Monday, 19 November 2018

இரவில் மாங்கனி சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்

சில சமயங்களில் இரவில் குழந்தைகள் எதாவது ஸ்நாக்ஸ் வேண்டுமென்று அடம்பிடித்து கேட்பார்கள். அந்த சமயத்தில் நொறுக்கு தீனிகள் சாப்பிட்டால் அது சரிவர சீரணிக்காமல் போய்விடும். இதனால் வாந்தி, பேதி கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவர்களை சமாளிக்க சரியான உணவு என்றால் அது பழங்கள் தான்.

ஏனெனில் இரவில் பழங்களை சாப்பிடுவதால் அவர்களின் சீரண மண்டலம் சரியாக செயல்படும். மேலும் காலையில் எழும் போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். கலோரி மற்றும் கொழுப்புகள் குறைந்த உணவு என்பதால் அவர்களுக்கு எளிதில் சீரண மாகும்.

மாம்பழம்


மாம்பழம் போன்ற பழங்களின் புளிப்புடன் கூடிய தித்திக்கும் இனிப்பு சுவை அவர்களுக்கு ரொம்ப பிடிக்கும். விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள். மேலும் மாங்கனி அவர்களின் உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. சரி. வாங்க இரவில் மாங்கனி சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

மாங்கனியில் ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன
நார்ச்சத்து
சர்க்கரை
புரோட்டீன்
விட்டமின் ஏ
விட்டமின் பி6
விட்டமின் சி
விட்டமின் ஈ
போலேட்
பாஸ்பரஸ்
கால்சியம்

மலச்சிக்கல்

முதலில் மாம்பழம் எளிதாக சீரணிக்க கூடிய ஒரு பழம். எனவே நீங்கள் இரவில் இதை சாப்பிட்டாலும் அசெளகரியமாக இருக்காது. இதில் உள்ள நார்ச்சத்துகள் காலையில் மலம் கழித்தலை சுலபமாக்குகிறது.

எடை கட்டுப்பாடு

இது குறைந்த கலோரி என்பதால் உங்கள் உடல் எடைக்கும் எந்த வித தீங்கையும் விளைவிக்காது. மேலும் நொறுக்கு தீனிகளில் இருப்பதை போன்று அதிகமான கொழுப்புச்சத்து இதில் கிடையாது. அதனால் மாம்பழம் சாப்பிட்டால் எடை கூடும் என்ற வதந்தியை இனியாவது நம்பாமல் இருங்கள்.

நல்ல தூக்கம்

இரவில் மாம்பழம் சாப்பிடுவதால் நரம்புகள் அமைதி பெறும். அதனால் இயல்பாகவே உடலையும் மனதையும் அமைதிப்படுத்தி நல்ல தூக்கத்தை தருகிறது. இரவில் சரியாகத் தூக்கம் வராமல் தவிர்ப்பவர்கள் தொடர்ந்து சில நாட்கள் மாம்பழத்தைச் சாப்பிட்டுப் பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும். பிறகென்ன? இரவில் நீங்கள் கும்பகர்ணன் தான்.

ஆற்றலை சேமித்தல்

நீங்கள் மாமிசம், மீன் போன்றவற்றை சாப்பிடுவதை விட மாம்பழம் உங்களுக்கு அதிகமான கலோரியை தருகிறது. இதில் உள்ள சர்க்கரை சத்து நீங்கள் எனர்ஜட்டிக்காக இருக்க உதவுகிறது. அதனால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

சருமம்

மாம்பழத்தில் உள்ள விட்டமின் சி உங்களுக்கு ஆரோக்கியமான சருமம் உருவாக உதவுகிறது. அதுவும் இரவில் சாப்பிடும் போது உங்கள் சரும பாதிப்புகள் குணமடைந்து காலையில் புத்துணர்வை பெற உதவுகிறது. வெயிலால் உண்டாகும் கருமை நீங்கி, முகம் நன்கு கலராகும்.

இரத்த அழுத்தம்

மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்துகள் உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. அதுவும் இரவு உணவு வேளைக்கு பிறகு மாம்பழம் சுவைப்பது மிகவும் நல்லது. மாம்பழத்தை தொடர்ந்து உணவுடன் சேர்த்துக் கொண்டால், உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.

ஆரோக்கியமான இதயம்

மாம்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் இருப்பதால் இதயம் நன்றாக செயல்பட உதவுகிறது. எனவே இரவில் இதை சாப்பிடும் போது ஹார்ட் அட்டாக் போன்ற அபாயத்திலிருந்து தப்பிக்கலாம். அடிக்கடி மார்பகம் கனமாக இருப்பது போல் உணர்பவர்கள் மாம்பழம் சாப்பிடுங்கள்.

புற்றுநோயை தடுத்தல்

மாங்கனியில் இருக்கும் பினோலிக் என்ற பொருள் மிகத் தீவிரமாக, புற்றுநோய் செல்களை அழிக்கிறது. மேலும் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் வளருவதை ஆரம்பத்திலேயே தடுக்கிறது.

கருவுற்ற பெண்கள்

இதில் உள்ள ஊட்டச்சத்துகள் கருவுற்ற பெண்களுக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கும் முக்கியமாகக் கருதப்படுகிறது. மேலும் இதில் உள்ள இரும்புச் சத்து கருவுற்ற பெண்களுக்கு அனிமியா போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது. இரவில் மாம்பழம் சாப்பிடும் போது அவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தையும் தருகிறது. கருவுற்ற பெண்கள் மாம்பழத்தை போல பேரீச்சம்பழமும் சாப்பிடுவது நல்லது.

உடலுறவு

மாம்பழத்தில் விட்டமின் ஈ இருப்பதால் இது உங்கள் பாலுணர்வு ஹார்மோனை தூண்டுகிறது. எனவே இதை இரவில் சாப்பிடும் போது உடலுறவில் ஈடுபாட்டுடன் செயல்பட உதவுகிறது. ஆண்மையின் வீரியத்தை அதிகரிக்கச் செய்கிறது. அதனால் தினமும் இரவு தூங்கச் செல்லும்முன், இரண்டு மீடியம் சைஸ் மாம்பழங்களை சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள்... மாம்பழ சீசன் முடியும்வரை ஒரே மஜா தான்...

ஆஸ்துமா

பொதுவாக நிறைய பேர் இரவில் ஆஸ்துமா பிரச்சினையால் மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். அந்த மாதிரியான சமயங்களில் மாம்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் ஆஸ்துமா அறிகுறிகளை குறைத்து நிவாரணம் அளிக்கிறது. அதனால் மூச்சுத்திணறல் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் மாம்பழத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கண்கள்

இரவில் மாம்பழத்தை உண்பதால் அதிலுள்ள விட்டமின் ஏ கண்களுக்கு ஓய்வு கொடுத்து கண் பார்வை அதிகரிக்கும். மேலும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து காக்கிறது. மாலைக்கண் பிரச்னையை சரிசெய்யும் ஆற்றலும் இந்த மாம்பழத்துக்கு உண்டு.

விளைவுகள்

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்வார்கள். மாம்பழம் சாப்பிடுவதால் எவ்வளவுக்கு நன்மை இருக்கிறதோ அதேபோல், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சில பிரச்னைகளும் உண்டாகும். குறிப்பாக, மாம்பழம் அதிகமாக சாப்பிடும்போது, வயிற்றுப்போக்கு, வயிற்றில் அமிலத் தன்மை, சிறுநீரக செயலிழப்பு, இரத்த சர்க்கரை அதிகரித்தல் ஆகிய பிரச்னைகளும் உண்டாகும். அதனால் அளவோடு சாப்பிட்டு வளமோடு இருங்கள்.

எவ்வளவு சாப்பிடலாம்

ஒரு இரவிற்கு 2 மீடியம் சைஸ் அளவுள்ள மாம்பழங்கள் போதுமானது. பெரிய சைஸ் மாம்பழமாக இருந்தால் ஒன்று போதும். கிட்டதட்ட ஒரு பௌல் அளவு என்று தோராயமாக மனதில் வைத்துக்கொள்ளுங்கள். அதுவு உங்கள் உடலுக்குத் தேவையான எல்லா நன்மைகளையும் தரும்.No comments:

Post a Comment