Sunday, 18 November 2018

ஆண்கள் கிரீன் டீ குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..? என்னென்னு தெரிஞ்சிக்கோங்க..

நாம் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிப்பது அன்றாட பழக்கமாக மாறி விட்டது. ஒரு சிலருக்கு இந்த காலை பழக்கம் இருப்பதில்லை. ஆனால், காலையில் காபி (அ) டீ குடிக்கும் இந்த பழக்கம் உங்களுக்கு முழு பலனை தர வேண்டுமென்றால் அதற்கு கிரீன் தான் சரியான தேர்வு.



குறிப்பாக ஆண்கள் கிரீன் டீயை குடிப்பதால் புற்றுநோய் முதல் பிறப்புறுப்பு பிரச்சினைகள் வரை பலவித வழிகளில் இது உதவும் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். வாங்க, எப்படி கிரீன் டீ ஆண்களை பலவித நோய்களில் இருந்து காக்கிறது என்று இனி அறிவோம்.

கிரீன் டீ

உடல் எடை கூடுதல், புற்றுநோய், இதய கோளாறுகள் போன்ற ஏராளமான வியாதிகளுக்கு இந்த கிரீன் டீ அருமையான மருந்தாக உள்ளது. குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படுகின்ற பல வித பிரச்சினைகளுக்கு இது தீர்வை தரவல்லது. எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பலமாக்க கிரீன் டீ சிறந்த ஆயுதம்.

அதிக ஆற்றல்

உடல் அடிக்கடி சோர்வு அடிந்தால் இனி உங்களுக்கான வைத்தியம் 1 கப் கிரீன் டீ தான். மூளையின் ஆற்றலை சுறுசுறுப்பாகவும், உடலுறவின் போது அதிக செயல்திறனுடன் இருக்க கிரீன் டீ உங்களுக்கு உதவுகிறது. மேலும், நீண்ட நேரம் எந்த வேளையில் ஈடுபட வேண்டுமென்றாலும் 1 கப் கிரீன் டீ ஆண்களுக்கு போதும்.

ஆண்களின் பிரச்சினை

ஆண்களின் பெரிய பிரச்சினையாக இந்த மலட்டு தன்மை பார்க்கப்படுகிறது. பலர் தாம்பத்திய வாழ்வில் இந்த மலட்டு தன்மை பிரச்சினை மிக மோசமான விளைவை ஏற்படுத்தி உள்ளது. மலட்டு தன்மையை தடுக்க இந்த கிரீன் டீ உதவும் என சில ஆய்வுகள் சொல்கிறது.

பிறப்புறுப்பு புற்றுநோயை குணப்படுத்த

கிரீன் டீ குடித்து வரும் ஆண்களுக்கு பிறப்புறுப்பு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். உடலில் புற்றுநோய் செல்கள் வளர விடாத அளவிற்கு இவை எதிர்ப்பு சக்தியை பன்மடங்காக கூட்டி விடுமாம். எனவே 50% பிறப்புறுப்பு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை இவை குறைக்கிறதாம்.

அழுக்குகளை சுத்தம் செய்ய

ஆண்களின் உடல் முழுவதும் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய இந்த கிரீன் டீ ஒரு அற்புத மருந்தாக வேலை செய்கிறது. 5,000 வருடத்திற்கு முன்பு இருந்தே ஆசிய நாடுகளில் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதற்காக இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

இளமையான தோற்றத்திற்கு



ஆண்களே, நீங்கள் சீக்கிரமாகவே முதுமையான தோற்றத்தை அடைந்து விடுகிண்றீர்கள் என்றால் உங்களுக்கான தீர்வு கிரீன் டீ தான். செல்கள் சிதைவடைவதை தடுத்து வயதாகாமல் தடுக்கிறது. மேலும், முகத்தின் பொலிவையும் இது இரட்டிப்பாக செய்கிறது.

கொழுப்புக்களை கரைக்க

அளவுக்கு அதிகமான கொழுப்பு உணவுகளை சாப்பிட்டு விட்டு உடல் பருமன் கூடி விட்டதா..? இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது கிரீன் டீ. கிரீன் டீயை பற்றிய ஆராய்ச்சியில், தினமும் கிரீன் டீயை குடிக்கும் ஆண்களின் உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகள் கரைந்து விடுமாம். எனவே உடல் எடையை இது வேகமாக குறைக்க வழி செய்யும்.

காரணம் என்ன..?

ஆண்களின் சிறந்த நண்பனாக ஏன் இந்த கிரீன் டீயை குறிப்பிடுகின்றனர் என்பதற்கு காரணமும் உள்ளது. Polyphenols என்பது ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்களின் கூட்டு மூலமாகும். இவை ரத்த நாளங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் முதல், புற்றுநோய் வரை சரி செய்ய வல்லது. குறிப்பாக ஆண்களின் மலட்டு தன்மையை போக்கும். இந்த மூல பொருள் கிரீன் டீயில் இருப்பதால் தான் ஆண்களுக்கு இவ்வளவு நன்மைகள் நடக்கிறது.

பலன்கள் நிறைந்த கிரீன் டீ..!

கிரீன் டீ தினமும் குடிப்பதால் பல வித நன்மைகள் உள்ளன. இதனால் உடலில் உள்ள சில முதன்மையான உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவர்கள் சொல்கின்றனர். குறிப்பாக இதயம், கல்லீரல், எலும்பு மூட்டுகள் போன்றவற்றில் நோய்கள் ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.

புத்தி கூர்மையை அதிகரிக்க

தினமும் கிரீன் டீ குடிக்கும் ஆண்களுக்கு புத்தி கூர்மை அதிகரிக்கும் என கிரீன் டீயை பற்றிய ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இதில் உள்ள L-theanine என்கிற மூல பொருள் மூளையின் செயல்திறனை அதிகரிக்க வைக்கிறதாம்.

No comments:

Post a Comment