ஒரு பழக்கத்தை கற்றுக் கொள்வது சுலபம். ஆனால் அதனை விடுவது தான் மிகவும்
கஷ்டம். அதுவும் அதற்கு அடிமையாகி விட்டால் அவ்வளவு தான். அப்படி ஒரு
முக்கியமான கெட்டப் பழக்கம் தான் புகைப்பிடிப்பது. மனிதனுக்கு மிகவும்
சவாலான விஷயமாக இருப்பது புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது. தீய
பழக்கங்களுக்கு அடிமையாகி, அதை கைவிடும் போது, உடலும் மனதும் பல
பக்கவிளைவுகளை சந்திக்கும். அதற்கு புகைப்பிடிக்கும் பழக்கம் ஒன்றும் விதி
விலக்கல்ல.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட பல வழிகள் உள்ளது. அதில் நிகோட்டின் பேட்ச், ஹிப்நாசிஸ் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் என்பது சில வழிகளாகும். ஆனால் எந்த விட மருந்துகளும் இல்லாமல், இந்த தீய பழக்கத்தை எதிர்த்து, ஒவ்வொரு நாளும் போராடி, அதனை நிறுத்திவிடலாம் என்பது பல பேருக்கு தெரியாது. இப்போது அந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தை இயற்கை முறையில் கைவிடுவது எப்படி என்று பார்க்கலாமா!!!
திட்டம் தீட்டுங்கள்
புகைப்பிடிக்கும் பழக்கத்தை அறவே நிறுத்த, புகைப்பிடிக்கும் வழக்கம், உங்கள் சார்பு நிலையின் உண்மைகள் நிலை மற்றும் உங்களுக்கு ஏற்ற உத்திகளை முதலில் கண்டறிய வேண்டும். புகைப்பிடிப்பதில் நீங்கள் எந்த வகையை சார்ந்தவர், வாழ்க்கையில் எந்த தருணம் உங்களை புகைப்பிடிக்க தூண்டுகிறது மற்றும் ஏன் என்பதையும் கண்டறியுங்கள். இதனால் இந்த பழக்கத்தை நிறுத்த எந்த டிப்ஸ் அல்லது தெரபியை கையாளலாம் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.
அந்த எண்ணத்தை போக்க உடற்பயிற்சியில் ஈடுபடுதல்
நிகோட்டினுக்காக ஏங்குவதை உடற்பயிற்சி குறைக்கும். அதனால் இந்த பழக்கத்தை நிறுத்தும் போது, மிகவும் கஷ்டமாக இருக்காது. சிகரெட் வேண்டும் என்று தோன்றினால், உடனே ஸ்போர்ட்ஸ் ஷூஸ்களை அணிந்து ஓடத் தொடங்குங்கள். இல்லாவிட்டால், செல்ல நாயை கூட்டிக் கொண்டு ஒரு வாக் செல்லுதல், தோட்டத்தில் களை எடுத்தல் போன்ற லேசான உடற்பயிற்சியில் ஈடுபட்டால் கூட போதுமானது. இந்த பழக்கத்தை கைவிட்டதால், நீங்கள் எரிக்கும் கூடுதல் கலோரிகளால், உங்கள் உடல் எடையும் குறையும்.
நண்பர்களிடம் சவால் விடுங்கள்
நண்பர்களிடம் இந்த தேதிக்குள் இந்த பழக்கத்தை கைவிடுவதாக சவால் விடுங்கள். அந்த சவாலில் நீங்கள் ஜெயிப்பதற்கு, உங்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
மதுபானங்கள் மற்றும் இதர பானங்களை தவிர்க்கவும்
மதுபானம் பருகினால், புகைப்பிடிப்பதற்கு அதுவே பெரிய தூண்டுதலாக விளங்கும். அதனால் இப்பழக்கத்தை கைவிடும் போது, மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ளவும். அதேப்போல் கோலா, தேநீர் மற்றும் காபி போன்ற பானங்கள் எல்லாம் சிகரெட்டை சுவையாக்கும். அதனால் வெளியில் செல்லும் போது, அதிக அளவில் தண்ணீர் மற்றும் பழச்சாறு குடியுங்கள். இப்படி மாறும் போது, சிகரெட்டை நாடுவதை சிலபேர் குறைத்து கொள்வர்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்
ஆண்கள் புகைப்பிடிக்க முக்கிய காரணம், நிகோட்டின் அவர்களை அமைதிப்படுத்தும் என்பதால் தான். அதனால் இப்பழக்கத்தை கைவிடும் போது, மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேறொரு மாற்று தேவைப்படும். அதனால் தொடர்ந்து மசாஜ் செய்து கொள்வது, அமைதியான பாடல்களை கேட்பது, யோகாவை கற்றுக் கொள்வது போன்றவைகளில் ஈடுபடுங்கள். முடிந்தால் இந்த பழக்கத்தை கைவிட்ட சில வாரங்களுக்கு டென்ஷன் ஆவதை தவிர்க்கவும்.

பேக்கிங் சோடா காக்டெய்ல்
பேக்கிங் சோடா, சிறுநீரில் உள்ள அமிலக்காரக் குறியீட்டை அதிகரிக்கும். இது
உடலில் இருந்து நிகோட்டின் வெளியேறுவதை மெதுவாக்கும். அதனால்
நிகோட்டினுக்காக ஏங்குவதும் குறையும். அதனால் தினமும் அரை டீஸ்பூன்
பேக்கிங் சோடாவை மூன்று முறை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் 2 டீஸ்பூன்
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து, உணவு உண்ட பின் பருகவும் செய்யலாம்.
பழங்களும் காய்கறிகளும்
புகைப்பிடிக்கும் முன் பால், செலரி கீரை, கேரட், பழங்கள் மற்றும்
காய்கறிகளை உண்ணுவதால், புகைப்பிடிக்கும் போது கசப்பான சுவையைக்
கொடுக்கும். அதனால் குடித்து கொண்டிருக்கும் சிகரெட்டை கூட, பாதியிலேயே
தூக்கி எரிந்து விடுவீர்கள்.
நண்பர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்
நண்பர்கள் அல்லது குடும்பத்தார்கள் உங்களை இந்த பழக்கத்தை கைவிட சொன்னால்,
துணைக்கு அவர்களில் யாரையாவது சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி துணைக்கு ஆள்
இருக்கும் போது, உங்கள் வைராக்கியம் இன்னமும் அதிகரிக்கும்.
வைட்டமின் சி அடங்கியுள்ள உணவுகளை உண்ணுங்கள்
வைட்டமின் சி அதிகமாக உள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் மற்றும்
கொய்யாப்பழம் போன்றவைகளை சாப்பிட்டால், புகைப்பிடிக்கும் தூண்டுதல்
குறையும். அதற்கு காரணம் சிகரெட், உடலில் உள்ள வைட்டமின் சி அளவை குறையச்
செய்யும். இதனால் உடம்பில் வைட்டமின் சி குறைபாடு ஏற்பட்டு, நிகோட்டின்
நிரம்பிவிடும்.
உங்களுக்கு நீங்களே பரிசளியுங்கள்
பல உடல்நல நன்மைகளையும் தாண்டி, சிகரெட்டை கைவிட்டால் பணம் மிச்சமாவதும்
மிக பெரிய நன்மையே. அப்படி மிச்சப்படுத்திய பணத்தின் ஒரு பகுதியில்
கொண்டாட்டங்களுக்கு செலவழியுங்கள்.
தண்டம் கட்டுங்கள்
உங்கள் நண்பர்களிடம் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதன்படி
ஒவ்வொரு முறையும் நீங்கள் புகைப்பிடிக்கும் போது, அவர்களுக்கு தண்டம் கட்ட
வேண்டும். இதுவும் கூட இந்த பழக்கத்தை நிறுத்த உதவும்.
லவங்கப்பட்டையை மெல்லுங்கள்
நிகோட்டினுக்காக ஏங்குபவர்களுக்கு இது ஒரு சிறந்த வீட்டு சிகிச்சையாகும்.
உப்பான உணவு
சிப்ஸ், அப்பளம், ஊறுகாய் போன்ற உப்பு நிறைந்த பதார்த்தங்களை சாப்பிட்டால்,
அது புகைப்பிடிக்கும் ஆர்வத்தை குறைக்கும். அப்படி இல்லை என்றால் நாக்கின்
நுனியில் கொஞ்சம் உப்பை தடவிக் கொள்ளுங்கள். இது கண்டிப்பாக புகைப்பிடிக்க
தூண்டாது.
உலர் பழங்கள்
உலர் பழங்களின் நறுமணமும், அதன் சுவையும் புகைப்பிடிக்கும் ஆர்வத்தை குறைக்கும்.
புகைப்பிடிக்காதவர்களிடம் நட்பு பாராட்டுங்கள்
உங்களை சுற்றியுள்ள உங்கள் நண்பர்கள், குடும்பத்தார்கள் மற்றும் அலுவலக
பணியாளர்கள் புகைப்பிடிக்கும் போது, எப்படி நீங்கள் இந்த பழக்கத்தை கைவிட
முடியும்? ஆகவே உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் இந்த பழக்கத்தை விட
முடிவெடுத்தது தெரிய வேண்டும் அல்லவா! அதனால் உங்கள் முடிவை அவர்களுக்கு
தெரியப்படுத்துங்கள். புகைப்பிடிக்காத கூட்டதோடு சேர்ந்து கொண்டால்,
புகைப்பிடிக்கும் தூண்டுதல் குறையும்.
சர்க்கரை இல்லாத மிட்டாய் அல்லது சூயிங் கம்
சர்க்கரை இல்லாத மிட்டாய் அல்லது சூயிங் கம் கூட புகைப்பிடிக்கும் எண்ணத்தில் இருந்து திசை திருப்பும்.
சிகரெட்டை மெதுவாக குறையுங்கள்
மெதுவாக இப்பழக்கத்தை கைவிட நினைத்தால், முழுமையாக நிறுத்தும் வரை ஒரு
நாளைக்கு எத்தனை சிகரெட் குடிப்பீர்கள் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கையை குறைந்து கொண்டே போக வேண்டும். ஆனால்
கண்டிப்பாக ஒரு பாக்கெட்டிற்கு மேல் குடிக்கக் கூடாது. ஒவ்வொரு முறையும்
ஒவ்வொரு பிராண்ட்டை பயன்படுத்தினால், அப்போதும் அதன் மீதுள்ள நாட்டம்
குறையும். சிகரெட்டை வேறொருவரிடம் கொடுத்துவிடுங்கள். அதனால் ஒவ்வொரு
முறையும் அவரிடம் தான் கேட்டு வாங்க வேண்டி வரும்.
பற்களை சுத்தமாக வைத்திருக்க மனம் வையுங்கள்
உங்கள் பற்கள் அழகாக இருக்க வேண்டுமா? அப்படி இருக்க வேண்டுமானால் நிரந்தரமாக இப்பழக்கத்தை கைவிட்டு விடுங்கள்.
சிகரெட்டை கைவிட்டால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்
கண்களை மூடிக் கொண்டு கற்பனையை தொடங்குங்கள். அதிலும் ஒரு காலை வேளையில்
நடை கொடுப்பது அல்லது ஓடுவதை போல் கற்பனை செய்து பாருங்கள். யாராவது
கொடுக்கும் சிகரெட்டை வேண்டாம் என்று நிராகரிப்பதை போல் கற்பனை செய்து
பாருங்கள். உங்களிடம் உள்ள அனைத்து சிகரெட்களையும் தூக்கி எரிந்து, அதற்காக
தங்க பதக்கம் வென்றதை போல் கற்பனை செய்து பாருங்கள்.
No comments:
Post a Comment