடிக்கடி உபயோகிப்பதைத் தவிர்க்கவும். அப்படி உபயோகிக்கும் நேரத்தில் ஹேர் ட்ரையரை கீழ் நோக்கி பிடிக்கவும். ஒரே இடத்தில் அதிக நேரம் காட்டுவதைத் தவிர்க்கவும்.

9. நீங்கள் உபயோகிக்கும் சீப்புகளை அடிக்கடி சோப்புப் போட்டு நன்றாகக் கழுவவும். அதில் அழுக்கிருந்தால் உங்கள் முடியின் பளப்பளப்பை மங்கச் செய்யும்.

10.முடியை சீவுவதற்கு அகலமான பற்களைக் கொண்ட சீப்பு மூலம் சிக்கை அகற்றவும்.

11.முடியின் நுனிப்பாகத்தை விட, வேர்களில் ஹேர் ட்ரையரை நன்றாகக் காட்டுங்கள். நுனிகளில் காட்டுவதால் முடி உலர்ந்து உடையக் கூடும்.

12. உங்கள் தலையை நன்றாக மஸாஜ் செய்யுங்கள். கைகளால், முடியைதலையில் தேய்ப்பதற்கு பெயர் மஸாஜ் அல்ல! உங்கள் விரல் நுனிகளால் தலையை மெதுவாக தேய்த்துவிடவும். இது உங்கள் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் உங்கள் முடி நீண்டதாகவும்,ஆரோக்கியமாகவும் வளரும்.

13. நன்றாக மசித்த வாழைப்பழத்தை 15 நிமிடங்கள் முடியில் பூசி வைத்து பின்பு ஷாம்பூவால் அதை கழுவி விடவும். இது உலர்ந்த கூந்தல் இருப்பவருக்கு மிகவும் நல்லது.

14.ஒரு முட்டை, ஒரு வெள்ளரிக்காய், மற்றும் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் இவற்றை நன்றாக மிக்ஸியில் அரைத்துக்கொண்டு, கூந்தலில் 10நிமிடங்களுக்கு தடவி வைக்கவும். பிறகு முடியைக் கழுவவும். இது உங்கள் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்கும்.

"மெலிந்தவராகத் தோற்றமளியுங்கள்!"



நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்ற எண்ணம் உங்கள் தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறதா? ‘மாடர்ன்’ உடைகளை அணிய ஆசையும், அதே நேரத்தில் பிறர் கேலி செய்வார்களே என்ற பயமும் உங்கள் மனதில் இருக்கின்றதா? கீழே உள்ள குறிப்புகளை நினைவில் கொண்டு உடைகளை அணிந்தால், உங்கள் உண்மையான எடையை மறைத்து மெலிந்தவராக தோற்றமளிக்கலாம்!

1. நீண்ட நேரான ‘ஸ்கர்ட்’ கருப்பு அல்லது கருநீலம் போன்ற நிறங்களில் அணியுங்கள். இதனால் நீங்கள் உயரமாகத் தெரிவது மட்டுமல்லாமல் எடை குறைந்தவராகவும் தோன்றுவீர்கள்.

2. இறுக்கமான டாப்ஸஅல்லது டீ ஷர்ட் அணிவதைத் தவிர்க்கவும்.

3. `லூஸ்' ஓவர்கோட் அணிந்தால் உங்களின் உண்மையான எடையை அது மறைக்கும். ஆனால் நீங்கள் அணியும் ஓவர்கோட் முழங்காலுக்கு மேல் சுமார் 6 அங்குலம் உயரமானதாக இருக்க வேண்டும். இதைவிட உயரமாகவோ நீண்டதாகவோ அணிந்தால் உங்கள் எடையை அது கூட்டிக்காட்டக்கூடும்.

4. கழுத்துக்கு இறுக்கமான (Close Neck) உடைகளை அணியாதீர்கள்.

5. உடலோடு ஒட்டியிருக்கும் உடைகளைத் தவிருங்கள்

6.பெரிய டிசைன்கள் உள்ள உடைகளையும், படுக்கை கோடுகள் உள்ள உடைகளையும் அணிந்தால் அது உங்களை குள்ளமாகவும், பெருத்தும் காட்டும்.

7.சிறிய டிசைன்கள், நீண்ட நெடுக்குக் கோடுகள் கொண்ட உடைகள் அணிந்தால் உயரமாகவும், மெலிந்தும் தோன்றலாம்.

நீண்ட பட்டன் வரிசைகள் உள்ள உடைகள் மெல்லிய தோற்றத்தை அளிக்கும்.

Saturday 17 March 2012

மனம் விட்டு பேசுங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும் !

 

கூட்டுக்குடும்பங்களால் வாழ்ந்தவர்கள் பலரும் இன்றைக்கு கருத்து வேறுபாடுகளினால் தனித் தனி குடும்பமாய் மாறிவருகின்றனர். இதற்கு காரணம் அவசர யுகத்தில் ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்ளமுடியாததே. ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் சரியாக பேசிக்கொள்ளாத காரணத்தினால் இடைவெளிகள் ஏற்படுகின்றன. இந்த இடைவெளிகளே நாளடைவில் விரிசலுக்கு காரணமாகின்றன. ஆனால் ஒருசில குடும்பங்களில் வசிப்பவர்கள் இன்றைக்கும் ஒற்றுமையுணர்வோடு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அதற்குக் காரணம் விட்டுக்கொடுத்தல் என்ற மந்திரமே. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒன்றாக அமர்ந்து பேசினாலே உறவுகளில் விரிசல்கள் விழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். குடும்ப உறவுகளை தக்கவைத்துக்கொள்ள அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்கள்.

விட்டுக்கொடுங்கள்

குடும்பம் என்றாலே ஏதாவது சண்டைச் சச்சரவுகளும் மசக்கசப்புகளும் இருக்கத்தான் செய்யும் அவ்வாறு குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகளுக்கு அதிக இடம் தராமல் சமாதானமாகப் போவது தான் விட்டுக் கொடுப்பதிலேயே தலையாயதாய் இருக்கும்.அவ்வாறு விட்டுக் கொடுத்து விரோதம் பார்க்காமல் வாழ்வதும் ஒரு கலை தான்.

சூழ்நிலையை சமாளிங்க

குடும்பங்கள் கூடி மகிழ்கின்ற தருணங்களிலும் பிரச்சனைகள் எழலாம், இதை முன்கூட்டியே எதிர்பார்த்து அவ்வாறான சூழ்நிலைகளை சந்திக்கும் மனப்போக்கையும் வளர்த்து வருவது மிகவும் நல்லது. இதனால் யார் என்ன பேசினாலும் கேலி செய்தாலும் அவை நமது மனதை அதிகம் பாதிக்காது.

பாசமான சந்திப்புகள்

குடும்ப உறவுகள் எப்போதும் ஏதாவது விசேஷங்களில் மட்டும் கூடுவதற்கு பதிலாக எந்த காரண காரியமும் இல்லாமல் அடிக்கடி குடும்பத்தாரரை பாசத்தோடு வீட்டிற்கு அழைப்பதும் அதேப் போல் அவர்களை சந்திக்க செல்வதும் குடும்ப உறவுகளை மேலும் வலுவடைச் செய்யும் இதனால் பகைமையும் ஒழியும்.

மனம் விட்டு பேசுங்கள்

குடும்ப உறவுகளோடு அடிக்கடி ஒன்றாகக் கூடி சுற்றுலா பயணம் மேற்கொள்வது குடும்பங்களுக்குள் மகிழ்ச்சியைக் கூட்டும் மனக்கசப்புகளையும் மறக்கடிக்கச் செய்யும். அதைபோல் குடும்ப உறவுகள் அடிக்கடி உணவகங்களில்கூட விருந்துகள் ஏற்பாடுச் செய்து குடும்பமாக சென்று உண்டு மகிழலாம். அவ்வாறான தருணங்களில் ஒன்றாக அமர்ந்து பேசி அவரவர்களுக்கு இடையே தோன்றும் எண்ணங்களை மனம் விட்டு பேசலாம். இதனால் கசப்பான கருத்து வேறுபாடுகள் மறையும்.

இதனால் குடும்பங்களை மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஆவலைத் அதிகரிக்கும்.

கோபத்தை மறக்கலாம்

புதிதாய் குடும்பப்படம் வெளிவரும் போது தங்கள் பெற்றோர்கள் அல்லது உறவினர்களை அவர்கள் எதிர்ப்பாராத வகையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்து ஒன்றாகச் சென்று கண்டு களிப்பது குடும்பங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளும் கோபமும் கூட மறையச் செய்து விடும்.

உறவுகளுக்கு முதலிடம்

குடும்பத்தில் எதிர்பாராமல் துன்பம் வந்தால் முதலில் உறவுகளைத்தான் தேடி ஓட வேண்டும் மற்றவரெல்லாம் அதன் பிறகு தான். ஆனால் சிலர் அதை தவிர்த்து நண்பர்களையும் இன்னும் தெரிந்தவர்களையும் தான் உதவிக்கு நாடுவார்கள். இது முற்றிலும் தவறானது, நண்பர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் வாழ நாள் முழுவதும் ஊடவே வருவது குடும்ப உறவுகளே, ஆகவே எப்போதும் முதலிடம் அவர்களுக்குத் தான் என்று கருத வேண்டும்.

உறவுகளை நேசியுங்கள்

குடும்பத்தில் பிரச்சினைகள் எழாமல் இருக்க முதலில் உறவுகளை நேசியுங்கள். அன்பும், நேசமும் இருந்தாலே சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. அப்புறம் அவர்களின் கருத்தை நாம் புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளலாம். நமது சொந்த உடலுறுப்புகளே ஒன்றுபோல் இருப்பதில்லை. நமது கையின் விரல்கள் ஐந்தும் ஐந்துவிதமாய் இருக்கின்றன. அதேபோல்தான் குடும்ப உறவுகளும். இதனை உணர்ந்து உறவுகளை மதிக்க தெரிந்தாலே அக்குடும்பத்து உறவுகளில் பிணக்கம் ஏற்படவே வாய்பிருக்காது.

எனவே குடும்ப உறவுகளின் மகத்துவம் அறிந்து அவற்றை புதுபித்துக் கொண்டே வருவோமானால் உறவினர்களுக்குள் அவ்வபோது உண்டாகும் மனக்கசப்புகள் நிச்சயம் மறையும். இவ்வாறான வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலம் நமது சந்ததியினருக்கும் குடும்ப உறவுகளின் பெருமை தெரியும். நமக்கும் வருங்காலத்து வாரிசுகளை ஒரு வலுவான குடும்பச் சூழ்நிலையில் தான் வளர்த்தோம் என்ற ஆத்ம திருப்தி கிடைக்கும்.