Sunday, 18 March 2018

கண்ணாடி போட வேண்டிய அவசியம் இல்லை - பயன் பெறுக:

தற்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் முன் உட்கார்ந்து நாள் முழுவதும் வேலை செய்வதோடு, எந்நேரமும் மொபைலைப் பார்த்துக் கொண்டே இருப்பதால், பார்வை பிரச்சனையால் பலரும் கண்ணாடியை அணிகின்றனர். கண்ணாடி அணிவது பார்க்க ஸ்டைலாக இருக்கலாம். ஆனால் தினமும் கண்ணாடி அணிபவர்களுக்குத் தான் அது எவ்வளவு பெரிய கஷ்டமான விஷயம் என்று தெரியும்.



மேலும் தற்போதைய மோசமான உணவுப் பழக்கத்தால், உண்ணும் உணவுகளில் உடலுக்கு தேவையான சத்துக்கள் ஏதும் கிடைக்காமல், கண்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. ஆனால் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பார்வை பிரச்சனையைப் போக்க ஒரு பானம் உள்ளது. இப்போது அந்த பானம் குறித்து தான் பார்க்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:

குங்குமப்பூ (Saffron ) - 1 கிராம்
தண்ணீர் - 1 கப்

தயாரிக்கும் முறை:

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதித்ததும், குங்குமப்பூவை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, குளிர வைத்து, தேன் கலந்தால், குங்குமப்பூ டீ தயார்!

குடிக்கும் முறை:

குங்குமப்பூ டீயை ஒருவர் தினமும் பகல் வேளையில் ஒரு கப் குடித்து வந்தால், பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

இதர நன்மைகள்:

குங்குமப்பூ டீ பார்வையை மேம்படுத்துவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும், ஆர்த்ரிடிஸ் வலியை சரிசெய்யும், ட்ரைகிளிசரைடு அளவை சீராக வைத்துக் கொள்ளும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். முக்கியமாக குங்குமப்பூ டீ ஒருவரின் ஒருமுகப்படுத்தும் திறனை மேம்படுத்தும்.

No comments:

Post a Comment