Tuesday, 13 January 2015

ஆண்களே அழகாக ஜொலிக்க ஆசையா

வெயில் மற்றும் குளிரை வாடிக்கையாக கொண்டிருக்கும் இன்றைய பருவ நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பதால் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.






அந்த வகையில் சரும பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்ற விஷயமாகும். சரும பாதுகாப்பு என்றதும் அது பெண்களுடைய விஷயம் என்று எந்தவொரு ஆணும் நினைத்தால் அவர் மிகவும் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்!

ஏனெனில், ஆண்களுக்கு தோலில் உள்ள துளைகள் மிகவும் பெரியதாக உள்ளதால்,அவர்கள் தான் அதிகளவிலான தோல் சிதைவுகளுக்கும் மற்றும் அடைப்புகளுக்கும் ஆளாகிறார்கள்.

அவர்கள் எப்பொழுதுமே பெண்களைப் போல அதிகப்படியான எண்ணையை உறிஞ்சும் வகையிலான பவுடர்களைப் பயன்படுத்துவதில்லை. மேலும், இயற்கையாகவே கோடையின் வெப்பமான நேரங்களில், அதிக நேரம் வெளியில் சுற்றக்கூடிய வேலைகளை செய்யும் ஆண்கள் பிரச்சினைக்குரிய சருமத்தினைப் பெறும் நிலையிலுள்ளவர்கள்.

எனவே ஆண்களே! சருமத்தினை எப்படி ஆரோக்கியமாக வைத்திருப்பது என்று முடிவு செய்துவிட்டீர்களா? மிகவும் யோசிக்க வேண்டாம்! தினசரி நடவடிக்கைகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சருமத்தினை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

தொடக்கத்தில் ஆண்களின் தோல் மிகவும் எண்ணெயுடையதாகவே இருக்கும். எனவே தினமும் இரண்டு முறை முகத்தை சுத்தம் செய்யும் க்ளின்ஸர் அல்லது ஃபேஷ் வாஷ் கொண்டு சுத்தம் செய்வதும் மற்றும் சோப்பைப் போட்டு சுரண்டாமல் இருப்பது நலம் தரும் செயலாகும். இது தோலிலுள்ள துளைகளை சுத்தம் செய்வதுடன், அதிகப்படியான எண்ணெயையும் நீக்கிவிடும். மேலும் சருமத்திற்கு ஏற்ற க்ளின்ஸர்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது சரும பாதுகாப்பில் மிகவும் முக்கியமான செயலாகும். அது சருமத் துளைகளுக்குள் ஆழமாக சென்று, இறந்த செல்களை நீக்கவும் தயார் படுத்துகிறது.

ஆண்களின் தோல் பெண்களின் தோலை விட கடினமானதாகவும், மொத்தமானதாகவும் இருக்கும். ஆகவே தீவிரமான மற்றும் கிளைக்கோலிக் அமிலங்களையுடைய டோனர்களை பயன்படுத்தினால், சருமத்தில் தங்கி சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் கிருமிகளை அழித்து,சருமத்திற்கு பாதுகாப்பு தரும்.

சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை கோடைகாலங்களில் இயற்கையான முறையில் ஸ்கரப் செய்து நீக்குவது முக்கியமான விஷயமாகும். 3 நாட்களுக்கு ஒருமுறை ஸ்கரப் செய்வது அல்லது அருகிலுள்ள ஆண்கள் அழகு நிலையத்திற்கு சென்று தொழில்முறை வல்லுநர்களிடம் சென்று ஸ்கரப் செய்வது சரியான முறையாகும். மேலும் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பு கிடைக்க வேண்டுமானால், இறந்த சரும செல்களை நீக்கிவிட்டு,இளமையான செல்களை வளர்த்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.

SPF அளவு 15 அல்லது அதற்கும் அதிகமாக உள்ள மெல்லிய எடையுடைய ஈரப்பதம் உண்டாக்கும் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும். சருமத்தை ஈரப்பதத்துடனும்,சுருக்கங்கள் இல்லாமலும், முகத்தில் கோடுகள் விழுவதை தடுத்தும் வைத்திருப்பதன் மூலமும், இறந்த சரும செல்களை நீக்கிய பின்னர் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்துவது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். குறிப்பாக வெயிலில் செல்லும் போது தடவி செல்ல வேண்டும்.
கோடைகாலங்களில் தினமும் ஷேவிங் செய்வதை தவிர்ப்பது நலம். இந்த காலக்கட்டங்களில் ஒவ்வொரு ஷேவிங்கிற்குப் பிறகும் சருமத்தை சரி செய்யவும்,குணப்படுத்தவும் செயல்பட வேண்டியிருக்கும். எனவே அளவாக அவ்வப்போது ஷேவிங் செய்வது அரிப்பு ஏற்படுவதை தடுக்கும். இல்லையெனில் சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டு கடுமையாக அரிப்பை உண்டாக்கும்.

ஷேவிங்கிற்குப் பிறகு பயன்படுத்தப்படும் லோசன்கள், ஷேவிங்கால் சருமம் இழந்த ஈரப்பதத்தை மீட்கவும் மற்றும் அதற்கு தேவையான எண்ணையை வழங்கும் பணியையும் செய்கின்றன. மேலும் அந்த லோசன்கள் தோலை சூரியனின் தாக்குதலிலிருந்தும் காப்பாற்றுகின்றன. அதிலும் சருமத்திற்கு ஏற்ற வகையிலான இயற்கையான மற்றும் சத்தான எண்ணெய் நிரம்பிய லோசன்களை கண்டறிந்து பயன்படுத்துங்கள்.

பெண்கள் மட்டும் தான் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆண்களும் வெளியே வெயிலில் சுற்றும் போது, சன் ஸ்கிரீன்களை பயன்படுத்த வேண்டும். உதடுகள் வறட்சியடையாமலும்,சூரியக்கதிர்களின் தாக்கம் இல்லாமலும் இருக்க லிப் பாம் பயன்படுத்த வேண்டும்.

உடல் துர்நாற்றத்தை துரத்தியடிக்க டியோடரண்டுகளை பயன்படுத்துவது மட்டும் தீர்வாகாது. இந்த உடல் துர்நாற்றமானது, வியர்வையுடன் பாக்டீரிய கலப்பதன் மூலமாகவே உருவாவதால், ஆரம்பத்திலிருந்தே இதனை தடுக்க முயற்சி செய்ய வேண்டும். குளிக்கும் போது பாக்டீரிய எதிர்பொருட்களையுடைய க்ளீன்ஸர்களையோ அல்லது பாடி வாஷையோ பயன்படுத்துவதுதான் இதற்கு சிறந்த வழிமுறையாகும். மேலும் ஹெர்பல் பவுடரை போட்ட பின்னர், சிறிது நேரம் கழித்து டியோடரண்டுகளை பயன்படுத்தவும்.

உண்ணும் உணவு சரும பராமரிப்பில் பெரும் பங்காற்றுகிறது. தக்காளி,வெண்ணெய்,பழங்கள், கொட்டைகள், பாதாம் மற்றும் வாதுமை கொட்டைகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது முதுமை தோற்றம் தடைபடுவதோடு, உடலை பலமாக இருக்கச் செய்கின்றன. எண்ணைய் அதிகமாக உள்ள மற்றும் மிகவும் வறுக்கப்பட்ட உணவுகளை கோடைகாலங்களில் உண்ணும் போது, செரிமான உறுப்புகள் மெதுவாக இயங்குகின்றன.

முகப்பருக்கள் வராமல் இருப்பதற்கு, அதிக எண்ணெய் பசையுள்ள அழகுப் பொருட்களை பயன்படுத்தாமல்,எண்ணெய் பசை குறைவாக உள்ள பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். இதனால் முகத்தில் பருக்கள் வராமல் இருப்பதோடு, சருமமும் பாதுகாப்புடன் இருக்கும்

Monday, 12 January 2015

அழகான சருமத்தை பெற திராட்சை பழம்

உடல் சருமத்தின் அழகை மெருகேற்றி பொலிவடையச் செய்யும் வலிமை திராட்சை பழத்தில் உள்ளது.
 
 
திராட்சை பழத்தில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன. எனவே இப்பழத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சக்தி அபரிமிதமாக உள்ளது. திராட்சை பழம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
 
முகம் கருத்துவிட்டதா கவலை வேண்டாம். திராட்சை பழச்சாற்றை பிழிந்து அதன் சக்கையை முகம் முழுவதும் பூசி, சிறிது நேரத்திற்கு பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், கருமை நீங்கி பொலிவு பெறும். திராட்சை சாறில் அதிக அளவு ஆண்ட்டிஆக்சிஜன் உள்ளது. அது சருமத்தை சுத்திகரித்துவிடும். இரத்தத்தில் உள்ள செல்களை அதிகப்படுத்தி சருமத்தை சுத்தம் செய்து பொலிவடையச் செய்துவிடும்.
 
திராட்சை பழச்சாற்றில் சூரிய வெப்பத்தால் தாக்கக்கூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் வெப்பக் கட்டிகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளது. திராட்சை சாறு சருமப் பிரச்சனைகளைத் தடுக்கும் சக்தி கொண்டது. வெயில் காலத்தில் தினமும் ஒரு கப் திராட்சை சாறு அருந்தினால் சருமச் சிக்கலை தவிர்க்கலாம்.
 
திராட்சை பழச்சாறு இறந்த செல்களை நீக்கும் திறன் கொண்டது. இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்டதால், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து வரட்சியிலிருந்து காக்கிறது.
 
திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப் பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சரும வரட்சியை தடுக்கலாம்.
 
கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால், ஒரு திராட்சை பழத்தை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கிவிடும்.
 
சிறிதளவு திராட்சை சாருடன், சிறிதளவு பாசிப்பயிறு மாவை சேர்த்து நன்றாக கலந்து, அதை முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரம் இரு முறை வீதம் 1 மாதகாலம் செய்துவந்தால் சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள் படிப்படியாக மறைந்துவிடும்.

Friday, 26 December 2014

பெரும்பாலான சைனீஸ் உணவுகளில் குடைமிளகாய்! - அப்படி என்ன விஷயம் இருக்கு?

குடைமிளகாய், மிளகாய் என்றாலே பார்த்ததும் ஓடுபவர்கள் கூட இதனை வெளுத்து வாங்குவாரகள். இதில் அவ்வளவு காரம் கிடையாது. மேலும் இதில் அதிக மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அதனால் தான் பெரும்பாலான சைனீஸ் உணவுகளில் குடைமிளகாய் இல்லாமல் இருக்காது.

 

குடைமிளகாயில் குறிப்பாக வைட்டமின் சி, மினரல்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் ஆகியவை அதிகம் உள்ளன. இன்றைய ஹெல்த் டிப்ஸ் பகுதியில் குடைமிளகாயினால் ஏற்படும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்… குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அது ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடண்ட்டாக உள்ளது. இரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை சீராகச் செயல்பட இது உதவுகிறது. ஸ்கார்வி என்னும் நோயைத் தவிர்க்கின்றது.

   குடைமிளகாயில் கலோரிகள் குறைவாக இருப்பதால், அது கொழுப்பை நன்றாகக் குறைக்கிறது. செரிமானப் பிரச்சனைகளுக்கு குடைமிளகாய் மிகவும் நல்லது. வயிற்று வலி, வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது குடைமிளகாய்.

இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொழுப்பின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும். குடைமிளகாயில் உள்ள கேயீன் என்னும் வேதிப் பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது. இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்து இதய ஆரோக்கியத்தை குடைமிளகாய் அதிகப்படுத்துகிறது. இதய அடைப்பினால் தவிப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல மருந்தாகும்.

குடைமிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற கூட்டுப் பொருள், சருமத்திலிருந்து முதுகெலும்பிற்குச் செல்லும் வலி சிக்னலைத் தடுக்கிறது. மேலும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதிலும் குடைமிளகாய் வல்லது. அட குடைமிளகாய்ல இவ்வளோ மேட்டர் இருக்கா?? இனி டெய்லி ஃப்ரை பண்ணிவிட வேண்டியதுதான்.

Sunday, 21 December 2014

ரத்த அழுத்தம் என்றால் என்ன? அதை தடுப்பது எப்படி!

உங்களுக்கு 30 வயது ஆகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது உயர் ரத்த அழுத்தம் (Hypertension) உள்ளதா? நீங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பரபரப்பாகப் பணி செய்பவரா? புகை பிடிப்பவரா? மதுப்பழக்கம் உண்டா? தொப்பை உள்ளதா? ரத்தத்தில் கொழுப்பு அதிகமா? நீரிழிவு இருக்கிறதா? மனதில் அமைதி இல்லையா? எதற்கெடுத்தாலும் எரிச்சல்படுகிறீர்களா? அடிக்கடி கோபம் வருகிறதா? இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு ‘ஆம்’ என்று பதில் சொன்னாலும் உங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இன்றைக்கே மருத்துவரிடம் சென்று உங்கள் ரத்த அழுத்தத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.



ரத்த அழுத்தம் என்றால் என்ன? 

ஆற்றில் தண்ணீர் ஓடுவது போல ரத்தமானது ரத்தக்குழாய்களில் ஓடுகிறது. இது, இதயத்துக்கு வரும்போது ஒரு குறிப்பிட்ட வேகத்திலும், இதயத்திலிருந்து வெளியேறும் போது வேறு ஒரு வேகத்திலும் செல்கிறது. இந்த வேகத்துக்குப் பெயர்தான் ரத்த அழுத்தம் (Blood pressure). பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. மெர்க்குரி என்று இருந்தால், அது நார்மல். இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure). அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம். இதைத் தமிழில் ‘சுருங்கழுத்தம்’ என்று சொல்கிறார்கள்.

80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure).. . அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. அப்போது ஏற்படுகின்ற ரத்த அழுத்தம் முன்னதைவிடக் குறைவாக இருக்கும். இந்த அழுத்தத்தை ‘விரிவழுத்தம்’ என்று அழைப்பவர்களும் இருக்கிறார்கள். 30 வயதுள்ள ஒரு நபருக்கு 120/80 மி.மீ. பாதரச அளவு என்பது மிகவும் சரியான ரத்த அழுத்தம். இதில் 120 என்பது சுருங்கழுத்தம்... 80 என்பது விரிவழுத்தம். இது எல்லோருக்குமே சொல்லி வைத்தாற்போல 120/80 என்று இருக்காது. ஒரே வயதுதான் என்றாலும் ஆளுக்கு ஆள், உடல், எடை, உயரம் போன்றவை வித்தியாசப்படுவது போல, சுருங்கழுத்தமும் விரிவழுத்தமும் சற்று வித்தியாசப்படலாம். ஆகவேதான், உலக சுகாதார நிறுவனம் (கீபிளி) ஒரு நபருக்கு 100/70 மி.மீ. முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை ‘நார்மல்’ என்று வரையறை செய்துள்ளது. இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை உயர் ரத்த அழுத்தம் என்று சொல்கிறது.

ரத்த அழுத்தம் அதிகரிப்பது ஏன்? 

ரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்தி நிர்வகிப்பதில் சிறுநீரகங்கள், அட்ரினல் சுரப்பிகள், மூளை, நரம்புமண்டலம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றின் பயனாக, உடலில் இயல்பாகவே ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது. இந்தச் சங்கிலி அமைப்பில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டு விட்டால் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். சிலருக்கு இது தற்காலிகமாகவும், பலருக்கு நிரந்தரமாகவும் அதிகரிக்கும். இவர்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தற்காலிக உயர் ரத்த அழுத்தம் 

ரத்த அழுத்தம் என்பது உடலில் மாறிக்கொண்டே இருக்கும். நிற்கும் போது, உட்கார்ந்திருக்கும் போது அல்லது படுத்திருக்கும்போது எடுக்கப்படும் ரத்த அழுத்த அளவுகளில் சற்று வித்தியாசம் இருக்கும். இதுபோன்று மகிழ்ச்சி, கவலை, கோபம், பயம், அதிர்ச்சி, உறக்கம், உடற்பயிற்சி போன்றவற்றுக்குத் தகுந்தவாறு ரத்த அழுத்தம் சிறிது அதிகமாகவோ, குறைந்தோ காணப்படும். உதாரணமாக, ரத்த அழுத்தமானது உறங்கும்போது சற்றுக் குறைந்தும், உணர்ச்சிவசப்படும்போது மிக உயர்ந்தும், காலை நேரத்தில் இயல்பாகவும், மாலை நேரத்தில் சிறிது உயர்ந்தும் காணப்படும். இது தற்காலிக மாற்றமே. உடல் ஓய்வு கொள்ளும்போது ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்குத் தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும். குழந்தை பிறந்தவுடன் இது இயல்பு நிலையை அடைந்துவிடும். ஆகவே, ஒருவருக்கு முதல் முறையாக ரத்த அழுத்தத்தை அளக்கும் போது, ஒரே ஒரு முறை மட்டும் அளந்துவிட்டு, அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது என்று முடிவு செய்யக் கூடாது.

நிரந்தர உயர் ரத்த அழுத்தம் 

பொதுவாக, வயது கூடும் போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பருமன், நீரிழிவு, சிறுநீரக நோய், பிறவியில் ரத்தக்குழாய் பாதிப்பு, அதிக ரத்தக்கொழுப்பு, புகை, மதுப்பழக்கம் உள்ளவர்கள், மன அழுத்தம், உறக்கமின்மை போன்ற பாதிப்பு உள்ளவர்கள், ஓய்வில்லாமல் பணிபுரிகிறவர்கள் ஆகியோருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பது வாடிக்கை. மருத்துவர்கள், ஒருவருக்கு உண்மையான ரத்த அழுத்தத்தை அறிய, தொடர்ந்து சில நாட்களுக்கு 5 அல்லது 6 முறை ரத்த அழுத்தத்தை அளக்கிறார்கள். அவற்றில் 3 அல்லது 4 அளவுகள் 140/90க்கு மேல் இருந்தால், அவருக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாகக் கணிக்கிறார்கள்.

தனித்த உயர் ரத்த அழுத்தம் 

உயர் ரத்த அழுத்தத்தில் ஒரு சிறப்பு வகை இருக்கிறது. அதற்கு ‘தனித்த உயர் ரத்த அழுத்தம்’ (Isolated Systolic Hypertension) என்று பெயர். அதாவது, இதில் சிஸ்டாலிக் அழுத்தம் மட்டும் 180க்கு மேல் இருக்கும்... டயஸ்டாலிக் அழுத்தம் சரியாக இருக்கும். இப்படி இருப்பதை ‘தனித்த உயர் ரத்த அழுத்தம்’ என்கிறோம். இதயத்துக்கு அதிகம் சுமை தந்து, இதயம் செயல் இழப்பதை ஊக்குவிக்கின்ற மோசமான ரத்த அழுத்தம் இது. பொதுவாக வயதானவர்களுக்குத்தான் இது ஏற்படும். ஆனால், சர்க்கரை நோயாளிகளிடம் இது இளம் வயதிலேயே காணப்படுகிறது. இவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரகச் செயலிழப்பு, மறதி நோய் மற்றும் இறப்பு விகிதமும் அதிகரிக்கும்.

அறிகுறிகள் என்னென்ன? 

தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, மூக்கில் ரத்தக்கசிவு, நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சுவலி, கால்வீக்கம், களைப்பு, படபடப்பு ஆகியவை உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள். பெரும்பாலோருக்கு இந்த அறிகுறிகள் எதுவும் வெளியில் தெரியாது. திடீரென்று மயக்கம்,பக்கவாதம், மாரடைப்பு என்று ஏதாவது ஒன்று வந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். உடலில் அமைதியாக இருந்து ஆளைக் கொல்வதால் இதற்கு ‘சைலன்ட் கில்லர்’ (Silent Killer)அதாவது,‘அமைதியான ஆட்கொல்லி நோய்’ என்று ஒரு பட்டப் பெயரே இருக்கிறது.

பாதிப்புகள் என்னென்ன? 

உயர் ரத்த அழுத்தத்தை காலமுறைப்படி டாக்டரிடம் சென்று அளந்து கொண்டு, அதற்குரிய சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள தவறினால் உயிருக்கே ஆபத்தைக் கொண்டு வந்துவிடும். இது இதயத்தை பாதிக்கும்போது இதயம் வீங்கிவிடும்.அது துடிப்பதற்கு சிரமப் படும். மாரடைப்பு வரும். மூளை பாதிக்கப் படும்போது பக்கவாதம் வரும். மறதி நோய் வரும். மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுமானால், மயக்கம் மற்றும் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது கண்ணைப் பாதித்தால், திடீரென பார்வை பறிபோய்விடும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறிது சிறிதாக சிறுநீரகங்கள் கெட்டுப்போகும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் முழுவதுமாக செயல் இழந்துவிடும்.

தவிர்க்கவும் தப்பிக்கவும்... 

30 வயது ஆனவர்களும் குடும்பப் பின்னணியில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் வருடம் தவறாமல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது அவசியம். காலம் கடந்து கண்டுபிடிக்கிற போது, உடலில் வேறு சில பாதிப்புகளும் சேர்ந்து கொள்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பதை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால் மாத்திரை இல்லாமலும் சமாளிக்கலாம்.

உப்பைக் குறைக்கவும்! 

உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி சமையல் உப்பு (சோடியம் குளோரைடு). நாளொன்றுக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு போதுமானது. உப்பு நிறைந்த ஊறுகாய், கருவாடு, அப்பளம், உப்புக்கண்டம், வடாம், சிப்ஸ், பாப்கார்ன், முந்திரிப் பருப்பு, புளித்த மோர், சேவு, சீவல் போன்ற நொறுக்குத்தீனிகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள், விரைவு உணவுகள், உடனடி உணவுகள், செயற்கை வண்ண உணவுகளை தவிர்க்க வேண்டும்.

உணவில் கவனம்... 

கொழுப்பு அதிகமுள்ள உணவுகளான இறைச்சி வகைகள், முட்டையின் மஞ்சள்கரு, தயிர், நெய், வெண்ணெய், ஐஸ்க்ரீம், சாஸ், சீஸ், க்ரீம் மிகுந்த கேக் வகைகள், இனிப்பு வகைகள், சாக்லெட் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகளை ஒதுக்குங்கள். எண்ணெயில் பொரித்த, வறுத்த, ஊறிய உணவுகள் வேண்டவே வேண்டாம். தேங்காய் எண்ணெயும் பாமாயிலும் ஆகவே ஆகாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் ஆகியவற்றை குறைந்த அளவிலும் சுழற்சி முறையிலும் பயன் படுத்தினால் நல்லது. ஆவியில் வேக வைத்த உணவுகள் உகந்தவை. அசைவப் பிரியர்கள் வாரம் ஒருநாள் தோலுரித்த கோழிக்கறி அல்லது மீன் சாப்பிட்டுக் கொள்ளலாம். காபி, தேநீருக்குப் பதிலாக பழச்சாறு, லெமன் டீ, கிரீன் டீ குடிக்கலாம். இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.

நார்ச்சத்து உணவுகள் உதவும் 

நார்ச்சத்து ரத்த அழுத்தத்தைக் குறைப் பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும். எடையைக் குறைக்கும். இதனால் உயர் ரத்த அழுத்தமும், மாரடைப்பு வருவதும் தடுக்கப்படும். கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற முழு தானியங்கள், தக்காளி, பிரோக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, கொய்யா, தர்பூசணி, மாதுளை போன்ற பழங்கள், பீன்ஸ், பட்டாணி போன்ற பயறுகள், புதினா, கொத்தமல்லி போன்ற பச்சை இலைகளில் நார்ச்சத்து அதிகம்.

பழங்களை சாப்பிடுங்கள் 

பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்கள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது என்று அண்மைக்கால ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தினமும் பால் சாப்பிடுங்கள். இதில் கால்சியம் உள்ளது, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, ஓட்ஸ், இளநீர் மற்றும் மீன் உணவுகளில் பொட்டாசியம், மெக்னீசியம் சத்துகள் உள்ளதால் இவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நடக்க நடக்க நன்மை! 

உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க வேண்டுமானால் தினமும் 40 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி வாரத்துக்கு 150 நிமிட நடைப்பயிற்சி தேவை.

புகை உடலுக்குப் பகை 

சிகரெட், பீடி, சுருட்டு புகைக்கும் பழக்கத்தால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு 600 மடங்கு அதிகரிக்கிறது. புகைப்பதால் உடலுக்குள் நுழையும் ‘நிகோட்டின்’ ரத்தக்குழாய்களை சுருக்கி, ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்து விடும். சுருங்கிய ரத்தக்குழாயில் கொழுப்புப் படிந்து மாரடைப்புக்கு வழி செய்து விடும். புகைப்பதையும் புகைப்பிடிப்பவரின் அருகில் இருப்பதையும் தவிருங்கள்.

மதுவுக்கு மயங்காதீர்கள்! 

அருந்தப்படும் ஒவ்வொரு கோப்பை மதுவும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்வதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மது அருந்தும் ஒருவருடைய ரத்த அழுத்தம், மது அருந்தாதவரை விட இரு மடங்கு அதிகரிக்கிறது என்பதும் உறுதியாகி உள்ளது. எனவே, மதுவுக்கு ‘நோ’ சொல்லுங்கள்.

தூக்கமும் ஓய்வும் முக்கியம் 

தினமும் குறைந்தது 6 மணி நேரம் தூக்கமும் வாரம் ஒருநாள் ஓய்வும் அவசியம். மன அழுத்தம் கூடாது. மனதுக்குப் பிடித்த விஷயங்களை செய்தால் மனம் லேசாகி மன அழுத்தம் குறையும். பரபரப்பையும் கோபத்தையும் குறைத்து, மனதை லேசாக்கிக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

மாத்திரைகள் எப்போது அவசியம்? 

இன்றைய நவீன மருத்துவத்தில் உயர் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த நிறைய மருந்துகள் உள்ளன. தேவைக்குத் தகுந்தாற் போல ஒரே நேரத்தில் பல மருந்துகளை கலந்து சாப்பிடும் வழிமுறைகளும் உள்ளன. அதனால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், தங்களின் நோயைப் பற்றி அதிகம் அச்சப்படத் தேவையில்லை.

உயர் ரத்த அழுத்த வகைகள் 

இதயம் சுருங்கும்போது (சிஸ்டாலிக் அழுத்தம்), இதயம் விரியும்போது (டயஸ்டாலிக் அழுத்தம்) ரத்த அழுத்த நிலை...
100 முதல் 140 வரை 70 முதல் 90 வரை சரியான நிலை (Normal)
141 முதல் 159 வரை 91 முதல் 99 வரை இளநிலை (Mild)
160 முதல் 179 வரை 100 முதல் 109 வரை மிதநிலை (Moderate)
180 முதல் 199 வரை 110 முதல் 129 வரை மிகுநிலை (Severe) 200க்கு மேல்130க்கு மேல் கொடியநிலை (Malignant)

இங்கு ரத்த அழுத்த வகைகள் குறித்துப் பேசுவதற்குக் காரணம், இந்த வகைகளை அடிப்படையாக வைத்துத்தான் இதற்கு சிகிச்சை முறை அமைகிறது. எனவே, உயர் ரத்த அழுத்த நோய்க்கு மருத்துவர் ஆலோசனை இல்லாமல், நீங்களாகவே மருந்துக் கடைக்குச் சென்று ‘பிபிக்கு ஒரு மாத்திரை கொடுப்பா’ என்று வாங்கிச் சாப்பிட்டால் அது பலன் தராது.

Friday, 19 December 2014

உடற் பயிற்சி தேவையா? எது எவ்வளவு நேரம்?- நீரில் இறங்காமல் நீச்சலா?

பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு என மூன்றும் கலந்துழலும் பெண் அவள். 5 அடி உயரத்தில் 80 கிலோ எடையும் சேர்ந்ததால் நிலைமை மேலும் மோசமாயிற்று.



“நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்” என்றவுடன் அவளது முகத்தில் கோபம் கொப்பளித்தது.

“விடிஞ்சு பொழுது சாயு மட்டும் வீட்டிலை வேலை, வேலை… இதுக்கு மேலை என்ன பயிற்சி செய்யுறது.”

இன்னுமொருவர் தனியார் துறையில் பொறுப்பு வாய்ந்த வேலையில் இருப்பவர். வேளையோடு வேலைக்குப் போனால் இரவான பின்தான் வீட்டிற்கு வர முடியும். உடற்பயிற்சி பற்றி யோசிக்கவே நேரம் இல்லையாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்பதை இருவருமே அறிந்திருந்தார்கள். ஆயினும், நேரம் இல்லாததால் பயிற்சி செய்வதில்லை.
ஆனால், நீரில் இறங்காமல் நீந்தப் பழக முடியுமா?

உடற்பயிற்சி எவ்வளவு தேவை?

உடற்பயிற்சி எல்லோருக்கும் அவசியம்தான். ஆனால், எவ்வளவு தேவை?
இதுபற்றிய மருத்துவர்களின் கருத்துகள் கூட காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது.
  • “வாரத்தில் மூன்று நாட்களுக்கேனும் 20 நிமிடங்களாவது ஓடுவது போன்ற கடும் பயிற்சி தேவை” என 70- 80 களில் கூறினார்கள்.
  • ஆனால், 90 களில் கடும் பயிற்சி தேவையில்லை. வேகமாக நடப்பது போன்ற நடுத்தர வேகமுள்ள பயிற்சிகளை வாரத்தில் 5 நாட்களுக்கேனும் 30 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும் என்றார்கள்.
  • இப்பொழுது தினமும் 60 நிமிடங்கள் வரையான நடுத்தர பயிற்சி மீண்டும் என்கிறார்கள்.
எனவே, உடற்பயிற்சி அவசியம் என்பதை வைத்தியர்களும் சரி நோயாளிகளும் சரி ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால், வைத்தியர்கள் சொல்லும் அளவிலான பயிற்சியைச் செய்ய பலருக்கும் முடிவதில்லை. உடலால் முடிவதில்லை என்பது ஒரு காரணம், நேரம் கிடைப்பதில்லை என்பது இரண்டாவது காரணமாகும்.

ஒரு ஆய்வு

Dr.Timothy S.Church தலைமையிலான குழுவினர் ஒரு ஆய்வு செய்தனர். அதன் முடிவுகள் JAMA 2007:297:20812091 இதழில் வெளியாகியிருந்தன. மாதவிடாய் நின்றுவிட்ட, அதீத எடையுள்ள, உடலுழைப்பு அற்ற 464 பெண்களை உள்ளடக்கிய ஆய்வு அது. ஆறு மாதங்கள் செய்யப்பட்டது. உடற்பயிற்சியே செய்யாதவர்கள், வெவ்வேறு அளவிலான பயிற்சிகளைச் செய்தவர்கள் என நான்கு பிரிவினராக வகுத்துச் செய்யப்பட்ட ஆய்வு அது.

தினசரி 10 நிமிடங்கள் அதாவது வாரத்தில் 75 நிமிடங்கள் மட்டும் பயிற்சி செய்தவர்களுக்குக்கூட அவர்களது இருதயத்தினதும் சுவாசப்பையினதும் ஆரோக்கியமானது எந்தவித பயிற்சிகளையும் செய்யாதவர்களை விட அதிகரிக்கிறது என அவ் ஆய்வு புலப்படுத்தியது.

ஆனால், இந்தளவு பயிற்சியானது ஒருவரின் எடையைக் குறைக்கவோ, பிரஸரைக் குறைக்கவோ போதுமானதாக இல்லை என்பது உண்மைதான். ஆயினும், வயிற்றின் சுற்றளவைச் சற்றுக் குறைக்கிறது. இது பொதுவான ஆரோக்கியம் அதிகரிக்கிறது என்பதற்கான ஆரம்ப அறிகுறி என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு குறைந்த அளவிலான பயிற்சி செய்து உடல் ஆரோக்கியம் மேம்பட்டால் பிற்பாடு கூடியளவு பயிற்சி செய்வதற்கான உடல் நிலையையும் மேலும் தொடர்ந்து பயிற்சிகளைத் தொடர்வதற்கான மன ஊக்கத்தையும் பெறுகிறார்கள். இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது மேலும் கூடிய உடல் ஆரோக்கிய எல்லைகளை எட்டுகிறார்கள் என்பதே முக்கியமானது.

பயிற்சிகள் எத்தகையவை

இரண்டுவிதமான உடற்பயிற்சிகள் அவசியமாகும்
  1. லயவயப்பட்ட அசைவியக்கப் பயிற்சிகள் (Aerobic Exercises)
  • இத்தகைய பயிற்சியை நீங்கள் வேகமாகச் செய்வதானால் வாரத்திற்கு 75 நிமிடங்கள் செய்ய வேண்டும். (ஓடுதல், சீரான துள்ளோட்டம் Jogging, வேகமான நீச்சல், காற்பந்தாட்டம், ஹொக்கி, தனி டெனிஸ், தற்காப்பு கலைகள்(martial arts ), வேகமான நடனம் போன்றவை)
  • ஆனால் நடுத்தர வேகத்தில் (வேகமான நடை, நீச்சல்,கரப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், இரட்டையர் டெனிஸ், சைக்கிள் ஓட்டம்  போன்றவை) செய்வதானால் வாரத்திற்கு 150 நிமிடங்கள் செய்ய வேண்டும்.
  • ஓரிரு நாட்களில் அத்தனை பயிற்சியையும் செய்து முடிப்பதை விட வாரத்தில் 5 முதல் 7 நாட்களுக்கும் பிரித்துச் செய்வது நல்லது.
  • கடுமையானது மற்றும் நடுத்தரமானது ஆகிய இரண்டையும் கலந்து செய்பவர்களும் உண்டு.
2.  தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் (Strength training)
  • இவற்றை வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது செய்ய வேண்டும்.
  • உதாரணமாக எடை தூக்குதல், மலை ஏறுதல், கொத்துதல் போன்ற கடுமையான தோட்ட வேலை, உடற்பயிற்சி இயந்திரங்களில் பயிற்சி போன்றவை.
  • யோகசனமும் இவ் வகையைச் சேர்ந்ததே.
எனவே, சோம்பிக் கிடக்காதீர்கள். சிறிய அளவிலான உடற் பயிற்சியையாவது ஆரம்பியுங்கள். படிப்படியாக அதிகரியுங்கள். உடல் நலம் நாடி வரும், பிரஸர், கொலஸ்ட்ரோல், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் யாவும் விலகி ஓடும்.
எடையையும் குறைக்க விரும்பினால் பயிற்சிகளை வாரத்தில் 300 நிமிடங்களாவது செய்ய வேண்டும். அதாவது சராசரியாக தினசரி 45 நிமிடங்கள் தேவைப்படும்.

மயக்கத்தை நீக்கும் வேப்பெண்ணெய்!


வேப்பெண்ணெய் தமிழ்நாட்டில் மருத்துவத்தில் பலவிதத்தில் நிறைய உபயோகிக்கப்படுகிறது. மற்ற நாடுகளில் மிகவும் குறைவு. இந்த எண்ணெய்யில் இருக்கும் கடுமையான வாசனையை அனுசரித்து சூடான வீரியம் கொண்டதென்று சாமானியமாய் தோன்றலாம். ஆனால், இது அத்தனை கடுமையான உஷ்ண வீரியம் கொண்டதல்ல. ஏனென்றால், தலைக்கும் உடலுக்கும் வேப்பெண்ணெய் தேய்த்துக் குளித்த பிறகு அதன் வாசனை  பல மணிநேரம் மூக்கைத் துளைக்குமே தவிர எண்ணெய் தேய்த்துக் கொண்டவருக்கு கண் பொங்கி உடல் எரிச்சல் உஷ்ணம் உண்டாவதில்லை. அதனால் கடுகெண்ணெய் அளவிற்கு வேப்பெண்ணெய் சூட்டை ஏற்படுத்துவதில்லை.

வேப்பெண்ணெய்யின் மருத்துவகுணங்கள்:

வெளிப்புறத் தேய்ப்பினாலும் உள்ளுக்குச் சாப்பிடுவதினாலும் கிருமிகள், குஷ்டநோய்கள், வாயு பித்தம் கபம் எனும் மூன்று தோஷங்களையும் போக்கும்.

சிறுநீர்ப்பையில் ஏற்படும் கல் அடைப்புகளை வெளிப்படுத்தும்.
கல்லீரலில் உண்டாகும் பித்தக் கல் அடைப்பையும் வெளிப்படுத்தலாம்.
குடலில் ஏற்படும் கிருமிகள், தலைமுடியில் வரும் பேன், ஈறுப்பூச்சிகள், வெட்டுக்காயம், நாட்பட்ட அழுகிய புண்கள், புண்களில் வரும் புழுக்கள் இவற்றை அடியுடன் அகற்றும்.

வேப்பெண்ணெய்யை உள்ளுக்குச் சாப்பிடுவதால் கள், சாராயம் மற்ற போதை வஸ்துக்கள், தூக்கமாத்திரைகள் இவைகளினால் ஏற்பட்ட மயக்கம், பயத்தினால் ஏற்பட்ட மயக்கம், அபதந்த்ரகம் எனும் சங்கை கோளாறு முதலியவற்றை நீக்கித் தெளிவை உண்டாக்கும்.

முட்டி மற்றும் இதர மூட்டுகளில் வாயு மற்றும் கபத்தினால் ஏற்படும் நீர் திரவக்கோர்வை, வீக்கம், வேதனைகளை வேப்பெண்ணெய்யின் ஒத்தடம் சீக்கிரமே குணமடையச் செய்யும்.

நாட்பட்ட தலைவலி, மண்டையிடி பாரம் எல்லாம் சில நாட்கள் தலையில் வேப்பெண்ணெய்யைத் தேய்ப்பதால் குணமாகும்.

காய்ச்சலுக்கும், காய்ச்சலில்லாமலும் கப வாயுவினால் மார்பில் சளி அதிகம் உறைந்து மூச்சுத் திணறலும் உள்ள கஷ்டநிலையில் மார்பைச் சுற்றிலும் சுட வைத்த வேப்பெண்ணெய்யைத் தடவி வறுத்த கொள்ளினால் ஒத்தடமிட உடனே கபம் இளகி உபாதை குறையும்.

ஏழு வயது நிரம்பிய குழந்தைகளுக்கு அஜீர்ணத்தினால், கபவாத  ஜுர வேகத்தினால், வயிற்றில் நாக்குப் பூச்சியினால், மலச்சிக்கலினால், விஷவாயுவினால், திடீர் குளிர்காற்றுக்கு இலக்காவதால் மற்றும் ஏதாவது காரணத்தினால் திடீரென்று உண்டாகக் கூடிய உடலுதறல், வலிப்பு, இழுப்பு, மூச்சுத் திணறல் தொந்தரவுகளில் வேப்பெண்ணய் மிகவும் உபகாரமானது. உள்ளுக்குச் சாப்பிடக் கொஞ்சம் கொடுத்தல், மேலுக்குப் பூசி ஒத்தடம், ஆசனவாயில் எனிமா செய்தல் போன்றவற்றால் உடனடி பலனைத் தரும்.
மேற்குறிப்பிட்ட காரணங்களால் நல்லெண்ணெய்யை விட வேப்பெண்ணெய்யின் சூடான வீரியமானது வலிப்பு நோயை ஏற்படுத்தும் மூளையைச் சார்ந்த காரணிகளை விரைவாக அகற்றக்கூடிய தன்மை உடையதாகக் கருதலாம்.

வலிப்பு நோயில் உடல் மற்றும் மனதைச் சார்ந்த வாத பித்த கபம் மற்றும் ராஜசிக தாமஸிக தோஷங்களால் சூழப்பட்ட புத்தி, மனம், இதயம் இவற்றை இணைக்கக் கூடிய குழாய்களை, நன்றாக ஊடுருவிச் சென்று அவற்றை வெளிப்படுத்தும் வாந்தி எனும் சிகிச்சை முறையால் அக்குழாய்களை சுத்தம் செய்யவேண்டும். வாயுவின் சீற்றத்தால் ஏற்படும் வலிப்புநோயை வஸ்தி எனும் எனிமா சிகிச்சைமுறை பித்தத்தால் உண்டான வலிப்பை விரேசனம் எனும் பேதிமருந்து கொடுத்து செய்விக்கப்படும் சிகிச்சை, கபத்தால் உண்டான வலிப்பை வாந்தி சிகிச்சையை பிரயோகம் செய்தும் குணப்படுத்த வேண்டும். அதன் பிறகு உடலை வலுவூட்டும் கஞ்சிகளைக் கொடுத்து பஞ்சகவ்யக்ருதம் எனும் நெய்மருந்தை உள்ளுக்குச் சாப்பிடவேண்டும். மூளை மற்றும் இதயத்திலுள்ள குழாய்களை வலுவூட்டும் இந்த நெய்மருந்தால் வலிப்பு நோய் நன்றாக மட்டுப்படும்.

Thursday, 18 December 2014

ஒரு கப் தேநீரில் ஓராயிரம் விஷயங்கள்!

ஒரு கால கட்டத்தில் கல்யாண வீடு என்று வந்தால் டீ பார்ட்டி உண்டா என்று கேட்டவர்கள் உண்டு. ரிசப்ஷன் எனும் மாலை நேர வரவேற்பு  வைபவத்தையே நம்மவர்கள் அங்ஙனம் குறிப்பிட்டார்கள். இதில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். மேற்படி மாலை நேர சிற்றுண்டி விருந்தில்  தேநீர் எனும் டீயும் முக்கிய அங்கம் வகித்ததால் கூட அப்படி நம் முன்னோர்கள் பகர்ந்திருக்க கூடும். மேற்படி தேநீரை பற்றி கொஞ்சம் தெரிந்து  கொள்வோமே.



தூக்கத்தை விரட்டுகின்ற தன்மை கொண்ட தேநீரை தூக்கம் இன்றி அவதிப்படுகிறவர்கள் மாலை 4 மணிக்கு பிறகு விலக்கி வைக்க வேண்டும்.  உலகின் எந்த பகுதியில் வசித்தாலும் சரி, சுறுசுறுப்பாக இயங்க தேநீர் அருந்துவதை மக்கள் விரும்புகின்றனர். மேலும் இதயத்திற்கு வலு சேர்க்கவும்,  புற்றுநோய் வராமல் தடுக்கவும் தேநீர் தொண்டாற்றுகிறது. குளிர், கோடை காலத்திற்கு ஏற்ற தேநீர் ஒரு நாள் 4 தடவை பருகும் பழக்கம்  கொண்டவர்களை இதய நோய் வாட்டுவதில்லை என்பது நிபுணர்கள் கண்டறிந்தது.

Best Teas for Sunburn

இதில் உள்ளடங்கிய நச்சு முறிவு சக்தியான “பாலிபெனால்ஸ்“ வேறு எந்த கஷாய வகைகளிலும் கிடையவே கிடையாது. மேலும் இதிலுள்ள  “ஃப்ளோரைடு“ பற்களைகூட பளிச்சிட வைக்கின்றது. இன்றும் இ.ஜ.சி.ஜி. எனும் நச்சு முறிவு மருந்து உடலில் உள்ள புற்றுநோய் கட்டிகளை கூட  அழிக்க வல்லதாகும். தேநீரில் உள்ள “ஃப்ளாவோனாய்ட்ஸ்“ கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதால் மாரடைப்பும், பக்கவாதமும் தடுக்கப்படுகின்றது.

அவசர சிகிச்சையில் கூட தேநீர் தன் பணியை செய்கிறது. பால் சேர்க்காமல் அருந்தப்படும் தேநீரானது குறுகிய இரத்தக்குழாய்களை கூட 90 நிமிட  நேரம் விரிவடைந்து செயல்பட வைக்கிறது. குறிப்பாக க்ரீன் டீ, கறுப்பு தேநீர் (கடுந்தேயிலை) அருந்தும் பழக்கமுடையவர்கள் உடல் பருமன்  இன்றியும், தேநீரில் இஞ்சி, துளசி கலந்து பருகுபவர்கள் ஜலதோஷ தொந்தரவின்றியும் ஹாயாக உலா வரலாம்.