Monday, 17 October 2016

2 கப் பால் தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

பால் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் பலருக்கும் பால் குடிக்க பிடிப்பதில்லை மற்றும் பாலில் கொழுப்புக்கள் அதிகம் என்று அதனைக் குடிப்பதையும் தவிர்க்கின்றனர். ஆனால் பாலில் அதிக அளவில் சத்துக்கள் வளமாக உள்ளது.



இதனால் தினமும் இருவேளை பாலை குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். காலையில் ஒரு கப், இரவு ஒரு கப் வீதம் அருந்தலாம். எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. 

இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். இப்படி எலும்புகளுக்கு வேண்டிய கால்சியம் கிடைக்காமல் போனால், 30 வயதிற்கு மேல் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். 

மேலும் கால்சியம் உடலின் இதர செயல்பாடுகளான தசை சுருக்கம், இரத்தம் உறைதல் போன்றவற்றிற்கும் முக்கியமானது. பாலில் பொட்டாசியம் உள்ளது.

இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும். இச்சத்தும் தசைகளின் சுருக்கத்திற்கு அவசியமானது.

பாலில் ஏராளமான அளவில் புரோட்டீன் சத்து உள்ளது. மேலும் இதில் உடலுக்கு வேண்டிய 9 வகையான அமினோ அமிலங்களையும் உள்ளடக்கியுள்ளது.

பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது.

தினமும் காலையிலும், இரவிலும் பால் குடிப்பதன் மூலம், வயிறு நிரம்பி ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸ்கள் உண்பதைத் தவிர்க்கலாம்.

பலரும் பாலை அதிகம் குடித்தால், அதில் உள்ள கால்சியம் சிறுநீரகங்களில் படிந்து சிறுநீரக கற்களை உருவாக்கும் என்று நினைக்கின்றனர். சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம்.

இவ்வளவு சத்துக்களைக் கொண்ட பாலை தினமும் குடித்து உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பெருங்குடலை சுத்தம் செய்ய சில இயற்கை வழிமுறைகள்!!!!

வாயில் தொடங்கி ஆசனவாய் வரை உள்ள நம் செரிமான மண்டலத்தின் கடைசிப் பகுதி… பெருங்குடல். இந்தப் பெருங்குடல் சுமார் ஐந்து அடி நீளமும் இரண்டரை இன்ச் சுற்றளவும் கொண்டது. இதன் முக்கியப் பணி, உணவு செரிமானத்துக்குப் பிறகு ஏற்படும் கழிவுகளை வெளியேற்றுவதும் நீர் இழப்பைத் தவிர்ப்பதும்தான்.





பெருங்குடலில் நன்மை தரும் பாக்டீரியா வசிக்கிறது. இந்த பாக்டீரியா வைட்டமின் கே மற்றும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் உற்பத்திக்கு உதவியாக இருக்கிறது.
சில நேரத்தில் பெருங்குடலிலேயே கழிவுகள் தங்கிவிடலாம். அது நாம் சாப்பிட்ட உணவின் எச்சம், இறந்த செல் திசு, வயிற்றில் சுரக்கும் சளி போன்ற திரவம், ஒட்டுண்ணியாகவும் இருக்கலாம். இப்படி தங்கும் கழிவுகளால் நமக்குப் பிரச்னைதான். 
கழிவுகள் என்றாலே விஷம்தான். இப்படி தங்கிவிட்ட நஞ்சானது மீண்டும் ரத்தத்தில் கலந்து, நல்ல பாக்டீரியாவைப் பாதித்து ஊட்டச்சத்து உற்பத்தியைத் தடுத்துவிடும். மேலும், செரிமான மண்டலத்தின் செயல்திறனையே பாதித்து மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஒருவருக்கு இப்படி கழிவு தங்கினால், தலைவலி, முதுகுவலி, மலச்சிக்கல், சோர்வு, வாயில் கெட்டவாடை, உடலில் துர்நாற்றம், எரிச்சல், குழப்பமான மனநிலை, தோல் பிரச்னைகள், வாயுத்தொல்லை, வயிற்றுப்போக்கு, இடுப்புவலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதனால் பெருங்குடலை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும்.
நீர்
பெருங்குடல் சுத்தம், நீங்கள் செய்ய சிறந்த வழி நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அது இயற்கையான முறையில் உடலில் இருந்து தீங்கு செய்யும் நச்சுகளையும் மற்றும் கழிவுகளையும் வெளியே தள்ளி விடுகிறது.
ஆப்பிள் சாறு
புதிதாக எடுக்கப்பட்ட ஆப்பிள் சாறு பருங்குடலை சுத்தம் செய்யும் ஒரு சிறந்த இயற்கை வழியாகும். இந்த சாற்றை தொடர்ந்து குடித்து வரும்போது கல்லீரல் மற்றும் செரிமானத்தையும் சுத்தம் செய்கிறது. அப்படி தேர்ந்தெடுக்கும் ஆப்பிள் சாறு புதிதாகவும், ஆர்கானிக் ஆப்பிளை தேர்வு செய்வது சிறந்தது. ஆப்பிள் சாறு குடித்த 30 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு குவளையில் குடிக்க நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் பலன் கிடைக்கும். 
எலுமிச்சை சாறு
எலுமிச்சை ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்த வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் செரிமானத்துக்கு நல்லது. எனவே, எலுமிச்சை சாறு பெருங்குடல் சுத்தம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. எலுமிச்சை சாற்றோடு, கடல் உப்பு ஒரு சிட்டிகை மற்றும் தண்ணீர் கொஞ்சம் தேன் கலந்து. காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பயன்பெறமுடியும்.
பச்சை காய்கறி சாறு
புதிய காய்கறி சாறு பல முறை குடிக்க அதாவது பச்சை காய்கறிகள் சாற்றை, குறிப்பதால் நச்சுகளை நீக்க உதவுகிறது. ரெடிமேட் ஜூஸ் குடிப்பதை காட்டிலும் நாம் செய்ய கூடிய சாறு ஆரோக்கியமானதாக இருக்கும்.
நார் சத்து அதிகமுள்ள உணவுகள்
நார் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணுவதால் தீங்கு செய்யும் நச்சுகளை பெருங்குடலில் இருந்து சுத்தப்படுத்துவதோடு கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இது குடல் இயக்கம், மேம்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில், நார் அதிகமுள்ள உணவுகளை உணவுக்குழாய் எந்த பிரச்சினையின்றி சத்துக்களை பெற உதவும்.
நார் சத்துக்கள் நிறைந்த உணவுகளான பட்டாணி, ப்ரோக்கோலி, ஆப்பிள், புதிய காய்கறிகள், புதிய பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உணவில் நார்ச்சத்து நிறைய சேர்க்க முடியும். தானியங்கள், முழு தானியங்கள், கொட்டைகள், பீன்ஸ் மற்றும் விதைகள் ஆகியவை அதிக அலவு நார் சத்துக்களை கொண்டிருக்கும்.
தயிர்
தயிர் அஜீரணம், வாய்வு பிரச்சனை, ஒழுங்கற்ற குடல் இயக்கங்கள் மற்றும் பல்வேறு வயிற்று பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும் ஆரோக்கியமான புரோபயாடிக் உணவாகும்.

Friday, 24 June 2016

தினமும் கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்ட்ராலை குறைத்திடும்

கொய்யாவில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, நெல்லிக்கு அடுத்து அதிக வைட்டமின் ‘சி’ சத்து உள்ள பழம் கொய்யாதான்.


 


கொய்யாவின் பிற மருத்துவ குணங்கள்… நோயின் ஆரம்பமே மலச்சிக்கல் தான். அனைத்து நோய்களின் தாக்கமும் மலச்சிக்கலில் இருந்து தான் தொடங்கும். நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் நீங்கும்.
 
குடலின் செரிமான சக்தி அதிகரிக்கும். தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. இதைப் போக்க, உணவுக்குப் பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் கொய்யாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் மூல நோய் தீர்ந்துவிடும். கொய்யா கோடைக் காலத்தில்தான் அதிகமாக விளையும்.
 
தற்போது உயிரித் தொழில்நுட்ப முறை தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. இதைப் போக்க, உணவுக்குப் பின் கொய்யாப் உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடலின் பித்தத் தன்மை மாறுபடும். இதனால் உடல்நல பாதிப்பும் ஏற்படும்.
 
இதைத் தவிர்த்து, கல்லீரலைப் பலப்படுத்த அடிக்கடி கொய்யாப்பழத்தை உண்பது நல்லது. சர்க்கரை நோய் ஏற்பட்டாலே, அதைச் சாப்பிடக்கூடாது, இதைச் சாப்பிடக் கூடாது என்று அநேக கட்டுப்பாடுகளை விதிப்பார்கள். ஆனால் நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.
 
ரத்தத்தில் இரும்புச் சத்து குறையும்போது ரத்தசோகை ஏற்படுகிறது. இந்தியக் குழந்தைகளில், அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இக்குறையை பழங்களும், கீரைகளும் நிவர்த்தி செய்யும். குறிப்பாக கொய்யாப்பழம், ரத்த சோகையை மாற்றும் தன்மை கொண்டது. குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் ‘சி’ சத்து கொய்யாப் பழத்தில் அதிகம் உள்ளது.
 
குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்துவந்தால் அவர்களின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும்.

நரம்புகளைப் பலப்படுத்தி, உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். அதிக ரத்த 
அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறையும். இதயப் படபடப்பையும் கொய்யா போக்கும்.

ஆண்மையை அதிகரிக்கும் புடலங்காய்

புடலங்காய் நம் தமிழர்கள் வீட்டில் நிச்சயம் சமைக்கும் காய். புடலங்காய் கூட்டு, புடலங்காய் பொறியல், புடலங்காய் குழம்பு என்று நம் மக்கள் தங்களது கைவண்ணத்தில் சமையலில் அசத்துவர்.  


 

 
இந்த காய் நம் முன்னோர்கள் நீண்டகாலமாக பயன்படுத்தி வந்த காய். இதன் பயன் அறிந்து தான் சமையலில் வாரம் ஒரு முறை இக்காயை உண்டு வந்துள்ளனர். இது ஓர் அற்புதமான சத்துள்ள உணவு கிடைக்கும் போது வாங்கி சாப்பிடுங்கள். 
 
புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லது அல்ல .பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயே பயன் படுத்த வேண்டும்.
 
1. விந்துவை கெட்டி படுத்தும். ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய் காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு. 
2. தேகம் மெலிந்து இருபவர்கள் அடிக்கடி புடங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும். 
 
3. அஜீரண கோளாறு அகன்று, எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். 
 
4. குடல் புண்ணை ஆற்றும். வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும். 
 
5. இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலசிக்கலை போக்கும் தன்மை உடையாதாக இருக்கிறது. 
 
6. மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது. 
 
7. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிகிறது. 
 
8. பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளை படுதலை குணபடுத்தும். கருப்பைக் கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கண் பார்வையே அதிகரிக்க செய்கிறது. 
 
9. இதில் அதிகம் நீர்சத்து இருபதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும். 
 
10. வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.

உடலை ஸ்லிம்மாக வைத்து கொள்ள உதவும் தக்காளி

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

 
 
பழுத்த தக்காளி பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.
 
சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது. 
 
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவுகிறது.
 
தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.
 
சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.
 
இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.

Monday, 30 May 2016

அல்சர் நோய்க்கு அற்புதமான மருந்து தேன்

பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தரக்கூடியது தேன். பயன் தரும் தேனை தக்கவாறு உபயோகித்து பலன் பெறுவோம்.


 
 
1. தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல் மெலியும், ஊளைச் சதை குறையும், உடல் உறுதி அடையும்.
 
2. எலுமிச்சை சாற்றை, தேனுடன் கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல், ஜலதோஷம் குறையும்.
 
3. தேனுடன் வெங்காயச் சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.
 
4. இருமல், சளித்தொல்லை, நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும், பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட இருமல் மட்டுப்படும். சளித்தொல்லை குறையும்.
 
5. தேனையும், மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.
 
6. தேனுடன், சுண்ணாம்பைக் கலந்து நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.
 
7. மீன் எண்ணெய்யோடு, தேனை கலந்து உண்டு வந்தால் ஆறாத புண்கள் ஆறிவிடும்.
 
8. கருஞ்சீரகத்தை நீர்விட்டுக் காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட்டால் கீல் வாதம் போகும்.
 
9. வயிற்று வலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் தொந்தரவுகள் குறையும், கல்லீரல் வலுவடையும்.
 
10. அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.

முடிவளர்ச்சியை வேகப்படுத்தும் நெல்லிக்காய்

ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது நெல்லிக்காய். ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்.


 
 
1. நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.
 
2. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காய், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் திரிபலா சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.
 
3. நெல்லிக்காய் உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.
 
4. திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.
 
5. நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
 
6. நெல்லிக்காய் தலைமுடி உதிராமல், வளரவும், நரைமுடி தேன்றுவதை தடுக்கவும் செய்கிறது. இளநரை ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கிறது. மேலும் முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
 
7. தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.
 
8. நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.