Friday, 15 June 2018

வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருகிறது.



நரை முடி தோன்றுவது, தலையில் வழுக்கை விழுவது, நரம்புகளின் திடீர் எழுச்சி, கண்களின் கீழ் கருவளையம் தோன்றுவது இவை எல்லாமே, வெறும்  வயிற்றில் பழங்கள் எடுத்துக் கொண்டால், நடக்காமல் தடுக்கப்படும்.
 
பழச்சாறு அருந்துவதாக இருந்தால், புதிதான பழச்சாறுகளையே அருந்துங்கள். டின், பாக்கட் மற்றும் பாட்டில் இவற்றில் அடைக்கப்பட்ட ரெடிமேட் பழச்சாறுகள்  தவிர்ப்பது நல்லது. சூடாக்கப்பட்ட பழச்சாறுகளையும் குடிக்க வேண்டாம்
 
உங்கள் உடல் உறுப்புகளை சுத்தம் செய்யவும், உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றவும் மூன்று நாட்கள் பழங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம்  இருக்கலாம். அந்த மூன்று நாட்களும், பழங்களை மட்டும் சாப்பிட்டு, மற்றும் புதிதாய் எடுக்கப்பட்ட பழச்சாறுகளையும் மட்டுமே நாள் முழுவதும் எடுத்துக் கொள்ளுங்கள்.உடலிலிருந்து நச்சுக்கள் வெளியேறிவிடும். 
 
மூன்று வேளையும் சாதம் சாப்பிடுபவர்கள் ஒரு வேளை சாதத்திற்கு பதிலாக பழங்களைச் சாப்பிட்டு வந்தால் உடல் நிலையில் நல்ல மாற்றங்கள் தென்படத் துவங்கும். உடலில் இரத்தம் அதிகரிக்கும். வாழைப்பழம் , ஆப்பிள், திராட்சை , பப்பாளி ஆகியவற்றை தினமும் சாப்பிடலாம்.

பதப்படுத்தப்பட்ட, சமைத்த பழங்களையும் உண்ணாதீர்கள். ஏனெனில் அவற்றிலிருந்து உங்களுக்கு எந்த விதமான சத்துக்களும் கிடைக்காது. சமைத்த பழங்களில் அதிலுள்ள விட்டமின்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. உங்களுக்கு அதன் சுவை மட்டுமே கிடைக்கிறது. 
 
பழச்சாறு சாறு அருந்துவதை விட, பழங்களை முழுதாகச் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. நீங்கள் பழச்சாறு குடிப்பதாயிருந்தால், மடமடவென்று குடிக்காமல்,  மெதுவாக ஒவ்வொரு வாயாக அருந்தவும். ஏனென்றால் நீங்கள் பழச்சாறு விழுங்குவதற்கு முன், அதனை வாயிலுள்ள உமிழ்நீரோடு நன்கு கலக்கச் செய்து பின்  சாப்பிடுவது நல்ல பயன் தரும்.

No comments:

Post a Comment