Sunday, 15 November 2015

உறுப்புகளை காக்கும் உணவுகள்! கண்டிப்பாக சாப்பிடுங்கள்

நம் உடலில் செயல்பட்டு வரும் ஒவ்வொரு உறுப்புகளையும் சரியான முறையில் பராமரித்து வந்தால் தான் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும்.

இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், உடலில் உள்ள உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் எந்தெந்த காய்கறிகளில் இருந்து கிடைக்கிறது என்று தெரிவு செய்து சாப்பிட வேண்டும்.

மூளை

வால்நட் என்றாலே அது மூளைக்கான உணவாகும், தினமும் இரண்டு மூன்று அக்ரூட் சாப்பிட்டுவந்தால், மூளை செல்கள் புத்துயிர் பெறும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால் மூளையின் செயல்பாட்டுக்கும், சீரான இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. குழந்தைகள், பள்ளி செல்லும் பிள்ளைகள், கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று வால்நட்.


கண்

கேரட், பாதாம், கீரைகள், பச்சை மற்றும் மஞ்சள் நிற குடைமிளகாய், பப்பாளி, முட்டை, முழு தானியங்கள், ஆரஞ்சு நிற காய்கறி மற்றும் பழங்கள் போன்றவை கண்களுக்கு உகந்தவையாகும்.

தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால், கண்களில் புரை உருவாவது தடுக்கப்படும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன், வயதாகும்போது வரும் பார்வைக்குறைபாடுகளை (Macular degeneration) தடுக்கும்.

கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பிரச்னைகள் வராது. கண்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். அதுபோல், பாதாமின் தோற்றம், கண்களின் வெளிப்புற அமைப்பைப் போலவே இருக்கும். கண்களுக்கு நன்மையைச் செய்யக்கூடிய சத்துக்கள் பாதாமில் நிறைந்துள்ளன.


காது

காளான், அன்னாசி, கேழ்வரகு, கீரைகள், வாழை, முழு தானியங்கள் போன்றவை காதுகளுக்கு உகந்தவையாகும்.

காதுகளில் காக்லியா (Cochlea) எனும் கேட்கும் திறனுக்கான உறுப்பு வளர வைட்டமின் டி தேவை. அவற்றை காளானும் சூரிய ஒளியும் தரும். காளானில் வைட்டமின் டி, டி3, டி2 சத்துக்கள் நிறைந்துள்ளன.


வயிறு

வாழைப்பழம், பப்பாளி, மோர், ஆப்பிள், பட்டை வெங்காயத்தாள், இஞ்சி போன்றவை வயிற்றுக்கான உணவுகள் ஆகும்.

சீரகம், சோம்பு, ஏலக்காய், புதினா போன்றவற்றில் குர்குமின் (Curcumin) நிறைந்துள்ளது. இவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றுக்கு நல்லது. கஷாயம், மூலிகை டீ போன்ற ஏதேனும் ஒரு திரவ உணவைச் சேர்த்துக்கொள்வது நன்மையைத் தரும்.

நிறையப் பேருக்கு அல்சர் பிரச்சனை பாடாய்ப்படுத்தும். இவர்கள், 50 மி.லி அளவு இஞ்சி, சீரகம் போன்ற குர்குமின் சத்துக்கள் உள்ள உணவுகளைக்கொண்டு டீ தயாரித்து சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்சனைகள் தீரும்.


இதயம்

தக்காளி, மாதுளை, பப்பாளி, கொய்யா, தர்பூசணி மற்றும் நல்லெண்ணெய் போன்றவை இதயத்திற்கு உகந்த உணவுகளாகும்.

லைக்கோபீன் (Lycopene) என்ற நிறமிதான், தக்காளியின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயத்துக்கு நன்மை விளைவிக்கிறது.

கெட்ட கொழுப்பு குறைவதால், தமனிகளில் (Arteries) அடைப்புகள் ஏற்படாது. லைக்கோபீன், சில வகை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.

உணவில் தக்காளியை அதிக அளவில் சேர்த்துக்கொண்டவர்களின் இதயம் பலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை சில ஆய்வுகள் ஊறுதி செய்திருக்கின்றன.

தூங்குவது எதற்காக என்று தெரியுமா?

ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் மன அழுத்தம், சிந்திக்கும் திறன் குறைதல், எதிலும் கவனம் செலுத்த முடியாதது, ஞாபக சக்தியை இழத்தல், உடல் எடை அதிகரித்தல் போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

எதற்காக தூங்குகிறோம்?

நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அலுவலக பயணம், மன அழுத்தம், வேலைப்பளு, கோபம், சோர்வு போன்ற கழிவுகள், மூளையில் தேங்குகின்றன. அவற்றை சுத்தம் செய்யும் வேலையைத் தான், தூக்கம் செய்கிறது.

தினசரி செய்ய வேண்டிய செயல்களில் தூக்கமும் ஒன்று.

மூளையிலிருந்து மற்ற உறுப்புகளுக்கு, தொடர்ந்து சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன. இச்செயலுக்கு, ஓய்வு தேவை. ஒய்வு இருந்தால் தான் மறுநாள் வேலைகளை செய்ய முடியும். இல்லாவிடில், செயல்திறன் குறைந்துவிடும். எனவே கட்டாயம், எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.

ஒருவருக்கு போதுமான அளவு தூக்கம் இருந்தால், அவரது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்பு குறைகிறது. தூக்கம் நன்றாக இருந்தால், பல வேலைகளை சிறப்பாக செய்வதற்கான சூழலை உடலும், மனமும் உருவாக்கிக் கொள்கிறது.

ஆனால், தூக்கத்தை தவிர்ப்பவர்கள் நெஞ்சுவலி, தலைவலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகி மருத்துவர்களை சந்திக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகிறார்கள்.
அளவுக்கு அதிகமாக தூங்கினாலும் ஆபத்து, தூக்கமில்லாமல் இருந்தாலும் ஆபத்து, ஆகவே அளவோடு தூங்கி நிறைவோடு வாழுங்கள்.

Sunday, 1 November 2015

இடுப்பு வலுவிழந்துவிட்டதா? உளுந்து சாப்பிடுங்கள்

உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.மருத்துவ பயன்கள்:

இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும்.

உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும்.

தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.

இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

தேனை எந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்?

தனியாக மட்டுமின்றி தேனை வேறு பொருட்களுடன் கலந்து உண்ணும் போது கூட அதன் பயன்கள் பலவகைப்படும்.தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?

* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட இதயம் பலம் பெரும்.
* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.
* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
* நெல்லிக்காய் சாருடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
* தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாபிட்டால் குடல் புண், வாய்ப்புண் ஆறும்.
* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும்.
* தேனுடன் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும், வீக்கம் குறையும்.

கற்றாழையின் மருத்துவ பலன்கள்

இயற்கையின் அதிசயமான கற்றாழை ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான தாவரங்களில் ஒன்றாகும்.உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது.

கற்றாழையில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய எட்டு அமினோ அமிலங்கள், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்து உள்ளன.

வெயில் காலங்களில் அடிக்கடி கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தி முகம், கை, கால்களைக் கழுவினால், சூரிய ஒளியில் இருந்து தோலைப் பாதுகாக்க உதவும்.

கற்றாழை ஜெல்லோடு தேன் சேர்த்து வாரத்துக்கு ஒரு முறை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், முகம் பொலிவடையும்.

கரும்புள்ளிகள், சுருக்கங்கள், முகப்பருவினால் ஏற்படும் அழற்சிகள் நீங்கும். கற்றாழையின் சதைப்பகுதியை தண்ணீரில் நன்றாகக் கழுவி, உதட்டில் தடவ உதடு வறண்டு போகாமல் இருக்கும்.

சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, அதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும்.

இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.

கண்களில் அடிபட்டதாலோ, இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும், மூன்று தினங்களில் நோய் குணமாகும்.

கற்றாழை ஜெல், கல் உப்பு, மோர் அல்லது தயிர் சேர்த்து, ஜூஸாகக் குடிப்பது, பெண்களுக்கு நல்லது. இனப்பெருக்க மண்டலங்கள் ஒழுங்காக வளர, கற்றாழை உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தினமும் கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

Sunday, 18 October 2015

நோய் தீர்க்கும் மாதுளம் பழம்

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமை உண்டாகும்.

 
 
ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.
 
அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும்.
 
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும்.
 
மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
 
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்தமான அனைத்து உடல்நல குறைபாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.

 

 
மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.
 
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.
 
மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

Saturday, 17 October 2015

வாய் துர்நாற்றமா? துர்நாற்றத்தை போக்க 10 வழிமுறைகள்

வாய் துர்நாற்றமா? வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? பிறர் நீங்கள் பேசும்போது முகம் சுளிக்கறார்களா? இனி கவலையே வேண்டாம். வாய் துர்நாற்றத்தைப் போக்க வைத்தியங்கள் உண்டு. இயற்கை முறையில் வாய்துர்நாற்றத்தை விரட்டி அடித்துவிடலாம்.
 
 
 
ஒரு சிலர் இருக்கிறார்கள் வாய் திறந்தால் பக்கத்தில் இருக்கவே முடியாதபடி வாய் நாறும். ஆனால் சாதாரணமாக உரையாடுவார்கள். காரணம் அந்த துர்நாற்றமானது அவர்களுக்குத் தெரிவதில்லை. எதிரில் இருப்பவர்களுக்குத்தான் அந்த துர்நாற்றம் வீசும்.
 
வாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது?
 
வயிற்றுக் கோளாறு உள்ளவர்கள் நிச்சயம் இந்த வாய் துர்நாற்றம் ஏற்படும். அதாவது அல்சர் நோய் உள்ளவர்கள் வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுவார்கள்.
 
மற்ற காரணங்கள்: புகையிலை, வெற்றிலை, பாக்கு போடுதல், உடலில் நீர்ச்சத்து குறைபாடு.
 
மருத்துவ ரீதியான காரணங்கள்:
 
தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பியில் பிரச்சனை (Infection) ஏற்பட்டால் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் ஏற்படும் வியாதிகள் ஒரு வழிப்பாதையான உணவுக் குழாயில் ஒரு சிலருக்கு உணவுப் பையிலிருந்து அமிலமானது மேல்நோக்கி வந்து போகும். இதனாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Re-flux என்பார்கள்.
 
அஜீரணக் கோளாறுகளால் வாய் துர்நாற்றம் ஏற்படும். உணவுக்குழாயில் சென்ற உணவானது நான்கு மணி நேரத்திற்குள் ஜீரணமாகிவிடும். நான்கு மணி நேரத்திற்கு மேலும் ஜீரணமாகாமல் உணவு மண்டலத்திலேயே உணவு தங்கும்போது வயிற்றில் ஏற்படும் புளித்த நாற்றம் வாய் வழியாக வந்து சேரும்.
 
வாய் துர்நாற்றத்தை போக்க பத்து வழிகள்:
 
1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக்க நறுமணப் பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது சூயிங்கம், mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
 
2. Mouth Washer நீர்மங்களைப் பயன்படுத்தி வாயைச் சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.
 
3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவது போல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.
 
4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு (Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
 
5. வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.
 
6. குடல்புண் பிரச்னையால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் போக்க காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதனால் வயிறு சுத்தப்படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும்.
 
7. காலை மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க்கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.
 
8. வேறு சில காரணங்களாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படும். நன்றாக துலக்கப்படாத பற்களின் இடுக்குளில் கிருமிகள் சேர்வதால் இந்த துர்நாற்றம் ஏற்படும். எனவே மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று பற்களை சுத்தம் செய்துகொள்ளவதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். அத்தோடு பற்களின் பாதுகாப்பும் பலப்படும்.
 
9. அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.
 
10. சாதாரணமாக சந்தையில் கிடைக்கும் கொத்தமல்லிக் கீரையை(Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.
 
வாய் துர்நாற்றத்தைப் போக்கும் மூலிகை:
 
வாய் துர்நாற்றம் நீங்க மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று விழுங்கலாம். சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய்க் கொப்பளித்துவிடுங்கள். சாப்பிட்டப் பின் வாய்க் கொப்பளிக்காமல் இருந்தால் உணவுத் துணுக்குள் பல் இடுக்குகளில் சிக்கி கிருமிகள் வளர ஏதுவாகிவிடும்.
 
 
மேலும் இரவு படுக்க போகும் முன் பல்துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வாயிலுள்ள 90 சதவிகித கிருமிகளை நீக்க முடியும்.
 
கிருமிகளால்தான் வாயில் துர்நாற்றம் ஏற்படுகிறது. அதேபோல ஒவ்வொரு முறை பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் பிரஸ்சில்கள் படும் படி தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலேசாக அழுத்தி துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஏற்படும்.
 
ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறும். நாக்கு சுத்தம் செய்யும் Tongue cleaner பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். பற்களோடு நாக்கையும் சுத்தப்படுத்துவதால் வாயிலுள்ள பெரும்பாலான கிருமிகள் நீக்கப்படுகின்றன.
 
இவற்றையெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் வாய் துர்நாற்றத்தை விரட்டிவிடலாம். குளோசப் டூத்பேஸ்ட் விளம்பரங்களில் வருவதைப் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதோடு முக்கிய எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவிடலாம்.
 
குறிப்பு: இரவு நேர பணிபுரிபவர்களுக்கு வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிக நேரம் பசியுடன் இருந்து வேலை நேரம் முடிந்த பிறகே உணவு எடுத்துக்கொள்வதால் வாய்துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
 
மேலும் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படிப்பவர்கள், கணனியில் வேலை செய்பவர்கள் என இரவு நேர தூக்கத்தை கெடுத்துக் கொள்பவர்களுக்கும் வாய் துர்நாற்றப் பிரச்னை இருந்து வரும்.
 
இவர்களும் மேற்சொன்ன முறையைப் பின்பற்றினால் வாய் துர்நாற்றம் நீங்கி வாசனையுடன் கூடிய பேச்சை மற்றவர்களுக்கு கொடுக்கலாம். இதனால் நண்பர்களோ, உடன் பணிபுரிபவர்களோ, அயலார்களோ முகம் சுளிக்காமல் உங்களிடம் பேசுவதோடு, நட்பு பாராட்டுவார்கள் என்பது உறுதி..!


புற்றுநோயை விரட்டும் மாம்பழம்

பழங்களின் அரசனான மாம்பழத்திற்கு புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை இருப்பதாக லக்னோவில் இருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்துள்ளனர்.

 

மனிதனை மிரட்டும் முக்கியமான வியாதிகளில் புற்று நோய் முதன்மையானது. இதற்கு சிறியவர், பெரியவர், ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு தெரியாது எல்லா தரப்பு மக்களையும் அச்சுறுத்தம் ஒரு கொடிய நோயாக உள்ளது. இந்த நோயால் பாதித்தால் குணப்படுத்த பல்வேறு சிகிச்சைகள் வந்தாலும் அவை முழுமையாக குணப்படுத்தும் என்பதை உறுதியாக கூற முடியாது.

இந்நிலையில் லக்னோவில் இருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மைய நிபுணர்கள் மாம்பழத்திற்கு புற்று நோய் கட்டிகளை குறைக்கும் சக்தி இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு புற்று நோய் மற்றும் மாம்பழம் ஆராய்ச்சியாளர்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது.

அவர்களின் ஆராய்ச்சியில் புற்று நோய் பாத்தித்த சுண்டெலிக்கு மாங்காய் கொடுத்து ஆராய்ந்த பொழுது அதன் புற்று நோய் கட்டிகளில் மிகுந்த மற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோய் கட்டிகள் பெருமளவு குறைந்துள்ளது. இதற்கு காரணம் மாங்காய் மற்றும் மாம்பழத்தில் உள்ள லூபியோல் என்ற வேதிப்பொருள் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த லூபியோல் புற்றுநோய்க்கு எதிராக மட்டுமில்லாமல் பல்வேறு சுகாதார குறைபாடுகளுக்கும் தீர்வாக உள்ளது.

மாங்காய் மற்றும் மாம்பழத்தின் புற்று நோய்க்கு எதிரான இந்த குணம் புற்றுநோய் ஆராய்ச்சியாளர்களுக்கு தங்கள் ஆராய்ச்சியில் ஒரு புத்துணர்ச்சியாக அமையும்.

கீரையின் உணவின் மருத்துவ குணம்

மருத்துவ குணம் வாய்ந்த சில கீரைகளின் மகத்தான பயன்கள் பற்றிய குறிப்பு தான் இந்த பதிவு.
 

 

* வாய்ப்புண்ணையும், குடல் புண்ணையும் ஆற்றும் சக்தி மணத்தக்காளிக் கீரைக்கு உள்ளது.

* காசினிக் கீரையை சாப்பிட்டு வந்தால் ஈரல் வலுப்படும், ரத்தம் சுத்தப்படுத்தப்படும். அரைக்கீரை அனைத்து வகை நோயாளிகளுக்கும் ஏற்றது. மேலும் கண் பார்வை, ஜீரண உறுப்புகள் போன்றவற்றை நன்னிலையில் பாதுகாக்கும்.

* முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து, அதனுடன் ஒரு கோழி முட்டை சேர்த்து, நெய்விட்டு கிளறி உட்கொண்டு வரவும். இதை 1 மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.

* பசளைக்கீரை ஆனது மலச்சிக்கலை விரட்டும். ஆண்மையைப் பலப்படுத்தும். குளிர்ச்சி தரும்.

* வெந்தியக்கீரை வாயுவைக் கண்டிக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பக்கும்.

* அகத்திக்கீரை வைட்டமின், இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து நிறைந்தது. கண்பார்வை நரம்புகளுக்கு வலுவூட்டும். கிருமிகளைக் கொல்லும்.

எல்லா கீரைகளிலும் உடலுக்கு ஏற்ற ஒரு குணம் உள்ளது. எனவே வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களுக்காவது கீரை சாப்பிடவும்.

ஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் ஏன் சாப்பிடவேண்டும்?

நாளொன்றுக்கு 3 வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் "ஸ்ட்ரோக்' ரிஸ்க் குறைகிறது என்று பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 
காலை உணவு, மதிய உணவு பிறகு மாலையில் ஒரு வாழைப்பழம் என்று நாளொன்றுக்கு 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை வழங்கி அதன் மூலம் மூளையில் ரத்தக் கட்டு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
 
எனவே வாழைப்பழம் உள்ளிட்ட பொட்டாசியம் அதிகம் உள்ள உனவுப்பொருட்களான பசலைக்கீரை, பால், மீன், உள்ளிட்ட உணவுப்பொருட்களை எடுத்துக் கொண்டால் ஸ்ட்ரோக்கிலிருந்து தப்பிக்கலாம் என்றே கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள்.
 
வாழைப்பழங்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் தெரிவித்துள்ள நிலையில், தற்போது இந்த ஆய்வு முடிவுகள் மேலும் வாழைப்பழ உபயோகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
 
தினசரி பொட்டாசியம் அளவு 1,600மிலி கிராம் இருந்தாலே போதுமானது ஸ்ட்ரோக் ரிஸ்க் குறைகிறது!
 
ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500மிலி கிராம் பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை சரியாக வைத்திருப்பதோடு உடலில் திரவங்களின் சமச்சீர் தன்மையையும் பாதுகாக்கிறது.
 
பொட்டாசியம் சத்து குறைவாக இருந்தால் சீரற்ற இருதயத் துடிப்பு, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படும்.
 
பொட்டாசியம் அளவுடனான உணவுவகைகளை எடுத்துக் கொள்வதில் அனைத்து நாட்டு மக்களுமே பின் தங்கியுள்ளனர்.
 
பொட்டாசியம் அளவை பரிந்துரைக்கப்பட்ட அளவில் ஏற்றி, உப்பைத் தவிர்த்து வந்தால் ஸ்ட்ரோக்கினால் ஏற்படும் சாவுகளை பாதியாகக் குறைக்கலாம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

Friday, 14 August 2015

உங்கள் உடலில் உள்ள சூடு குறைக்க இதை தினமும் செய்யுங்கள் முழு நெல்லி – 10
கடைந்த தயிர் – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க : எண்ணெய் – 1 டீஸ்பூன் ,கடுகு – அரை டீஸ்பூன் ,காய்ந்த மிளகாய் – 2 ,பச்சை மிளகாய் – 1

செய்முறை :

• தயிரை நன்றாக கடைந்து வைக்கவும். • ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• நெல்லிக்காயை வேக வைத்து கொட்டையை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
• ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, வேகவிட்ட நெல்லிக்காய், உப்பு சேர்த்து லேசாக வதக்கி ஆற விடவும்.
• ஆறியதும் கடைந்த தயிரில் சேர்த்து பரிமாறவும்.
• இதை பிரிட்ஜில் வைத்து 2, 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். • உடலுக்கு குளிர்ச்சி தரும் இந்த தயிர் நெல்லிக்காய்.

Sunday, 9 August 2015

வாரம் 3 மணிநேர உடற்பயிற்சி - 5 ஆண்டு ஆயுளைக் கூட்டும்

புகைப் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால், ஆயுள் நீடிக்கும் என்பதைப் போல, வயோதிகக் காலங்களில் தொடர்சியாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒருவர் தமது ஆயுளை அதிகரித்துக்கொள்ள முடியும் என்று, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 


நார்வேயில், 5,700 வயோதிக ஆண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு மூன்று மணிநேர உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், உடற்பயிற்சி செய்யாத வயோதிகர்களைவிட, ஐந்து ஆண்டுகள் அதிகம் வாழ்வதாக தெரியவந்துள்ளது.
 
வயதோரிகர்களது ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்துமாறு, பிரிட்டிஷ் ஜேர்ணல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற பத்திரிகையில், ஆசிரியர்கள் விழிப்புணர்வுடன் கூடியதொரு அழைப்பு விடுத்துள்ளனர்.
 
வயோதிகர்கள் மத்தியில் குறைந்துவரும் உடற்பயிற்சி குறித்து, தொண்டு நிறுவனம் ஒன்று எச்சரித்ததை அடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.நார்வேயின், ஒஸ்லோ பல்கலைக்கழக வைத்தியசாலை மேற்கொண்ட ஆய்வில், மிதமான உடற்பயிற்சி, மற்றும் தீவிர உடற்பயிற்சி, ஆகிய இரண்டுமே ஒருவரின் ஆயட்காலத்தை நீடிப்பதாக தெரிவித்துள்ளது.
65 வயதிற்கு மேற்பட்ட வயோதிகர்கள், வாரத்திக் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என, பிரித்தானியாவில் உள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
 
68 தொடக்கம் 77 வயதிற்குட்பட்டவர்கள், வாரம் ஒன்றிற்கு 60 நிமிடங்களுக்கும் குறைவான மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், எந்த பலனும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
 
பதினொரு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ஏதாவது ஒருவகை உடற்பயிற்சியை தொடர்ச்சியாக 30 நிமிடம் வாரத்துக்கு ஆறுமுறை செய்யும்போது, அப்படி செய்பவர் மரணமடையும் வீதம் 40 விழுக்காடு குறைவதாக தெரிவிக்கப்படுகிறது.
 
புகைப்பிடித்தலை நிறுத்துவதால் உயிரிழப்புக்கள் குறைவடைவதைப் போல, உடற்பயிற்சி மேற்கொள்வதாலும் நன்மை ஏற்படுகிறது என்பதுடன், உடற்பயிற்சியை அதிகரிப்பதுடன், புகை பிடிக்கும் பழக்கவழக்கத்தை குறைக்க முயற்சிக்க வேண்டும் என, ஆண் வயோதிகர்களுக்கான பொது சுகாதார உக்திகள் தெரிவிக்கின.
 
வயோதிகர்களை ஆராய்ச்சிக்குட்படுத்திய இந்த ஆய்வு, அவர்கள் முன்னர் தமது வாழ்க்கையில் எவ்வளவு ஆரோக்கியமாயிருந்தார்கள் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.


 
மக்கள் மிகவும் குறைவான அளவு உடற்பயிற்சியை மேற்கொள்வதாக, பிரித்தானியாவை தளமாக கொண்டு செயற்படும் பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் பின்புலத்தில் இந்த ஆய்வும் வெளிவந்துள்ளது.
 
எந்தெந்த நாடுகளில் மிதமான அளவில் உடற்பயிற்சி செய்வதில்லை என பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், போர்ச்சுக்கலில் 69 வீதமானோரும், போலாந்தில் 55 வீதமானோரும், பிரான்ஸில் 46 வீதமானோரும், பிரித்தானியாவில் 44 வீதமானோரும், குரோஷியாவில் 34 வீதமானோரும், ஜேர்மனியில் 26, வீதமானோரும் நெதர்லாந்தில் 14 வீதமானோரும் மிதமான உடற்பயிற்சியைக் கூட செய்யாமல் இருக்கிறார்கள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
 
வயது பேதமின்றி, தொடர்ச்சியாக மேற்கொள்ளும் உடற்பயிற்சியானது, இதய சுகாதாரத்திற்கு நல்லது என்பதுடன், ஆயுளையும் நீடிக்கச் செய்யும் என தொண்டு நிறுவனத்தின் சார்பாக பேசிய ஜூலி வாட் தெரிவித்தார்.
 
தமது புதிய புள்ளிவிவரத் தரவுகளின் படி, பிரித்தானியாவின் மக்கள் தொகையில் அரைவாசிப் பேர் வரை, மிதமான உடற்பயிற்சியைக்கூட செய்வதில்லை என்றும், மற்ற பல ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இது மிகவும் அதிகமான அளவு என்றும் அவர் கூறினார்.
 
உடற்பயிற்சியும் அதனூடாக பேணப்படும் ஆரோக்கியமான வாழ்வும் ஆயுளைக் கூட்டும் என்பதே இந்த இரண்டு ஆய்வுகளின் ஒருமித்த முடிவாக வெளியிடப்பட்டுள்ளது.

Sunday, 12 July 2015

வியர்வை நாற்றத்தை போக்க வழிகள்

வெயிலில் அலைந்துவிட்டு வீடு திரும்பியதும் முகத்தைச் சுத்தமான துணியால் துடைத்துவிட்டுக் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.


 
* வெயிலால் முகத்தில் படரும் கருமையைப் போக்க, 2 டீஸ்பூன் தயிரில் சிறிதளவு எலுமிச்சைப் பழச்சாற்றைச் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்துக் கழுவ வேண்டும்.
 
* நிழலில் காயவைத்த ஆவாரம் பூவுடன் சம அளவு பயத்தமாவைச் சேர்த்துத் தினமும் உடலில் தேய்த்துக் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் நீங்கும்.
 
* பச்சைப் பயறுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து, அதைத் தண்ணீரில் குழைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் வியர்வை நாற்றம், வியர்க்குரு, உடலில் உப்பு பூத்தல் போன்றவை நீங்கும்.
 
* இளநீர் அல்லது தண்ணீருடன் வெந்தயப் பொடியைச் சேர்த்துக் குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.
 
* 1 டீஸ்பூன் வெந்தயப் பொடியுடன் அரைக் கப் தயிர் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் சூடு தணியும். 

Thursday, 2 July 2015

நீர் மருத்துவம்!

"பொதுவாக ஒருவருக்கு எந்த ஒரு நோயும் திடீரென்று வருவதில்லை. அந்நோய் வருவதற்கு முன்பே அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். பசியின்மை, தூக்கமின்மை, தலைவலி, அஜீரணக் கோளாறு, வாயுத் தொல்லை போன்ற சிறுசிறு பிரச்னைகளைக் கண்டு கொள்ளாமல் விடும்பொழுதுதான் அது நாளடைவில் பெரிய நோயாக மாறுகிறது. இவை போன்ற அறிகுறிகள் யாருக்காவது இருந்தால் அதிலிருந்து விடுபடுவது எப்படி? வராமல் தடுத்து தற்காத்து கொள்வது எப்படி? என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி, "ஹைட்ரோ தெரபி' என்னும் நீர் மருத்துவப் பயிற்சி முறைகள் மூலம் நாங்கள் தீர்வு தருகிறோம்'' என்கிறார் அனுப்ரியா. இவர் இந்தியாவின் முதல் ஹைட்ரோ தெரபிஸ்ட்டும் கூட. சென்னை திருவான்மியூரில் உள்ள இவரது அட்டோஸ் லியோ வெல்நஸ் சென்டரில் இவரைச் சந்தித்தோம்:


""பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை என்கிற கருப்பை நீர்க்கட்டிகள், தலைவலி, பசியின்மை, தூக்கமின்மை, மூட்டுவலி, நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது, பாத வலி, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு ஹைட்ரோ தெரபி மூலம் நிவாரணம் தருகிறோம். ஹைட்ரோ தெரபி என்பது தண்ணீரை உட்புறமாகவோ, வெளிப்புறமாகவோ பயன்படுத்தி ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் மருத்துவ முறை. ஹைட்ரோ தெரபியில் 5 நிலைகள் உண்டு. அது தண்ணீர், காற்று, ஆரோக்ய உணவு முறை, உடற் பயிற்சிகள், மூலிகைகள். இவற்றில் முறையாக பயிற்சி அளிக்கிறோம்.
நாம் அன்றாடம் தண்ணீர் அருந்துவதும், குளிப்பதும் கூட ஹைட்ரோ தெரபியில் ஒரு பயிற்சிமுறைதான். உதாரணத்திற்கு குறைந்தது 20 நிமிடமாவது குளிர்ந்த நீரில் ஒரு வாரம் குளித்துப் பாருங்கள். உங்களுக்கு நிச்சயமாக ஒரு புத்துணர்ச்சி தெரியும். காரணம் குளிர்ந்த நீரில் 20 நிமிடம் குளிக்கும்பொழுது உடலில் இரத்த ஓட்டம் சீராகிறது. அதுபோல கண்டிப்பாக வெந்நீர்தான் குடிக்க வேண்டும். அதுபோல மூட்டுவலி அதிகமாக இருப்பவர்கள் ஒரு டப்பில் தண்ணீர் வைத்து அதில் வாட்டர் ஸ்டெப்பிங் செய்யலாம். அதாவது அந்தக் காலத்தில் பானை செய்பவர் மண்ணை மிதிப்பது போல டப்பிலேயே நடந்து கொண்டிருப்பது. இதன் நன்மையை உணர்ந்துவிட்டாலே யாரும் இதை மறுக்கமாட்டார்கள்.
ஜெர்மனியில் உள்ள செபாஸ்டின் நீப் என்பவர்தான் இந்த ஹைட்ரோ தெரபியைக் கண்டுபிடித்தவர். உலகிலேயே ஜெர்மனியில் மட்டும்தான் "செபாஸ்ட்டின் ஸ்கூல் ஆப் ஹைட்ரோ தெரபி' என்ற பயிற்சிக் கூடம் இருக்கிறது. இதைத் தவிர இந்த பயிற்சிக் கூடத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் சிலர் சிங்கப்பூர் சென்று பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார்கள்.
எனக்கு இதில் நாட்டம் வந்தது எப்படி என்றால் நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது அதுவரை நல்ல உடல் கட்டுடன், ஆரோக்யமாக இருந்த என் தந்தை திடீரென்று எதிர்பாராதவிதமாக ஒரு மலைக் கோயில் படியில் ஏறிக்கொண்டிருக்கும் பொழுது பிரஷர் அதிகமாகி இறந்து விட்டார். அந்த பாதிப்பு என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. அதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பி.இ. படித்து, விருப்பமில்லாமலே ஓர் ஐ.டி நிறுவனத்தில் வேலையில் இருந்தேன். அந்த நேரத்தில் என் அக்காவின் கணவர் சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் வேலையில் இருந்தார். அவர் வேலை நிமித்தமாக பல ஊர்களுக்குச் சென்று அலைந்து கொண்டிருந்ததில் திடீரென்று முதுகு தண்டுவடமும், இடுப்பும் இணையும் இடத்தில் ஜவ்வு குறைந்து எலும்பு விலகிவிட்டது. இதனால் கடுமையான வலியால் பாதிக்கப்பட்டார். அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். அந்த சமயத்தில் அவர் இந்த ஹைட்ரோ தெரபியைக் கேள்விப்பட்டு பயிற்சி எடுத்துக் கொண்டார். அதனால் அவருக்கு அந்த பிரச்னையில் இருந்து நல்ல தீர்வு கிடைத்தது.
அதன் பிறகு இவ்வளவு பயனுள்ள ஹைட்ரோ தெரபியை மற்றவர்களும் பயன்பெறும்படி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் என்னிடம் சொன்னார். எனக்கு அது பிடித்திருந்தது. இதற்காக சிங்கப்பூர் சென்று இந்த ஹைட்ரோ தெரபியை படித்துவிட்டு வந்தேன்.
2011 -இல் இந்த மையத்தை ஆரம்பித்தோம். பொதுவாக பெண்களுக்கு அதிகமாக மன உளைச்சல் இருக்கும். ஆனால் அதை அவர்களுக்கு வெளியே சொல்லக் கூட தெரியாது. அதற்கான ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ளுங்கள் என்றால் எனக்குப் பழக்கமில்லை என்பார்கள். அவர்கள் எந்த கூச்சமோ, பயமோ இல்லாமல் எங்களிடம் பயிற்சி எடுத்து கொள்ள வருகிறார்கள். காரணம் இது முழுக்க முழுக்க தண்ணீர் கொண்டு செய்யும் பயிற்சி முறை என்பதால் யாரும் பயப்படுவதில்லை. இதில் பக்க விளைவுகளும் இல்லை.
மே மாதத்தில் ஹைபர் டென்ஷன் தினம் மற்றும் ஆர்த்தெரடிக் கேர் மாதம் (எலும்பு மற்றும் வாதம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் பற்றி விழிப்புணர்வு மாதம்) அதற்காக நாங்கள் மே மற்றும் ஜுன் மாதம் வரை இலவச கன்சல்டிங் கொடுக்கிறோம்.
உடல்வலி, தசை வலி, தசைபிடிப்பு, மூட்டுவலி, உடல் பருமன், மூட்டு வாத பிரச்னை உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், கருப்பையில் நீர்கட்டிகள் உள்ளவர்கள், தூக்கமின்மை, மலச்சிக்கல், பசியின்மை,மன அழுத்தம் உள்ளவர்கள், உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், வெரிகோஸ் வெயின் பிரச்னை 2 ஸ்டேஜுக்குள் உள்ளவர்கள் இந்த இலவச கன்சல்டிங்கை எடுத்துக் கொள்ளலாம். ஏற்கெனவே அலோபதி மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களும் இந்த நீர் மருத்துவத்தைச் சேர்த்து எடுத்துக்கொண்டால் விரைவில் குணமாகலாம்.
எங்கள் தெரபியில் சிறுதானியங்களையும், மூலிகைகளையும் உணவில் எப்படிச் சேர்த்துக் கொள்ளலாம் என்பதையும் சொல்லித் தருகிறோம். பொதுவாக வல்லாரையோ, தூதுவளையோ சமைத்து கொடுத்தால் குழந்தைகள் தவிர்ப்பார்கள். ஆனால் சாம்பார், ரசம் போன்றவற்றில் தினம் 10 இலைகள் போட்டு சமைத்து வந்தாலே போதும் அதன் சாறு நமது உடம்பில் சேரும்.இவை அனைத்தையும் ஒரு குடும்ப தலைவிதான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தெரிந்துகொண்டால் அந்த குடும்பமே பயன் அடையும் '' என்றார்.

Monday, 25 May 2015

கூந்தல் வளர்ச்சியை தூண்டும் மசாஜ்

 தலையில் சராசரியாக 1,20,000 முடிகள் இருக்கும். தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. அதற்கு மேல் முடி உதிர்ந்தால்தான் பிரச்னை. கோடை நாட்களில் முடியின் வளர்ச்சி வேகமாகவும், குளிர் காலத்தில் மெதுவாகவும் இருக்கும். 
 
உடல் ஆரோக்கியம், மனநிலையைப் பொறுத்து கூந்தல் அடர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும். ஒரு முடி 25 தடவை உதிர்ந்து, பிறகு அதே இடத்தில் வளர்ந்தும்விடும். ஆனால், அதற்கு மேல் விழுந்தால் வளராது. மன அழுத்தம், டென்ஷன், தூசி, பரம்பரைவாகு, ரத்த சோகை, புரதச்சத்து குறைபாடு, ஹார்மோன் கோளாறுகள், தூக்கமின்மை அல்லது வேறு எதாவது நோய்க்கான அறிகுறி போன்ற பல காரணங்களால் கொத்துக் கொத்தாகத் தலை முடி உதிரும். சுத்தமின்மை, ஈரப்பதம், எண்ணெய்ப் பசை இல்லாமல் போனால், முடி வறண்டு உதிரும். 
 
* தலைக்கு ஒழுங்காக எண்ணெய் வைப்பது, தலை குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம். 
 
* ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து இளஞ்சூடாக்கி, தலையில் மயிர்க்கால்களில் தடவி விரல்களால் மசாஜ் செய்யவேண்டும். ஒரு துண்டை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து தலையில் நன்றாக இறுக்கிக் கட்டி, அரை மணி நேரத்திற்குப் பிறகு தலைக்குக் குளிக்கவும். தினமும் தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம். தலைக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் முடி வளர்ச்சியையும் தூண்டும். 
 
 
 
* மாங்கொட்டையில் உள்ள ஒட்டை எடுத்துவிட்டு, அப்படியே அரைத்துக்கொள்ளுங்கள். இதற்கு ‘மேங்கோ பட்டர்’ என்று பெயர். இந்த பட்டர் ஒரு டேபிள்ஸ்பூனுடன், வேப்பம்பூ சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து தலைக்கு நன்றாக மசாஜ் செய்யுங்கள். பிறகு, கடலைமாவு, பயத்தமாவு, சீயக்காய் மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து அலசுங்கள். இது, முடி உதிர்வதைத் தடுத்து வளர்ச்சியைக் கூட்டும். 
 
* வெட்டிவேர் – 10 கிராம், சுருள் பட்டை – 100 கிராம், வெந்தயம் – 2 டீஸ்பூன், விளாம் மர இலை – 50 கிராம் இவற்றைக் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் போட்டு, ஒரு வாரம் தொடர்ந்து வெயிலில் வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்தத் தைலத்தை சிறிது தேங்காய் எண்ணெயில் கலந்து தினமும் தலைமுடி வேர்க்கால் முதல் நுனி வரை தடவுங்கள். முடி கொட்டுவது நிற்பதுடன் கருகருவென வளரும்.

Wednesday, 13 May 2015

வயதைக் குறைக்கும் சக்தி வாய்ந்த மாதுளை!

வயதைக் குறைத்துக்காட்டுவதில் இவர்கள் படும் பாடு பலரையும் டென்சன் கரைய சிரிக்க வைக்கிறது.இது கிண்டலடிக்கும் விஷயம் மட்டும் இல்லை. யோசிக்க வைக்கும் விஷயமும் கூட. வெளிப்புற அழகுக்காக மெனக்கெடுவதுடன் கண்டிப்பாக உடல் நலத்தை, தோலின் மினுமினுப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.


 
மழலைச் செல்லம் முதல் தாத்தா பாட்டி வரை அனைவரது தோற்றத்தையும் மினு மினுக்க வைக்கும் மகத்துவம்
மாதுளையில் உள்ளது என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்: நோய்
எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சத்துக்கள் மாதுளையில் நிறைய உள்ளது.
 
அழையா விருந்தாளியாய் வந்து உடலைக் கொல்லும் புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி கூட மாதுளையில் உள்ளது.பிறந்த குழந்தைகளின் மூளையில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வேலையையும் இது செய்கிறது.
மூன்று மாதத்தில் இருந்தே குழந்தைகளுக்கு மாதுளை ஜூஸ் கொடுக்கலாம். வைட்டமின் ஏ, ஈ, சி, போலிக் ஆசிட்,
நார்ச்சத்து, பி வைட்டமின் ஆகிய சத்து கள் மாது ளையில் உள்ளன. வைட்டமின் ஏ, ஈ ஆகியவை தோலின்
மினுமினுப்பை தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது.
 
இதுவே வயதானால் தோலில் உருவாகும் சுருக்கத்தை தடுக்கும் வேலையைச் செய்கிறது.பெண்களை அதிகளவில் தாக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் தன்மையும் மாதுளைக்கு உண்டு. இதில் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறையவே உள்ளன.
 
குழந்தைகளுக்கு ஏற்படும் பல்சார்ந்த பிரச்னைக்கும் இதில் தீர்வு உள்ளது. மாதுளை ஜூஸ் குடிப்பதால் குழந்தைகளின் வயிற்றில் வளரும் பூச்சிகளை வெளியேற்றும். தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பதன் மூலம் 40 வயதுக்கு மேல் உடலில் சுருக்கம் உண்டாவதைத் தவிர்க்கலாம். கேன்சரைத் தடுப்பதுடன் ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலை யையும்
செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பினையும் கரைக்கிறது.
 
பெண்களுக்கு வயதானால் ஏற்படும் எலும்புத் தேய்மானம் உள்ளிட்ட ஆத்தரைட்டிஸ் பிரச்னைகளையும் குறைக்கிறது மாதுளை. இதில் போலிக் ஆசிட் உள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் தினமும் மாதுளை ஜூஸ் குடிக்கலாம். இதனால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதைத் தவிர்த்து கருவுக்கும் வலிமை சேர்க்கிறது. அபார்சனைத் தடுக்கிறது.
 
மாதுளை சாப்பிடுவதால் இதில் உள்ள போலிக் ஆசிட் உணவில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தினை உட்கிரகித்துக் கொள்ளவும் உதவுகிறது

பசித்த பின் சாப்பிடுவதே ஆரோக்கியம்

 உடலின் தேவையைப் பொறுத்து அனைவருக்கும் பசி உண்டாகும். சிறிதளவு மட்டுமே பசி இருக்கும் போது திரவ உணவு, கஞ்சி, கூழ், ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். நல்ல பசி எடுக்கும் போது அனைத்து விதமான உணவுகளையும் சாப்பிடலாம். 

 
ஒரு பகுதியில் எந்தவிதமான சிறுதானியம் விளைகிறதோ, அதுதான் பொதுவான உணவு. அதில் நமக்கு எது பிடிக்கிறதோ, அது தனி உணவு. அந்த உணவிலும் பசியின் தன்மைதான் உணவின் வடிவத்தை முடிவு செய்யும். உடலின் தன்மையும், வெளிச்சூழலின் தன்மையும் இணைந்து தான் பசியின் தன்மையை உருவாக்கும். 
 
சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என்று தோன்றுவதும், ஜில்லுன்னு எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதும், மழை நேரத்தில் ஏதாவது மொறு, மொறுவென சாப்பிடத் தோன்றுவதும் தான் பசியின் தன்மை. இது உடலின் தேவையைப் பொறுத்து ஏற்படும். அதில் முதலில் ஏற்படுவது உடலின் தேவை. அடுத்து வருவது நாக்கின் தேவை. 
 
பசியையும், ருசியையும் பார்த்துப் பழகினாலே எந்த உணவை, எப்போது சாப்பிடலாம் என்ற புரிதல் ஏற்பட்டுவிடும். இதன்படி சாப்பிட்டு வந்தால் டாக்டரிடம் செல்ல வேண்டாம். ஆரோக்கியம் மேம்படும். விலங்குகள் எதுவுமே தங்களுக்கு பசிக்காமலோ, பிடிக்காமலோ சாப்பிடுவதில்லை. மனிதன் மட்டும் தான் பசிக்காமலும், பிடிக்காமலும் கடமைக்கு மட்டுமே சாப்பிடுகிறான். மனிதனின் பெரும்பான்மையான நோய்களுக்கு இதுவே காரணம்.

Saturday, 4 April 2015

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.


அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

அப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டும். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவா இருக்கும்னு. நினைக்கிறீங்க…? வேற ஒண்ணுமில்ல, குழப்பம்தான். அட ஆமாங்க சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக் கூட தூக்கமே வராது.

ஆனா இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக தெரிஞ்சிக்கலாம்

செர்ரி பழங்கள்:
நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது. 
 


இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரிபழங்கள்.

அதனால இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம்:
இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நிறைய இருக்கு.


அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குது. இந்த எல் ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP அப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

டோஸ்ட்:
நாம பொதுவா காலை உணவா அதிகம் சாப்பிடுற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள். 
 


மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோபான் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யும் சமிக்ஞைகளை உருவாக்கிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.

ஓட் மீல்:
ஓட்ஸ் கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்காவில் ஓட் மீல் சொல்லுவாங்க.


அதாவது மேலே சொன்ன டோஸ்‌ட் மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும் ரத்தத்துல இருக்குற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டும். மூளை ரசாயனங்கள் சுரந்து கடைசியா… “உறக்கம் உன் கண்களை தழுவட்டுமே… நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே… அப்படீன்னு நாம தூங்கிடலாம்”

கதகதப்பான பால்:
உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம இன்னைக்கு பார்த்த மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான்.  
 

ஆனா பால் மட்டும் பழசுதான். ஆமாம் சின்ன வயசுலேர்ந்து ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும் அப்படீன்னு அம்மா காய்ச்சின பாலை கொடுப்பாங்க இல்லையா?

ஆனா நம்ம அம்மாவுக்கு இந்த பால்ல இருக்குற எந்த வேதி‌யியல் மூலப்பொருள் காரணமாக நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை

வாழைப்பழத்துல இருக்குற எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறது, அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமா உறக்கம் வரவைக்கும். அதுமட்டுமல்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தை தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

உறக்கம் நல்லா வரனும்னா இனிமே யாரும் தூக்க மாத்திரைகளை சாப்பிடாதீங்க. அதுக்கு பதிலா மேலே சொல்லியிருக்குற ஐந்து வகையான இயற்கை உணவுகளை சாப்பிட முயற்சி பண்ணுங்க, ஏன்னா, அவசியமில்லாம மாத்திரைகளை சாப்பிடுறது உடலுக்கு கேடுதான்.
 

Thursday, 12 February 2015

தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை ?

சரியாகத் தூங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு “ சரி நாம் போதிய அளவு தூங்கவில்லை” என்று தெரியும்.

தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை?ஆனால் எது போதிய அளவு தூக்கம்?
 
இதற்கு விடை, "உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது", என்கிறது வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு.
 
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பானங்களை அருந்துவது போன்றவையும், அலாரம் கடிகாரங்கள் மற்றும், சூரிய வெளிச்சம் போன்றவை உடலில் தூக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரவழைக்கும் இயல்பான உணர்வுக்கு இடைஞ்சல் தரும் என்கிறது இந்த ஆய்வு.
 
தனிப்பட்ட மனிதர்களின் சொந்த வாழ்க்கை முறைதான் இந்த தூக்கத்துக்கான தேவைகளை புரிந்துகொள்ள உதவ முக்கியமான அம்சம் என்று கூறும் அமெரிக்க தேசிய தூக்க நிறுவனம் (The US National Foundation) ஆனால் ஒருவரது வயது என்ன என்பதைப் பொறுத்து பொதுவான பரிந்துரைகளைத் தரலாம் என்கிறது.
 
 
வயதுக்கேற்ற தூக்கம்

தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை ?
 


 
 
பிறந்த குழந்தைகள் (0 முதல் மூன்று மாதங்கள் வரை) : புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது .
 
குழந்தைகள் (4-முதல் 11 மாதம் வரை): தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்த்து 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.
 
தளிர்நடை பயிலும் குழந்தைகள் (1 லிருந்து 2 வயது வரை): தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும் . ஆனால் 9லிருந்து 16 மணிநேரங்கள் வரை தூங்கலாம்.
 
பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் (3 லிருந்து 5 வயது வரை) : தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது வல்லுநர்கள் பரிந்துரை, ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.
 
பள்ளி செல்லும் வயது சிறார்கள் (6 லிருந்து 13 வயது வரை): ஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும் என்கிறது இந்த நிறுவனம். தினமும் 7 மணிநேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணிநேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல என்றும் அது கூறுகிறது.
 
பதின்பருவச் சிறார்கள் (14 முதல் 17 வயது வரை): பரிந்துரைக்கப்பட்ட தூக்க நேரம் என்பது 8லிருந்து 10 மணிநேரம் வரைதான். இந்த வயது சிறார்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணிநேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு என்று எச்சரிக்கிறது இந்த நிறுவனம்.
 
வயது வந்த இளைஞர்கள் (18 லிருந்து 25 வயது வரை): தினமும் 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தூக்கம் 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.
 
வயது வந்தவர்கள் (26லிருந்து 64 வயது வரை): மேலே குறிப்பிடப்பட்ட வயது வந்த இளைஞர்களுக்கான அதே பரிந்துரைதான் இவர்களுக்கும்.
 
மற்ற வயது வந்தவர்கள் (65 வயது, அதற்கு மேல்): ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை, ஆனால் ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்துக்கு மேலோ போகக்கூடாது.

தூக்கம் - எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை ?தரமான தூக்கம், பரிந்துரைகள்
 
தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த பல்வேறு பரிந்துரைகளையும் இந்த தேசிய தூக்க நிறுவன வல்லுநர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.
 
முதலில் , முக்கியமாக, தூக்கத்துக்கு முன்னுரிமை தரப்படவேண்டும் என்று கூறும் அவர்கள், ஆனால் இந்த ஆலோசனைகளையும் முக்கியமாகக் கருதுகிறார்கள்.
 
அவை:
 
1)தூங்கும் நேரம் ஒரு குறிப்பிட்ட, அட்டவணைப்படுத்தப்பட்ட நேரத்தில் அமையவேண்டும், வார இறுதி நாட்களில் கூட.
 
2)படுக்கும் நேரத்தில் மனத்தை அமைதிப்படுத்தும் சில நடைமுறைகள்.
 
3)தினசரி உடற்பயிற்சி
 
4)படுக்கையறையில், சரியான வெப்பநிலை, ஒலி மற்றும் ஒளி அளவு
 
5)சௌகரியமான படுக்கை மற்றும் தலையணைகள்.
 
6)மது மற்றும் காபி போன்ற தூக்கத்தை “ஒளிந்திருந்து திருடும்” பொருட்கள்.
 
7)மின்னணுவியல் கருவிகள் (கைத்தொலைபேசி, ஐ.பாட் போன்றவை) படுக்கப்போகுமுன் அணைக்கப்படவேண்டும்)

Friday, 23 January 2015

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது?

நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.

 

தலைவலி : 

நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.

படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!

அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் : 

ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.

மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு: 

ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.

மலச்சிக்கல் : 

மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம். கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.

உயர் ரத்த அழுத்தம் : 

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.

காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே, 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது.

– டாக்டர் ஜெ.ஜெயலட்சுமி-

Tuesday, 13 January 2015

ஆண்களே அழகாக ஜொலிக்க ஆசையா

வெயில் மற்றும் குளிரை வாடிக்கையாக கொண்டிருக்கும் இன்றைய பருவ நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பதால் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.


அந்த வகையில் சரும பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற விஷயமாகும். சரும பாதுகாப்பு என்றதும் அது பெண்களுடைய விஷயம் என்று எந்தவொரு ஆணும் நினைத்தால் அவர் மிகவும் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்!

ஏனெனில், ஆண்களுக்கு தோலில் உள்ள துளைகள் மிகவும் பெரியதாக உள்ளதால்,அவர்கள் தான் அதிகளவிலான தோல் சிதைவுகளுக்கும் மற்றும் அடைப்புகளுக்கும் ஆளாகிறார்கள்.

அவர்கள் எப்பொழுதுமே பெண்களைப் போல அதிகப்படியான எண்ணையை உறிஞ்சும் வகையிலான பவுடர்களைப் பயன்படுத்துவதில்லை. மேலும், இயற்கையாகவே கோடையின் வெப்பமான நேரங்களில், அதிக நேரம் வெளியில் சுற்றக்கூடிய வேலைகளை செய்யும் ஆண்கள் பிரச்சினைக்குரிய சருமத்தினைப் பெறும் நிலையிலுள்ளவர்கள்.

எனவே ஆண்களே! சருமத்தினை எப்படி ஆரோக்கியமாக வைத்திருப்பது என்று முடிவு செய்துவிட்டீர்களா? மிகவும் யோசிக்க வேண்டாம்! தினசரி நடவடிக்கைகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சருமத்தினை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

தொடக்கத்தில் ஆண்களின் தோல் மிகவும் எண்ணெயுடையதாகவே இருக்கும். எனவே தினமும் இரண்டு முறை முகத்தை சுத்தம் செய்யும் க்ளின்ஸர் அல்லது ஃபேஷ் வாஷ் கொண்டு சுத்தம் செய்வதும் மற்றும் சோப்பைப் போட்டு சுரண்டாமல் இருப்பது நலம் தரும் செயலாகும். இது தோலிலுள்ள துளைகளை சுத்தம் செய்வதுடன், அதிகப்படியான எண்ணெயையும் நீக்கிவிடும். மேலும் சருமத்திற்கு ஏற்ற க்ளின்ஸர்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது சரும பாதுகாப்பில் மிகவும் முக்கியமான செயலாகும். அது சருமத் துளைகளுக்குள் ஆழமாக சென்று, இறந்த செல்களை நீக்கவும் தயார் படுத்துகிறது.

ஆண்களின் தோல் பெண்களின் தோலை விட கடினமானதாகவும், மொத்தமானதாகவும் இருக்கும். ஆகவே தீவிரமான மற்றும் கிளைக்கோலிக் அமிலங்களையுடைய டோனர்களை பயன்படுத்தினால், சருமத்தில் தங்கி சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து,சருமத்திற்கு பாதுகாப்பு தரும்.

சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை கோடைகாலங்களில் இயற்கையான முறையில் ஸ்கரப் செய்து நீக்குவது முக்கியமான விஷயமாகும். 3 நாட்களுக்கு ஒருமுறை ஸ்கரப் செய்வது அல்லது அருகிலுள்ள ஆண்கள் அழகு நிலையத்திற்கு சென்று தொழில்முறை வல்லுநர்களிடம் சென்று ஸ்கரப் செய்வது சரியான முறையாகும். மேலும் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு கிடைக்க வேண்டுமானால், இறந்த சரும செல்களை நீக்கிவிட்டு,இளமையான செல்களை வளர்த்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.

SPF அளவு 15 அல்லது அதற்கும் அதிகமாக உள்ள மெல்லிய எடையுடைய ஈரப்பதம் உண்டாக்கும் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். சருமத்தை ஈரப்பதத்துடனும்,சுருக்கங்கள் இல்லாமலும், முகத்தில் கோடுகள் விழுவதை தடுத்தும் வைத்திருப்பதன் மூலமும், இறந்த சரும செல்களை நீக்கிய பின்னர் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். குறிப்பாக வெயிலில் செல்லும் போது தடவி செல்ல வேண்டும்.
கோடைகாலங்களில் தினமும் ஷேவிங் செய்வதை தவிர்ப்பது நலம். இந்த காலக்கட்டங்களில் ஒவ்வொரு ஷேவிங்கிற்குப் பிறகும் சருமத்தை சரி செய்யவும்,குணப்படுத்தவும் செயல்பட வேண்டியிருக்கும். எனவே அளவாக அவ்வப்போது ஷேவிங் செய்வது அரிப்பு ஏற்படுவதை தடுக்கும். இல்லையெனில் சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டு கடுமையாக அரிப்பை உண்டாக்கும்.

ஷேவிங்கிற்குப் பிறகு பயன்படுத்தப்படும் லோசன்கள், ஷேவிங்கால் சருமம் இழந்த ஈரப்பதத்தை மீட்கவும் மற்றும் அதற்கு தேவையான எண்ணையை வழங்கும் பணியையும் செய்கின்றன. மேலும் அந்த லோசன்கள் தோலை சூரியனின் தாக்குதலிலிருந்தும் காப்பாற்றுகின்றன. அதிலும் சருமத்திற்கு ஏற்ற வகையிலான இயற்கையான மற்றும் சத்தான எண்ணெய் நிரம்பிய லோசன்களை கண்டறிந்து பயன்படுத்துங்கள்.

பெண்கள் மட்டும் தான் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆண்களும் வெளியே வெயிலில் சுற்றும் போது, சன் ஸ்கிரீன்களை பயன்படுத்த வேண்டும். உதடுகள் வறட்சியடையாமலும்,சூரியக்கதிர்களின் தாக்கம் இல்லாமலும் இருக்க லிப் பாம் பயன்படுத்த வேண்டும்.

உடல் துர்நாற்றத்தை துரத்தியடிக்க டியோடரண்டுகளை பயன்படுத்துவது மட்டும் தீர்வாகாது. இந்த உடல் துர்நாற்றமானது, வியர்வையுடன் பாக்டீரிய கலப்பதன் மூலமாகவே உருவாவதால், ஆரம்பத்திலிருந்தே இதனை தடுக்க முயற்சி செய்ய வேண்டும். குளிக்கும் போது பாக்டீரிய எதிர்பொருட்களையுடைய க்ளீன்ஸர்களையோ அல்லது பாடி வாஷையோ பயன்படுத்துவதுதான் இதற்கு சிறந்த வழிமுறையாகும். மேலும் ஹெர்பல் பவுடரை போட்ட பின்னர், சிறிது நேரம் கழித்து டியோடரண்டுகளை பயன்படுத்தவும்.

உண்ணும் உணவு சரும பராமரிப்பில் பெரும் பங்காற்றுகிறது. தக்காளி,வெண்ணெய்,பழங்கள், கொட்டைகள், பாதாம் மற்றும் வாதுமை கொட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது முதுமை தோற்றம் தடைபடுவதோடு, உடலை பலமாக இருக்கச் செய்கின்றன. எண்ணைய் அதிகமாக உள்ள மற்றும் மிகவும் வறுக்கப்பட்ட உணவுகளை கோடைகாலங்களில் உண்ணும் போது, செரிமான உறுப்புகள் மெதுவாக இயங்குகின்றன.

முகப்பருக்கள் வராமல் இருப்பதற்கு, அதிக எண்ணெய் பசையுள்ள அழகுப் பொருட்களை பயன்படுத்தாமல்,எண்ணெய் பசை குறைவாக உள்ள பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். இதனால் முகத்தில் பருக்கள் வராமல் இருப்பதோடு, சருமமும் பாதுகாப்புடன் இருக்கும்

Monday, 12 January 2015

அழகான சருமத்தை பெற திராட்சை பழம்

உடல் சருமத்தின் அழகை மெருகேற்றி பொலிவடையச் செய்யும் வலிமை திராட்சை பழத்தில் உள்ளது.
 
 
திராட்சை பழத்தில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன. எனவே இப்பழத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சக்தி அபரிமிதமாக உள்ளது. திராட்சை பழம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
 
முகம் கருத்துவிட்டதா கவலை வேண்டாம். திராட்சை பழச்சாற்றை பிழிந்து அதன் சக்கையை முகம் முழுவதும் பூசி, சிறிது நேரத்திற்கு பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், கருமை நீங்கி பொலிவு பெறும். திராட்சை சாறில் அதிக அளவு ஆண்ட்டிஆக்சிஜன் உள்ளது. அது சருமத்தை சுத்திகரித்துவிடும். இரத்தத்தில் உள்ள செல்களை அதிகப்படுத்தி சருமத்தை சுத்தம் செய்து பொலிவடையச் செய்துவிடும்.
 
திராட்சை பழச்சாற்றில் சூரிய வெப்பத்தால் தாக்கக்கூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் வெப்பக் கட்டிகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளது. திராட்சை சாறு சருமப் பிரச்சனைகளைத் தடுக்கும் சக்தி கொண்டது. வெயில் காலத்தில் தினமும் ஒரு கப் திராட்சை சாறு அருந்தினால் சருமச் சிக்கலை தவிர்க்கலாம்.
 
திராட்சை பழச்சாறு இறந்த செல்களை நீக்கும் திறன் கொண்டது. இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்டதால், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து வரட்சியிலிருந்து காக்கிறது.
 
திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப் பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சரும வரட்சியை தடுக்கலாம்.
 
கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால், ஒரு திராட்சை பழத்தை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கிவிடும்.
 
சிறிதளவு திராட்சை சாருடன், சிறிதளவு பாசிப்பயிறு மாவை சேர்த்து நன்றாக கலந்து, அதை முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரம் இரு முறை வீதம் 1 மாதகாலம் செய்துவந்தால் சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள் படிப்படியாக மறைந்துவிடும்.