Sunday, 1 April 2012

சுத்தமான தேனின் மருத்துவ குணங்கள்



சுத்தமான தேன் ஒரு சிறந்த உணவாகும். எளிதில் செரிக்கக் கூடியது. அதிக சத்து நிறைந்தது. ஐந்து கிலோ பாலுக்கு ஒரு கிலோ தேன் சமமாகும்.

பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் சுலபமாக நீங்கி விடுகின்றன.

குழந்தைகளுக்கு உண்டாகும் பல்நோய், இருதய நோய் ஆகியவற்றுக்குத் தேன் ஒரு சிறந்த சஞ்சீவியாகும்.

தேன் மூலம் சுவாசக் கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி நோய், தாகம், வாந்தி பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் ஆகிய நோய்கள் குணமாகும், பசியை அது வளர்க்கும். ஜீரணத்துக்கும் உதவும்.

தேன் கொழுப்பைக் கரைக்கக் கூடியது. ஆகவே உடல் மிகவும் பருமனாக உள்ளவர்கள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் பருமனும் எடையும் குறையும்.

ரத்தப் பித்தத்துக்கு அதாவது வாய், மூக்கு முதலியவற்றிலிருந்து ரத்தம் வடியும் வியாதிக்கு, ஆட்டின் பாலில் தேனைக் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கம்.

நமது உடலின் மேல் ஏற்படும் புண் காயங்களுக்கு மாத்திரமன்றி, உள்ளே ஏற்படும் இரைப்பைப் புண் போன்றவற்றையும் தேன் சாப்பிட்டு குணமாக்கலாம்.

வயதான சிலருக்கு அவ்வப்பொழுது தசைகளில் வலி ஏற்படுவதுண்டு. கால்களில் குற்றமடைதல், அல்லது குரல் தொணியே இல்லாது தொண்டையை அடைத்து விடுதல் போன்ற கப நோய்கள் கண்டபோது, ஒரு நாளைக்கு நாலைந்து முறை தேனை துளசிச் சாறு, வெற்றிலை கலந்து கொடுத்து வந்தால் நல்ல குணம் ஏற்படும்.

No comments:

Post a Comment