Sunday, 18 November 2018

ஆண்கள் கிரீன் டீ குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..? என்னென்னு தெரிஞ்சிக்கோங்க..

நாம் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ குடிப்பது அன்றாட பழக்கமாக மாறி விட்டது. ஒரு சிலருக்கு இந்த காலை பழக்கம் இருப்பதில்லை. ஆனால், காலையில் காபி (அ) டீ குடிக்கும் இந்த பழக்கம் உங்களுக்கு முழு பலனை தர வேண்டுமென்றால் அதற்கு கிரீன் தான் சரியான தேர்வு.



குறிப்பாக ஆண்கள் கிரீன் டீயை குடிப்பதால் புற்றுநோய் முதல் பிறப்புறுப்பு பிரச்சினைகள் வரை பலவித வழிகளில் இது உதவும் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர். வாங்க, எப்படி கிரீன் டீ ஆண்களை பலவித நோய்களில் இருந்து காக்கிறது என்று இனி அறிவோம்.

கிரீன் டீ

உடல் எடை கூடுதல், புற்றுநோய், இதய கோளாறுகள் போன்ற ஏராளமான வியாதிகளுக்கு இந்த கிரீன் டீ அருமையான மருந்தாக உள்ளது. குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படுகின்ற பல வித பிரச்சினைகளுக்கு இது தீர்வை தரவல்லது. எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பலமாக்க கிரீன் டீ சிறந்த ஆயுதம்.

அதிக ஆற்றல்

உடல் அடிக்கடி சோர்வு அடிந்தால் இனி உங்களுக்கான வைத்தியம் 1 கப் கிரீன் டீ தான். மூளையின் ஆற்றலை சுறுசுறுப்பாகவும், உடலுறவின் போது அதிக செயல்திறனுடன் இருக்க கிரீன் டீ உங்களுக்கு உதவுகிறது. மேலும், நீண்ட நேரம் எந்த வேளையில் ஈடுபட வேண்டுமென்றாலும் 1 கப் கிரீன் டீ ஆண்களுக்கு போதும்.

ஆண்களின் பிரச்சினை

ஆண்களின் பெரிய பிரச்சினையாக இந்த மலட்டு தன்மை பார்க்கப்படுகிறது. பலர் தாம்பத்திய வாழ்வில் இந்த மலட்டு தன்மை பிரச்சினை மிக மோசமான விளைவை ஏற்படுத்தி உள்ளது. மலட்டு தன்மையை தடுக்க இந்த கிரீன் டீ உதவும் என சில ஆய்வுகள் சொல்கிறது.

பிறப்புறுப்பு புற்றுநோயை குணப்படுத்த

கிரீன் டீ குடித்து வரும் ஆண்களுக்கு பிறப்புறுப்பு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். உடலில் புற்றுநோய் செல்கள் வளர விடாத அளவிற்கு இவை எதிர்ப்பு சக்தியை பன்மடங்காக கூட்டி விடுமாம். எனவே 50% பிறப்புறுப்பு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை இவை குறைக்கிறதாம்.

அழுக்குகளை சுத்தம் செய்ய

ஆண்களின் உடல் முழுவதும் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய இந்த கிரீன் டீ ஒரு அற்புத மருந்தாக வேலை செய்கிறது. 5,000 வருடத்திற்கு முன்பு இருந்தே ஆசிய நாடுகளில் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதற்காக இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

இளமையான தோற்றத்திற்கு



ஆண்களே, நீங்கள் சீக்கிரமாகவே முதுமையான தோற்றத்தை அடைந்து விடுகிண்றீர்கள் என்றால் உங்களுக்கான தீர்வு கிரீன் டீ தான். செல்கள் சிதைவடைவதை தடுத்து வயதாகாமல் தடுக்கிறது. மேலும், முகத்தின் பொலிவையும் இது இரட்டிப்பாக செய்கிறது.

கொழுப்புக்களை கரைக்க

அளவுக்கு அதிகமான கொழுப்பு உணவுகளை சாப்பிட்டு விட்டு உடல் பருமன் கூடி விட்டதா..? இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது கிரீன் டீ. கிரீன் டீயை பற்றிய ஆராய்ச்சியில், தினமும் கிரீன் டீயை குடிக்கும் ஆண்களின் உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகள் கரைந்து விடுமாம். எனவே உடல் எடையை இது வேகமாக குறைக்க வழி செய்யும்.

காரணம் என்ன..?

ஆண்களின் சிறந்த நண்பனாக ஏன் இந்த கிரீன் டீயை குறிப்பிடுகின்றனர் என்பதற்கு காரணமும் உள்ளது. Polyphenols என்பது ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்களின் கூட்டு மூலமாகும். இவை ரத்த நாளங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் முதல், புற்றுநோய் வரை சரி செய்ய வல்லது. குறிப்பாக ஆண்களின் மலட்டு தன்மையை போக்கும். இந்த மூல பொருள் கிரீன் டீயில் இருப்பதால் தான் ஆண்களுக்கு இவ்வளவு நன்மைகள் நடக்கிறது.

பலன்கள் நிறைந்த கிரீன் டீ..!

கிரீன் டீ தினமும் குடிப்பதால் பல வித நன்மைகள் உள்ளன. இதனால் உடலில் உள்ள சில முதன்மையான உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும் என மருத்துவர்கள் சொல்கின்றனர். குறிப்பாக இதயம், கல்லீரல், எலும்பு மூட்டுகள் போன்றவற்றில் நோய்கள் ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.

புத்தி கூர்மையை அதிகரிக்க

தினமும் கிரீன் டீ குடிக்கும் ஆண்களுக்கு புத்தி கூர்மை அதிகரிக்கும் என கிரீன் டீயை பற்றிய ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இதில் உள்ள L-theanine என்கிற மூல பொருள் மூளையின் செயல்திறனை அதிகரிக்க வைக்கிறதாம்.

Saturday, 17 November 2018

முருங்கை இலையின் மருத்துவ பயன்கள்

முருங்கை முழுத் தாவரமும், கசப்பு , துவர்ப்பு, மற்றும் இனிப்பு சுவைகள் கொண்டது. குளிர்ச்சித் தன்மையானது.



முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.

முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.
உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

முருங்கை இலை சாறு இரத்தசுத்தி செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். முருங்கை இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.

ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும்.

பித்த மயக்கம், கண் நோய், சொரிய மாந்தம் முதலியவை நீங்கும். இருமல், குரல் கம்மல், தொண்டை தொடர்பான நோய்களை நீக்குவதிலும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கலை போக்கும். மெலிந்த தேகம் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.

முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது. முருங்கை கீரை சாப்பிடாதவர்கள் முருங்கை இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போண்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.

Tuesday, 13 November 2018

ஆண்களின் முடி அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரணுமா..?

அழகு என்பது முகத்தில் கிரீம்களை பூசி கொண்டும், கலர் கலர் டைகளை தலையில் அடித்து கொள்வது மட்டும் கிடையாது. அழகு என்பதே இயற்கையாக இருப்பது தான். இயற்கையை நாம் செயற்கை தன்மையுடன் காட்ட முடியும். ஆனால், இயற்கைக்கு என்று ஒரு தனி தன்மை எப்போதும் இருக்கும்.

இயற்கையை என்றுமே செயற்கை முந்த முடியாது. அந்த வகையில் ஆண்களின் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், கருமையாக்கவும் கண்ட செயற்கை வேதி பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை வழி முறைகளை பயன்படுத்தலாம். எப்படி அவற்றை பயன்படுத்தலாம் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.

என்ன பிரச்சினை..?

பெண்களுக்கு இருப்பது போன்றே ஆண்களுக்கும் அழகை பற்றிய ஆசை எப்போதும் இருக்க தான் செய்கிறது. சிலர் இதை வெளிப்படையாக காட்டி கொள்கின்றனர். சிலர் இந்த ஆசையை மறைத்து வைக்கின்றனர். முடி உதிர்வு பல ஆண்களுக்கிடையே உள்ள மிக பெரிய பிரச்சினையாக உள்ளது. முடி கொட்டுதல், பொடுகு தொல்லை, வழுக்கை, தலையில் வறட்சி போன்ற பிரச்சினைகள் தான் ஆண்கள் அதிகம் சந்திப்பது.

இளநரையை போக்க

ஆண்களின் முக்கிய பிரச்சினையாக உள்ள இந்த நரை முடிகளை போக்குவதற்கு ஒரு அருமையான வைத்தியம் உள்ளது. அதற்கு தேவையானவை...
செம்பருத்தி பூ 4
நல்லெண்ணெய் 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்

செய்முறை :-

செம்பருத்தி இதழை மட்டும் நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொண்டு தலையில் தடவவும். 20 நிமிடம் கழித்து சிறிது சிகைக்காய் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இளநரைகள் மறைந்து முடி கருமையாக இருக்கும்.

வெங்காய முறை

முடியின் அடர்த்தியை அதிகரிக்க ஒரு எளிய வழி இருக்கிறது. நம் வீட்டிலே கிடைக்கும் பொருட்களை வைத்தே இதனை செய்ய முடியும்.
தேவையானவை :-
தேன் 1 ஸ்பூன்
வெங்காயம் பாதி

செய்முறை :-

வெங்காயத்தை அரிந்து கொண்டு அதனை நன்கு அரைத்து சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இந்த சாற்றுடன் தேன் கலந்து தலைக்கு தடவவும். தேவைக்கு வேண்டுமென்றால் சிறிது யோகர்ட் சேர்த்து கொள்ளலாம். 30 நிமிடம் கழித்து கிகைக்காய் பயன்படுத்தி தலையை வெது வெதுப்பான நீரில் அலசவும். இவ்வாறு செய்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.

முடி நன்கு வளர

முடி உதிராமல் நன்றாக வளர ஒரு அற்புத குறிப்பு உள்ளது. இதனை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் முடி உதிர்வை தடுத்து விடலாம்.
தேவையானவை :-
முட்டை வெள்ளை கரு 1
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
தயிர் 1 ஸ்பூன்
மருதாணி பொடி 2 ஸ்பூன்
டீ டிகாஷன் 1 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் தயிர், டிகாஷன், மருதாணி பொடி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே இதனை ஊற விட்டு, மறுநாள் இதனை தலைக்கு தேய்க்கவும். 1 மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இந்த குறிப்பு முடி உதிர்வு, நரை முடி போன்ற பிரச்சினைக்கு முற்று தரும்.

உருளை கிழங்கு சாறு

முடி பொலிவாகவும் அடர்த்தியாகவும் வைத்து கொள்ள உருளைக்கிழங்கு உதவுகிறது. 1 உருளைக்கிழங்கை எடுத்து கொண்டு அதனை நறுக்கி நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதன் சாற்றை தலைக்கு தேய்த்து வரவும். இதில் உள்ள விட்டமின் அ, பி, சி போன்றவை முடியை நன்றாக வளர செய்யும்.

ஆலிவ் எண்ணெய்

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆலிவ் எண்ணெய் சிறந்த ஒன்றாகும். இதில் உள்ள வைட்டமின்களும், தாது பொருட்களும் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க பெரிதும் பயன்படுகிறது. வாரத்திற்கு 2 முறை ஆலிவ் எண்ணெய்யை தலைக்கு தடவி 10 நிமிடம் மசாஜ் கொடுத்து தலைக்கு குளிக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முடி நன்கு வளரும்.

Saturday, 13 October 2018

சித்த மருத்துவத்தில் சீரகத்தின் பயன்கள்...!

சீரகம் மருத்துவ குணம் நிறைந்தவை. சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. 




சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு  சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
 
சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து,  சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
 
சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும். மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
 
சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
 
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே,  வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.
 
உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
 
திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த  அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

Thursday, 11 October 2018

அடிக்கடி உணவில் சுண்டைக்காய் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்...!

சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை  உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 



சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்.
 
வாயுப் பிடிப்பு பிரச்சனை உள்ளவர்களுக்கும் சுண்டைக்காய் நல்ல மருந்து. பச்சை சுண்டைக்காயை அடிக்கடி எடுத்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பலப்படும்.
 
ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது  நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டால்.  நோய் கட்டுப்படும். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகின்றது..
 
அதேபோன்று சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால்  நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்
 
மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும்  ரத்தக் கசிவும் நீங்கிவிடும்
 
சுண்டைக்காயை உனவில் சேர்த்து வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை அகலும். மேலும் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள்  பலமடையும் புளித்த ஏப்பம், மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. எனவே உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்
 
குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க சுண்டைக்காய் உதவும். இவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள்  அழிந்துவிடும்.

தினம் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லதா...?

மனிதர்கள் சாப்பிடும் விருப்பமான உணவுகளில் முட்டையும் ஒன்று. இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கியுள்ளன. ஒரு முட்டையில் புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது. மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது. அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும்.


முட்டையில் உள்ள லூடின் மற்றும் சியாங்தின் கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்கும். மேலும் உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவி செய்யும். நம் அன்றாட உணவில் தாராளமாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
 
நம் உடலுக்குக் கெட்ட கொழுப்புகளால்தான் பிரச்சனை ஏற்படும். ஆனால், முட்டையிலோ நல்ல கொழுப்புகள்தான் நிறைந்துள்ளன. அதனால் எவ்விதமான கோளாறுகளும் முட்டையால் ஏற்படாது.
 
குழந்தைகளுக்கு முட்டையை அரை அவியலாக அவித்து அதன் வெள்ளைக் கருவை மட்டும் கொடுக்க வேண்டும். பின்னர் சிறிது சிறிதாக அவர்களுக்கு மஞ்சள் கருவை கொடுக்கலாம்.
 
உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கு முட்டையின் ஆறு வெள்ளைக் கருவையும் இரண்டு மஞ்சள் கருவையும் கொண்ட உணவுகளைச்  சாப்பிடலாம். இதனால் சதைகள் நன்கு வலுப்பெறும். உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்கள் நாள் ஒன்றுக்கு ஒன்று  என்ற விதத்தில் சாப்பிட்டாலே போதும். மற்ற உணவுகளில் இருந்தும் கொழுப்புச்சத்துகள் கிடைப்பதால், இதனை அவரவர் தேவைக்கேற்பதான் சாப்பிட  வேண்டும்.
 
சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய்   ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முட்டையுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. இதன் வெள்ளைக்  கருவை மட்டும் சாப்பிட்டாலே போதுமானது. மஞ்சள் கருவை நீக்கிய ஆம்லெட், அவித்த முட்டையாகவும் சாப்பிடலாம். ஆரோக்கியமான இதயத்துக்கு தரமான புரதச்சத்தும் அவசியம்.
 
தினம் ஒரு முட்டை உண்பது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆராய்ச்சி முடிவு ஒன்று  தெரிவிக்கிறது.

கறிவேப்பிலையின் பயன்கள் தெரிந்தால் ஒதுக்கி வைக்க மாட்டீர்கள்...!

நம் முன்னோர்கள் கறிவேப்பிலையின் மருத்துவக் குணத்தினை கருத்தில் கொண்டே உணவில்  சேர்த்து வந்துள்ளனர்.




கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு  உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர,  நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும். பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும். 
 
1. கறிவேப்பிலையில் போதுமான அளவு இரும்புச் சத்தினையும் போலிக் அமிலத்தினையும்  கொண்டுள்ளது.
 
2. கறிவேப்பிலையில் கார்பசோல் ஆல்கலாய்டுகள் உள்ளன. இவை பாக்டீரியா மற்றும் அழற்சியை  எதிர்க்கும் சக்தியினைக் உடலுக்குத் தருகின்றன.
 
3. பாக்டீரியாவிற்கான எதிர்ப்புச் சக்தி கறிவேப்பிலையில் இருப்பதனால் வயிற்றுப் போக்கிற்கு சிறந்த  நிவாரணமாக உள்ளது.
 
4. கறிவேப்பிலைச் சாறு பருகுவதினால் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் களைப்பு மற்றும்  மயக்கத்தைக் குறைக்கப் பயன்படுகிறது.
 
5. கறிவேப்பிலை உட்கொள்வதனால் புற்றுநோய் சிகிச்சையின் பாதகமான விளைவுகளிலிருந்து  உங்கள் உடலைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
 
6. பூஞ்சையினால் ஏற்படும் தோல் பிரச்சினைகளில் முகப்பரு, கால்களில் ஏற்படும் ஆணி  போன்றவற்றைக் குணப்படுத்துவதில் கறிவேப்பிலை முக்கியப் பங்கினை வகிக்கின்றது.
 
7. தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை  செய்யப்படும்.