Monday 23 May 2016

உணவில் உப்பு பற்றாக்குறையா? இருதய நோய் ஏற்படும் ஆபத்து

தற்போது வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகளிலிருந்து உப்புச் செறிவு குறைவான உணவுகள் அனைவருக்கும் நன்மையை தராமல் போகலாம்.



அத்துடன் இருதய நோய்கள் ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம், இறப்புகளை கூட ஏற்படுத்தலாம் என தெரிய வருகிறது.

இது தொடர்பான ஆராய்ச்சி 49 நாடுகளிலிருந்து, கிட்டத்தட்ட 130,000 போர்கள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது சாதாரண குருதியக்கம் உடையவர்களுடன் ஒப்பிடுகையில், உயர் குருதியக்கம் உள்ளவர்களில் சோடியம் ஊட்டலின் அளவுக்கும் இறப்பு, இருதய நோய், இருதய அடிப்பு போன்றவற்றுக்கும் தொடர்புள்ளதா என ஆராயப்பட்டிருந்தது.

ஆனால் முடிவுகளிலிருந்து உயர் குருதியக்கம் உடையவர்களில் மட்டுமல்ல, பொதுவாக குறைவான சோடியம் ஊட்டலானது மாரடைப்பு, இறப்புக்கு வழிவகுக்கலாம் என தெரிய வருகிறது.

இது தொடர்பாக தலைமை ஆய்வாளர் Andrew Mente கூறுகையில், உயர் குருதி அமுக்கம் உடைவர்களில் குறைவான சோடியம் உள்ளீடானது குருதியமுக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றதா என ஆராயவே மேற்படி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனால் குருதியமுக்கத்தில் எந்த வீழ்ச்சியும் காணப்படவில்லை என தெருவித்திருந்தார்.

ஆனால், அதிகமாக சோடியம் உள்ளெடுக்கும், உயர் குருதியமுக்கம் உடையவர்களில் குறைவான சோடியம் ஊட்டலானது குருதியமுக்கத்தை குறைக்க உதவும் என அவர் மேலும் தெருவித்தார்.

கனடாவில் தற்போதைய சோடியம் ஊட்டலானது நாளுக்கு 3.5 - 4 கிராமாக உள்ளது. ஆனால் மொத்த சனத்தொகையும் 2.3 கிராமுக்கு உட்பட்டதாக நுகர கேட்கப்பட்டுள்ளது.

ஆனால் இப் புதிய ஆய்வானது, சோடிய ஊட்டல் நாளுக்கு 3 கிராமிலும் குறைவானவர்களில் மேற்படி நோய் நிலைமைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் அதிகம் என உறுதிப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment