Tuesday, 2 December 2014

எய்ட்ஸ் பற்றி தெரிந்து கொள்வோம்

எய்ட்ஸ் என்றால் என்ன?
பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ்.

 


எச்.ஐ.வி எனும் வைரசால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனிதர்களின் இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய்களை இழக்கும் தன்மையைப் பெறும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

எய்ட்சால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எச்.ஐ.வி இருக்கும். எச்.ஐ.வி தாக்கப்பட்ட அனைவரும் எய்ட்ஸ் நோயாளி என்று கூறிவிட முடியாது. ஆனால், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் அனைவரும் எய்ட்ஸ் நோயாளியாக மாறுகிறார்கள்.

எச்.ஐ.வி பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் மற்றும் எய்ட்ஸ் நோயாளி தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஆகிய மூன்று முக்கிய வழிகளில் எய்ட்ஸ் தற்போது பரவிவருகிறது.

எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவர் 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு வரை அந்நோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரியாமலேயே வாழ்வார்.
அதே சமயம் அவர் எய்ட்ஸ் நோய்க்குரிய அறிகுறிகள் தென்படும்போதுதான் அவருக்குள் மறைந்திருந்த ஆபத்தை உணர முடியும்.

யாருக்கு எய்ட்ஸ் வரும்?

இந்தியாவிலும் உலகின் பிற இடங்களிலும் எய்ட்ஸ் ராக்கெட் வேகத்தில் பரவிவருகிறது. (இந்த நிமிடத்தில் எத்தனை பேருக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளது என்பதை அறிய எச்.ஐ.வி எண்ணி .)

இந்தியாவில் எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்நோய் பரவி உள்ளது.

எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி தொற்றி விடுகிறது. 80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான். 25 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்குத்தான் எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவராக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகிறார்கள். “நீங்கள் எப்படி பட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்கிறவராக இருந்தாலும் எச்.ஐ.வி தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்’ என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்றுக்கு ஏதாவது அறிகுறி உள்ளதா?

எச்.ஐ.வி தொற்றியவுடன் எந்த அறிகுறியும் இருக்காது. அவர் மற்றவர்களைப் போலவே சாதாரணமாகவே தனது வாழ்க்கையின் கடமைகள் அத்தனையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இந்த காலகட்டத்தில் சிறுசிறு நோய்கள் (நோய் தாக்குதல்களுக்கு ஆளாகாதோரைப் போலவே) வந்து போகும். இது எல்லோருக்கும் வரும் நோய்தானே என்பதால் எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவருக்கு தான் இந்நோயால் தாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய மாட்டார்.

எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டிருப்பதை ரத்தப் பரிசோதனை மூலம்தான் உறுதி செய்ய முடியும். ( சந்தேகம் உள்ளவர்களுக்கு இலவச ஆலோசனை .)

எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?

எய்ட்ஸ் பரவ காரணமான எச்.ஐ.வி கிருமி மூன்று வழிகளில் பரவுகிறது. என்றாலும் கூட, பாதுகாப்பற்ற உடல் உறவுதான் இன்று இந்த உலகில் ஏராளமானோருக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்தியிருக்கிறது.
1. பாதுகாப்பற்ற உடல் உறவு (ஆசன வாய் மற்றும் பெண் உறுப்பு வழியாக புணர்தல்).

2.பரிசோதனை செய்யப்படாத எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றுவது. பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தும் போது.
3.கருவுறும் முன் அல்லது கருவுற்ற நிலையில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் பெண்ணின் சிசுவுக்கு எச்.ஐ.வி தொற்று பரவ வாய்ப்பு.

பால்வினை நோய்கள் என்றால் என்ன?

பால்வினை நோய் தொற்றியவருடன் உடல் உறவு கொள்ளும் போது பரவுவதுதான் பால்வினை நோய்கள் (எஸ்.டி.டி). பால்வினை நோய்களில் குனோரியா எனப்படும் வெட்டை நோய், சிபிலிஸ் எனும் மேக நோய், படை உள்ளிட்ட நோய்கள்தான் அவை. இவற்றை கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

இந்த நோய்களை கண்டறியாமல் விடும் போது எளிதில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்படலாம். பால்வினை நோய்கள் இனப்பெருக்க உறுப்புகளில் புண்கள் குறிப்பாக பெண்களுக்கு, ரத்தக்கசிவு உள்ள படை, தோல் கீறல்களால் எச்.ஐ.வி நுழைய கதவுகளை திறக்கின்றன.

எய்ட்ஸ் எப்படி பரவாது?

1. சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களின் மூலம் பரவாது.
2.கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல் மற்றும் முத்தம் மூலம் பரவாது.
3.பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை மற்றும் அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலம் பரவாது.
4.நீச்சல் குளம் மூலம் மற்றும் சலுõன் கடைகள் மூலம் பரவாது.
5.ஒவ்வொரு முறையும் துõய்மையாக்கப்பட்ட உபகரணங்கள் மூலம் ரத்த தானம்.
6.இருமல், தும்மல் மற்றும் கொசுக்கடி மூலம் பரவாது.

எய்ட்ஸ் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இதுவரை எய்ட்ஸை குணமாக்க எந்த மருந்தும் கண்டறியாத போது, நாம் கவனமுடன் நடந்து கொள்வதன் மூலம்தான் அதை தடுக்க முடியும். பொறுப்புடனும் பாதுகாப்புடனும் நடந்து கொண்டால் இந்த நோயை விரட்ட முடியும்.

எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர் அதுபற்றி தெரியாமலே அந்நோயை பரப்பிக் கொண்டிருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பள்ளிகளில் எய்ட்ஸ் பற்றி பேச எல்லோராலும் முடிவதில்லை. எய்ட்ஸ் பற்றி எல்லோருடனும் பேசுங்கள். உங்களுக்கு தெரிந்தவை பற்றி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து பேசுங்கள்.
* எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.
* உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* நீங்கள் பெற்ற தகவல்களை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

எச்.ஐ.வி யை விலை கொடுத்து வாங்கலாமா?

* பாதுகாப்பற்ற முறையில் ஒருவர் பலருடன் உடலுறவு கொள்தல்.
* பலருடன் உறவு கொள்பவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு.
* பயன்படுத்திய ஊசிகளை சுத்தப்படுத்தாமல் மீண்டும் பயன்படுத்துவது.
* பரிசோதனை செய்யாத ரத்தத்தை பெற்றுக் கொள்தல்.

பொறுப்பான உடலுறவு பழக்கங்கள்

1.திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வதை தவிர்த்து விடுங்கள். அன்பையும் காதலையும் உணர்த்த உடலுறவு தான் ஒரே வழி அல்ல.
2.எச்.ஐ.வி தொற்று இல்லாத இருவர் உடலுறவு கொள்வதால் இருவரும் பாதுகாப்பு பெறுகின்றனர். எச்.ஐ.வி தொற்று அபாயமும் இல்லை.
3.தெரியாத புதியவருடன் உடலுறவு கொள்தல் அல்லது பாலுறவு தொழிலாளருடன் உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஆணுறை அணிவது ஓரளவுக்கு எச்.ஐ.வி தொற்று மற்றும் பால்வினை நோய்கள் பரவாமல் பாதுகாக்கும்.

ஊசிகள்

4.ஒரு முறை பயன்படுத்தக்கூடிய ஊசிகளை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய ஊசிகளை ஸ்டெர்லைஸ் செய்ய வேண்டும்.
5.மருத்துவரால் பரிந்துரைக்காதவற்றை ஊசியால் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.
6.நீங்கள் எவ்வளவு பாதுகாப்பானவராக தெரிந்தாலும் கூட, நீங்கள் போட்டுக் கொண்ட ஊசியை மற்றவருக்கு அனுமதிக்காதீர்கள்.

ரத்தம்

நோயாளிக்கு ஏற்றப்படும் ரத்தம் பரிசோதிக்கப்பட்டதுதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment