Sunday, 2 September 2018

தலைமுடி உதிர்வதைத் தடுக்க சில டிப்ஸ்...!



பூசணி கொடியின் கொழுந்து இலையை பறித்து சாறினை பிழிந்து தலையில் ஏற்பட்டுள்ள சொட்டையில் தடவி வர முடி வளரத் தொடங்கும்.


வேப்பிலையை வேக வைத்து அந்த நீரை தலைக்கு குளிக்கும் பொது பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது குறையும்.
 
தேங்காய் எண்ணெய், விளகெண்ணை, நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதனை ஒன்றாக கலந்து தலையில் மசாஜ் செய்து பின்பு ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும்.
 
சின்ன வெங்காயத்தை அரைத்து தலைப்பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வர பொடுகும் அதனால் ஏற்படும் முடி கொட்டுதலும் நிற்கும்.
 
கற்றாழையின் சாறினை எடுத்து தலையில் தேய்த்து குளித்து வர உடல் சூடு குறைந்து பொடுகு நீங்கி முடி நன்கு வளரும்.
 
செம்பருத்திப் பூவை கசக்கி சாறு பிழிந்து கொண்டு அந்த சாறினை முடி கொட்டிய இடத்தில தேய்த்து வர முடி கொட்டுவது நின்று முடி வளரத் தொடங்கும்
 
வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொண்டு தலையில் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது நின்று முடி நன்கு வளர தொடங்கும்.
 
பாதாம் எண்ணெய்யை தலையின் வேர்க்காலில் தேய்த்து நன்றாக ஊற வைத்து குளித்து வர முடி கொட்டுவது நிற்கும்.
 
கொத்தமல்லி இலை சாறினை எடுத்து கொண்டு தலையில் தடவி வர முடி கொட்டுவது தடுக்கப்படும். 
 
சோம்பினை நன்கு அரைத்துக் கொண்டு தலையில் வாரம் மூன்று முறை தேய்த்து வர முடி கொட்டுவது தடுக்கப்படும்.
 
பாலில் முடி வளரத் தேவையான புரதச்சத்து அதிகம் உள்ளது. பாலுடன் மிளகுப் பொடியை கலந்து தலையின் வேர்க்கால்களில் தேய்த்து பதினைந்து நிமிடம்  ஊற வைத்து குளித்து வர முடி கொட்டுவது தடுக்கப்படும்.