Saturday 13 October 2018

சித்த மருத்துவத்தில் சீரகத்தின் பயன்கள்...!

சீரகம் மருத்துவ குணம் நிறைந்தவை. சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. 




சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு  சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
 
சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து,  சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
 
சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
 
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
 
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே,  வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.
 
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
 
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த  அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

Thursday 11 October 2018

அடிக்கடி உணவில் சுண்டைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்...!

சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை  உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 



சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.
 
வாயுப் பிடிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும்.
 
ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது  நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டால்.  நோய் கட்டுப்படும். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகின்றது..
 
அதேபோன்று சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால்  நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்
 
மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும்  ரத்தக் கசிவும் நீங்கிவிடும்
 
சுண்டைக்காயை உனவில் சேர்த்து வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். மேலும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள்  பலமடையும் புளித்த ஏப்பம், மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. எனவே உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்
 
குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க சுண்டைக்காய் உதவும். இவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள்  அழிந்துவிடும்.

தினம் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா...?

மனிதர்கள் சாப்பிடும் விருப்பமான உணவுகளில் முட்டையும் ஒன்று. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. ஒரு முட்டையில் புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.


முட்டையில் உள்ள லூடின் மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும். மேலும் உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
 
நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்சனை ஏற்படும். ஆனால், முட்டையிலோ நல்ல கொழுப்புகள்தான் நிறைந்துள்ளன. அதனால் எவ்விதமான கோளாறுகளும் முட்டையால் ஏற்படாது.
 
குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அதன் வெள்ளைக் கருவை மட்டும் கொடுக்க வேண்டும். பின்னர் சிறிது சிறிதாக அவர்களுக்கு மஞ்சள் கருவை கொடுக்கலாம்.
 
உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளைச்  சாப்பிடலாம். இதனால் சதைகள் நன்கு வலுப்பெறும். உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று  என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள் கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக்கேற்பதான் சாப்பிட  வேண்டும்.
 
சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய்   ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முட்டையுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. இதன் வெள்ளைக்  கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லெட், அவித்த முட்டையாகவும் சாப்பிடலாம். ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம்.
 
தினம் ஒரு முட்டை உண்பது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று  தெரிவிக்கிறது.

கறிவேப்பிலையின் பயன்கள் தெரிந்தால் ஒதுக்கி வைக்க மாட்டீர்கள்...!

நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில்  சேர்த்து வந்துள்ளனர்.




கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு  உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர,  நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும். பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். 
 
1. கறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தினையும் போலிக் அமிலத்தினையும்  கொண்டுள்ளது.
 
2. கறிவேப்பிலையில் கார்பசோல் ஆல்கலாய்டுகள் உள்ளன. இவை பாக்டீரியா மற்றும் அழற்சியை  எதிர்க்கும் சக்தியினைக் உடலுக்குத் தருகின்றன.
 
3. பாக்டீரியாவிற்கான எதிர்ப்புச் சக்தி கறிவேப்பிலையில் இருப்பதனால் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த  நிவாரணமாக உள்ளது.
 
4. கறிவேப்பிலைச் சாறு பருகுவதினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் களைப்பு மற்றும்  மயக்கத்தைக் குறைக்கப் பயன்படுகிறது.
 
5. கறிவேப்பிலை உட்கொள்வதனால் புற்றுநோய் சிகிச்சையின் பாதகமான விளைவுகளிலிருந்து  உங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
 
6. பூஞ்சையினால் ஏற்படும் தோல் பிரச்சினைகளில் முகப்பரு, கால்களில் ஏற்படும் ஆணி  போன்றவற்றைக் குணப்படுத்துவதில் கறிவேப்பிலை முக்கியப் பங்கினை வகிக்கின்றது.
 
7. தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை  செய்யப்படும்.