ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. இந்த நிறங்கள் உணவு பொருளில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உணவுகளின் நிறத்தை பொருத்தும் நமது ஆரோக்கியம் கூடும். சிவப்பு நிற உணவிற்கு தனி தன்மை இருப்பது போன்றே ஊதா நிறத்தில் இருக்க கூடிய உணவிற்கு தனிவிதமான தன்மை உள்ளது. குறிப்பாக இந்த வகை காய்கறிகள் மற்றும் பழங்கள் கொலஸ்ட்ரால், செரிமான கோளாறு, சர்க்கரை நோய் போன்ற பலவற்றிற்கு தீர்வை தருகிறதாம்.
ஊதா நிறத்தில் இருக்க கூடிய நமக்கு தெரியாத காய்கறிகள் மற்றும் பழங்கள் எதிர்ப்பு சக்தியை கூட்டி நோய்களில் இருந்து நம்மை காக்கிறதாம். இந்த வகை ஊதா நிறத்தில் இருக்க கூடிய உணவுகளை ஒரு சில குறிப்பிட்ட வழி முறையில் நாம் சாப்பிட வேண்டியது அவசியம். சரி வாங்க, இந்த ஊதா நிறத்தில் ஒளிந்துள்ள அற்புத ரகசியங்களை இனி அறிந்து கொள்வோம்.
ஊதா நிறத்தில் இருக்க கூடிய நமக்கு தெரியாத காய்கறிகள் மற்றும் பழங்கள் எதிர்ப்பு சக்தியை கூட்டி நோய்களில் இருந்து நம்மை காக்கிறதாம். இந்த வகை ஊதா நிறத்தில் இருக்க கூடிய உணவுகளை ஒரு சில குறிப்பிட்ட வழி முறையில் நாம் சாப்பிட வேண்டியது அவசியம். சரி வாங்க, இந்த ஊதா நிறத்தில் ஒளிந்துள்ள அற்புத ரகசியங்களை இனி அறிந்து கொள்வோம்.
காரணம் என்ன..?
மற்ற நிற காய்கறிகள் மற்றும் பழங்களை காட்டிலும் இந்த ஊதா நிற உணவுகளில் இவ்வளவு நன்மைகள் இருப்பதற்கு சில முக்கிய காரணிகளும் உண்டு.
குறிப்பாக சொல்லப்போனால் இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், பிளவனோய்ட்ஸ், தாதுக்கள் தான் காரணமாம். இவை அனைத்துமே நம் உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை தரும்.
அத்தி
பல ஆயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்த கூடிய பழம் தான் இந்த அத்திப்பழம். இதனை தினமும் காலை வேளையில் 1 சாப்பிட்டு வந்தாலே நோய்கள் உங்களை அண்டாது என பழங்கால சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ரத்த சோகை, எதிர்ப்பு சக்தி குறைபாடு, உடல் பருமன் போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வை தர கூடியது இந்த அத்தி..!
கத்தரிக்காய்
பலரின் வெறுப்புக்கு ஆளான காய்கறி இந்த கத்தரிக்காய். ஆனால், இதில் தான் எண்ணற்ற சத்துக்கள் ஒளிந்துள்ளது.
வைட்டமின் கே, சி, பி6, நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் இதில் உள்ளன. அத்துடன் கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய தன்மையும் இதற்குண்டு.
நாவல் பழம்
ஒரு சில பண்டிகை காலத்தில் மட்டுமே நாம் சாப்பிடுகின்ற இந்த பழம் தான் உங்களுக்கு பலவித நன்மைகளை தர கூடியது.
குறிப்பாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தன்மை இந்த நாவல் பழத்திற்கு உள்ளதாம். தினமும் நாவலை பழத்தை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகுமாம்.
வெங்காயம்
அடர்ந்த ஊதா நிறத்தில் இருக்க கூடிய வெங்காயத்தை சமையலில் பயன்படுத்தினால் உங்களுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம்.
இதில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் இதயம் சார்ந்த நோய்களை தடுக்கும். மேலும், கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.
திராட்சை
அடர்ந்த நீல நிறத்தில் இருக்க கூடிய திராட்சையை சாப்பிட்டால் உள் உறுப்புகளில் வீக்கமோ, பாதிப்போ ஏற்படாது.
மேலும், எதிர்ப்பு சக்தியை கூட்டி நோய்கள் இல்லாமல் வாழ வைக்கும். அத்துடன் செரிமான கோளாறுகளையும் இந்த ஊதா நிற திராட்சை சரி செய்ய வல்லது.
முட்டைகோஸ்
நாம் பச்சை நிறத்தில் பார்க்கின்ற முட்டைக்கோசை விட இந்த ஊதா நிற முட்டைகோஸிற்குள் நிறைய நன்மைகள் ஒளிந்துள்ளது.
இவற்றை நீங்கள் உணவில் சேர்த்து கொண்டால் உடல் எடை கூடாமல் இருக்கும். மேலும், உடலில் ஏற்பட்டுள்ள வீக்கத்தையும் இது சரி செய்யும்.
ப்ளுபெரி
ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த பழங்களில் இதுவும் ஒன்று. ஜின்க், வைட்டமின் எ, சி, கால்சியம் போன்ற தாதுக்கள் அதிக அளவில் உள்ளன.
இந்த ஊதா நிற பழம் ஞாபக மறதி நோயாளிகளுக்கு நல்ல பலனை தரவல்லது. அத்துடன் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு என ஆய்வுகள் கூறுகின்றன.
கேரட்
உங்களுக்கு தெரியுமா..? ஊதா நிறத்தில் கூட கேரட் உள்ளதாம். இவற்றிலும் சாதாரண நிறத்தில் இருக்க கூடிய கேரட்டை போலவே அதிக சத்துக்கள் உள்ளதாம்.
இவை எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ரத்த ஓட்டத்தையும் சமமான அளவு வைத்து கொள்ளும்.
முள்ளங்கி
பெரும்பாலும் நாம் தவிர்க்க கூடிய காய்கறிகள் இதுவும் ஒன்று. ஆனால் இதில் ஏராளமான பயன்கள் உள்ளன.
வயிறு மற்றும் கல்லீரலில் உள்ள கழிவுகளை அகற்றி, நீண்ட நாட்கள் நோய்கள் இல்லாமல் பார்த்து கொள்கிறது. அத்துடன் நார்ச்சத்தும் இதில் அதிகம் உள்ளதால் செரிமான சுலபமாக நடக்கிறது.
அஸ்பாரகஸ்
மூலிகை தன்மை நிறைந்த உணவுகளில் இதுவும் ஒன்று. இதனை உணவில் சேர்த்து கொள்வதால் மெட்டபாலிசம் அதிகரிக்க கூடும். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ளதால் முழு சக்தியையும் உடலுக்கு தரவல்லது.
No comments:
Post a Comment