Wednesday 22 November 2017

உங்களை சுற்றி கெட்ட சக்தி இருக்கிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறிகள்!

நேர்மைரை, எதிர்மறை எண்ணங்கள் இரண்டுமே நம்மை சுற்றி இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. இதை பாசிடிவ், நெகடிவ் எனர்ஜி என நாம் பார்க்க வேண்டும். இந்த இரண்டு எனர்ஜிகள் தான் உங்கள் வெற்றி, தோல்வியை தீர்மானம் செய்கின்றன.


நீங்கள் சிறந்து செயற்படும் செயலிலும் கூட தடுமாற காரணமாக இந்த நெகடிவ் எனர்ஜி இருக்கிறது. திடீரென நீங்கள் சில சாதாரண விஷயங்களை மிக தவறாக யூகிக்க துவங்குவீர்கள்.
ஏன் சோர்வாக நீங்கள் உணர்கிறீர்கள் என்பதற்கு உங்களிடமே காரணம் இருக்காது. "ஏன்னு தெரியல, ஒரு மாதிரி இருக்கு..." என உங்களை சுற்றி இருப்பவரிடம் கூறிக் கொண்டே இருப்பீர்கள்.
நெகடிவ் எனர்ஜியை குறைத்து, பாசிடிவ் எனர்ஜியை பெற தான் கோவிலில் செப்பு தகுடுகள் பதிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. உங்களை சுற்றி நெகடிவ் எனர்ஜி எனப்படும் கெட்ட சக்தி அதிகமாக இருக்கிறது என்பதை எப்படி அறிவது? இதற்கு சில அறிகுறிகள் இருக்கிறது...

வரவு, செலவு!

உங்களை சுற்றி கெட்ட சக்தி இருக்கிறது என்பதை வெளிகாட்டும் முதல் அறிகுறி இதுவாகும். உங்கள் பொருளாதார நிலை ஏற்றத்தாழ்வு கண்டுகொண்டிருக்கும். பண வரவு செலவில் தடங்கல்கள் காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நேரம் வர வேண்டிய பணமும் வராது. உங்களை சுற்றி தொந்தரவுகள் இருந்துகொண்டே இருக்கும்.

கையறுநிலை!

எப்போதுமே கையில் எதுமே இல்லை என்ற நிலை இருக்கும். நீங்கள் மிகவும் சோர்ந்து போய் காணப்படுவீர்கள். அன்றாட வாழ்வில் ரோலர் கோஸ்டர் போல நிலை மேலும், கீழுமாய் தொங்கிக் கொண்டிருக்கும். நிம்மதியான உறக்கம் இன்றி காணப்படுவீர்கள்.

அழுத்தம்!

உங்களது அன்றாட வேலைகளில் கூட கூர்ந்து கவனம் செலுத்த முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்படும். நீங்கள் ஒரு வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, அவ்வேலை தவறான பாதையில் திரும்புவது போன்ற உணர்வு உங்களிடம் காணப்படும். இவையெல்லாம் உங்களை சுற்றி கெட்ட சக்தி இருப்பதை வெளிபடுத்தும் அறிகுறிகளாகும்.

தொற்று!

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டல குறைபாடு ஏற்படும். இதனால் மிக எளிதாக நோய் தொற்று பரவும். சாதாரண காலநிலையில் கூட உங்கள் உடல்நல ஆரோக்கியம் சீர்கெடலாம். இயல்பாக உடல்நலம் குன்றும் போது நீங்கள் காணும் சோர்வை காட்டிலும், அதிக சோர்வு தென்படும்.

தொடர்பு!

காரணமே இன்றி நீங்கள் பேசும் வார்த்தைகள் தவறாக எடுத்துக் கொள்ளப்படும். உங்கள் மீது நெருக்கமான அன்பு கொண்டுள்ளவர்கள் கூட, உங்கள் வார்த்தைகளை புரிந்துக் கொள்ளாமல் அதை பெரிதுப்படுத்தி மனம் புண்படும்படி பேசுவார்கள். இதனால் தேவையற்ற சண்டை, பிரச்சனைகள் கூட உருவாகலாம்.

உறக்கம்!

உங்கள் உறக்கம் கெடும். வித்தியாசமான கனவுகள் வரும். அடிக்கடி இரவில் விழிப்பு வரும். உங்கள் வாழ்க்கை கடினமாவது போன்ற உணர்வு தென்படும். உறக்கத்தின் போது, உங்கள் ஆழ்மனம் உங்களிடம் எதையோ தெரிவிக்க, எச்சரிக்க தூண்டும். எதோ தவறாக செல்கிறது என்ற உணர்வு உங்கள் மனதினுள் எழுந்துக் கொண்டே இருக்கும்.

மறதி!

சாவி, பணம், பர்ஸ், உடை என அன்றாட வாழ்வில் மிக சாதாராணமான விஷயங்களை கூட நீங்கள் மறக்க ஆரம்பிப்பீர்கள். சில நேரங்களில் அவற்றை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் சூழலும் ஏற்படலாம். உங்கள் கண் முன்னேவே இருந்தாலும், வேறு இடங்களில் தேடி, உங்களை நீங்களே திட்டிக் கொள்வீர்கள்.

ஒருநிலைப்படுத்துதல்!



இதற்கான தீர்வு, நீங்கள் முதலில் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். உங்கள் மனதின் கவனம் சிதறுவது தான் ஏனைய அத்தனை பிரச்சனைகள் உருவாக முக்கிய காரணமாக இருக்கிறது. தினமும் தியானம் செய்யுங்கள். நீங்கள் செய்யும் வேலைகளை சரியாக பிரித்து, ஒவ்வொரு செயலிலும் நிதானமாக செயற்படுங்கள்.

பொறுமை!

யார் உங்களை வேகப்படுத்தினாலும், கோபப்படுத்தினாலும் அதை மனதிற்குள் ஏற்றாமல். பொறுமையாக செயற்பட துவங்குங்கள். உங்களை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள், உங்கள் பொறுமையை இழக்கு செய்துதான் பெருமளவு பாதிப்பை உண்டாக்கும். எனவே, பொறுமை மிகவும் முக்கியம்.

அன்பு!

முக்கியமாக அன்பு செலுத்த மறக்க வேண்டாம். உங்கள் மீது அன்பு வைத்துள்ளவர்கள் மீதே நீங்கள் கோபம் கொள்ளும் சூழல் ஏற்படலாம். அந்த சூழலை கட்டுக்கொள் கொண்டு வந்துவிட்டாலே உங்களை சுற்றி இருக்கும் கெட்ட சக்திகளை எளிதாக வீழ்த்தி விடலாம்.
மேலும், கெட்ட சக்தியின் பிடியில் நீங்கள் அகப்படும் போது, அது முதலில் உங்கள் உறவுகளை தான் கொல்லும். எனவே, அதனால் உங்கள் உறவுகள் பலப்படுத்திக் கொள்ளுங்கள். இது, நீங்கள் எளிதாக கெட்ட சக்திகளின் படியில் இருந்து வெளிவர உதவும்.

வெங்காயத்தில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள்



சிறுநீர் அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, வெளியே தள்ளிவிடும்.


 
முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம். வெங்காயம் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே  கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் இருக்க உதவி செய்கிறது.
 
உடல் சூட்டைக்  குறைக்கவல்லது வெங்காயம். பழைய சாதத்தில் மோர் விட்டு, நான்கு சின்ன வெங்காயத்தை நறுக்கிப்  போட்டு சாப்பிடலாம்.  உடலின் வெப்பம் தணியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
 
யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள்  கரைந்துவிடும்.
 
புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து  விடுகிறது.
 
வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்பிலிருந்து விடுபட, தினமும் உணவில் சின்ன வெங்காயம்  சேர்ப்பது அவசியம்.
 
வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். நாலைந்து  வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம்  மறையும்.
 
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில்  தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
 
கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழப்பட்டு இருந்தால், இன்சுலின் சுரக்காது. இதனை இயல்பான நிலைக்கு மாற்றி சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க சின்ன வெங்காயம் உதவுகிறது.
 
கல்லீரலில் இருக்கும் பித்தத் திரவம் அதிகமாக சுரந்தால், காமாலை வரும். இந்த பித்தத் திரவத்தை இயல்பான நிலையில்  சுரக்கவைப்பது சின்ன வெங்காயம்.
 
அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர  நுரையீரல் சுத்தமாகும்.

திராட்சைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா!

திராட்சைப்பழத்தில், எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில், விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 மற்றும் விட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.



இவைத்தவிர பொஸ்பரஸ், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. திராட்சை பழம், மூளை, இதயத்தை வலுவடையச்செய்யும். மேலும் வயிற்றுப்புண், மல்ச்சிக்கல் போன்ற பிரச்சனையை குணமாக்கி, கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல்,  வாய்க்கசப்பு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும். மேலும் ரத்தத்தில் குளுகோஸ் அலவு சீராகி, உடலில் கொழுப்புச்சத்து சேர்வதை  தடுக்கும்.
 
பித்தம் தணியும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும்., நரம்புகளுக்கு வலுவூட்டும். எடை குறைவாக மர்றும் அதிக சூடு இருப்பவர்கள் திராட்சை பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
 
உஷ்ணத்தினால் ஏற்படும் சிறுநீர் கடுப்பை குணப்படுத்துகிறது. வளரும் குழந்தைகளுக்கு திராட்சை அருமருந்தாகும். ஜலதோஷத்தினால் மூக்கில் இருந்து நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திரட்சை பழச்சாறு குணப்படுத்துகிறது.
 
மார்புச்சளியை போக்குகிறது. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. ரத்த சோகைக்கும், காமாலை நோய்க்கும் கூட  இது சிறந்த மருந்தாகிறது. குடல் புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.  அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றுக்கு திராட்சை சிறந்த மருந்து.
 
தினமும் திராட்சை சாரு குடித்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும்.  பெண்களுக்கு சீரற்ற மாதவிடாயை சீராக மாற்றும்., மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்குகிறது.
 
திராட்சை பழத்தில் பெண்களுக்கு செரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. என்வே இதை தொடர்ந்து சாப்பிட்டால், மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது.
 
இதய பலவீனமானவர்களுக்கு திராட்சை சிறந்த மருந்து. தலைவலி, காய்க்காய் வலிப்பு போன்றவற்றை குணப்படுத்தகிறது. பாலுணர்வை தூண்டுகிறது. புற்றுநோயை கட்டுப்படுத்தும்.
 
அதிகம் சளிப்பிடித்திருக்கும் போதும், ஆஸ்துமா நோயுள்ளவர்களும், வாத உடம்புக்குள்ளானவர்களும், அதிக அளவில்  திராட்சைப்பழத்தை சாப்பிடக்கூடாது.

Wednesday 25 October 2017

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியினை தடைசெய்யும் முள்ளங்கி

பெருங்குடல், சிறுகுடல், சிறுநீரகங்கள், வயிறு, வாய் ஆகிய இடங்களில் உள்ள புற்றுநோய்க்கு இக்காயின் மருத்துவப்பண்புகள் சிறந்த மருந்தாக விளங்குகின்றன. இக்காயில் காணப்படும் ஐசோதியோசையனைட் பொருளானது புற்றுச்செல்களின்  வளர்ச்சியினை தடைசெய்கிறது.






முள்ளங்கியில் உள்ள விட்டமின் சி, ஃபோலிக் அமிலம், ஆந்தோசையனைன் மற்றும் நச்சினை  நீக்கும் பண்பு ஆகியவை புற்றுநோய் வராமலும், புற்றுநோய் உள்ள இடங்களுக்கு தீர்வாகவும் உள்ளன.
 
முள்ளங்கி வெண்குட்ட நோய்க்கு தீர்வாக உள்ளது. முள்ளங்கியின் விதைகள் பொடிக்கப்பட்டு வினிகர், இஞ்சி சாறு மற்றும் பசுவின் கோமியம் ஆகியவற்றில் ஊறவைக்கப்பட்டு பின் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவப்படுகின்றன. வெண்குட்டத்தால்  பாதிக்கப்பட்டவர்கள் முள்ளங்கியை உண்டும் நிவாரணம் பெறலாம். 
 
முள்ளங்கியானது சளி மற்றும் ஒவ்வாமையினால் மூக்கு, தொண்டை, காற்றுக்குழாய் மற்றும் நுரையீரல் ஆகிய இடங்களில் ஏற்படும் பாதிப்புக்களை நீக்குகிறது. இக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள் சுவாச பாதையில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. 
 
முள்ளங்கியில் உள்ள விட்டமின் சி, பாஸ்பரஸ், துத்தநாகம், பி விட்டமின் தொகுப்புக்கள் ஆகியவை சருமப்பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. முள்ளங்கியில் உள்ள நீர்சத்தானது சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது. முள்ளங்கியின் தொற்றுநோய் தடுக்கும் பண்பானது சருமம் உலர்தல், வெடிப்பு, பிளவுகள் ஆகியவை ஏற்படாமல் சருமத்தினைப் பாதுகாக்கிறது. 
 
முள்ளங்கியின் நமைச்சலை எதிர்க்கும் பண்பானது பூச்சி கடி மற்றும் தேனீ கொட்டு ஆகியவற்றிற்கு சிறந்த தீர்வாகும். முள்ளங்கி சாற்றினை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வலி, வீக்கம் ஆகியவற்றை போக்கும். 
 
முள்ளங்கியில் உள்ள ஐசோஃப்லேவேன்கள் தைராய்டு சுரப்பில் வீக்கத்தினை உண்டாக்கும் தன்மை உடையது. எனவே இதனை தைராய்டு சுரப்பி குறைபாடுகள் உள்ளவர்கள் தவிர்ப்பது நலம்.

Sunday 9 July 2017

இளமையுடனும், அழகுடனும் இருக்க வேண்டும் எனில் நெல்லிகாய் சாப்பிடுங்க...

நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. அதிலும் பெரிய நெல்லிக்காய் தான் மிகவும் நல்லது.


 


ஏனெனில் அந்த நெல்லிக்காயில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால் நெல்லிக்காயில் கிடைக்கும் அழகு நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாது.
 
* முழு நெல்லிக்காயாகவோ அல்லது சாறாக மற்றும் பொடியாகவும் பயன்படுத்துவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைவது, சருமத்தின் பொலிவு அதிகரிப்பது, நரை முடி மற்றும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடுவது என்று பல நன்மைகள் கிடைக்கும். 
 
* நெல்லிக்காய் சருமத்தில் உள்ள கொலாஜன் செல்களின் உற்பத்தியை அதிகரித்து, இளமை தோற்றத்தை தக்க வைக்கும் நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தால், சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, கொலாஜன் உற்பத்தி அதிகரித்து, சரும சுருக்கம் நீங்கி, சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.
 
* உடல் எடை அதிகமாக உள்ளதா? அப்படியானால் தினமும் உடற்பயிற்சி செய்வதுடன், நெல்லிக்காய் சாற்றினையும் பருகி வர வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறையும்.
 
* நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி சத்தினால், முடியின் வலிமை அதிகரித்து, முடி வெடிப்பு, நரை முடி பிரச்சனை, பொலிவிழந்த காணப்படும் கூந்தல் போன்றவற்றை தடுத்து நிறுத்தி, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம். அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி நரைமுடியை தடுத்து நிறுத்தும். 
 
* நமக்கு இருக்கும் தொல்லையில் பெரிய தொல்லை என்றால் அது பொடுகு தொல்லை என்று தான் சொல்ல வேண்டும். அத்தகைய பொடுகு தொல்லையை நெல்லிக்காய் ஜூஸ் பருகுவதால் தடுத்து நிறுத்தலாம்.
 
* நெல்லிக்காய் சாற்றின் அதிகப்படியான வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை இரத்தத்தை சுத்தப்படுத்தி, செரிமானத்தை அதிகரித்து, உடலில் தங்கியுள்ள நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றி, பிரச்சனை இல்லாத பொலிவான சருமத்தை தரும்.

உடல் எடை குறைப்பிற்கு அடிக்கடி உணவில் சுரைக்காய்...

சுரைக்காயில் விட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, பி3, பி5, பி6, ஃபோலேட்டுகள் போன்றவை காணப்படுகின்றன. மேலும் இக்காயில் தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், அதிக அளவு  பொட்டாசியம், குறைந்தளவு சோடியம் போன்றவை உள்ளன.
 
 


 
இதில் கார்போஹைட்ரேட்டுகள், புரதம், குறைந்த அளவு எரிசக்தி, அதிகஅளவு நார்சத்து ஆகியவை உள்ளன. இக்காயானது 96  சதவீதம் நீர்சத்தினைப் பெற்றுள்ளது.
 
நல்ல செரிமானம் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகளை தீர்க்கும். சுரைக்காயானது அதிக அளவு நார்சத்தினைப் பெற்றுள்ளது. இந்த நார்சத்தானது செரிமானம் நன்கு நடைபெறச் செய்கிறது. மேலும் உடலானது ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
 
குடலில் உள்ள நச்சுப்பொருட்களை கழிவாக வெளியேற்றுவதிலும் நார்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இக்காயில் உள்ள நார்சத்து மற்றும் நீர்சத்து மலச்சிக்கல், செரிமானமின்மை, வாயு தொந்தரவு ஆகியவை ஏற்படுவதையும்  தடைசெய்கின்றது.
 
சுரைக்காயானது அதிக அளவு நீர்ச்சத்துடன் குறைந்தளவு எரிசக்தியையும், உடலுக்கு இன்றியமையாத ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனால் இக்காயை உண்ணும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதுடன் குறைந்த அளவு எரிசக்தியும்  கிடைக்கிறது.
 
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இக்காயினை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டு உடல் எடையைக்  குறைப்பதோடு ஆரோக்கியத்தையும் பெறலாம்.
 
சுரைக்காயினை வாங்கும்போது மேல்தோலை நகத்தினால் கீறினால் மேல்தோல் எளிதாக வரவேண்டும். இக்காயனது இளம்பச்சை வண்ணத்தில் இளமையானதாக அளவில் பொதுவானதாக இருக்க வேண்டும்.

Sunday 25 June 2017

நோஞ்சான் போல் உள்ளவர்கள் உடல் எடை கூட வேண்டுமா?

இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருப்பதால், அதனை குறைக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அதே சமயம், சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். ஆகவே அவ்வாறு எடையை அதிகரிக்க தேவையற்ற ஆரோக்கியமில்லாத உணவுகளை எல்லாம் உண்டால், எடை கூடாது.




எடையை அதிகரிக்க அதிக அளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஏனெனில் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும்.
எனவே எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும், என்பதை சற்று படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றிப் பாருங்களேன்... 

புரோட்டீன்:

புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களான இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி, சிக்கன், டோஃபு போன்றவற்றை அதிகம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோ, உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு ஒரு நல்ல ஈஸியான வழியாகும். அதிலும் சோயா பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது.
கார்போஹைட்ரேட் ஓட்ஸ் மீல், தானியங்கள், பிரட் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. மேலும் பழங்களில் மாம்பழம், ஆப்பிள், செர்ரி, திராட்சை, பீச் போன்றவையும், காய்கறிகளில் கார்ன், பிராக்கொலி, கேரட், வால் மிளகு, முள்ளங்கி போன்றவையும், பாஸ்தா, சிவப்பு அரிசி உணவுகள், கொண்டைக் கடலை போன்றவற்றையும் தினமும் உணவில் சிறிது சாப்பிட்டு வந்தால், உடல் நன்கு இருக்கும். மேலும் உடலுக்கு தினமும் குறைந்தது 40% கார்போஹைட்ரேட் தேவைப்படுகிறது, அதற்கு இந்த உணவுகளை உண்டால், விரைவில் உடல் எடையை அதிகரிக்க முடியும்.

கொழுப்புகள்:

பாதாம் பருப்பு, ஆலிவ் ஆயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், முந்திரி பருப்பு, வேர் கடலை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதற்கான டயட் இருக்கும் போது, தினமும் உடலில் 10% கொழுப்பு சத்தானது உடலில் சேர வேண்டும். இவை அனைத்துமே ஆரோக்கியமான கொழுப்புகள் தான்.
மேலும் உடல் எடையை அதிகரிக்க அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதற்கு, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும் ஸ்நாக்ஸ் ஆன நட்ஸ், ஆப்பிள், புரோட்டீன் பார், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

அதிலும் சீஸ் மற்றும் காய்ந்த பழங்களை சாப்பிடுவதும், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் உணவுகள் ஆகும். அதுமட்டுமல்லாமல் சாக்லேட்டில் கூட அதிக கலோரிகள் நிறைந்துள்ளன. ஆகவே இத்தகைய உணவுகளை உண்டால், உடல் எடை அதிகரிப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
முக்கியமாக உடனே உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று எதையும் அதிக அளவில் ஒரே நேரத்தில் சாப்பிட்டால், அந்த அமிர்தம் கூட நஞ்சாக மாறிவிடும்.

Sunday 18 June 2017

அன்றாட உணவில் சுண்டைக்காய் எடுத்துகொள்ளவதால் கிடைக்கும் பயன்கள்

காடுகளில் தானாகவே வளருவதை மலைசுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பதை பால் சுண்டை என்றும்  அழைக்கிறோம். பால் சுண்டையை பற்றிதான் இதில் காண இருக்கிறோம். இந்த சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது.


 
ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது  நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது. மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது. 
 
சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி.  கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது.
 
குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க சுண்டைக்காய் உதவும். குழந்தையாக இருக்கும்போதே  அவர்களுக்கு சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிட பழக்கவேண்டும். சுண்டைக்காயை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும். 
 
மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும். புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.
 
சுண்டைவற்றல் சூரணத்தை தினம் ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து ஒரு மாதம் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் தொல்லை  தரும் வயிற்று நோய்களில் இருந்து விடுபடலாம். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. கல்லீரல், மண்ணீரல்  நோய்களையும் நீக்க உதவுகின்றது. 
 
சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.

தினமும் ஊறுகாய் சாப்பிடுவதால் உண்டாகும் பாதிப்புகள் என்ன தெரியுமா...?

ஊறுகாய் சுவை மிகுந்ததாக இருந்தாலும் அன்றாடம் இதை உட்கொள்ளும் போது பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அன்றாடம் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள்.
 
 




பல வகையான ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு  சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
 
செரிமான பிரச்சனைகள்
 
ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில்  அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.
 
அல்சர்
 
ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை  சந்திக்கக்கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும்  தவிர்க்க வேண்டும்.
 
இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க  வேண்டும். நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமையை  அவர்கள் சந்திக்கக்கூடும்.
 
இதய நோய்
 
ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய  நோய்க்கு வழிவகுக்கும்.
 
வயிறு உப்புசம்
 
ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிகம் இருப்பதால் அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால்  வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.

தினமும் 15 - 25 கிராம் பாதாம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகளை பாருங்கள்!!

பாதாம் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை. தினமும் பாதாம் எடுத்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளை காண்போம்.


 
 
# தினமும் 15 - 25 கிராம் பாதாம் சாப்பிட வேண்டும். இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்டிஎல் கொலஸ்டிரால் அதிகரிக்க இது உதவும். 
 
# பாதாமில் பாஸ்பரஸ், தாது உப்பு, குளுட்டாமிக் அமிலம் இருக்கிறது. இது நினைவாற்றலை அதிகரிக்க உதவும். 
 
# டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் பாதாம் மட்டும் விதிவிலக்கு. 
 
# பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இதய நோயைக் கட்டுப்படுத்தும்.
 
# இதய நோய் உள்ளவர்கள் வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், மாரடைப்பு வரும் அபாயம் 50 % குறையும் என ஆராய்ச்சி தெரிவிக்கிறது. 
 
# பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற வைட்டமிம், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலம் புத்திக்கூர்மைக்கு உதவுபவை. 
 
# பாதாமில் உள்ள நார்ச்சத்தும் ஆன்டிஆக்ஸிடன்டுகளும் புற்று நோய்கள் வர விடாமல் தடுப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 
 
# பக்கவாதம், பசியின்மை, பலவீனம், எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்தும் பாதாம் விடை கொடுக்கும். 
 
# சிற்றுண்டி பதிலாக பாதாமை எடுத்துக்கொள்ளும் போது இதில் உள்ள உயர் கார்போஹைட்ரேட் தொப்பை கொழுப்பை குறைக்கும்.
 
# பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வந்தால் சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

Thursday 18 May 2017

நோய்களின் தாக்கத்தை குறைத்திடும் முருங்கைக் கீரை சூப்!

முருங்கைக் கீரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், உடலினுள்  இருக்கும் உட்காயங்கள், அலர்ஜியைக் குறைக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.


 
 
தேவையான பொருட்கள்: 
 
முருங்கைக் கீரை - 4 கப் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
பூண்டு - 5 பற்கள் 
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது) 
சின்ன வெங்காயம் - 4 (நறுக்கியது) 
தக்காளி - 1 (நறுக்கியது) 
தண்ணீர் - 6 கப் 
உப்பு - தேவையான அளவு 
மிளகு - தேவையான அளவு 
எண்ணெய்/நெய் - 1 டீஸ்பூன் 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க  வேண்டும். பின்னர் அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி  விட வேண்டும். பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்து அதில்  முருங்கைக்கீரை சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, பின் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் வேக வைத்து, மிளகு மற்றும் உப்பு சேர்த்து கிளறி  இறக்கினால், முருங்கைக்கீரை சூப் தயார்.

Tuesday 25 April 2017

வேண்டாமே பரோட்டா

மனிதர்களுக்கு உணவென்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். அதற்காக எதை வேண்டுமானாலும் சாப்பிட முடியுமா? நாகரிக வளர்ச்சியோடு சமைத்து உண்ணவும் கற்றுக்கொண்ட மனிதன் நாள்தோறும் வேளாவேளைக்கு விதவிதமாகச் சமைத்ததைச் சுவைத்தான்.



வேற்றுநாட்டுக் கலாச்சாரம் கலக்கக்கலக்க அந்நாட்டு உணவுகளையும் கலந்து உண்ணத்தொடங்கினர். மாறியத் உலகம் உணவு உட்கொள்ளும் முறைகளும் மாறின. சுவைக்கு அடிமையான மனிதன் ஆரோக்கியம் பற்றி அறவே மறந்தான் என்பதே உண்மை. நா ருசிக்கு முதலிடம் அளித்த மனிதன் எவற்றையெல்லாம் உண்கிறான் என்று அறிந்துகொண்டால் வியப்பைவிட வேதனையே மிஞ்சும்.

மைதா என்ற மாவு இக்கால மனங்கவர் உணவு. அது எதிலிருந்து கிடைக்கிறது? தமிழ்நாட்டில் மரவள்ளிக் கிழங்கு மாவு. கோதுமைத் தானியத்தை அரைத்துச் சலித்தால் வீணாகும் மாவு. இவைதான் மைதா. அதாவது மைய்ய அரைத்தமாவு மைதா.


முதலில் இது எதற்குப் பயன்படுத்தப்பட்டது, தெரியுமா? சுவரொட்டிகள் ஒட்டத்தான் முதலில் இது பயன்படுத்தப்பட்டது. இந்த மாவைத் தண்ணீருடன் கஞ்சியாகக் காய்ச்சினால் நல்ல பசை கிடைக்கும். இதனை சுவரொட்டிகள் பயன்படுத்தினர்.

பின் இந்த மாவை கேக், பிரெட், ரொட்டி பரோட்டா , நூடுல்ஸ் ஆகியவை தயாரிக்கப் பயன்படுத்தினர். இவற்றில் ரொட்டி பரோட்டா நம்மை அதிகம் கவர்ந்துள்ளது. ஆனால் எண்ணிப்பாருங்கள் இது மைதாப் பசையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனை உண்டால் இது செரிமானமாக பல நாள்களாகும். மேலும் குடலில் ஒட்டிக்கொள்ளும் தன்மையது .மேலும் மைதாவை உண்பவர்களுக்கு நீரழிவு நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பும் உண்டு. இதில் எள்ளளவும் நார் சத்து இல்லாததால் மலச்சிக்கலும் உண்டாகும். பிரெட் உண்பவர்களுக்கும் இப்பிரச்சினை ஏற்படுவது உண்டு.
நூல்டுல்ஸ் அதிகமாக சிறுவர்களால் விரும்பப்படும் ஓர் உணவு. இதுவும் மைதாவினால் தயாரிக்கப்படுவதே. இதுவும் மாவுச்சத்து மட்டும் கொண்டது.
மைதாவின் நிறம் வெள்ளை வெள்ளையாக இருப்பதற்குக் காரணம் அது வெளுக்க ஒரு வேதியல் பொருள் சேர்க்கப்படுவதுதான். துணி வெளுக்க குளோரின் ஊற்றுவது போல் மைதா மாவு வெளுக்க இராசயனப் பொருள் (பென்சோயில் பெராக்சைடு)  சேர்க்கப்படுகிறது. அது நம் வயிற்றையும் வெளுத்து அரித்துவிடும் தன்மையது. நாளடைவில் குடலில் அல்சர் நோய் ஏற்படக்கூடும் என்ற மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன.

மாவுப்பொருள்கள் எளிதில் செரிமானமாகிவிடும். அதனால் தான் நார் சத்து நிறைந்த பொருள்களைச் சாப்பிட வேண்டும் என்றும் அவை தெரிவிக்கின்றன. நார் சத்து நிறை உணவுகள் மெல்ல செரிமானம் ஆவதால் நீண்ட நேரம் நமக்குப் பசிக்காது.  அதனால்தான் உடைத்த தானியங்களையும் நார் சத்து நிறைந்த காய் பழங்களையும் உண்பது நன்று.
வெள்ளை அரிசி, வெள்ளைச்சீனி, வெள்ளை மாவு மூன்றும் நம்மை விரைவில் கொள்ளும் மும்மலங்கள்.

காந்தியடிகள் கூறிய தீட்டாத அரிசியும் வேர்கடலையும் வெல்லமும் நன்றே! மைதாவில் செய்யப்படும் பரோட்டா உங்களை புரட்டிப் போட்டுவிடும் என்பதுதான் உண்மை.

Thursday 6 April 2017

இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா கற்றாழையில்?

கற்றாழையில் இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள். இது உடலை குளிர்ச்சியாக  வைத்துக்கொள்ள கற்றாழை உதவுகிறது. கற்றாழையை ஜூஸ் செய்தும் சாப்பிடலாம்.
 

 
தோல் நீக்கிய சோற்றை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல்  போகும். தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது.
 
இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப் பயன்படுகிறது. இலை  மஞ்சள் நிறத் திரவமும் தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது.  எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும். ஜெல்லைப் பதப்படுத்தி குளிர்பானமாகவும்  பயன் படுத்தப்படுகிறது. 
 
வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை  எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை  துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு  பல நன்மைகளும் கிடைக்கும்.
 
நீர்க்கடுப்பு, வயிற்றின் எரிச்சல் உள்ள சமயங்களில் கற்றாழைச் சோற்றுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச்  சாப்பிட்டால் அவை குணமாகும். சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு  படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.
 
கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில்  சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு  போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில்  வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும். 
 
கற்றாழை ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை  மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.