வயதைக் குறைத்துக்காட்டுவதில் இவர்கள் படும் பாடு
பலரையும் டென்சன் கரைய சிரிக்க வைக்கிறது.இது கிண்டலடிக்கும் விஷயம்
மட்டும் இல்லை. யோசிக்க வைக்கும் விஷயமும் கூட. வெளிப்புற அழகுக்காக
மெனக்கெடுவதுடன் கண்டிப்பாக உடல் நலத்தை, தோலின் மினுமினுப்பை
தக்கவைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம்.
மழலைச் செல்லம் முதல் தாத்தா பாட்டி வரை அனைவரது தோற்றத்தையும் மினு மினுக்க வைக்கும் மகத்துவம்
மாதுளையில் உள்ளது என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்: நோய்
எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சத்துக்கள் மாதுளையில் நிறைய உள்ளது.
அழையா விருந்தாளியாய் வந்து உடலைக் கொல்லும்
புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி கூட மாதுளையில் உள்ளது.பிறந்த
குழந்தைகளின் மூளையில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வேலையையும் இது
செய்கிறது.
மூன்று மாதத்தில் இருந்தே குழந்தைகளுக்கு மாதுளை ஜூஸ் கொடுக்கலாம். வைட்டமின் ஏ, ஈ, சி, போலிக் ஆசிட்,
நார்ச்சத்து, பி வைட்டமின் ஆகிய சத்து கள் மாது ளையில் உள்ளன. வைட்டமின் ஏ, ஈ ஆகியவை தோலின்
மினுமினுப்பை தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது.
இதுவே வயதானால் தோலில் உருவாகும் சுருக்கத்தை
தடுக்கும் வேலையைச் செய்கிறது.பெண்களை அதிகளவில் தாக்கும் மார்பகப்
புற்றுநோய் வருவதைத் தடுக்கும் தன்மையும் மாதுளைக்கு உண்டு. இதில் நோய்
எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறையவே உள்ளன.
குழந்தைகளுக்கு ஏற்படும் பல்சார்ந்த
பிரச்னைக்கும் இதில் தீர்வு உள்ளது. மாதுளை ஜூஸ் குடிப்பதால் குழந்தைகளின்
வயிற்றில் வளரும் பூச்சிகளை வெளியேற்றும். தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பதன்
மூலம் 40 வயதுக்கு மேல் உடலில் சுருக்கம் உண்டாவதைத் தவிர்க்கலாம்.
கேன்சரைத் தடுப்பதுடன் ரத்தத்தை சுத்திகரிக்கும் வேலை யையும்
செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பினையும் கரைக்கிறது.
பெண்களுக்கு வயதானால் ஏற்படும் எலும்புத்
தேய்மானம் உள்ளிட்ட ஆத்தரைட்டிஸ் பிரச்னைகளையும் குறைக்கிறது மாதுளை. இதில்
போலிக் ஆசிட் உள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் தினமும் மாதுளை ஜூஸ்
குடிக்கலாம். இதனால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதைத் தவிர்த்து
கருவுக்கும் வலிமை சேர்க்கிறது. அபார்சனைத் தடுக்கிறது.
மாதுளை சாப்பிடுவதால் இதில் உள்ள போலிக் ஆசிட் உணவில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தினை உட்கிரகித்துக் கொள்ளவும் உதவுகிறது
No comments:
Post a Comment