Sunday 25 November 2018

கெட்ட பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்

பிரோபயாடிக் என்றால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களைக் குறிப்பது. கெட்ட பாக்டீரியா என்பது கிருமி. நோய்களைக் குறிப்பது.
 
* வைட்டமின் கே, பிபோளேட், சில வைட்டமின்கள் இவைகளை உருவாகி செயல்பட உதவுவது.


 
 * நோய் எதிர்ப்புச் சக்திக்கு பெரிதும் உதவுவது.
* ஜீரண சக்திக்கும், சத்துகள் உறிஞ்ச படவும் உதவுகின்றது.
* நல்ல கவனம், தெளிவான அறிவு, ஞாபக சக்தியினை அளிப்பது.
* கெட்ட கிருமிகள், பாக்டீரியாக்களை அழிப்பது போன்ற அநேக செயல்களைச் செய்கின்றன.
 
* நமக்கு பிரோபயாடிக் எடுத்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதனை எப்படி அறிவது?
* வயிற்றில் பிரச்சினை - காற்று, உப்பிசம், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி.
* தூக்கம் சரிவர இன்மை
* சரும பிரச்சினை
* எடையினை பராமரிப்பதில் பிரச்சினை
* எப்போதும் சர்க்கரை, கொழுப்பு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் உண்பதில் விருப்பம்.
 
மன உளைச்சல், குழப்பம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு இவையெல்லாம் உங்கள் உணவுப் பாதையில் கெட்ட பாக்டீரியாக்கள் இருப்பதனை காட்டுகின்றது.
தயிர், மோர் இரண்டுமே நாம் அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்ளும் பிரோபயாடிக்ஸ், தினமும் ஒரு கிளாஸ் மோர் அருந்துங்கள். குறைபாடு இருப்பின் மருத்துவ ஆலோசனைப்படி பிரோபயாடிக் சத்துணவு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள்.
 
* தயிர் * அடர்ந்த சாக்லேட் * ஊறுகாய் * இட்லி, தோசை * ஆப்பிள் * சோயாபால் * ஆலிவ் * சீஸ் * டோகரை இவை அனைத்தும் பிரோபயாடிக் உணவுகளே. 
வெளிநாடுகளில் அதிக ஆய்வுகள் மருத்துவ துறையில் தொடர்ந்தவாறே உள்ளன. அதிக மருத்துவ முன்னேற்றங்களை கண்டும் சில உயிருக்கு ஆபத்தான தாக்குதல்கள் ஏன் சிறிய இளவயதிலேயே ஏற்படுகின்றன என்பதனைப் பற்றி ஆய்வு செய்தனர். அதன் முடிவுகளாக சில கருத்துக்களை அவர்கள் கூறியுள்ளனர். இவைகளில் பல கருத்துகள் நம் முன்னோர்கள் கூறியதுதான். 
 
* பிள்ளைகளை சிறு வயதில் இருந்தே நல்ல உணவு, ஸ்நாக்ஸ் இவைகளில் பழக்க வேண்டும் என்று வெகுவாய் வலியுறுத்துகின்றனர். கேழ்வரகு, சிறு தானியம், கடலை உருண்டை, பொட்டு கடலை உருண்டை, எள் உருண்டை இவைகளை நாம் பழக்கத்தில் கொண்டு வந்து விடலாமே. இதனால் இவர்களது மூளை செயல்பாடும் நன்கு இருக்கும் என்கின்றனர்.
 
* காரிலும், பைக்கிலும், ஸ்கூல் பஸ்சிலும் பறந்து கொண்டே உணவு உண்பது, போனில் பேசிக் கொண்டே உணவு உண்பது, சத்தமாகவே பேசுவது இவை அனைத்தும் ஒருவர் அறியாமலேயே ஸ்ட்ரெஸ்சினை வெகுவாகக் கூட்டி விடுகின்றன. எனவே அமர்ந்து அமைதியாய் உண்பதே மிக முக்கியம். எத்தனை சத்தான உணவானாலும் அவசரம் அவசரமாய் அள்ளி போட்டுக் கொள்வது அதனை விஷமாகவே மாற்றி விடும். 
 
* ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி சண்டையின்றி அன்பானவர்களாக இருந்தால் அந்த குழந்தைகள், அந்த வீட்டு முதியோர் அனைவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்களாம். முதியோர்கள் நல்ல படியாய் நடத்தப்படும் விதம் அவ்வீட்டு குழந்தைகளை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைக்குமாம். 
 
* சமையல் தாயின் கடமை என்று விட்டு விடக் கூடாது. காய்கறிகள் வாங்குவது, சுத்தம் செய்வது, சமைப்பது இப்படி அனைத்திலும் அனைவரின் பங்கு இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான உணவினை சமைக்க முடியும் என்கின்றனர். அம்மா மட்டுமே முழு பொறுப்பு எனும் பொழுது மற்றவர்கள் அதனை குறை சொல்வதும், தனக்குப் பிடித்ததனை மட்டுமே உண்பதும் என இருப்பதால் முறையான சத்துணவினை பெறுவதில்லை எனக் கூறப்படுகின்றது. 
 
* மேலும் குடும்பத்தோடு உண்பதும், குடும்பத்தோடு நடை பயிற்சி செல்வதும் முக்கியம் என வலியுறுத்தப்படுகின்றது. சிறு, சிறு செடிகளையாவது தொட்டிகளில் வளர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
* குடும்ப உறவுகளுடன் கூடி, வாழ்பவர்களுக்கு இருதய பாதிப்பு போன்ற கடும் பாதிப்புகள் மிகக் குறைவாகவே ஏற்படுகின்றன. தனியாக இருப்பவர்களுக்கு இத்தகு பாதிப்புகள் கூடுதலாக ஏற்படுகின்றது என்கின்றனர். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர். 
 
* வீடுகளில் செய்யப்படும் நல்ல ‘ஸ்நாக்ஸ்’, ‘பழங்கள்’ இவைகள் மட்டுமே வீட்டில் இருக்க வேண்டும். 
 
* பிள்ளைகளை நன்கு வளர்க்க வேண்டும் என்ற பெயரில் பெற்றோர்கள் தங்களை அதீதமாக வருத்திக் கொள்வதும் பின்னர் இக்கஷ்டங்களை தன் பிள்ளைகள் உணரவில்லையே என்று வருந்துவதும் இருதலை முறையினரையும் நோயாளி ஆக்கி விடுகின்றதாம். எனவே பொருளாதார நிலைமையினை குடும்பத்தினர் அனைவரும் கூடி பேசுவது ஆரோக்கிய சூழ்நிலையினை உருவாக்கும். 
 
எனவே ஆரோக்கியம் என்பது மருந்து, சிகிச்சை இவற்றைத் தாண்டி வளரும் சூழ்நிலை வாழும் நிலை.

Saturday 24 November 2018

எலும்புகளை இரும்பு போல மாற்ற இந்த டீயை குடித்தால் போதும்

முக்கனிகளில் ஒன்றான வாழையின் பயன்களை பற்றி நாம் நன்கு அறிவோம். சுவை மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடிய இந்த வாழைப்பழம் எளிதில் வாங்கக்கூடியதாகவும், எப்பொழுதும் கிடைப்பதாகவும் இருக்கிறது. வாழைப்பழத்தை பல்வேறு உணவுகளில் பயன்படுத்தினாலும் நாம் அறியாத ஒரு முறை உள்ள அதுதான் வாழைப்பழ டீ.




ஆம் வாழைப்பழத்தை கொண்டு தயாரிக்கப்படும் டீ பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. வைட்டமின் பி6, வைட்டமின் பி12, வைட்டமின் சி, பொட்டாசியம், மக்னீசியம் என இதில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் எண்ணற்றவை. இந்த பதிவில் வாழைப்பழ டீ எப்படி தயாரிக்கலாம் என்பதையும், அதனால் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதையும் பார்க்கலாம்.


இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

வாழைப்பழ தேநீரில் உள்ள முக்கியமான சத்து என்னவெனில் பொட்டாசியம் ஆகும், இது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதுமட்டுமின்றி பொட்டாசியம் உடலில் உள்ள திரவ சமநிலையை கட்டுப்படுத்துவதுடன் தமனிகள் மற்றும் இரத்த நாளங்களில் அழுத்தத்தை குறைத்து கார்டியோவாஸ்குலர் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது

வாழைப்பழ டீயில் உள்ள டிரிப்டோபான், செரோடோனின் மற்றும் டோபமைன் சத்துக்கள் தூக்கத்தின் அளவை அதிகரிக்க பயன்படும். மேலும் இன்சொமேனியா ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. தடையில்லா தூக்கத்தை வழங்குவதில் வாழைப்பழ டீ முக்கியபங்கு வகிக்கிறது. நிம்மதியான தூக்கம் உங்களுக்கு அல்சைமர் நோய் ஏற்படுவதை குறைக்கிறது. தூக்கமின்மை உங்கள் மூலையில் பீட்டா அமைலாய்டு சுரப்பை அதிகரிக்கும், இதுதான் அல்சைமர் ஏற்பட காரணமாகும்.

மனச்சோர்வை நீக்குகிறது

வாழைப்பழ டீயில் உள்ள டோபமைன் மற்றும் செரோடினின் உங்கள் ஹார்மோன் அளவை சீராக்கவும், உங்கள் மனநிலையை அதிகரிக்கவும் பயன்படுகிறது. இவை மகிழ்ச்சியை கட்டுப்படுத்தக்கூடிய நரம்பியல் கடத்திகளாகும். உங்களுக்கு தொடர்ந்து மனசோர்வு இருந்தால் உங்கள் உணவில் வாழைப்பழ டீயை சேர்த்துக்கொள்வது நல்லது.

எலும்புகளின் ஆரோக்கியம்

உங்கள் எலும்புகளை இரும்பாக மாற்ற வாழைப்பழ டீ குடிக்க வேண்டியது அவசியமாகும். வாழைப்பழ டீயில் உள்ள ஊட்டச்சத்துக்களான மாங்கனீசு மற்றும் மக்னீசியம் இரண்டும் உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க உதவும். குறிப்பாக இது எலும்புகளில் ஏற்படும் ஆஸ்டாபோரோசிஸ் நோய் ஏற்படுவதை தடுக்கிறது.

நோயெதிர்ப்பு மண்டலம்

வாழைப்பழ டீயில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவும். இந்த இரண்டு வைட்டமின்களுமே ஆன்டி ஆக்சிடண்ட்களாக செயல்படக்கூடியவை. அஸ்கார்பிக் அமிலம் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தி தூண்டுகிறது, மற்றும் வைட்டமின் ஏ நேரடியாக விழித்திரை ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. மேலும் கண்புரைகளின் வளர்ச்சியை தடுக்கிறது.

எடை குறைப்பு

எடை குறைப்பிற்கு வாழைப்பழ டீயை பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் சில ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளது. இந்த சத்துக்கள் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதுடன் உங்களை திருப்தியாக உணர வைக்கிறது. இது உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

தயாரிக்கும் முறை

வாழைப்பழ டீ தயாரிக்க தேவையானவை ஒரு நல்ல நாட்டு வாழைப்பழம், ஆறு கிளாஸ் தண்ணீர் மற்றும் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும்போதே அதில் வாழைப்பழத்தை போட்டு வைக்கவும், இந்த தண்ணீரில் வாழைப்பழத்தை 10 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் இந்த பழத்தை எடுத்துவிட்டு தண்ணீரை வடிகட்டவும். இதில் நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சேர்த்து குடிக்கவும்.

Friday 23 November 2018

சர்க்கரை நோயாளிகள் தினமும் இதில் 1 கப் சாப்பிடுங்கள்..!!

உடல் ஆரோக்கியத்திற்கு காய்கறிகள், பழங்களை தவிர தானியங்கள் மற்றும் பயறு வகைகளும் மிகவும் அவசியமாகும்.


அதுவும் பச்சை பயறை சுத்தமாக கழுவி ஒரு ஈரத்துணியில் போட்டு இறுக்கமாக கட்டி மறுநாள் காலையில் முளைக்கட்ட வைத்து அதை குறைந்த அளவில் நீர் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் இரட்டிப்பு பலனை பெறலாம்.
முளைக்கட்டிய பச்சை பயறு சாப்பிடுவதன் நன்மைகள்
பச்சை பயறில் ஆன்ட்டி-டயாப்பட்டிக் துகள்கள் உள்ளது, இது நம் உடலில் இருக்கக் கூடிய ரத்தச் சர்க்கரையின் அளவை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
நம் உடலில் உள்ள ரத்த நாளங்களை சுத்தமாக்கி இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகிறது.
குறைந்த ரத்த அழுத்தத்தை சீராக்கி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதால் ரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் இதனை சாப்பிடலாம்.
நம் உடலில் இருக்கும் செல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், புற்றுநோய் செல்களின் தாக்கம் பரவாமல் தடுக்கிறது.
நம்மை தாக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்த்து போராடி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
செரிமான செயல்பாட்டை சீராக்கி, பசி உணர்வை கட்டுப்படுத்துவதுடன், உடல் எடையை குறைக்கிறது.

மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படக்கூடிய வயிற்று வலி, தலைவலி, சோர்வு மற்றும் மன மாற்றங்களை கூட சரிசெய்கிறது.
நம் உடலில் இருக்கக் கூடிய நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி, இரும்புச்சத்து குறைபாடு வராமல் தடுக்கிறது.
கண் பார்வை மற்றும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க செய்து, ரத்த சோகை மற்றும் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

Monday 19 November 2018

இரவில் மாங்கனி சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்

சில சமயங்களில் இரவில் குழந்தைகள் எதாவது ஸ்நாக்ஸ் வேண்டுமென்று அடம்பிடித்து கேட்பார்கள். அந்த சமயத்தில் நொறுக்கு தீனிகள் சாப்பிட்டால் அது சரிவர சீரணிக்காமல் போய்விடும். இதனால் வாந்தி, பேதி கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவர்களை சமாளிக்க சரியான உணவு என்றால் அது பழங்கள் தான்.

ஏனெனில் இரவில் பழங்களை சாப்பிடுவதால் அவர்களின் சீரண மண்டலம் சரியாக செயல்படும். மேலும் காலையில் எழும் போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். கலோரி மற்றும் கொழுப்புகள் குறைந்த உணவு என்பதால் அவர்களுக்கு எளிதில் சீரண மாகும்.

மாம்பழம்


மாம்பழம் போன்ற பழங்களின் புளிப்புடன் கூடிய தித்திக்கும் இனிப்பு சுவை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள். மேலும் மாங்கனி அவர்களின் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. சரி. வாங்க இரவில் மாங்கனி சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

மாங்கனியில் ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன
நார்ச்சத்து
சர்க்கரை
புரோட்டீன்
விட்டமின் ஏ
விட்டமின் பி6
விட்டமின் சி
விட்டமின் ஈ
போலேட்
பாஸ்பரஸ்
கால்சியம்

மலச்சிக்கல்

முதலில் மாம்பழம் எளிதாக சீரணிக்க கூடிய ஒரு பழம். எனவே நீங்கள் இரவில் இதை சாப்பிட்டாலும் அசெளகரியமாக இருக்காது. இதில் உள்ள நார்ச்சத்துகள் காலையில் மலம் கழித்தலை சுலபமாக்குகிறது.

எடை கட்டுப்பாடு

இது குறைந்த கலோரி என்பதால் உங்கள் உடல் எடைக்கும் எந்த வித தீங்கையும் விளைவிக்காது. மேலும் நொறுக்கு தீனிகளில் இருப்பதை போன்று அதிகமான கொழுப்புச்சத்து இதில் கிடையாது. அதனால் மாம்பழம் சாப்பிட்டால் எடை கூடும் என்ற வதந்தியை இனியாவது நம்பாமல் இருங்கள்.

நல்ல தூக்கம்

இரவில் மாம்பழம் சாப்பிடுவதால் நரம்புகள் அமைதி பெறும். அதனால் இயல்பாகவே உடலையும் மனதையும் அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தை தருகிறது. இரவில் சரியாகத் தூக்கம் வராமல் தவிர்ப்பவர்கள் தொடர்ந்து சில நாட்கள் மாம்பழத்தைச் சாப்பிட்டுப் பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும். பிறகென்ன? இரவில் நீங்கள் கும்பகர்ணன் தான்.

ஆற்றலை சேமித்தல்

நீங்கள் மாமிசம், மீன் போன்றவற்றை சாப்பிடுவதை விட மாம்பழம் உங்களுக்கு அதிகமான கலோரியை தருகிறது. இதில் உள்ள சர்க்கரை சத்து நீங்கள் எனர்ஜட்டிக்காக இருக்க உதவுகிறது. அதனால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

சருமம்

மாம்பழத்தில் உள்ள விட்டமின் சி உங்களுக்கு ஆரோக்கியமான சருமம் உருவாக உதவுகிறது. அதுவும் இரவில் சாப்பிடும் போது உங்கள் சரும பாதிப்புகள் குணமடைந்து காலையில் புத்துணர்வை பெற உதவுகிறது. வெயிலால் உண்டாகும் கருமை நீங்கி, முகம் நன்கு கலராகும்.

இரத்த அழுத்தம்

மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்துகள் உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. அதுவும் இரவு உணவு வேளைக்கு பிறகு மாம்பழம் சுவைப்பது மிகவும் நல்லது. மாம்பழத்தை தொடர்ந்து உணவுடன் சேர்த்துக் கொண்டால், உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

ஆரோக்கியமான இதயம்

மாம்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் இருப்பதால் இதயம் நன்றாக செயல்பட உதவுகிறது. எனவே இரவில் இதை சாப்பிடும் போது ஹார்ட் அட்டாக் போன்ற அபாயத்திலிருந்து தப்பிக்கலாம். அடிக்கடி மார்பகம் கனமாக இருப்பது போல் உணர்பவர்கள் மாம்பழம் சாப்பிடுங்கள்.

புற்றுநோயை தடுத்தல்

மாங்கனியில் இருக்கும் பினோலிக் என்ற பொருள் மிகத் தீவிரமாக, புற்றுநோய் செல்களை அழிக்கிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் வளருவதை ஆரம்பத்திலேயே தடுக்கிறது.

கருவுற்ற பெண்கள்

இதில் உள்ள ஊட்டச்சத்துகள் கருவுற்ற பெண்களுக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் முக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் இதில் உள்ள இரும்புச் சத்து கருவுற்ற பெண்களுக்கு அனிமியா போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது. இரவில் மாம்பழம் சாப்பிடும் போது அவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தையும் தருகிறது. கருவுற்ற பெண்கள் மாம்பழத்தை போல பேரீச்சம்பழமும் சாப்பிடுவது நல்லது.

உடலுறவு

மாம்பழத்தில் விட்டமின் ஈ இருப்பதால் இது உங்கள் பாலுணர்வு ஹார்மோனை தூண்டுகிறது. எனவே இதை இரவில் சாப்பிடும் போது உடலுறவில் ஈடுபாட்டுடன் செயல்பட உதவுகிறது. ஆண்மையின் வீரியத்தை அதிகரிக்கச் செய்கிறது. அதனால் தினமும் இரவு தூங்கச் செல்லும்முன், இரண்டு மீடியம் சைஸ் மாம்பழங்களை சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள்... மாம்பழ சீசன் முடியும்வரை ஒரே மஜா தான்...

ஆஸ்துமா

பொதுவாக நிறைய பேர் இரவில் ஆஸ்துமா பிரச்சினையால் மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். அந்த மாதிரியான சமயங்களில் மாம்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் ஆஸ்துமா அறிகுறிகளை குறைத்து நிவாரணம் அளிக்கிறது. அதனால் மூச்சுத்திணறல் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் மாம்பழத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கண்கள்

இரவில் மாம்பழத்தை உண்பதால் அதிலுள்ள விட்டமின் ஏ கண்களுக்கு ஓய்வு கொடுத்து கண் பார்வை அதிகரிக்கும். மேலும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து காக்கிறது. மாலைக்கண் பிரச்னையை சரிசெய்யும் ஆற்றலும் இந்த மாம்பழத்துக்கு உண்டு.

விளைவுகள்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள். மாம்பழம் சாப்பிடுவதால் எவ்வளவுக்கு நன்மை இருக்கிறதோ அதேபோல், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சில பிரச்னைகளும் உண்டாகும். குறிப்பாக, மாம்பழம் அதிகமாக சாப்பிடும்போது, வயிற்றுப்போக்கு, வயிற்றில் அமிலத் தன்மை, சிறுநீரக செயலிழப்பு, இரத்த சர்க்கரை அதிகரித்தல் ஆகிய பிரச்னைகளும் உண்டாகும். அதனால் அளவோடு சாப்பிட்டு வளமோடு இருங்கள்.

எவ்வளவு சாப்பிடலாம்

ஒரு இரவிற்கு 2 மீடியம் சைஸ் அளவுள்ள மாம்பழங்கள் போதுமானது. பெரிய சைஸ் மாம்பழமாக இருந்தால் ஒன்று போதும். கிட்டதட்ட ஒரு பௌல் அளவு என்று தோராயமாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதுவு உங்கள் உடலுக்குத் தேவையான எல்லா நன்மைகளையும் தரும்.



Sunday 18 November 2018

வைட்டமின் டி மாத்திரையால் சிறுநீரகக் கல் வரும்

கடுமையான வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருந்த 25 வயது இளம் பெண் ஒருவரைச் சென்னையைச் சேர்ந்த டாக்டரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். 






அந்தப் பெண்ணுக்கு ‘சிறுநீரகத்தில் கல் இருக்கிறது’ எனச் சொல்லி, அதற்கான மருந்துகளை டாக்டர் பரிந்துரைத்துள்ளார். அந்த மருந்து களைச் சாப்பிட்ட பிறகும் வயிற்று வலி நிற்கவில்லை. வேறு ஒரு டாக்டரிடம் செகண்ட் ஒப்பீனியன் கேட்ட போது,  அவர் சொன்ன தகவல் அதிர்ச்சி தந்தது. பல வருடங்களாக அந்தப் பெண் சாப்பிட்டு வந்த வைட்டமின் டி மருந்தின் பக்க விளைவு தான் அந்த வலி.

ஏன் அவர் வைட்டமின் டி சாப்பிட்டார்? தனக்கு உடல் வலி இருப்பதாகத் தோழியிடம் புலம்பிக் கொண்டிருந்தபோது, ‘‘எனக்கும் இதே பிரச்னை தான். டாக்டர் என்னை வைட்டமின் டி சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கச் சொன்னாங்க. இப்போ வலி இல்லை’’ என்று இலவச அட்வைஸை அவர் அள்ளிவிட்டிருக் கிறார். 





அதைக் கேட்டு இவரும் வைட்டமின் டி மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டதன் விளைவே இது. இலவச மருத்துவ அறிவுரைகளைப் பின்பற்றுவதில், படித்தவர்களும் பாமரர்களாகவே மாறி விடுகிறார்கள். 

இலவச மாகக் கிடைக்கிற அறிவுரை களில் மருத்துவ ஆலோசனை களுக்கே நம்மூரில் முதலிடம்.  பக்கத்து வீட்டுக்காரருக்குப் பலனளித்த அதே மருந்தும் மாத்திரையும் தனக்கும் உதவும் என்கிற மூடத்தனம் பலருக்கு உள்ளது. 

இன்னொரு பக்கம் மருந்துக் கடைக் காரர்களும் டாக்டர் களாக மாறுகிறார்கள். காய்ச்சல், தலை வலிக்கு பாரசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொடுப்பதைப் போல, இப்போதெல்லாம் கை கால் வலி, மூட்டுவலி என வருகிறவர்களுக்குச் சர்வரோக நிவாரணியாக வைட்டமின் டி-யை விற்கிறார்கள்.

‘வருடத்தின் பெரும்பான்மை மாதங்கள் வெயிலுடன் வாழும் நமக்கு, வைட்டமின் டி பற்றாக்குறை வர வாய்ப்பே இல்லை’ என்பது தான் அதிர வைக்கிற உண்மை.  ஏனெனில், வைட்டமின் டி என்பது சூரிய வெளிச்சம் உடலில் படுவதால் உற்பத்தியாவது. ஆனாலும், குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோருக்குமே வைட்டமின் டி சப்ளிமென்ட்டுகளை மருத்துவர்கள் சர்வசாதாரணமாகப் பரிந்துரைக் கிறார்கள். 

இதன் பின்னணியில், மருந்துக் கம்பெனி களின் மிகப்பெரிய அரசியல் இருப்பதாக எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். ‘‘இன்று எல்லோருக்கும் வைட்டமின் டி டெஸ்ட் செய்கிறார்கள். டெஸ்ட் ரிப்போர்ட், எல்லோரு க்கும் குறைபாடு இருப்பதாகக் காட்டுகிறது.  இந்த டெஸ்ட் சரியானது தானா என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டியது’’ என்கிறார் பிரபல சிறு நீரகவியல் மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன். 

வைட்டமின் டி டெஸ்ட் தேவையற்றது என அடித்துச் சொல்கிற அவர், அதற்காகப் பரிந்துரைக் கப்படும் சப்ளிமென்ட்டுகள் பயங்கரமான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் சொல்கிறார். ‘‘இங்கே செய்யப் படுகிற வைட்டமின் டி சோதனை என்பது மொத்த வைட்டமின் டி-யைக் கணக்கிடுவது. வைட்டமின் டி-யில் இரண்டு பகுதிகள் உண்டு. 

ஒன்று, புரோட்டீனுடன் இணைந்த வடிவில் இருப்பது. அதாவது, உடலிலுள்ள ஆல்புமினுடன் இணைந்த பவுண்டு வடிவம்.  இது ‘ஸ்டோரேஜ் ஃபார்ம்’ என்றும் அழைக்கப் படுகிறது. இன்னொன்று, ஃப்ரீ ஃபார்ம். வெயிலில் இருந்து பழகுபவர்களுக்கு பவுண்டு ஃபார்ம் குறைவாக இருக்கும். 

இயற்கையாக வெளிச்சம் கிடைப்பதால் ஸ்டோரேஜ் தேவையில்லை என உடல் தீர்மானித்துக்கொள்கிறது. இந்த இரண்டையும் சேர்த்துத்தான் வைட்டமின் டி டெஸ்ட் கணக்கிடுகிறது. ஃப்ரீ ஃபார்மை மட்டும் தனியே கணக்கிடுவ தில்லை. 

அப்படித் தனியே ஃப்ரீ ஃபார்மைக் கணக்கிட்டுப் பார்த்தால், அது நார்மலாக இருக்கலாம். அதுவே மொத்தஅளவைக் கணக்கிடும். போதுதான் குறைவாகக் காட்டுகிறது. இந்த நிலையில், வைட்டமின் டி அளவைச் சரியாகக் கணக்கிடுவதே கஷ்டம். 

இன்று உலகம் முழுக்க வைட்டமின் டி குறைபாடு பெரிதாகப் பேசப்படு கிறது. 

எல்லா வயதினரு க்கும் எல்லா நோய்களு க்கும் வைட்டமின் டி டெஸ்ட்டைப் பரிந்துரைக்கிறார்கள். குறைபாடு எனக் காட்டுகிற ரிப்போர்ட்டை வைத்து, அதற்கு மருந்தும் கொடுக் கிறார்கள். 10 வருடங்களுக்கு முன்பு, வைட்டமின் டி சப்ளிமென்ட் தயாரிப்புக்கான மருந்துக் கம்பெனிகள் பெரியளவில் இல்லை. 

இன்று வைட்டமின் டி தயாரிப்பு என்பது மிகப்பெரிய பிசினஸாகி விட்டது. வைட்டமின் டி குறைபாடு என்பது நோயல்ல. அது ஓர் அறிகுறி. உங்கள் உடல் ஆரோக்கியமாக இல்லை என்பதற்கான அறிகுறி. வேறு ஏதேனும் நோய்களால் உடல் பலவீனமாக இருக்கும்போது, வைட்டமின் டி டெஸ்ட் செய்து பார்த்தால் குறைவாகக் காட்டும். 

அதை ஒரு குறைபாடாகக் கருதவேண்டியதில்லை. உங்கள் உடல் நலனில் அக்கறை தேவை என்பதை உணர்த்தும் அறிகுறியாகக் கருதினால் போதும்.  இதயநோய் தீவிரமாக இருக்கும் நபருக்கு வைட்டமின் டி டெஸ்ட் செய்தால், அது குறைவாகத் தான் காட்டும். 

அவருக்கு வைட்டமின் டி சப்ளிமென்ட் கொடுப்பதால், இதய நோய் சரியாகி விடாது. உடற்பயிற்சிகள் செய்வது, உணவில் கவனம் செலுத்துவது போன்ற வற்றில் அக்கறை அவசரம் என்பதை உணர வேண்டும். 

உண்மை யான வைட்டமின் டி குறைபாடு என்பது அரிதினும் அரிதானது. உடலில் வெளிச்சமேபடாத நிலையில்,  படுத்த படுக்கையாக வெளியில் எட்டிப்பார்க்க முடியாத நிலையில் இருக்கும் ஒருவருக்கு, வைட்டமின் டி குறைபாடு வர வாய்ப்பு இருக்கிறது.  வெளிநாடுகளில் இது சகஜம். குளிர் காலத்தில் மாதக்கணக்கில் வீட்டுக்கு உள்ளேயே இருப்பார்கள். 

அதனால், அவர்களுக்கு வரலாம். இந்தியாவில் அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு’’ என்கிற ராஜன் ரவிச்சந்திரன், ஏசி அறையில் இருப்பதாலோ, சன் ஸ்கிரீன் உபயோகிப்ப தாலோ, வைட்டமின் டி பற்றாக்குறை வராது எனத் தெளிவு படுத்துகிறார்.

‘‘தேவை யில்லாமல் வைட்ட மின் டி சப்ளிமென்ட்டுகள் கொடுக்கும் போது, சிறுநீரகக் கற்கள் உற்பத்தியாகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.  ரத்தத்தில் கால்சியம் அளவு அதிகரிக்கும். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழக அறிஞர்கள், ‘வைட்டமின் டி குறைபாடு என்பதே கேள்விக்குரியது’ என்கிறார்கள்.  இதில் மேற்கொண்டு ஆராய்ச்சி தேவை என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

ஆனால், ‘இது வைட்டமின் தானே, எடுத்துக் கொண்டால் என்னவாகிவிடப் போகிறது’ என எடுத்துக் கொள்கிறவர்கள் அதிகம்.  தண்ணீரில் கரையக் கூடிய பி காம்ப்ளெக்ஸ், வைட்டமின் சி போன்றவற்றுக்கெல்லாம் பெரிய பக்க விளைவுகள் கிடையாது. ஆனால், வைட்டமின் டி என்பது கொழுப்பில் கரையக் கூடியது என்பதால், பக்க விளைவுகள் அதிகம். 

அளவை மிஞ்சினால் கிட்னி ஸ்டோன், வாந்தி, உயர் ரத்த அழுத்தம் போன்றவை வரலாம். வெளிநாடுகளில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் கடைகளிலேயே வைட்டமின் டி சப்ளிமென்ட் வாங்க முடியும்.  அவற்றின் அளவு 400 யூனிட் முதல் 1000 யூனிட் வரை தான் இருக்கும். அதுவே, இந்தியாவில் பரிந்துரைக்கப்படுவதோ 

60,000 யூனிட் முதல் ஆறு லட்சம் யூனிட் வரை என ஹைடோஸ். அந்தளவு நமக்குத் தேவையே கிடையாது.  இந்தப் பிரச்னை ஒருநாள் பெரிதாக வெடிக்கும். அப்போது உண்மை தெரியவரும்...’’ என்கிறார் ராஜன் ரவிச்சந்திரன். “எல்லாப் பிரச்னைகளுக்கும் மருந்து கம்பெனிகளின் லாப நோக்கத்தைக் காரணம் காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்கிறார் 

சமூகச் சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத். “அதற்காக மருந்துக் கம்பெனிகள் தவறே செய்வதில்லை என்றும் சொல்ல முடியாது.  எவற்றையெல்லாம் லாபநோக்கில் மருந்து கம்பெனிகள் செய்கின்றன எனத் தெரிந்து தவிர்ப்பது தான் புத்தி சாலித்தனம். 

சிஸ்டம் சரியில்லாதது தான் அடிப்படைப் பிரச்னை. இன்று பலருக்கும் வைட்டமின் டி பற்றாக்குறை இருக்கிறது.  அதை மறுப்பதற்கில்லை. காரணம், இன்றைய வாழ்க்கை முறை. சூரிய ஒளிபடாத சூழலில், பெரும்பான்மை நேரத்தைச் செலவிடுகிறோம்.  நைட் ஷிஃப்ட் வேலை அதிகரித் திருக்கிறது. மைதானத்தில் வெயில் பட விளையாடுவதைத் தவிர்த்து, 

வீட்டுக்குள்ளேயே கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுகிறார்கள் குழந்தைகள். அப்பார்ட் மென்ட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடப்பவர்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை மட்டுமின்றி, அப்பார்ட்மென்ட் சிண்ட்ரோமும் சேர்ந்தே பாதிப்பதெல்லாம் உண்மை தான்.

ஆனால், எல்லோருக்கும் இந்தப் பரிசோதனை அவசியமா என்பது தான் கேள்வி. 

இதற்கெனத் தேசியஅளவிலும், சர்வதேசஅளவிலும் மிகப் பெரிய ஆய்வு அமைப்பு அவசியம். அப்படி எதுவும் இல்லாதது தான் பிரச்னையே.  அரசுத் தரப்பில் இதற்கெனத் தனிப்பட்ட ஆய்வுகள் தேவை. இன்று பன்னாட்டு நிறுவனங்கள் தான் உலகையே ஆளுகின்றன. 

எல்லா நாடுகளிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்வது, அவற்றை ஊக்கப் படுத்துவது, 

அவற்றின் முடிவுகளை வெளியிடுவது, நார்மல் வேல்யூக்களை மாற்றுவது என எல்லாமே பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப் பாட்டில் உள்ளன. 

எல்லா நாட்டு அரசாங்கங்களும் அரசு சார்பாக ஆராய்ச்சிகளை வலியுறுத்த வேண்டும். 

இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சிகளை வெகுவாகக் குறைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

அதனால், உண்மை நிலவரம் தெரியாமல், மருந்து கம்பெனிகள் சொல்வதை நம்பிக் கொண்டிருக்கிறோம்.. ஒருமுறை மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை அடுத்தடுத்த முறைகளும் தாமாகவே வாங்கிச் சாப்பிடுவது, 

வெளிநாடுகளிலிருந்து வருகிறவர்களிடம் மீன் எண்ணெய் மாத்திரைகள் வாங்கிவரச்சொல்லிச் சாப்பிடுவது போன்றவையெல்லாம் ஆபத்தானவை.  பொது சுகாதாரத்தை வலுப்படுத்துவதும் இந்தியாவில் நோயாளிகளுக்குப் பொது மருத்துவ மனைகளின் மூலம் 

சிகிச்சை அளிக்கிற பழக்கமும் தான், இதுபோன்ற பிரச்னைகளுக்கான தீர்வு’’ என்கிறார் டாக்டர் ரவீந்திரநாத்.

வைட்டமின் டி எதில் கிடைக்கும்?

‘‘மாத்திரையாக வைட்டமின் டி-யை எடுத்துக் கொள்ளும் போது, அது மற்ற வைட்டமின் களை அழித்து விடும். 

கூடியவரை இ்தை இயற்கையான வழிகளில் பெறுவதே பாதுகாப்பானது’’ என்கிறார் டயட்டீஷியன் அம்பிகா சேகர்.  உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி வைட்டமின் டி கிடைக்கும் வழிகளை அவர் பட்டியலிடு கிறார். 

‘கீரைகள், காய்கறிகள், நட்ஸ், முட்டையின் மஞ்சள் கரு, பால், வெண்ணெய், சில வகை மீன்கள், ஈரல், மீன் எண்ணெய், சோயா, பால், சீஸ், ஆரஞ்சு ஜூஸ் ஆகிய உணவு களைச் சாப்பிடுவதோடு மிக முக்கியமாக, சூரிய வெளிச்சம் உடலில் பட வேண்டும்.’’

எது குறைபாடு?

* 30 நானோ கிராம்/ மில்லி லிட்டருக்கு மேல் இருந்தால் சிறப்பு.

* 20 முதல் 30 நானோ கிராம்/ மில்லி லிட்டர் இருப்பது இயல்பானது.

* 20 நானோகிராம்/மில்லி லிட்டருக்குக் கீழ் இருந்தால், அது குறைந்த அளவு.

* 10 நானோ கிராம்/ மில்லி லிட்டருக்குக் கீழ் இருந்தால் தான் குறைபாடு.

* அப்போதுமே, ஃப்ரீ ஃபார்ம் அளவை டெஸ்ட் செய்தால் தான் சரியான அளவு தெரியும்


ஆண்கள் கிரீன் டீ குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..? என்னென்னு தெரிஞ்சிக்கோங்க..

நாம் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிப்பது அன்றாட பழக்கமாக மாறி விட்டது. ஒரு சிலருக்கு இந்த காலை பழக்கம் இருப்பதில்லை. ஆனால், காலையில் காபி (அ) டீ குடிக்கும் இந்த பழக்கம் உங்களுக்கு முழு பலனை தர வேண்டுமென்றால் அதற்கு கிரீன் தான் சரியான தேர்வு.



குறிப்பாக ஆண்கள் கிரீன் டீயை குடிப்பதால் புற்றுநோய் முதல் பிறப்புறுப்பு பிரச்சினைகள் வரை பலவித வழிகளில் இது உதவும் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். வாங்க, எப்படி கிரீன் டீ ஆண்களை பலவித நோய்களில் இருந்து காக்கிறது என்று இனி அறிவோம்.

கிரீன் டீ

உடல் எடை கூடுதல், புற்றுநோய், இதய கோளாறுகள் போன்ற ஏராளமான வியாதிகளுக்கு இந்த கிரீன் டீ அருமையான மருந்தாக உள்ளது. குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படுகின்ற பல வித பிரச்சினைகளுக்கு இது தீர்வை தரவல்லது. எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பலமாக்க கிரீன் டீ சிறந்த ஆயுதம்.

அதிக ஆற்றல்

உடல் அடிக்கடி சோர்வு அடிந்தால் இனி உங்களுக்கான வைத்தியம் 1 கப் கிரீன் டீ தான். மூளையின் ஆற்றலை சுறுசுறுப்பாகவும், உடலுறவின் போது அதிக செயல்திறனுடன் இருக்க கிரீன் டீ உங்களுக்கு உதவுகிறது. மேலும், நீண்ட நேரம் எந்த வேளையில் ஈடுபட வேண்டுமென்றாலும் 1 கப் கிரீன் டீ ஆண்களுக்கு போதும்.

ஆண்களின் பிரச்சினை

ஆண்களின் பெரிய பிரச்சினையாக இந்த மலட்டு தன்மை பார்க்கப்படுகிறது. பலர் தாம்பத்திய வாழ்வில் இந்த மலட்டு தன்மை பிரச்சினை மிக மோசமான விளைவை ஏற்படுத்தி உள்ளது. மலட்டு தன்மையை தடுக்க இந்த கிரீன் டீ உதவும் என சில ஆய்வுகள் சொல்கிறது.

பிறப்புறுப்பு புற்றுநோயை குணப்படுத்த

கிரீன் டீ குடித்து வரும் ஆண்களுக்கு பிறப்புறுப்பு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். உடலில் புற்றுநோய் செல்கள் வளர விடாத அளவிற்கு இவை எதிர்ப்பு சக்தியை பன்மடங்காக கூட்டி விடுமாம். எனவே 50% பிறப்புறுப்பு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை இவை குறைக்கிறதாம்.

அழுக்குகளை சுத்தம் செய்ய

ஆண்களின் உடல் முழுவதும் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய இந்த கிரீன் டீ ஒரு அற்புத மருந்தாக வேலை செய்கிறது. 5,000 வருடத்திற்கு முன்பு இருந்தே ஆசிய நாடுகளில் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதற்காக இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

இளமையான தோற்றத்திற்கு



ஆண்களே, நீங்கள் சீக்கிரமாகவே முதுமையான தோற்றத்தை அடைந்து விடுகிண்றீர்கள் என்றால் உங்களுக்கான தீர்வு கிரீன் டீ தான். செல்கள் சிதைவடைவதை தடுத்து வயதாகாமல் தடுக்கிறது. மேலும், முகத்தின் பொலிவையும் இது இரட்டிப்பாக செய்கிறது.

கொழுப்புக்களை கரைக்க

அளவுக்கு அதிகமான கொழுப்பு உணவுகளை சாப்பிட்டு விட்டு உடல் பருமன் கூடி விட்டதா..? இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது கிரீன் டீ. கிரீன் டீயை பற்றிய ஆராய்ச்சியில், தினமும் கிரீன் டீயை குடிக்கும் ஆண்களின் உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகள் கரைந்து விடுமாம். எனவே உடல் எடையை இது வேகமாக குறைக்க வழி செய்யும்.

காரணம் என்ன..?

ஆண்களின் சிறந்த நண்பனாக ஏன் இந்த கிரீன் டீயை குறிப்பிடுகின்றனர் என்பதற்கு காரணமும் உள்ளது. Polyphenols என்பது ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்களின் கூட்டு மூலமாகும். இவை ரத்த நாளங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் முதல், புற்றுநோய் வரை சரி செய்ய வல்லது. குறிப்பாக ஆண்களின் மலட்டு தன்மையை போக்கும். இந்த மூல பொருள் கிரீன் டீயில் இருப்பதால் தான் ஆண்களுக்கு இவ்வளவு நன்மைகள் நடக்கிறது.

பலன்கள் நிறைந்த கிரீன் டீ..!

கிரீன் டீ தினமும் குடிப்பதால் பல வித நன்மைகள் உள்ளன. இதனால் உடலில் உள்ள சில முதன்மையான உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவர்கள் சொல்கின்றனர். குறிப்பாக இதயம், கல்லீரல், எலும்பு மூட்டுகள் போன்றவற்றில் நோய்கள் ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.

புத்தி கூர்மையை அதிகரிக்க

தினமும் கிரீன் டீ குடிக்கும் ஆண்களுக்கு புத்தி கூர்மை அதிகரிக்கும் என கிரீன் டீயை பற்றிய ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இதில் உள்ள L-theanine என்கிற மூல பொருள் மூளையின் செயல்திறனை அதிகரிக்க வைக்கிறதாம்.

Saturday 17 November 2018

முருங்கை இலையின் மருத்துவ பயன்கள்

முருங்கை முழுத் தாவரமும், கசப்பு , துவர்ப்பு, மற்றும் இனிப்பு சுவைகள் கொண்டது. குளிர்ச்சித் தன்மையானது.



முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.
உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

முருங்கை இலை சாறு இரத்தசுத்தி செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். முருங்கை இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.

ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும்.

பித்த மயக்கம், கண் நோய், சொரிய மாந்தம் முதலியவை நீங்கும். இருமல், குரல் கம்மல், தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கலை போக்கும். மெலிந்த தேகம் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.

முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது. முருங்கை கீரை சாப்பிடாதவர்கள் முருங்கை இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போண்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.

Tuesday 13 November 2018

ஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா..?

அழகு என்பது முகத்தில் கிரீம்களை பூசி கொண்டும், கலர் கலர் டைகளை தலையில் அடித்து கொள்வது மட்டும் கிடையாது. அழகு என்பதே இயற்கையாக இருப்பது தான். இயற்கையை நாம் செயற்கை தன்மையுடன் காட்ட முடியும். ஆனால், இயற்கைக்கு என்று ஒரு தனி தன்மை எப்போதும் இருக்கும்.

இயற்கையை என்றுமே செயற்கை முந்த முடியாது. அந்த வகையில் ஆண்களின் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், கருமையாக்கவும் கண்ட செயற்கை வேதி பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை வழி முறைகளை பயன்படுத்தலாம். எப்படி அவற்றை பயன்படுத்தலாம் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

என்ன பிரச்சினை..?

பெண்களுக்கு இருப்பது போன்றே ஆண்களுக்கும் அழகை பற்றிய ஆசை எப்போதும் இருக்க தான் செய்கிறது. சிலர் இதை வெளிப்படையாக காட்டி கொள்கின்றனர். சிலர் இந்த ஆசையை மறைத்து வைக்கின்றனர். முடி உதிர்வு பல ஆண்களுக்கிடையே உள்ள மிக பெரிய பிரச்சினையாக உள்ளது. முடி கொட்டுதல், பொடுகு தொல்லை, வழுக்கை, தலையில் வறட்சி போன்ற பிரச்சினைகள் தான் ஆண்கள் அதிகம் சந்திப்பது.

இளநரையை போக்க

ஆண்களின் முக்கிய பிரச்சினையாக உள்ள இந்த நரை முடிகளை போக்குவதற்கு ஒரு அருமையான வைத்தியம் உள்ளது. அதற்கு தேவையானவை...
செம்பருத்தி பூ 4
நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்

செய்முறை :-

செம்பருத்தி இதழை மட்டும் நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொண்டு தலையில் தடவவும். 20 நிமிடம் கழித்து சிறிது சிகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இளநரைகள் மறைந்து முடி கருமையாக இருக்கும்.

வெங்காய முறை

முடியின் அடர்த்தியை அதிகரிக்க ஒரு எளிய வழி இருக்கிறது. நம் வீட்டிலே கிடைக்கும் பொருட்களை வைத்தே இதனை செய்ய முடியும்.
தேவையானவை :-
தேன் 1 ஸ்பூன்
வெங்காயம் பாதி

செய்முறை :-

வெங்காயத்தை அரிந்து கொண்டு அதனை நன்கு அரைத்து சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இந்த சாற்றுடன் தேன் கலந்து தலைக்கு தடவவும். தேவைக்கு வேண்டுமென்றால் சிறிது யோகர்ட் சேர்த்து கொள்ளலாம். 30 நிமிடம் கழித்து கிகைக்காய் பயன்படுத்தி தலையை வெது வெதுப்பான நீரில் அலசவும். இவ்வாறு செய்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

முடி நன்கு வளர

முடி உதிராமல் நன்றாக வளர ஒரு அற்புத குறிப்பு உள்ளது. இதனை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முடி உதிர்வை தடுத்து விடலாம்.
தேவையானவை :-
முட்டை வெள்ளை கரு 1
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
தயிர் 1 ஸ்பூன்
மருதாணி பொடி 2 ஸ்பூன்
டீ டிகாஷன் 1 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் தயிர், டிகாஷன், மருதாணி பொடி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே இதனை ஊற விட்டு, மறுநாள் இதனை தலைக்கு தேய்க்கவும். 1 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த குறிப்பு முடி உதிர்வு, நரை முடி போன்ற பிரச்சினைக்கு முற்று தரும்.

உருளை கிழங்கு சாறு

முடி பொலிவாகவும் அடர்த்தியாகவும் வைத்து கொள்ள உருளைக்கிழங்கு உதவுகிறது. 1 உருளைக்கிழங்கை எடுத்து கொண்டு அதனை நறுக்கி நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதன் சாற்றை தலைக்கு தேய்த்து வரவும். இதில் உள்ள விட்டமின் அ, பி, சி போன்றவை முடியை நன்றாக வளர செய்யும்.

ஆலிவ் எண்ணெய்

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆலிவ் எண்ணெய் சிறந்த ஒன்றாகும். இதில் உள்ள வைட்டமின்களும், தாது பொருட்களும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க பெரிதும் பயன்படுகிறது. வாரத்திற்கு 2 முறை ஆலிவ் எண்ணெய்யை தலைக்கு தடவி 10 நிமிடம் மசாஜ் கொடுத்து தலைக்கு குளிக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முடி நன்கு வளரும்.