Sunday, 25 November 2018

கெட்ட பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள்

பிரோபயாடிக் என்றால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களைக் குறிப்பது. கெட்ட பாக்டீரியா என்பது கிருமி. நோய்களைக் குறிப்பது.
 
* வைட்டமின் கே, பிபோளேட், சில வைட்டமின்கள் இவைகளை உருவாகி செயல்பட உதவுவது.


 
 * நோய் எதிர்ப்புச் சக்திக்கு பெரிதும் உதவுவது.
* ஜீரண சக்திக்கும், சத்துகள் உறிஞ்ச படவும் உதவுகின்றது.
* நல்ல கவனம், தெளிவான அறிவு, ஞாபக சக்தியினை அளிப்பது.
* கெட்ட கிருமிகள், பாக்டீரியாக்களை அழிப்பது போன்ற அநேக செயல்களைச் செய்கின்றன.
 
* நமக்கு பிரோபயாடிக் எடுத்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதனை எப்படி அறிவது?
* வயிற்றில் பிரச்சினை - காற்று, உப்பிசம், வயிற்றுப் போக்கு, வயிற்று வலி.
* தூக்கம் சரிவர இன்மை
* சரும பிரச்சினை
* எடையினை பராமரிப்பதில் பிரச்சினை
* எப்போதும் சர்க்கரை, கொழுப்பு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் உண்பதில் விருப்பம்.
 
மன உளைச்சல், குழப்பம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு இவையெல்லாம் உங்கள் உணவுப் பாதையில் கெட்ட பாக்டீரியாக்கள் இருப்பதனை காட்டுகின்றது.
தயிர், மோர் இரண்டுமே நாம் அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்ளும் பிரோபயாடிக்ஸ், தினமும் ஒரு கிளாஸ் மோர் அருந்துங்கள். குறைபாடு இருப்பின் மருத்துவ ஆலோசனைப்படி பிரோபயாடிக் சத்துணவு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளுங்கள்.
 
* தயிர் * அடர்ந்த சாக்லேட் * ஊறுகாய் * இட்லி, தோசை * ஆப்பிள் * சோயாபால் * ஆலிவ் * சீஸ் * டோகரை இவை அனைத்தும் பிரோபயாடிக் உணவுகளே. 
வெளிநாடுகளில் அதிக ஆய்வுகள் மருத்துவ துறையில் தொடர்ந்தவாறே உள்ளன. அதிக மருத்துவ முன்னேற்றங்களை கண்டும் சில உயிருக்கு ஆபத்தான தாக்குதல்கள் ஏன் சிறிய இளவயதிலேயே ஏற்படுகின்றன என்பதனைப் பற்றி ஆய்வு செய்தனர். அதன் முடிவுகளாக சில கருத்துக்களை அவர்கள் கூறியுள்ளனர். இவைகளில் பல கருத்துகள் நம் முன்னோர்கள் கூறியதுதான். 
 
* பிள்ளைகளை சிறு வயதில் இருந்தே நல்ல உணவு, ஸ்நாக்ஸ் இவைகளில் பழக்க வேண்டும் என்று வெகுவாய் வலியுறுத்துகின்றனர். கேழ்வரகு, சிறு தானியம், கடலை உருண்டை, பொட்டு கடலை உருண்டை, எள் உருண்டை இவைகளை நாம் பழக்கத்தில் கொண்டு வந்து விடலாமே. இதனால் இவர்களது மூளை செயல்பாடும் நன்கு இருக்கும் என்கின்றனர்.
 
* காரிலும், பைக்கிலும், ஸ்கூல் பஸ்சிலும் பறந்து கொண்டே உணவு உண்பது, போனில் பேசிக் கொண்டே உணவு உண்பது, சத்தமாகவே பேசுவது இவை அனைத்தும் ஒருவர் அறியாமலேயே ஸ்ட்ரெஸ்சினை வெகுவாகக் கூட்டி விடுகின்றன. எனவே அமர்ந்து அமைதியாய் உண்பதே மிக முக்கியம். எத்தனை சத்தான உணவானாலும் அவசரம் அவசரமாய் அள்ளி போட்டுக் கொள்வது அதனை விஷமாகவே மாற்றி விடும். 
 
* ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி சண்டையின்றி அன்பானவர்களாக இருந்தால் அந்த குழந்தைகள், அந்த வீட்டு முதியோர் அனைவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பார்களாம். முதியோர்கள் நல்ல படியாய் நடத்தப்படும் விதம் அவ்வீட்டு குழந்தைகளை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைக்குமாம். 
 
* சமையல் தாயின் கடமை என்று விட்டு விடக் கூடாது. காய்கறிகள் வாங்குவது, சுத்தம் செய்வது, சமைப்பது இப்படி அனைத்திலும் அனைவரின் பங்கு இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான உணவினை சமைக்க முடியும் என்கின்றனர். அம்மா மட்டுமே முழு பொறுப்பு எனும் பொழுது மற்றவர்கள் அதனை குறை சொல்வதும், தனக்குப் பிடித்ததனை மட்டுமே உண்பதும் என இருப்பதால் முறையான சத்துணவினை பெறுவதில்லை எனக் கூறப்படுகின்றது. 
 
* மேலும் குடும்பத்தோடு உண்பதும், குடும்பத்தோடு நடை பயிற்சி செல்வதும் முக்கியம் என வலியுறுத்தப்படுகின்றது. சிறு, சிறு செடிகளையாவது தொட்டிகளில் வளர்க்க அறிவுறுத்தப்படுகின்றனர். 
 
* குடும்ப உறவுகளுடன் கூடி, வாழ்பவர்களுக்கு இருதய பாதிப்பு போன்ற கடும் பாதிப்புகள் மிகக் குறைவாகவே ஏற்படுகின்றன. தனியாக இருப்பவர்களுக்கு இத்தகு பாதிப்புகள் கூடுதலாக ஏற்படுகின்றது என்கின்றனர். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர். 
 
* வீடுகளில் செய்யப்படும் நல்ல ‘ஸ்நாக்ஸ்’, ‘பழங்கள்’ இவைகள் மட்டுமே வீட்டில் இருக்க வேண்டும். 
 
* பிள்ளைகளை நன்கு வளர்க்க வேண்டும் என்ற பெயரில் பெற்றோர்கள் தங்களை அதீதமாக வருத்திக் கொள்வதும் பின்னர் இக்கஷ்டங்களை தன் பிள்ளைகள் உணரவில்லையே என்று வருந்துவதும் இருதலை முறையினரையும் நோயாளி ஆக்கி விடுகின்றதாம். எனவே பொருளாதார நிலைமையினை குடும்பத்தினர் அனைவரும் கூடி பேசுவது ஆரோக்கிய சூழ்நிலையினை உருவாக்கும். 
 
எனவே ஆரோக்கியம் என்பது மருந்து, சிகிச்சை இவற்றைத் தாண்டி வளரும் சூழ்நிலை வாழும் நிலை.

No comments:

Post a Comment