Sunday 7 December 2014

தூக்கத்தை தொலைத்தால் ஆரோக்யமும் இளமையும் சிதையும்!

சூப்பரான சம்பளம், ஐ.டி.யில் வேலைபார்க்கும் மக்களை நினைக்கும் போது அவர்கள் வாங்கும் சூப்பர் சம்பளம் மட்டும் தான் நினைவுக்கு வரும். 8 மணிநேரம் என்பதுபோய் 10, 12 மணிநேரம் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாயா, பேயா வேலை செய்கிறீர்களே எப்பசார் தூங்குவீங்க?


   தூங்குவதற்கு எங்கே நேரம்?

3 ஷிப்ட் மாறி மாறி போயாக வேண்டும். இரவு நேரஷிப்ட் முடிந்து காலை வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு தூங்கலாமா இல்ல, கொஞ்சம் தூங்கிவிட்டு அப்புறம் சாப்பிடலாமா என்று தூக்கத்தை செட் பண்ணுவதற்குள் அந்த வீக்கே முடிந்துவிடுகிறது. சரியாகவே தூங்க முடியவில்லை. கண்ணெல்லாம் தீயாட்டம் எரியுது என்பார்கள் ஐ.டி. மக்கள். அடுத்த வாரம் ஈவினிங்ஷிப்ட். மாலை போய் இரவு லேட்னைட் வந்து சாப்பிடவும் முடியல, சாப்பிடாம படுத்தா தூக்கமும் வரலே.. அப்படி இப்படி புரண்டு படுத்து காலை 5 மணிக்குதான் தூக்கம் வந்துச்சு. எழுந்திரிக்கும் போது மதியம் 12 மணியாயிடுச்சு. கொளுத்தும் வெயில் வெளியே அடிக்குது. ஆனா நான் தூங்கி எழும் போது மனதுக்குள் காலை நேர உணர்வு தான் இருக்கு. அதனால் என்னால ஃப்ரீயா இருக்க முடியல. இந்த கால இடைவெளி மனச்சோர்வையும், எதிலும் ஆர்வமில்லாமல் மனசு இறுக்கமா இருக்கு என்பார்கள். இப்படி தூக்கம் செட் ஆவதற்குள் அடுத்தவாரம் பகல் ஷிப்ட் வந்துவிடும். அது செட் ஆவதற்குள் அடுத்தவாரம் மீண்டும் நைட் ஷிப்ட் வந்துவிடும்.

இப்படியாக ஐ-.டி. மக்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு கூடவே ஆரோக்யத்தையும் இளமையையும் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
“அதான் பகல்ல நன்றாக தூங்குறேனே. அப்புறமென்ன. நான் நல்லாத்தானே இருக்கேன்.. போய்யாநீயும், உன்அட்வைசும்..“ என்பார்கள் ஒரு சில புத்திசாலி ஐ.டி. மக்கள். ஆரோக்யமான ஒருவருக்கு இயற்கையாக தூக்கம் ஏன், எப்போது வருகிறது தெரியுமா?

மூளை பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியில் மெலடோனின் சுரப்பதால் தான் நமக்குத் தூக்கம் வருகிறது. இந்த மெலடோனின் எப்போது சுரக்கும் தெரியுமா?நீங்கள் நினைப்பது போல் உங்கள் இஷ்டம் போல் இந்த மெலடோனின் சுரக்காது. இரவு நேரத்தில் மட்டும் தான் இந்த மெலடோனின் சுரக்கும். காலையில் சூரிய ஒளியை அல்லது வெளிச்சத்தை (லைட் வெளிச்சத்தை அல்ல) நாம் உணரும் போது இந்த மெலடோனின் தன் சுரப்பை நிறுத்திக் கொள்ளும், அப்போது தூக்கம்தானாகவே குறைந்து விழிப்பு வந்துவிடும். பகலில் தூங்கும் போது இந்த மெலடோனின் சுரப்பதில்லை.

இரவில் தூங்கவது தான் தூக்கம். நீங்கள் பகலில் மாய்ந்து மாய்ந்து தூங்கினாலும் உடலானது அதை தூக்கமாக எடுத்துக்கொள்வதில்லை. இந்த நீண்ட பகல் தூக்கத்தை உடலானது ஓய்வாகத்தான் கருதுகிறது. தூக்கம் என்பது வேறு ஓய்வு என்பது வேறு என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஓய்வு (பகல் தூக்கம்) என்பது வீட்டில் கலைந்து கிடக்கும் பொருட்களை அந்தந்த இடத்தில் அடுக்கிவைப்பது போலாகும். தூக்கம் (இரவுத் தூக்கம்) என்பது வீட்டை சுத்தம் செய்வது போலாகும்.

இரவு நேரம் குறிப்பாக இரவு 11 மணிமுதல் அதிகாலை 3 வரையாவது நன்றாக தூங்கினால் போதும், நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். இந்த இரவு நேரதூக்கத்தை தொடர்ந்து வருடக்கணக்கில் சிதைத்து வந்தால், உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்யமும் சிதைந்துபோகும்.

இரவு வேளையில்தான் கல்லீரலானது தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ளவும் புதுப்பித்துக் கொள்ளவும் முடிகிறது. அப்போது நீங்கள் நன்றாக தூக்கத்தில் இருந்தாக வேண்டும். நீங்கள் விழித்துக் கொண்டிருந்தால் இவையாவும் நடக்காது.

தொடர்ந்து நீங்கள் தூக்கத்தை தொலைக்கும் போது உடலில் உள்ள அத்தனை உறுப்புகளின் உறுதித்தன்மை நாசமாக்கப்படுகிறது. கல்லீரலே உடல் தசைகளையும், தசைநார்களை உறுதியாக வைக்கிறது. தூக்கத்தை சிதைக்கும் போது கல்லீரலும் சிதைந்து உடல் லொடலொடவென்று லூசாகி விரைவில் வயோதிகம் வரத்துவங்குகிறது. உடலில் உள்ள அனைத்து நாடி நரம்புகளும் வலுவிலந்து தொய்ந்து ஒரு கட்டத்தில் மனஇறுக்கம், ஸ்டிரெஸ் போன்றவை உங்களை ஆட்டிப்படைக்கும். (அதிகமாக மருந்துகளைச் சாப்பிடுவோருக்கு இந்த கதிதான்).

எதிர்மறையான எண்ணங்கள், நம்பகத்தன்மைகுறைவு, குற்றஉணர்வு, இயலாமை, தன்னம்பிகைஇன்மை, ஆண்மைகுறைவு என்று எல்லா மனம்சார்ந்த பிரச்சனைகளும் தலைதூக்கும். ஐ.டி. ஃபீல்டுக்கு வந்த போது இருந்த உங்கள் உடலும் மனமும் கொஞ்ச நாட்களில் காணாமல் போயிருக்கும்.எல்லாம் இந்ததூக்கத்தை சிதைப்பதால் தான்.

நல்ல சம்பளம் யார் தருவார்கள், நீதருவியா? என்ற எதிர் கேள்வியை நிறுத்திவிட்டு சிந்தியுங்கள். ஏதோ ஒரு ஷிப்ட் வேலையை ரெகுலராக பார்ப்பதுதான் இப்போதைக்கு நல்லது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். வாரம் ஒரு ஷிப்ட் அல்லது மாதம் ஒரு ஷிப்ட் என்று மாறிமாறி போய்க்கொண்டிருந்தால், நீங்கள் கண்டுபிடிக்க முடியாத நோய்களின் குத்தகைதாரர்தான்.

நோய்கள் உருவாக அடிப்படை காரணம் கழிவுகளின் தேக்கமும் அதனால் உடலின் சக்தி மாற்றத்தில் ஏற்படும் குறைபாடே ஆகும். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்கி நிரந்தரமாக ஆரோக்கியம் பெற மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் எல்லாம் சரியாகும்!

No comments:

Post a Comment