Sunday, 2 September 2018

தலைமுடி உதிர்வதைத் தடுக்க சில டிப்ஸ்...!பூசணி கொடியின் கொழுந்து இலையை பறித்து சாறினை பிழிந்து தலையில் ஏற்பட்டுள்ள சொட்டையில் தடவி வர முடி வளரத் தொடங்கும்.


வேப்பிலையை வேக வைத்து அந்த நீரை தலைக்கு குளிக்கும் பொது பயன்படுத்தினால் தலைமுடி உதிர்வது குறையும்.
 
தேங்காய் எண்ணெய், விளகெண்ணை, நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதனை ஒன்றாக கலந்து தலையில் மசாஜ் செய்து பின்பு ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும்.
 
சின்ன வெங்காயத்தை அரைத்து தலைப்பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வர பொடுகும் அதனால் ஏற்படும் முடி கொட்டுதலும் நிற்கும்.
 
கற்றாழையின் சாறினை எடுத்து தலையில் தேய்த்து குளித்து வர உடல் சூடு குறைந்து பொடுகு நீங்கி முடி நன்கு வளரும்.
 
செம்பருத்திப் பூவை கசக்கி சாறு பிழிந்து கொண்டு அந்த சாறினை முடி கொட்டிய இடத்தில தேய்த்து வர முடி கொட்டுவது நின்று முடி வளரத் தொடங்கும்
 
வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொண்டு தலையில் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது நின்று முடி நன்கு வளர தொடங்கும்.
 
பாதாம் எண்ணெய்யை தலையின் வேர்க்காலில் தேய்த்து நன்றாக ஊற வைத்து குளித்து வர முடி கொட்டுவது நிற்கும்.
 
கொத்தமல்லி இலை சாறினை எடுத்து கொண்டு தலையில் தடவி வர முடி கொட்டுவது தடுக்கப்படும். 
 
சோம்பினை நன்கு அரைத்துக் கொண்டு தலையில் வாரம் மூன்று முறை தேய்த்து வர முடி கொட்டுவது தடுக்கப்படும்.
 
பாலில் முடி வளரத் தேவையான புரதச்சத்து அதிகம் உள்ளது. பாலுடன் மிளகுப் பொடியை கலந்து தலையின் வேர்க்கால்களில் தேய்த்து பதினைந்து நிமிடம்  ஊற வைத்து குளித்து வர முடி கொட்டுவது தடுக்கப்படும்.

Tuesday, 24 July 2018

நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த அன்றாட உணவில் தயிர்...!

தயிரில் பல வித உடல்நல பயன்கள் அடங்கியுள்ளது. நம்முடைய தினசரி வாழ்க்கையில் தயிரை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்துவது மிகவும்   நல்லதாகும். பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது.
 
அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் மற்றும் தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
 
பொடுகை நீக்க தயிர் சிறந்த தீர்வாக விளங்கும். தலைச்சருமத்தின் மீது கொஞ்சம் தயிரை தடவினால் போதும், பொடுகு தொல்லை நீங்கும். பூஞ்சை எதிர்ப்பியாக தயிர் செயல்படுவதால், பொடுகை நீக்க இது உதவிடும்.
 
புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும். தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி   சேர்த்தால் புளிக்காது.
 
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஈஸ்ட் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், இதனை உட்கொண்டால் அதிலிருந்து விடுபடலாம்.
 
தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பது, நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதனால், அது பற்களுக்கும், எலும்புகளுக்கும் நல்லதாகும். எலும்புத்துளை  நோய் போன்ற சில பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், சீரான முறையில் தயிரை உட்கொள்வது நல்லது.
 
மூல நோயால் அவதிப்படுபவர்கள் தயிரை பயன்படுத்தலாம். தயிர் சாதத்துடன் இஞ்சியை சேர்த்து சாப்பிட்டால் நல்ல பயனை அளிக்கும்.

Thursday, 5 July 2018

பச்சை மிளகாயை ஒதுக்காதீங்க... அதன் நன்மைகளை தெரிஞ்சிக்கோங்க...

காரம் என்பதால் பெரும்பாலும் அனைவரும் பச்சை மிளகாயை தவிர்த்து விடுவர். ஆனால், அதில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. அதன் தொகுப்பே இது...


 

# பச்சை மிளகாயில் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் இருக்காது. அதைவிட பச்சை மிளகாயில் இருப்பது விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ்கள்தான். 
 
# பச்சை மிளகாயில் விட்டமின் சி அதிகம். இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திடும், நோய்த் தொற்று பரவாமல் காத்திடும்.
 
# பச்சை மிளகாய் மென்று சாப்பிட்டால் எச்சில் அதிகமாக சுரக்கும். இதனால் உணவுப்பொருள் எளிதாக ஜீரணமாகும்.
 
# பச்சை மிளகாயில் இருக்கும் விட்டமின் சி இரும்புச்சத்தை கிரகித்துக் கொள்ள உதவிடும். அனீமியாவை எதிர்த்துப் போராடும். 
 
# சர்க்கரை நோய் இருப்பவர்கள் பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பாதுகாத்திடும்.
 
# பச்சை மிளகாயில் இயற்கையாகவே இருக்கும் சிலிக்கான் சத்து தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். 
 
# பச்சை மிளகாயில் உள்ள பொட்டாசியம், இரும்பு மற்றும் மக்னீசியம் சீரான இதயத்துடிப்பிற்கும், ரத்த அழுத்தத்திற்கும் மிகவும் அவசியமானது.

Friday, 15 June 2018

வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருகிறது.நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை எல்லாமே, வெறும்  வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால், நடக்காமல் தடுக்கப்படும்.
 
பழச்சாறு அருந்துவதாக இருந்தால், புதிதான பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட் மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள்  தவிர்ப்பது நல்லது. சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்
 
உங்கள் உடல் உறுப்புகளை சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும் மூன்று நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம்  இருக்கலாம். அந்த மூன்று நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.உடலிலிருந்து நச்சுக்கள் வெளியேறிவிடும். 
 
மூன்று வேளையும் சாதம் சாப்பிடுபவர்கள் ஒரு வேளை சாதத்திற்கு பதிலாக பழங்களைச் சாப்பிட்டு வந்தால் உடல் நிலையில் நல்ல மாற்றங்கள் தென்படத் துவங்கும். உடலில் இரத்தம் அதிகரிக்கும். வாழைப்பழம் , ஆப்பிள், திராட்சை , பப்பாளி ஆகியவற்றை தினமும் சாப்பிடலாம்.

பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள். ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது. சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது. 
 
பழச்சாறு சாறு அருந்துவதை விட, பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,  மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும். ஏனென்றால் நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின்  சாப்பிடுவது நல்ல பயன் தரும்.

Tuesday, 12 June 2018

வைட்டமின் ‘சி’ அதிக அளவு நிறைந்த கொய்யாப் பழம்

நோய் எதிர்ப்புத் திறனை அதிகப் படுத்த உணவில் அதிக அளவில் பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செர்க்கப்படும் பழங்களில் முக்கியமான இடத்தினைப் பிடிப்பது கொய்யாப் பழம்.கொய்யாப் பழம் வைட்டமின் ‘சி’ அதிக அளவு நிறைந்துள்ளது. வைட்டமின் ‘சி’ நோய் எதிர்ப்புத் திறனை அதிரிப்பதுடன் சாதாரணமான நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளின் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.
 
கொய்யாப் பழம் சாப்பிடுவதனால் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் இவற்றில் லைக்கோபீனே நிறைந்துள்ளதால் மார்பகப் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகிறது.
 
கொய்யாப் பழத்தில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது. எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும்.

Friday, 8 June 2018

நடையை மிஞ்சிய மருந்தில்லை!

யானைக்கும் அடி சறுக்கும்’ என்ற பழமொழி பழசு. ‘யானைக்கும் சுகர் வரும்’ என்பதுதான் புதுசு. வனவிலங்குகளில் நம்மைப் பிரமிக்க வைக்கிற யானைக்கும் உடற்பருமன், நீரிழிவு, மாரடைப்பு போன்ற நோய்கள் வர ஆரம்பித்திருப்பதால், காட்டுயிர் மருத்துவ உலகம் ரொம்பவே கவலை கொண்டிருக்கிறது. குறிப்பாக, நம் ஊரில் கோயில் யானைகளுக்குப் பொங்கலும் பழமும் கொடுத்துக் கொடுத்து அவற்றை நீரிழிவுக்குள் சிக்க வைத்துவிட்டோம்.


விலங்குக் காட்சிச் சாலையில் உள்ள யானைகள் அதிகம் நடக்காமல், நமக்குக் காட்சிப்படுத்தப்படும் பொருளாகிப் போனதாலும் அதற்கும் நீரிழிவு வர ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் யானையின் ‘லெப்டின் ஹார்மோன்’, அது சுரக்கும் இன்சுலின் அளவு, அதன் ரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு போன்றவற்றைக் கணக்கிட்டு, ‘கொஞ்சம் யானையை நடக்க விடுங்கப்பா’ எனக் கால்நடை மருத்துவர்களின் குரல் சத்தமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.
தன் இரைக்காக சாதாரணமாக 7-15 கி.மீ. தினசரி நடந்த யானை, எப்படிக் கோயில் வாசலிலும் வனவிலங்குக் காட்சிச் சாலையிலும் ‘தேமே’ என நிற்க வைக்கப்பட்டதால் அதற்குத் தொப்பையும் சுகரும் தொற்றிக்கொண்டதோ அதே சிக்கல்தான் மனிதனுக்கும். மோதகப் பிரியர் காட்டில் இருந்தாலும் சரி, நாட்டில் இருந்தாலும் சரி நடந்தாக வேண்டும்.
நடையே முதல் மருந்து
வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களும் கைபேசி ‘ஆப்’பில் வந்ததுவிட்டன. இதனால் நடை மிகவும் அந்நியப்பட்டுப்போனது. இன்றைக்கு நகர்ப்புறங்களில், மிகப் பெரிய அளவில் நீரிழிவு நோய் அதிகரித்தமைக்கு இதுதான் முக்கியக் காரணம்.
நீரிழிவை வராது தடுக்க வேண்டும் என்றாலும் சரி, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றாலும் சரி அல்லது நீரிழிவால் வேறு உறுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றாலும் சரி, மிக மிக முக்கியமான பயிற்சி நடைப்பயிற்சி மட்டுமே. நடைக்கு மாற்றாக உலகில் எந்த மருந்தும் இல்லை.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த இரண்டு முதியவர்கள், நீரிழிவு நோயாளிகளிடம் நான் அடிக்கடி உதாரணம் காட்டும் நபர்கள். இருவரும் வெகு சமீபத்தில் தம் 92 – 93 வயதில் இயற்கை மரணமடைந்தார்கள். இருவரும் 45 – 50 ஆண்டுகளாக நீரிழிவு நோயைக் கொண்டிருந்தவர்கள். அவரவர் குடும்ப மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை மட்டும் எடுத்து வந்ததோடு, தினசரி 4 – 7 கி.மீ. அவர்கள் இருவரும் நடந்தார்கள். அந்த நடைப்பயிற்சியை இறுதிவரை அவர்கள் நிறுத்தவில்லை. அவர்கள் வாழ்க்கையை நலமாக நகர்த்த உதவியது நடைப்பயிற்சி மட்டும்தான் என்பதில் துளியும் ஐயமில்லை.
வியர்வையைக் கவனியுங்கள்!
தினசரி 4 – 5 கி.மீ. நடை, மிகச் சிறப்பு. காலையோ மாலையோ நடக்கலாம். நீரிழிவு நோயாளிகள் மாலையில் நடக்க நினைத்தால், சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் ஆகியிருப்பது நலம். காலையிலும் சிறிய கோப்பைத் தேநீர் எடுத்துவிட்டு அல்லது சற்று ஆற்றல் தரும்படியான சிறு துண்டு கொய்யாவோ சர்க்கரை – மைதா சேர்க்காத தானிய பிஸ்கட்டோ சாப்பிட்டுவிட்டு 20 மணித்துளிக்குப் பின்னர் நடைப்பயிற்சிக்குப் போகலாம்.
காலுறை, காலில் காய்ப்பு ஏற்படுத்தாத காலணி அவசியம். உள்பக்கம் மென்மையாக உள்ள காலணி அணிய வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்குக் கால் பாதங்களைப் பாதுகாப்பது அவசியம் என்பதால் வெறும் காலில் நடைப்பயிற்சிக்குப் போவதைத் தவிர்க்கலாம்.
நடக்கும் 20 மணித்துளிகளுக்கு ஒருமுறை அரைக் கோப்பை நீர் அருந்துவது நலம். உடலில் நீர் குறையாமலிருப்பது நீரிழிவு நோய்க்கு நல்லது. நிறைய வியர்க்கும்பட்சத்தில் ஒரு விஷயத்தை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். வியர்வை சாதாரண நடை வியர்வையா நீரிழிவால், ‘லோ சுகர்’ (தாழ் சர்க்கரை) காரணமாக வரும் வியர்வையா என்பதை உணர வேண்டும். தாழ் சர்க்கரை வியர்வையில், கூடவே மனக்குழப்பம், கிறுகிறுப்பு, வெலவெலப்பு ஏற்படும். இன்சுலின் போடுபவர்கள், ‘இது தாழ் சர்க்கரை நோய் வியர்வையா?’ என்பதை அறியாமலிருக்கக் கூடாது.
நடை என்பது தவம்
ஓட்டத்தைவிட, நடை கூடுதல் பயனளிப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அதற்காகச் சாலையில் ‘விண்டோ ஷாப்பிங்’ செய்வது மாதிரியான அன்ன நடை வேண்டாம். கைகளை வீசி நடப்பது நல்லது. சென்னைப் பூங்காக்களில் 8 போட்டு நடப்பது தற்போது பிரபலம். ‘யோகிகள், சித்தர்கள் அப்படி நடந்தார்கள்’ என இதைப் பற்றி பேச்சு உண்டு. எப்படியோ, நடந்தால் சரி.
பங்குச் சந்தை வீழ்ச்சி, சனிப் பெயர்ச்சி, மருமகள் செய்யும் அழிச்சாட்டியம், ‘அரசாங்கம் அப்படீன்னு ஒண்ணு இருக்கா என்ன?’ என்பது போன்ற பல விவாதங்களோடு, கும்பலாய் நடப்பதைத் தவிர்க்க வேண்டும். நடை ஒருவித தவம். மனதுக்கினிய பாடல்களைச் சில மணித்துளிகள் கேட்பதும், மனத்தின் எண்ணங்களை ஆகாயத்தில் பரவலாக்கும் விதமாக நினைவுகளைக் கொட்டித் தனியே நடப்பதும்தான் நடைப்பயிற்சியில் கூடுதல் பலனைத் தரும். நடைப்பயிற்சி கோபத்தைக் குறைக்கும். மூளையின் உடனடி துல்லிய செயல்திறனைக் கூட்டும்.
நடையில் நுண்ணிய புற ரத்த நாளங்களுக்கு ரத்தம் பீய்ச்சப்படுவதால், ‘மைக்ரோ வாஸ்குலர்’ பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அதனால் ரத்தச் சர்க்கரை கட்டுப்படுவதோடு கண்கள், இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் வெகுவாகப் பாதுகாக்கப்படுகின்றன.
x

Monday, 14 May 2018

புற்றுநோய்…

சப்தமில்லாமல் நம் உடலில் உருவாகி, கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இறப்பின் வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நோய்களுள் புற்று நோயும் ஒன்று. இது வந்துவிட்டாலே இறப்பு உறுதிதான் என்ற நிலை மாறி, அதற்கான சிகிச்சைமுறைகள் வந்துவிட்டாலும், மக்களிடம் பயமும் பாதிப்பும் அதிகம்தான். ஆனால், இந்த நோயிலிருந்தும், இதனால் ஏற்படும் பயத்திலிருந்தும் விடுபடும் வழியை தருகிறது இக்கட்டுரை. தொடர்ந்து படியுங்கள்…

டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:


புற்றுநோய் என்றால் என்ன?


உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் (செல்கள்) பாதிக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கிறோம். இந்த நோய்பற்றி அறிந்துகொள்வதற்குமுன் இயல்பாக உள்ள உயிரணுக்கள் எவ்வாறு புற்றுநோய் அணுக்களாக மாறுகிறது என்று பார்ப்போம்!


நம் உடல் பலவகையான உயிரணுக்களால் ஆனது. உடல் வளர, ஆரோக்கியமாக இருக்க, இந்த உயிரணுக்கள் வளர்ந்து பெருகி, மேலும் பல உயிரணுக்களை உருவாக்குகின்றன. இந்தச் சீரான பணியில் ஏதேனும் தவறு ஏற்படும்போது, புதிய உயிரணுக்கள் அதிகமாக உருவாகிவிடுகின்றன. பழைய உயிரணுக்கள் அவற்றின் கால அளவை மீறி உயிர் வாழ்ந்துவிடுகின்றன. இந்த அதிகப்படியான உயிரணுக்கள் உடலில் கட்டியாகத் தோன்றுகின்றன.


எல்லாக் கட்டிகளுமே புற்றுநோய்க் கட்டிகள் அல்ல. புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இல்லை. இத்தகைய கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினால் மீண்டும் தோன்றுவதில்லை; அவை உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவுவதில்லை.


சிகிச்சையற்ற நிலையில் புற்றுநோய் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றி வளர்கின்றன. அவை சுற்றியுள்ள மற்ற திசுக்களை ஆக்கிரமித்து அழிக்கின்றன. ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகின்றன. இதனால், உறுப்பின் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு இறப்பு ஏற்படுகிறது.


புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புற்றுநோய்க்கு காரணம் என்ன?


இதற்கு ஒரு குறிப்பிட்ட காரணி இல்லை. அடிப்படையாக உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது. புகையிலை உபயோகித்தல், உணவுமுறைகள், சூரியனின் கதிர்வீச்சு, மாசு மற்றும் நச்சுத்தன்மையுடைய வேலை மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை, வாழ்க்கைமுறை ஆகியவை இம்மாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இத்தகைய மரபணு மாற்றங்கள் பெற்றோர்களிடம் இருந்து பரம்பரையாகவும் வரலாம்.


சில வைரஸ்களும், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. உதாரணமாக எச்.ஐ.வி, ஹெபடைட்டிஸ் போன்றவை.


நெருங்கிய உறவினர்களுக்குப் புற்றுநோய் இருந்தால் மருத்துவரிடம் விபரம் தெரிவித்து புற்றுநோய் உங்களுக்கு வரும் வாய்ப்பு குறித்து கலந்தாலோசிக்கவும்.


புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்:


உடலில் புற்றுநோய் ஏற்படும் பாகத்தைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். கீழ்க்கண்ட அறிகுறிகள் புற்றுநோய் தவிர மற்ற நோய்களிலும் ஏற்படலாம். எனவே, இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவரை அணுகிப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.


குரலில் திடீர் மாற்றம், தொடர் இருமல், குரலில் கரகரப்பு


முழுங்குவதில் தொடர் சிரமம், தொண்டையில் அடைப்பு போல் தோன்றுதல்
நாக்கை அசைப்பதில் சிரமம்


மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம். (உதாரணம்: தொடர் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு) சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம்.
உடலில் கட்டி தோன்றுதல். புற்றுநோயில் ஆரம்ப கட்டத்தில் வலி ஏற்படுவதில்லை. பரவிய பிறகுதான் வலி ஏற்படும்.


உடலில் உள்ள மச்சங்கள் அல்லது மருக்கள் பெரிதாகுதல், அல்லது அவற்றின் நிறத்தில் மாற்றம்


காரணமில்லாமல் எடை குறைவு


பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி மாதவிடாய் (post menopause) நின்ற பிறகும் ரத்தப்போக்கு


புற்றுநோய்க்கு முந்தைய நிலையை எவ்வாறு கண்டுகொள்வது?


வாயில் தோன்றும் புற்றுநோய்கள்


புகை மற்றும் புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள் மாதத்துக்கு ஒருமுறையாவது தாங்களே கண்ணாடியின் உதவியுடன் வாயைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது.
ஆறாத புண்
கட்டி, தடிப்பு
ஈறு, நாக்கு மற்றும் வாயின் பிற பகுதிகள் வெள்ளை அல்லது சிவப்பு நிறமாகுதல்


மார்பகப் புற்று நோய்கள்


பெண்கள் மார்பகங்களைச் சுய பரிசோதனை (மாதம் ஒரு முறை) செய்து கொள்வதன் மூலமும், மருத்துவர் மூலம் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வதன் மூலமும், மேமோகிராபி (mam­mography) மூலம் பரிசோதனை (40 வயதுக்கு மேற்பட்டோர் வருடத்துக்கு ஒரு முறை) செய்துகொள்வதன் மூலமும் மார்பகக் கட்டிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வாய்ப்பு அதிகரிக்கிறது.


கர்ப்பப்பை வாய் புற்றுநோய்கள்


உடலுறவு ஆரம்பித்த மூன்று வருடங்களுக்குப் பிறகு கர்ப்பப்பையின் வாயிலில் வரும் புற்று-நோய்க்காக மருத்துவரை அணுகி Pap Smear செய்துகொள்வது நல்லது.


புற்றுநோயைத் தடுக்க முடியுமா?


புற்றுநோயைத் தடுக்க உத்திரவாதமான முறை ஏதும் இல்லை. ஆனால், சரியான வாழ்க்கைமுறையின் மூலம் நோய் ஏற்படும் வாய்ப்பை பெருமளவில் குறைக்க முடியும்.


புகையிலைப் பொருட்களைப் (உதாரணம்: சிகரெட், பீடி, பான் வகைகள்) பயன்படுத்தாமை மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் ஒரு சேர இருப்பது தொண்டைப் புண்களின் வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


குறைந்த கொழுப்பு, அதிகக் காய்கறி, பழம், முழுமையான தானியங்கள் உட்கொள்ளுதல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுவகைகளைத் தவிர்த்தல்
உடல் பருமன் ஆகாமல் பார்த்துக்கொள்தல்.


சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாத்தல். சூரியக்கதிர் தடுக்கும் களிம்பு (sunscreen lotion) பயன்படுத்துதல் மற்றும் இதற்காகத் தகுந்த உடையணிதல்.
சுத்தமான சூழலில் இருத்தல்
வைரஸ்களால் ஏற்படும் குறிப்பிட்ட புற்றுநோய்களை தடுப்பூசி மூலம் தடுக்கலாம்.


புற்றுநோயும் வலியும்:


புற்றுநோய் என்றால் அதிக வலி தரும் நோய் என்று பரவலான கருத்தும் பயமும் உள்ளது. எந்த வகையான புற்றுநோய், எவ்வளவு பரவி உள்ளது, நோயாளியின் பொறுத்துக்கொள்ளும்தன்மை இவற்றைப் பொறுத்து வலியின் அளவு மாறுபடும். வலியைக் கட்டுப்படுத்த தகுந்த மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளும்போது வலியில் இருந்து நிவாரணம் பெறுவதுடன் வலி மருந்துகளுக்கு அடிமையாவதையும் தடுக்கலாம்.


புற்றுநோயும் மனச்சோர்வும்:


25% புற்றுநோயாளிகளை மனச்சோர்வு பாதிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய் வந்துவிட்டால் மனச்சோர்வு அடைவது இயல்பு என்று நினைத்து அதைப்பற்றி மருத்துவருடனோ நெருங்கிய உறவினர்களுடனோ சொல்லாமல் விட்டுவிடுகின்றனர். புற்றுநோய் என்று தெரிந்தவுடன் சாவு பற்றிய பயம், குடும்பத்தாரின் எதிர்காலம்பற்றிய கவலை, நோயின் தீவிரம் குறித்து பதட்டம், வாழ்க்கைமுறையில் மாற்றம், வருமானம் மற்றும் வேலை இப்படி பல சிந்தனைகளால் மனச்சோர்வு அடைய நேரிடும். இது இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுவது அவசியம். நோயாளி மட்டுமின்றி குடும்பத்தாரும் பதட்டம் மற்றும் மனச்சோர்விற்கு ஆளாகலாம். அவர்களும் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.


சிகிச்சைமுறைகள்:


உடலில் கட்டி உள்ள இடம், நோய் பரவியுள்ள நிலை, நோயாளியின் வயது, உடல்நிலை போன்றவற்றைப் பொறுத்து சிகிச்சை வேறுபடுகிறது.
மருத்துவர் கீழ்சொன்னவற்றில் ஏதாவது ஒரு முறையில் அல்லது ஏதேனும் இரண்டு முறைகளைக் கலந்து சிகிச்சை அளிப்பார். நோயைக் குணப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கவும், வாழ்க்கைத்தரத்தை (qual­ity of life) மேம்படுத்தவும் சிகிச்சை மிகவும் அவசியம்.


அறுவைச் சிகிச்சை: இது கட்டியை அகற்றுவதற்காகச் செய்யப்படுவது.
கதிரியக்கச் சிகிச்சை: (Radiotherapy): இந்த சிகிச்சை முறையில் சக்தி வாய்ந்த கதிர் மூலம் புற்றுநோய் உயிரணுக்கள் கொல்லப்படுகின்றன.
கீமோதெரபி (chemotherapy): மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நாளமில்லாச் சுரப்பிகள் சிகிச்சை: புற்றுநோய் உயிரணுக்கள் நாளமில்லாச் சுரப்பிகளைக்கொண்டு வளர்வது தடுக்கப்படுகிறது.


யோகா எவ்வாறு உதவுகிறது?


சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது யோகப் பயிற்சிகள் பெருமளவில் மனச்சோர்வு, வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுதல் போன்ற நோயின் பக்க விளைவுகளைக் குறைக்கின்றன.


யோகப் பயிற்சிகள் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் குறிப்பாக நுரையீரல், சிறுநீரகங்களுக்கு சீரான ரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்கச் செய்வதால், கழிவுப் பொருட்கள் எளிதாக வெளியேற்றப்படுகின்றன.


அண்மையில் புற்றுநோய்க்கான முக்கிய வாய்ப்புகளில் ஒன்றாக உடற்பருமன் கண்டறியப்பட்டுள்ளது. யோகப் பயிற்சிகள் உடல் பருமனைத் தடுக்கிறது.


யோகப் பயிற்சிகளால் தூக்கம் சீராகிறது. தூக்க மாத்திரையின் துணையில்லாமல் எளிதில் அதிக நேரம் தூங்க முடிகிறது.
உடல் எளிதில் சோர்வடைவதைத் தடுக்க முடிகிறது.
யோகப் பயிற்சிகள் மட்டுமின்றி நடத்தல், நீச்சலடித்தல், விளையாடுதல் போன்றவையும் உதவியாக இருக்கும்.
நோயாளிகள் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தாரும் யோகப் பயிற்சிகள் மேற்கொள்ளலாம். இதனால் மனதளவில் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து தளர்வு நிலையில் இருக்க முடிகிறது.


புற்றுநோய் பற்றி சத்குரு…


சத்குரு:


நம் நாட்டில் சாதாரணமாகக் கிடைக்கும் வேப்பிலையும், மஞ்சளும் நம் உடலில் உள்ள புற்றுநோய் அணுக்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்று நீண்ட காலமாகவே நம்பப்பட்டு வருகிறது. ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவை அவ்வளவு பலன் தராது என்றாலும் அரைத்த மஞ்சள் உருண்டை ஒன்றும் அரைத்த வேப்பிலை உருண்டை ஒன்றும் (கோலிக்குண்டு அளவில்) தினசரி சாப்பிட்டு வரும்போது புற்றுநோய் அணுக்கள் கட்டுக்குள் வைக்கப்படுகின்றன. மஞ்சள், வேப்பிலையுடன் யோகப் பயிற்சிகளும் தொடர்ந்து செய்துவரும்போது, உடலின் அனைத்துப் பகுதிகளுமே உறுதி பெறுவதால், புற்றுநோய் அணுக்கள், கட்டியாக மாறி நோயாக வெளிப்படும் வாய்ப்பு இல்லாமலே போகிறது.


உங்கள் உடலில் உள்ள ஒவ்வோர் உயிரணுவும் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகி வருகிறது. ஏனென்றால், சுற்றுச்சூழல் கேடு, ரசாயனப் பாதிப்புகள், உட்கொள்ளும் உணவு போன்ற பல விஷயங்கள் காரணமாக இருந்தாலும் முக்கியக் காரணம், மகிழ்ச்சியற்ற மனிதர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதுதான்.


மனிதர்களின் மகிழ்ச்சி தொலைந்து போகும்போது அவர்களின் உடலும் மகிழ்ச்சியற்றுப் போகிறது. எனவே, ஏதோ காரணங்களால் அவர்கள் உடலில் உள்ள சில உயிரணுக்களும் மகிழ்ச்சியை இழக்கின்றன. அப்போது அவர்களின் உயிரணுக்களே அவர்களுக்கு எதிராக வேலை செய்ய ஆரம்பிக்கிறது.


ஆனால் இந்த உடல் ஏன் தனக்கு எதிராகவே வேலை செய்ய வேண்டும்? நீங்களே உங்களுக்கு எதிராக எப்போதும் வேலை செய்வதை, இந்த உடல் உங்களுடன் வைத்துள்ள அனுபவத்தைக் கொண்டு கவனிக்கிறது. எனவே அதுவும் அதே பாணியைப் பின்பற்றி தனக்கு எதிராகவே வேலை செய்கிறது. உயிரணுக்களின் இந்தச் செயலைத்தான் நீங்கள் புற்றுநோய் என்கிறீர்கள். எனவே அதற்குப் புத்துயிர் ஊட்டுவது அவசியமாகிறது. நமது யோக வகுப்புகள் இதைத்தான் செய்கின்றன. ஈஷா யோகாவில் கற்றுத்தரப்படும் சாம்பவி பயிற்சி இப்பணியைத் திறம்படச் செய்கிறது.


புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழு நாட்கள் ஈஷா யோகா வகுப்பில் பங்கேற்கும்போது ஏழு நாட்கள் வகுப்பின் முடிவிலேயே உடல்நலம் முன்னேற்றத்தை அவர்களால் தெளிவாக உணர முடிகிறது. சில மாதங்கள் பயிற்சிகளுக்குப் பிறகு உடலளவிலும் மனதளவிலும் மிகுந்த ஆரோக்கியத்தை உணர்கிறார்கள்.


நோயிலிருந்து குணம் பெற முடியாமல் இறக்க நேரிடுவோம் என்று தெரிந்துவிட்டால்கூட இறப்பை சஞ்சலமில்லாமல் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்துக்கு வந்துவிடுகிறார். ஏனெனில், யோகா என்பது வெறும் பயிற்சி மட்டுமல்ல, உங்களையும் வாழ்க்கையையும் முழுமையாகப் புரிந்துகொள்ளவும் உங்களுக்கு உதவுகிறது!இரண்டாவது அறிவு நமது உடலில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து செல்களும் தம்மைத் தாமே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் புதுபித்துக் கொள்கின்றன. குடல்கள் 36 மணி நேரத்திற்கு ஒரு முறையும் வெள்ளையணுக்கள் 13 நாட்களுக்கு ஒரு முறையும், சிவப்பணுக்கள் 120 நாள், கல்லீரல் 1 வருடம் இவாறாக சாராசரி ஒரு வருடத்தில் அணைத்தது உறுப்புகளும் புதுப்பித்துக் கொள்கின்றன, இந்த உடலில் உறுப்புகள் தம்மைத்தாமே புதுபிக்கும் அறிவு கெட்டுப் போனால் கேன்சர் என்ற நோய் வரும் கேன்சர் என்றால் என்ன? கேன்சர் என்றால் உடலில் உள்ள உறுப்புக்கள் தம்மைத்தாமே புதுப்பிக்கும் அறிவு கெட்டுப்போய்விட்டது என்று பொருள்.


உதாரணமாக இரத்தத்தில் வெள்ளையணுக்கள் 13 நாட்களில் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு நம் உடலில் ஒரு அறிவு இருக்கும் அந்த அறிவு கேட்டுபோய்விட்டால் 13 நாட்களில் புதுபிக்க வேண்டிய அறிவு தவறுதலாக 330 நாட்களில் புதுப்பிப்பதற்காக அறிவை மாற்றிக் கொண்டால் என்னாகும்? காலதாமதமாகச் சென்று இரத்தத்தில் வெள்ளையனுக்களைப் புதுப்பிக்கும் அப்போது இரத்தத்தின் வெள்ளையணுக்களின் அளவு குறையும் பொதுவாக 4500 லிருந்து 11500 வரை இருக்க வேண்டும் ஆனால் 4500 க்கும் கிழே குறையும் இதற்குப் பெயர் இரத்தப் புற்று நோய். (Blood Cancer).
13 நாட்களில் புதுபிக்க வேண்டிய இரத்தத்தில் வெள்ளையனுக்கள் 13 நாட்கள் என மறந்து 13 நிமிடம் என மாறிவிட்டால் என்ன ஆகும். சீக்கிரம் சீக்கிரம் இரத்தத்தில் வெள்ளையணுக்களை உருவாக்கி கொண்டே இருக்கும். தேவையில்லாமல் அப்போது இரத்தத்தில் வெள்ளையணுக்கள் அதிகரிக்கும் 11000 என்ற அளவு அதிகமாகி 1 லட்சம் 2 லட்சம் வரை சென்று விடும். இதுவும் இரத்தப் புற்று நோய் என்று பொருள். எனவே இரத்தத்தில் இரத்தப் புற்று நோய் என்பது வெள்ளை அணுக்களைப் புதுப்பிக்கும் அறிவை உடல் இழந்து விட்டது என்று அர்த்தம். எனவே உடலில் இரத்தத்தில் வெள்ளையணுக்கள் புதுபிக்கும் அறிவை கொடுப்பதன் மூலமே மட்டுமே இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்த முடியுமே தவிர ஹீமோதெரப்பியின் மூலம் இரத்தத்தின் வெள்ளையணுக்கள் அதிகமாக இருந்தால் குறைப்பதும், குறைவாக இருந்தால் அதிகரிப்பதும் என்று கண்ட்ரோல் செய்தால் இரத்தப் புற்று நோயைக் குணப்படுத்த முடியாது நோயின் அளவு அதிகம் தான் ஆகும்.   


எலும்பில் உள்ள செல்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்களைப் புதுப்பிக்க வேண்டும் அப்படிக் குறிப்பிட்ட நாட்களில் புதுப்பிக்காமல் கால தாமதமாக புதுப்பித்தால் செல்கள் அழுகிப் போகும். குறிப்பிட்ட நாளில் புதுப்பிக்காமல் அதற்கு முன்பாகவே சீக்கிரம் சீக்கிரம் புதுப்பித்தால் அந்த எலும்பு வீங்கிப் போகும் இதற்குப் பெயர் எலும்புப் புற்று நோய்(Bone Cancer).
இப்படி நமது உடலில் எல்லா உறுப்பும் ஒரு குறிப்பிட்ட நாளில் புதுப்பித்துக்கொண்டிருக்கிறது. இப்படிக் குறிப்பிட்ட நாளில் புதுப்பிக்காமல் காலதாமதமாக புதுப்பித்தாலே அல்லது மறந்து போனாலோ அதற்குப் பெயர் கேன்சர்.


செல்கள் புதுப்பிக்கும் நாள் காலதாமதமானால் அழுகிப்போகும். விரைவாகப் புதுப்பித்தால் வீங்கிப்போகும் கேன்சரில் இரண்டு, வகையுண்டு, ஒன்று அழுகிப் போகும் இல்லை, வீங்கிப் போகும் அழுகிப்போனால் செல்கள் புதுப்பிப்பது காலதாமதமாகிறது என்று அர்த்தம் வீங்கிபோனால் செல்கள் புதுபிப்பது காலதாமதமாகிறது என்று அர்த்தம் வீங்கிபோனால் தேவையில்லாமல் செல்கள் உற்பத்தியாகின்றன என்று அர்த்தம் இப்படி நுரையீரல் தன்னைப் புதுப்பிக்கும் அறிவை இழந்துவிட்டால் நுரையீரல் புற்று நோய் என்று பெயர் கண் தன் புதுப்பிக்கும் அறிவை இழந்துவிட்டால் கண்ணில் கேன்சர் என்று பெயர் இப்படி உடலில் எந்த உறுப்பு தன்னைப் புதுபிக்கும் அறிவை மறந்து விருகிறதோ அல்லது கெட்டுவிடுகிறதோ அந்த உறுப்பில் கேன்சர் என்று கூறுகிறார்கள்.
நோய்க்கிருமியை கொலை செய்யும் அறிவு கெட்டுப்போனால் எய்ட்ஸ், உறுப்புகளை புதுபிக்கும் அறிவு கெட்டுப்போனால் கேன்சர். உயிர்க்கொல்லி நோய்களான கேன்சருக்கும் எய்ட்ஸ்சுக்கும் சரியான காரணம் இதுவரை எந்தப் புத்தகத்திலும் எந்த மருத்துவத்திலும் எந்த இண்டர்நெட்டிலும் கூறப்படவில்லை. ஆனால் நோயாளிகளைத் தனியாக அழைத்து சென்று உங்கள் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் உங்களுக்கு உயிர் கொல்லி நோய் கேன்சர் எய்ட்ஸ் வந்து விட்டது என டமால் என்று உடைப்பார்கள்.


நோயாளியான நீங்கள் கேன்சருக்கும் எய்ட்ஸ்சுக்கும் என்ன காரணம் என்று மருத்துவரைக் கேட்டால் இதுவரை இதற்குச் சரியான காரணம் கண்டுபிடிக்கவில்லை இது சம்பந்தமாக ஆராய்ச்சி நடக்கிறது என்று கூறுவார்கள். குணப்படுத்த முடியுமா? என்று கேட்டால் குணப்படுத்த முடியாது இது சம்பந்தமாக ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது என்று கூறுவார்கள். சரியான மாத்திரை இருக்கிறதா என்று கேட்டால் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது சம்பந்தமாக ஆராய்ச்சி நடக்கிறது என்று கூறுவார்கள். பின்னர் நான் என்னதான் ஆவேன்? என்று கேட்டால் நீங்கள் கண்டிப்பாக இறந்து போய்விடுவீர்கள் என்று நமக்கு நாள் குறித்துத் தருவார்கள். ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள் கேன்சர் எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்களுக்கு இதுவரை சரியான காரணமும் தெரியவில்லை, குணப்படுத்த சரியான மருந்து மாத்திரையும் கிடையாது, குணப்படுத்தவும் முடியாது, இறந்து தான் போவீர்கள் என்று கூறி உலக மருத்துவர்கள் சிகிச்சைக்கு மட்டும் தினமும் வாருங்கள் பல ஆயிரம் கொடுங்கள் என்று கேட்டு சிகிச்சை அளிக்கிறார்களே இது என்ன நியாயம் எனவே ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று சொல்வதற்கு மருத்துவர் நமக்குத் தேவையா?


கேன்சர் எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்களுக்குக் காரணத்தைப் புரிந்து கொள்ளுங்கள் இரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுபோகும் போது அதைக் குணப்படுத்தத் தெரியாமல் கண்ட்ரோல் செய்கிறோம் என்று மருந்து மாத்திரை சாப்பிடுவதே உயிர்க் கொல்லி நோய்க்கு முதல் படி. மீண்டும் இரத்தத்தில் ஒரு பொருளின் அளவு குறையும் போது அல்லது இல்லாமல் போகும் போது தவறான வைத்தியத்தைப் பயன்படுத்தினால் இரண்டாவது படி. இரத்தத்தின் அளவு குறையும் போது மீண்டும் தவறான வைத்தியத்தை பயன்படுத்தினால் மூன்றாவது படி. மனது கேட்டுபோகும் போது மனது சம்பந்தப்பட்ட நோய் வந்து விட்டது மருந்து மாத்திரை மூலமாகவே அல்லது தவறான சிகிச்சை மூலமாகவோ உங்கள் மனதை கண்ட்ரோல் செய்ய நினைத்தால் இது நான்காவது படி.

இந்த நான்கு படிகளைக்கடந்து உயிர்க் கொல்லி நோயான கேன்சர் என்ற ஐந்தாவது படிக்குத் தள்ளப்படுகிறோம் எனவே உலகில் உள்ள அனைத்து உயிர்க் கொல்லி நோய்களுக்கும் இப்போது உலகில் உள்ள தவறான மருத்துவமே காரணம். உலக மருத்துவம் தான் இந்தத் தவறான வைத்தியங்கள் செய்கிறோம் என்று யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக கேன்சர் எய்ட்ஸ்சுக்கு புகைப்பிடிப்பது தான் காரணம் ஓசோனில் ஓட்டை விழுந்ததுதான் காரணம் என்று நமக்குத் தவறான விசயங்களைச் சொல்லிக்கொடுத்து திசை திருப்புகிறார்கள்எனவே தயவு செய்து எந்த நோயையும் கண்ட்ரோல் செய்யாதீர்கள் ஒரு நோயைக் கண்ட்ரோல் செய்தால் அதன் கடைசிவிளைவு கேன்சர் எய்ட்ஸ் ஆகத் தான் இருக்கும்.


கேன்சர், எய்ட்ஸ்சுக்கு உலகத்தில் மருந்து கிடையாது என்று பல மருத்துவர்கள் கூறுகிறார்கள் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் உங்களிடம் மருந்து இல்லை, உங்களுக்குத் தெரியாது உங்களால் குணப்படுத்த முடியாது என்பதற்காக உலகிலேயே மருந்து இல்லை என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? ஒரு மருத்துவர் நோயைக் குணப்படுத்த முடியவில்லை என்பதற்காக உலகத்தில் மருந்து இல்லை என்று கூறலாமா? எனவே எந்த மருத்துவரும் கேன்சர் எய்ட்ஸ்சுக்கு உலகத்தில் மருந்து கிடையாது குணப்படுத்த முடியாது என்ற தயவு செய்து கூறவேண்டாம் எனக்குத் தெரியாது, என்னிடத்தில் மருந்து இல்லை, நான் இருக்கும் மருத்துவத்துறையில் இதற்கு மருந்து இல்லை என கூறி வேறு எங்காவது, வேறுயாரிடமாது, வேறு மருந்து முறையில் இதனைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அவர்களைத் திருப்பி அனுப்பிடுங்கள். நீங்கள் ஆராய்ச்சி செய்வதற்கு மனித உயிர்கள் தான் கிடைத்தனவா? ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று சொல்வதற்கு நாம் ஏன் படிக்க வேண்டும்? நாம் மருத்துவர் என்று எப்படி தைரியமாக செல்ல முடியும் எனவே ஒரு மருத்துவராக நீங்கள் ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று சொன்னால் வெட்கப்படுங்கள். ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று சொல்வதற்குப் பல வருடங்கள் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. 


உங்கள் மனுக்கோ, மகளுக்கோ கேன்சர், எய்ட்ஸ் இருக்கிறது என்று உங்கள் மருத்துவர் கூறினால் உங்கள் மக்களிடம் போன் செய்து கூறுவீர்களா? முதலில் மருத்துவர் காலில் விழுவீர்கள் ” ஐயா தயவு செய்து என் மகனிடம் கூறிவிடாதீர்கள் அவனால் தாங்க முடியாது” என்று பெற்றோர் கண்களில் நீருடன் அழுவார்கள் நமது குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு கேன்சர், எய்ட்ஸ் என்றால் நம்மால் அதை அவரிடம் கூற முடியுமா? மறைப்போம். ஆனால் மருத்துவர்கள் யாரோ ஒருவர்தானே ரோட்டில் செல்வோர்தானே என்று நோயாளிகளுக்குக்  கேன்சர் வந்துவிட்டது என்று சிறிதும் கூச்சம் இல்லாமல் உடனே கூறிவிடுகிறார்கள் உலகில் கேன்சர் மற்றும் எய்ட்ஸ் என்ற நோய் மனிதனைக் கொள்வது கிடையாது. இந்த நோய்க்கு மருந்து இல்லை மாத்திரை இல்லை இறந்து தான் போவீர்கள் என்று மருத்துவர்கள் கூறும் அந்த வார்த்தைதான் மனிதர்களுடைய உயிரைக் குடிக்கிறது. எனவே உயிர்க்கொல்லி நோய்கள் யாருக்காவது வந்தால் தயவு செய்து அதை அவர்களிடம் கூறாதீர்கள் அவர்க்குத் தெரியாமல் இருந்தால் பல வருடம் உயிரோடு இருப்பார் குணப்படுத்த முடியாத நோய் என தவறாகப் புரிந்து கொண்டால் அவர் மனது பாதித்து, மனது உடலைப் பாதித்து வேகமாக நோய் பெரிதாகிறது.


ஒரு மருத்துவருக்கோ அலல்து அவர் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கோ உயிர்க் கொல்லி நோய்கள் வந்தால் எங்கள் மருத்துவ முறைப்படி இதைக் குணப்படுத்த முடியாது என்று அவர் உயிரை போக்கிக் கொள்வாரா? அல்லது மற்ற மருத்துவத்தில் எங்காவது குணப்படுத்த முடியாதா என்று தேடி ஓடுவாரா?


எனவே தயவு செய்து எந்த மருத்துவராக இருந்தாலும் ஒரு நோயைக் குணப்படுத்த முடியாது என்று தயவு செய்து கூறாதீர்கள் என்னால் முடியாது வேறு எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளுங்கள் என்று அனுப்பிவிடுங்கள். உங்களால் முடியாது என்பதற்காக உலகத்தால் முடியாது என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதீர்கள்.


எனவே சர்க்கரை நோயைக்கூட குணப்படுத்தத் தெரியாத என்ற ஒரு மருத்துவராலும் கேன்சர் எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியாது. எனவே அவர்கள் கூறும் வார்த்தைகளை நம்பி நீங்கள் உங்கள் மனதை கெடுத்து உடலைக் கெடுத்து நோயை பெரிதாக்காதீர்கள். கேன்சர், எய்ட்ஸ் போன்ற உயிர்க் கொல்லி நோய்களைக் கண்டிப்பாக குணப்படுத்த முடியும். ஆனால் மருந்து மாத்திரை மூலம் கண்டிப்பாக குணப்படுத்த முடியாது. ஆனால் மருந்து மாத்திரை இல்லாமல் சுலபமாக நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக குணப்படுத்த முடியும். எனவே இந்த இணையதளத்தில் நான் எழுதிய கட்டுரைகளை முழுவதுமாக படிப்பதன் மூலமாக நீங்களே உங்கள் நோய்களைக் கண்டிப்பாக குணப்படுத்தி கொள்ளலாம்.


உயிர்க் கொல்லி நோய்கள் வந்தவர்கள் இந்த நோயைக் குணப்படுத்த முடியும் என்று நம்பினால் மட்டுமே குணப்படுத்த முடியும். எனவே தயவு செய்து நம்புங்கள். அந்த நம்பிக்கை உங்கள் மனதிற்கு வலுசேர்க்கும், உடலுக்கு வலுசேர்க்கும். உடல் முழுவதையும் குணப்படுத்தும்.