Monday 30 May 2016

அல்சர் நோய்க்கு அற்புதமான மருந்து தேன்

பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரக்கூடியது தேன். பயன் தரும் தேனை தக்கவாறு உபயோகித்து பலன் பெறுவோம்.


 
 
1. தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும்.
 
2. எலுமிச்சை சாற்றை, தேனுடன் கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம் குறையும்.
 
3. தேனுடன் வெங்காயச் சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.
 
4. இருமல், சளித்தொல்லை, நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும், பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட இருமல் மட்டுப்படும். சளித்தொல்லை குறையும்.
 
5. தேனையும், மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
 
6. தேனுடன், சுண்ணாம்பைக் கலந்து நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.
 
7. மீன் எண்ணெய்யோடு, தேனை கலந்து உண்டு வந்தால் ஆறாத புண்கள் ஆறிவிடும்.
 
8. கருஞ்சீரகத்தை நீர்விட்டுக் காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட்டால் கீல் வாதம் போகும்.
 
9. வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் தொந்தரவுகள் குறையும், கல்லீரல் வலுவடையும்.
 
10. அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.

முடிவளர்ச்சியை வேகப்படுத்தும் நெல்லிக்காய்

ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது நெல்லிக்காய். ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்.


 
 
1. நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.
 
2. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காய், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் திரிபலா சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.
 
3. நெல்லிக்காய் உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.
 
4. திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.
 
5. நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
 
6. நெல்லிக்காய் தலைமுடி உதிராமல், வளரவும், நரைமுடி தேன்றுவதை தடுக்கவும் செய்கிறது. இளநரை ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கிறது. மேலும் முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
 
7. தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.
 
8. நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.

இரத்தத்தை சுத்தமாக வைக்க உதவும் உணவுகள்

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம்.


 


அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.
 
* உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள * இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம். பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். 
 
* செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
 
* முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
 
* நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.
 
* இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
 
* தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
 
* இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.
 
இன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாய் தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.
 
இதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 மணி நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.
 
மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.

தினமும் நான்கு பாதாம் சாப்பிடுவது நரம்புகளை பலப்படுத்தும்

பாதாமில் காணப்படும் நார்ச்சத்தும் ஆன்டிஆக்ஸிடன்டுகளும் புற்று நோய்கள் வர விடாமல் தடுப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.


 
 
பாதாம் பருப்பு உடல் செழிக்கச் செய்யும் ஓர் ஆரோக்கியமான உணவு. பாதாமில் வைட்டமின்களும் தாதுச்சத்துக்களும் மலிந்து கிடக்கின்றன.
 
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.
 
மருத்துவ பயன்கள்
பாதாம்... பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்
 
மருத்துவ குணங்கள்
பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58  சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது! இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக்  குறையுமாம். பாதாமிலுள்ள நல்ல கொழுப்புதான் அதற்கு காரணம். 
 
எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து  பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.
 
நரம்பு தளர்ச்சி
பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும்  மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது
 
மூளையை பலப்படுத்தும்
வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும்.  படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கவும். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
 
சத்துக்கள்
பாதாமில் கால்சியம் அதிகம் இருக்கிறது. அதோடு சேர்த்து, புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின் - பி 17 என்ற சத்தும் பாதாமில் உள்ளது. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது. இவற்றை எல்லாம் மனதில் வைத்து, அவ்வப்போது பாதாம் பருப்பு சாப்பிடுங்கள். 
 
சரும ஆரோக்கியம்
பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

Monday 23 May 2016

உணவில் உப்பு பற்றாக்குறையா? இருதய நோய் ஏற்படும் ஆபத்து

தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளிலிருந்து உப்புச் செறிவு குறைவான உணவுகள் அனைவருக்கும் நன்மையை தராமல் போகலாம்.



அத்துடன் இருதய நோய்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம், இறப்புகளை கூட ஏற்படுத்தலாம் என தெரிய வருகிறது.

இது தொடர்பான ஆராய்ச்சி 49 நாடுகளிலிருந்து, கிட்டத்தட்ட 130,000 போர்கள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது சாதாரண குருதியக்கம் உடையவர்களுடன் ஒப்பிடுகையில், உயர் குருதியக்கம் உள்ளவர்களில் சோடியம் ஊட்டலின் அளவுக்கும் இறப்பு, இருதய நோய், இருதய அடிப்பு போன்றவற்றுக்கும் தொடர்புள்ளதா என ஆராயப்பட்டிருந்தது.

ஆனால் முடிவுகளிலிருந்து உயர் குருதியக்கம் உடையவர்களில் மட்டுமல்ல, பொதுவாக குறைவான சோடியம் ஊட்டலானது மாரடைப்பு, இறப்புக்கு வழிவகுக்கலாம் என தெரிய வருகிறது.

இது தொடர்பாக தலைமை ஆய்வாளர் Andrew Mente கூறுகையில், உயர் குருதி அமுக்கம் உடைவர்களில் குறைவான சோடியம் உள்ளீடானது குருதியமுக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றதா என ஆராயவே மேற்படி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால் குருதியமுக்கத்தில் எந்த வீழ்ச்சியும் காணப்படவில்லை என தெருவித்திருந்தார்.

ஆனால், அதிகமாக சோடியம் உள்ளெடுக்கும், உயர் குருதியமுக்கம் உடையவர்களில் குறைவான சோடியம் ஊட்டலானது குருதியமுக்கத்தை குறைக்க உதவும் என அவர் மேலும் தெருவித்தார்.

கனடாவில் தற்போதைய சோடியம் ஊட்டலானது நாளுக்கு 3.5 - 4 கிராமாக உள்ளது. ஆனால் மொத்த சனத்தொகையும் 2.3 கிராமுக்கு உட்பட்டதாக நுகர கேட்கப்பட்டுள்ளது.

ஆனால் இப் புதிய ஆய்வானது, சோடிய ஊட்டல் நாளுக்கு 3 கிராமிலும் குறைவானவர்களில் மேற்படி நோய் நிலைமைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம் என உறுதிப்படுத்தியுள்ளது.