Sunday 18 March 2018

கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என சொல்வது ஏன் தெரியுமா?

கால் மேல் கால் போட்டு உட்காரலாமா?


 
 பல மக்களிடம் கால் மேல் கால் போட்டு உட்காரும் பழக்கம் இருக்கும். இது சிலருடைய குணமாக இருக்கலாம் அல்லது ஒரு சிலரோ மற்றவர்களை பார்த்து பழகிக்கொள்வார்கள். கால் மேல் கால் போட்டு உட்காராதே... இது என்ன கெட்ட பழக்கம்? என்று நம்மை வீட்டில் அடிக்கடி திட்டுவார்கள். அது நம்முடைய நலனுக்காகவே கூறுவர். 
 
இரத்த அழுத்தம் :
 
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலைசெய்யும் சூழலில் இருப்பவர்களுக்கு, உடல்பருமன் பிரச்சனை, சர்க்கரை நோய் வர வாய்ப்புகள் அதிகம். இதனுடன், கால் மேல் கால் போட்டு அமரும்போது, இரத்த அழுத்தம் அதிகமாகி, இதயம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
 
அது மட்டுமல்லாமல் எலும்புகளின் இணைப்பில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புகளை சுருக்குகிறது. இதனால் இரத்த ஓட்டம் தடைபட்டு கால்களின் கீழ்ப்பகுதி நரம்புகளை வீக்கம் அடையச் செய்யும். இதுவே நாளடைவில் நரம்புப் பிரச்சனை வரவும் வழிவகுக்கிறது.
 
பெண்கள் ஏன் கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது :
 
பெண்கள் கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். இதை பெண் அடிமைத்தனம் என இன்றைய நாகரீக பெண்கள் சொல்கின்றனர். ஆனால் அது தவறு. 
 
கால் மேல் கால் போட்டு அமர்வதை திமிர், அகங்காரம், ஒழுங்கீனம் என்று சொல்லுவார்கள் அதற்கு காரணம் நம்மில் பல பெண்களுக்கு தெரியாது.
 
இரத்த ஓட்டம் :
 
பெண்கள் கால் மேல் கால் போட்டு அமர்வதால், கால் மற்றும் அடிவயிறு பகுதிக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக அமைவதில்லை.
 
கர்ப்பப்பை பாதிக்கும் :
 
கால் மேல் கால் போட்டு உட்காருவதால் கால் பகுதியில் இரத்த அழுத்தத்தினை உருவாக்கிவிடும் எனவும், கர்ப்பப்பை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
நம் முன்னோர்கள் சொன்ன எதையும் நாம் உதாசினப்படுத்தி விடக்கூடாது. அதிலும் சில நன்மைகள் இருக்கும் என்று நம்ப வேண்டும்.

No comments:

Post a Comment